Search the Community
Showing results for tags 'இனப்படுகொலை'.
-
பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா? குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது? சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை? காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்? எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்! இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல! சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும். கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான். இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்! கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது. எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்! இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை. எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்! நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்! நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு. தொடர்புடைய பதிவுகள்: நினைவேந்தல் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
- 2 replies
-
- 1
-
-
- நினைவு நாள்
- இனப்படுகொலை
- (and 5 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (9).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (6).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (7).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (8).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (4).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (5).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (1).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (2).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
medical - Puthukudiyiruppu_Hospital 2-06-2009 PTK shell attack SLA (3).JPG
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 3 more)
-
From the album: இனப்படுகொலை - மோகன் | Tamil Genocide images | Tamil massacres
© Liberation Tigers of Tamil Eelam
-
- தமிழ் இனப்படுகொலை
- இனப்படுகொலை
- (and 4 more)