தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன்
விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கற் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவைய