Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Search the Community

Showing results for tags 'ஈழ வான்படை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • Tamil Cine's Blog
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • Vani Mohan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே... சரி அதற்கு முன்னால் புலிகளிடம் எத்தனை வானூர்திகள் இருந்தன என்பதைப் பற்றி ஏதேனும் ஊகம்?...ம்ம்.. 2...இல்லை.. 5.. இல்லை.... 7.. இல்லை… உங்கள் ஊகம் காணும், நிறுத்துங்கள்! நானே சொல்கிறேன். சான்றோடு உறுதிப்படுத்தப்பட்ட வானூர்திகள் மொத்தம் 11 (87 நடு - 2009 பெப்ரவரி 21) ஆகும்.. சரி , எனக்கு ஆலாவட்டம் போடத் தெரியாது… வாருங்கள் நேரடியாக கட்டுரைக்குள் தாவுவோம்! இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த ஆராச்சிக் கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே! . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (சான்றோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 11 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 1 இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter) - 1 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 → செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2 . கடலில் வைத்து அழிக்கப்பட்ட புலிகளின் அறியில்லா வானூர்திகள் - 3 நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே! →ஆதாரம்:Rohan_Gunarathne.pd (கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.) புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (ஐயமிருந்தும் சான்றோடு உறுதிப்படுத்தப்பட முடியாதவை): செசுனா வித வானூர்தி - 1 புலிகளால் கட்டி முடிக்கப்படாத வானூர்தி விதமறியா கொச்சு இலகு வானூர்தி (unknown type micro light aircraft )- 1 87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2 புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை: 87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்.. 1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி உருவாக்கியவர்: இள பேரரையன்(லெப்.கேணல்). அப்பையா இருப்பு எண்ணிகை - 2 → புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. ) இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து' இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒரேலுகிறதல்லவா? (synchronize). இது என் துணிபு! 2) கொச்சு இலகு கீழிதை (micro light glider) : →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்) இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1 'இடது புறத்தில் நிற்பவர் பேரரையன் (கேணல்) சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர்(Commander) என அறியப்படுபவர் ஆவார்..' 'கீழிதையின் உடல்' 'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி' 'கீழிதையின் பக்கவாடு. ' → கீழிதை - 2 இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3) தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane) இருப்பு எண்ணிகை - 1 'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்' 'மூலைப் பார்வை' 'முன்பக்க பார்வை' 'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.' மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் இள பேரரையன் (லெப்.கேணல்) முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும். அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தற்சுழல் பறனையின் வால்பகுதி' 'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி' 4) இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter) இது புலிகளிடம் இருந்ததாகவும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாகவும் சிறீலங்கா அரசாங்கம் (புலிப்பகைவர்) சொல்கிறது.. படம் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் சிங்களமே அத்தகவலை வெளியிட்டுள்ளதால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இங்கு இணைக்கின்றேன். ஆதாரம்: dossier on LTTE → பக்- 80, பத்தி -2. 4) புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine) 'பின்பக்கத் தோற்றம்' 'பக்க வாட்டுத் தோற்றம்' 5) சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூறத் தக்கது. வான்கரும்புலி வானூர்தியாக(kamikaze aircraft) மாறிய புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்' 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்' (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run) 'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)' (மானுறுத்தம் - manufacture) 'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை' இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது. குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் . 'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய் | தீக்குடுக்கையின் முன்பகுதி ' 'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்' 'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.' 'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb rack) ஆற்றப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்பட்டுள்ளன.' 'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்' "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது" → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி இள பேரரையர் (லெப்.கேணல்) சிரித்தரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார். → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும். 6) ஆறாவது வானூர்தியொன்று புலிகளிடம் இருந்தது என்று நாந்தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் புலிகளின் ஓர் பரப்புரை நிகழ்படத்தில் தமிழீழ வான்பரப்பில் மூன்று வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டிருப்பது போலக் காட்டியிருந்தார்கள். அந்த நிகழ்படம்(video) இதோ. https://eelam.tv/watch/க-த-த-ட-டம-ப-ட-ட-kuththattam-pooduda-ltte-aircrafts-வ-ன-ப-ல-கள-வ-ன-ர-த-கள-zlin-143-cessna_h61ppM57pLJjoNG.html 'பரப்புரை நிகழ்படம்' 'பறப்பில் உள்ள புலிகளின் 3 வானூர்திகள்' 'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்' 'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், ஒரே மாதிரியாக உள்ளது' 'மேலே காட்டப்பட்டுள்ள அதே வானூர்திகள், முகிலின் கீழே பறக்கும் போது' மேலே மூன்று சிலின்கள் பறப்பில் ஈடு்பட்டுளதை நீங்கள் காணலாம். இதில் இரண்டு சிலின்கள் வான்கரும்புலி வானூர்தியாக மாறி அழிந்துபோய் விட்டன. அந்த மூன்றாவது சிலினிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும். இதோ உங்களின் பார்வைக்காக… 'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது' 'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது' அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் கீழே கூறியுள்ள செசுனா வித வானூர்திக்கானதாகவும் இருக்கலாம். 'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட ஒற்றைச் சில்லு' இனிவரும் படங்களில்தான் ஒரு விதப்பான விதயம் (specific info/matter) உண்டு; படங்களை உத்துப் பாருங்கள். இந்தப் படங்கள் மேற்கண்ட நிகழ்படத்தில் செசுனா வித வானூர்திகள் குண்டுவீசுவது போல ஓர் படம் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் வருகிறது. 'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்' 'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்' பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், நடுவில் உள்ளதன் இறக்கையானது ஏனைய இரண்டினதுமுடனிருந்து வேறுபடுகிறது; வால்பகுதியும் அருகில் பறக்கும் வானூர்திகளிடம் இருந்து வேறுபடும் விதமாக ஒல்லியாக சற்று நீளமாக உள்ளது. நடுவில் பறக்கும் வானூர்தியினின் இறக்கை வேறுபாடு நன்கு தெரிகிறது பாருங்கள். இவ்வானூர்தியின் இறக்கையானது வானூர்தியின் கொடிஞ்சியின் (cockpit) மேற்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது செசுனா (Cessna) வித வானூர்தியாக இருக்கலாம் என்பது என் துணிபு. இருந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த நடுவில் உள்ள வானூர்தி செசுனா என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் செசுனாவிற்கான சாளர அமைப்பு இதில் உண்டு. அதாவது வானோடி இருக்கைக்கு அருகில் உள்ள சாளரம் மற்றும் பின்னால் உள்ள பாந்தர்(passenger) சாளரம்(window) ஆகிய இரண்டும் இரண்டு கறுப்புச் சதுரப் புள்ளிகளாகத் தனித்தனியாகத் தெரிகின்றன. நன்கு அண்மையாக்கிப் பார்த்தீர்களென்றால் இது தெளிவாகத் தெரியும். மேலும், இறக்கையானது கொடிஞ்சியின் மேற்புறத்தில் இருந்தே வானூர்தியுடன் இணைக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. 