Search the Community

Showing results for tags 'ஆரோக்கியம்நோய்த்தடுப்பு'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. மலேரியா போய் கஞ்சா வந்தது! உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற்றுகள் மறு புறமும் இந்த ஏழை நாடுகளைப் பந்தாடுகின்றன. இலங்கையில் வசித்த வேளையில் மலேரிய காய்ச்சல் வந்து அவதிப் பட்டோருக்கு அந்தக் காய்ச்சலின் அனுபவம் சட்டென்று நினைவில் வரும்- அந்தளவுக்கு உடலை வருத்தி முறித்துப் போடும் காய்ச்சல் அது! காய்ச்சல் அப்படியென்றால் அத்ற்கு எடுத்துக் கொள்ளும் குளோரோகுயின் மாத்திரையின் கசப்புத் தன்மை அதை விடக் கொடுமையானது-வாந்தி வர வைப்பது. மலேரியா எதிர்ப்பு அமைப்பு (Anti Malaria Campaign) என்ற அரச நிறுவனம் 1930 இல் இருந்து ஆற்றிய பணியின் விளைவாக 2016 இல் உலக சுகாதார அமைப்பு இலங்கையை "மலேரியா ஒழிக்கப் பட்ட" நாடாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தப் பிரகடனம் நல்ல விடயம் என்றாலும், அது நிரந்தரமான ஒன்றல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டில் பரவிய மலேரியா நோயாளிகள் யாரும் கண்டறியப் படாவிட்டால், உலக சுகாதார அமைப்பு இந்தப் பிரகடநதை வழங்கும்: இலங்கையில் 2012 இலிருந்து மலேரியா கேஸ்கள் பதிவு செய்யப் படவில்லை என்பதே இதன் அர்த்தம். நுளம்பினால் மலேரியா பரவுகிறது, அந்த வகையான நுளம்புகள் இன்னும் இலங்கையில் இருக்கின்றன- இதனால் மலேரியா அபாயம் நீங்கி விடவில்லை! இன்னும் ஒரு படிமேல் போய், விளக்கமாக நோக்கினால், மோசமான மலேரியா நோய் பரவும் நாடாக இலங்கை மாறக்கூடும். மலேரியா நோயை உருவாக்கும் கிருமி பிளாஸ்மோடியம் எனப்படும் ஒரு ஒற்றைக் கல உயிரினம். தென்னாசியாவில் மலேரியாவை உருவாக்கும் பிளாஸ்மோடியம் (Plasmodium vivax) வகையை விட தீவிரமான நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) இனம் ஆபிரிக்க நாடுகளிலும் கிழக்காசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றது. மூளை மலேரியா (cerebral malaria) எனப்படும் இந்த மோசமான மலேரியா, ஆபிரிக்காவில் மட்டும் வருடாந்தம் 400,000 மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இது ஏன் இலங்கையில் பரவலாக இல்லை? இந்த இடத்தில் தான் vector எனப்படும் நோய் காவியான நுளம்பின் பங்கு முக்கியமாகிறது. மூளை மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் சாதாரண மலேரியாவைப் பரப்பும் நுளம்பினத்தை விட வேறான ஒரு வகை. இந்த வகை நுளம்புகள் இலங்கையில் இருப்பதாக அறியப் படவில்லை- ஆனால் இந்த நிலை 2017 இல் மாறுவதற்கு, மன்னாரில் நடத்தப் பட்ட நுளம்பினப் பரம்பல் பற்றிய ஆய்வு கட்டியம் கூறுகிறது. அந்த ஆய்வில், மன்னாரின் பல பிரதேசங்களில் எடுக்கப் பட்ட நுளம்பின் குடம்பி மாதிரிகள் (இவை நுளம்பின் இளம் வடிவங்கள், இவையே தேங்கிய நீரில் வாழ்பவை) அனோபிலிஸ் ஸ்ரிபென்சி (Anopheles stephensi) என்ற புது நுளம்பினத்தின் குடம்பிகளாக அடையாளம் காணப்பட்டன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்த வகை நுளம்புகள் கிழக்காசிய நாடுகளில் மூளை மலேரியாவைப் பரப்பும் இயல்புடையவையாக அறியப் பட்டிருக்கின்றன என்பது தான். பெரும்பாலும் குடி தண்ணீர்க்கிணறுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த நுளம்பினக் குடம்பிகள் உண்மையிலேயே மூளை மலேரியாவை இலங்கையிலும் பரப்புமா என்பதை எதிர்வரும் வருடங்களில் நடக்கும் மலேரியாக் கண்காணிப்புத் தான் தீர்மானிக்கும். இலங்கை ஒரு தீவாக இருப்பதால் பல தொற்று நோய்களைக் கட்டுப் படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது (மாலை தீவுகளும் மலேரியா ஒழிக்கப் பட்ட ஒரு நாடு என்ப்தை இங்கே குறிப்பிட வேண்டும்). எப்படி புது நுளம்பினம் வந்திருக்கக் கூடும்? தற்போதைய மாதிரிகளின் படி, இந்தியாவின் வழியாகவே இது இலங்கைக்கு வந்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கிறது. இங்கே தான் இலங்கையின் மன்னாருக்கும் இந்தியாவின் தென் முனைக்கும் இடையே நடைபெறும் கட்டுப் பாடற்ற கடற் போக்கு வரத்தின் இன்னொரு ஆபத்து வெளிப்படுகிறது. எல்லை தாண்டிய மீன்பிடி, பொருட் கடத்தல், தினசரி செய்திகளில் அறிக்கையிடப் படும் கேரள கஞ்சாக் கடத்தல் என்பன வடக்கிலும் இலங்கையிலும் பேரிடர்களை உருவாக்கும் நோய்களையும் நாட்டினுள் கடத்திவருகின்றன. இத்தகைய கடத்தல் குற்றச் செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்தை வடக்கின் கடற்பரப்பைக் கட்டுப் படுத்தும் காவல்படையினர் எப்போது உணர்வர் என்பதே இப்போதுள்ள கேள்வி! ஆதாரமும் மேலதிக தகவல்களும்: 1. Genotype and biotype of invasive Anopheles stephensi in Mannar Island of Sri Lanka. Surendran et al., Parasit Vectors, 2018, 11:3 2. First record of Anopheles stephensi in Sri Lanka: a potential challenge for prevention of malaria reintroduction. Dharmasiri et al., Malaria Journal, 2017, 16:326