• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'ஆனந்தவிகடன்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 7 results

  1. 2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
  2. இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு. தலைமுறை இடைவேளை “கோழி கூப்புட நாலுமணிக்கு நாலு தூத்தல் போட்டுச்சு மண்வாசமும் வெக்கையும் கிளம்ப வெளிய வந்து பார்த்தா கீகாத்து மழையக் கலச்சுடுச்சு” என்று சொன்ன அப்பத்தாதான், இன்று பிற்பகல் நாலுமணிக்கு விளம்பர இடைவேளையில் வெளியே வந்து “மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள் ஈரவாசல் பார்த்து. -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 18.1.17) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
  3. இந்த வார ஆனந்தவிகடனில் (11.5.16) வெளியாகியுள்ள எனது கவிதை "முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!", யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் வீடு! போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம் “எங்கே எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா. ஒரு திருப்பத்தில் சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும், “ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?” கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி. முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த சூரியனின் வீட்டுக்கு நாங்கள் சென்று சேர்வதற்குள் சூரியன் வீட்டுக்குள் மறைந்துவிட, நாளை மறுபடியும் வரலாம் என்று சமாதானப்படுத்தித் திரும்பினோம். முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் முழுநிலவின் வீட்டுக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம். (நன்றி: ஆனந்த விகடன்) (எனது பதிவுகளில் படத்தை இணைக்க முடியவில்லை. நண்பர்கள், எப்படி இணைப்பதென்று தெரிவிக்கவும்)
  4. ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” நிலாக்கனவு நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் அந்தக் கனவில் நிலாக்குட்டி வருகிறாள் விழித்துப் பார்த்தால் நிலாக்குட்டி என்னை துயிலெழுப்புகிறாள் கனவில் அவளைக் கண்டுகொண்டிருந்ததை கதையாகச் சொல்கிறேன் நிலாக்குட்டி தூங்கிப்போகிறாள். கனவு கலைந்து நான் துயிலெழுகிறேன் கதையைச் சொல்லலாமென்றால் நிலாக்குட்டி தூங்கிக்கொண்டிருக்கிறாள். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன்)
  5. ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
  6. இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப்பா உனக்கு மழை வாங்கி வந்திருக்கார்’ என. அதையும் நம்பிவிடுவாள் மின்னல் கண்ணைப் பறிக்கும் என்ற பயமின்றி ஜன்னல் வழியே கைநீட்டி மழை வாங்கிக்கொள்ளும் பிரியாக்குட்டி. -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி. ஆன்ந்த விகடன் 14.10.15)
  7. இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! உள்ளுறையும் ஈரம் ஊருக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி மழையேதும் பெய்துச்சா? அம்மா கூடுதலாக இன்னொரு பதிலும் சொல்வாள் விடுப்பில் வந்தபோது நீயும் வீட்டுக்கு வந்து போனாய் வழக்கம்போல் என் நலத்தை விசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும் என் மண்ணில் மழை பொழிவதும் என் மனையில் நீ புகுவதும் எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின் இரு பக்கங்களாய் நீயும் நானும்! -சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்