'செசுனா வானூர்தியின் தோற்றம் | படிமப்புரவு: Hobby World' மேற்கண்ட படத்தில் வானூர்தியின் இறக்கை உடலோடு பொருந்தும் குழைச்சில் இறக்கையின் நிழலானது கொடிஞ்சி மீது விழுவது கறுப்பாகத் தெரிகிறது பாருங்கள். ஆனால் மற்றைய இரண்டிலும் அவ்வாறு நிகழவில்லை. 'அதே அந்த நடுவில் பறப்பில் உள்ள வானுர்திக்கு மட்டும் உருமறைப்பு வண்ணம் பூசப்படவில்லை. வெண்மையாய்த் தெரிகிறது பாருங்கள்; அதேநேரம் அருகில் பறக்கும் இரண்டிலும் உருமறைப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.' மேலே நான் கொடுத்திருக்கின்ற படங்களையும் ஏரண விளக்கங்களையும் வைத்துப் பார்க்கும் போது புலிகளிடம் செசுனா வகை வானூர்தியுடன் மேலும் ஒரு வானூர்தியும் இருந்திருக்க வேண்டும் என்பது என் முடிவு! (10/15/2021 அன்று செசுனா தொடர்பான மற்றுமொரு ஆதாரம் கிடைக்கப்பெற்று அது கீழே தனியான மறுமொழிப்பெட்டியினுள் கொடுக்கப்பட்டுள்ளது.) குறிப்பு: எழிலன்புரம், புதுக்குடியிருப்பு மற்றும் முருகண்டியில் உள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகளிடம் செசுனா இசுகை மாசுரர் விதத்தைச் சேர்ந்த வானூர்தி ஒன்று இருப்பதாகவும் அது அடிக்கடி வானில் பறப்பதை சாட்சி நேரில் கண்டதாகவும் ஜூலை 28, 2006 அன்று சுவீடனை தற்போதைய தளமாகக் கொண்ட ஆசிய ட்ரிப்யூன்(Asian Tribune) என்ற மின்-செய்தித்தாளானது செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 7) வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft ) இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு. → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller) செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும். உடல் பகுதிகள் உதிரிகளாக: அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு: கொச்சு இலகுவானூர்தி (micro light aircraft) இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன. 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தியின் மையப்பகுதி' 'வானூர்தி மாதிரிப்படம்' 'வானூர்தி மாதிரிப்படம்' மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம். புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):- 'பயிற்சி பாவனையாக்கி (training simulator)' 'பறப்பு பாவனையாக்கி (flying simulator)' 'ஓடுதள மின்சூழ்கள்' 'நீல நிறத்தில் தெரிவது பறனை உடுப்பு ஆகும்' 'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்' 'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.' சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்: 2 முதன்மைச் சில்லுகள்: பிற்சேர்க்கை (14/10/2020) 'வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள் பரக்குடையில்(parachute) குதித்து எழுந்தபோது.' | படிமப்புரவு: Rajarata, Flickr பிற்சேர்க்கை (2/6/2021): உறுதிப்படுத்தப்பட்ட உயிரோடு உள்ள தமிழீழ வானோடிகள்: 'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன் (குசந்தன் என்றால் பலருக்கும் தெரியும்)' '(நிலை தெரியாது) சுரேஸ் எ அச்சுதன்' உசாத்துணை: Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-14 http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-19 படிமப்புரவு: Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு நன்னிச்சோழன்
  2. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக இவ்வாய்வுக் கட்டுரை தமிழ்ப்பரப்பில் விளங்குமென நினைக்கிறேன். 'புலிகளின் வான்படையின் இலச்சினை | படிமப்புரவு: EelamView ' வான்புலிகளின் சீருடை: முதலாவதாக வான்புலிகளின் சீருடை பற்றிக் காண்போம். இவர்கள் இளநீல வண்ணத்திலான வரிப்புலிச் சீருடையை அணிந்திருந்தனர். அது அதிவெளிறிய இளநீலம், வான்நீலம் மற்றும் சாம்பல் நீலம் என நீலக் குடும்பத்தினைச் சேர்ந்த மூன்று நிறங்களைக் கொண்ட வரிப்புலிச் சீருடையாக இருந்தது. இச்சீருடை எப்போது முதற்தடவையாக அணியப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. தோராயமாக 2001/2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துவாக இருக்கலாம் என்பது என் துணிபு. முன்குறிப்பிட்ட காலத்தில் இருந்து 2009 இறுதிப்போர் வரை அணிந்திருந்தனர். இறுதிப்போரில் எப்போது கடைசியாக அணிந்தனர் என்பது அறியில்லை. ஆனால் அவர்கள் வான்கரும்புலிகளாக செல்வதற்கு முன்னர் இதனை அணிந்திருந்தால், 2009 பெப்ரவரி எனக் கொள்ளலாம். (அதன் பிறகு வானூர்திக்கான தேவை எழவில்லை.) ஆனால் இவ்விரண்டு தேதிகளும் என்னுடைய துணிபு மட்டுமே. துல்லியமானவை அறியில்லை. வானோடிகளின் வில்லைகள்: அடுத்து இவர்கள் அணிந்த வில்லைகள் பற்றிப் பார்ப்போம். இவர்கள் இரண்டு விதமான வில்லையினை தமது மார்பினில் குத்தியிருந்தனர். வானோடிகள் வலது பக்க மார்பில் வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லையினையும் இடது பக்கத்தில் பறப்பர் வில்லையினையும் (aviator badge) குத்தியிருப்பர். 'வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லை(badge) - வலது மார்பு' 'பறப்பர் வில்லை(Aviation badge) - இடது மார்பு' (கீழே உள்ள 4 படத்திலும் வெவ்வேறு தமிழீழ வானோடிகள் , துணை வானோடிகள் மற்றும் வான்கலவர்(airmen) உள்ளனர்... இப்படங்களில் உள்ள வானோடிகளில் ஒருவரைத் தவிர்த்து ஏனைய 3 வானோடிகளும் வீரச்சாவடைந்து விட்டனர்) 'வானோடிகளின் மார்பில் அந்தக் கறுப்பு நிறத்தில் தெரிபவை வில்லைகளைக் குத்துவதற்கான பிணையொட்டிகள்(velcro) ஆகும்.' வானோடிகளுக்கான விருதுகள்: ஈழப்போரில் விடுதலைப்புலிகளால் தமிழீழ வானோடிகளுக்கென தனித்துவமான ஒரு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் "நீலப்புலி" என்பதாகும். இது ஐந்து தடவை தொடர்ந்து வானேறி வெற்றிகர வான்தாக்குதல் மேற்கொண்ட வானோடிகளிற்கு வழங்கப்படும் விருதாகும். 'நீலப்புலி விருது' இது வான்புலிகளில், வான்கரும்புலி வானோடி பேரரையர்(Col) ரூபன்(மாவீரர்) வான்கரும்புலி வானோடி இள பேரரையர் (Lt. Col.) சிரித்திரன்(மாவீரர்) வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன் (மாவீரர்) ஆகியோரிற்கு வழங்கப்பட்டன. மேலும் துணைவானோடிகளாக செயற்பட்டோரிற்கு 'மறவர்' என்ற விருதும் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றோரின் பெயர்க் குறிப்புகள் அறியில்லை. இவற்றைப் பெற்றோரின் படிமங்களைக் காண இங்கே சொடுக்கவும்: வான்புலி வானோடிகளின் பறனை உடுப்புகள் (Pilots Flight Suits) : உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தன்னுடைய வான்படைக்கென பறனை உடுப்புகள் வழங்குவது வழக்கம். இவை கூடுதலாக பாசிபச்சையும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் இருப்பது வழக்கம். நமது பண்டாக்கள் அணிவதும் இந்நிறத்திலான உடுப்பினையே. இதே போன்றே எமது வான்படை வானோடிகளும் பறனை உடுப்பினை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ம்ம். சிலபேர் அறிந்திருப்பீர்கள்; பலபேர் அறிந்திருக்கமாட்டீர்கள். எனவே நாம் அடுத்ததாக எம்மவர் அணிந்திருந்த இந்த பறனை உடுப்பினைப் பற்றிக் காண்போம். வான்புலிகளின் முதற்பறப்பு மூன்றாம் ஈழப்போர் காலத்தில்தான். அவர்கள் பறந்த ஆண்டு - என்னிடம் இருக்கிற தகவல்களின் அடிப்படையில் - தோராயமாக 1998 ஆம் ஆண்டு என வைக்கிறேன். இதன் அடிப்படையில் அவர்கள் இச்சீருடையினை முதன் முதலில் அணிந்தது 1998 ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கணிக்கிறேன்(மாதம், நாள், நேரம், தாரகை எல்லாம் நான் அறியேன் மக்காள்). இந்த 1998 ஆம் ஆண்டில் அவர்கள் இரு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். --> 1998இல் கொச்சு இலகு கீழிதை(Micro Light Glider) ஓட்டிய வானோடிகள் அணிந்திருந்தது: இந்த ஆண்டில் கீழிதையினை ஓட்டிய வானோடிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்ற இன்னொரு அண்ணா என மொத்தம் மூன்று பேர் ஒரு வெளிறிய இளநீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். இவர்கள் பராக்குடையோ அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ(accessories) அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் தலைக் கவசமாக ஒரு வெள்ளை நிறத்திலான வானோடி தலைச்சீரா அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடது பக்கத்தில் நிற்கும் வான்கலவரும் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளதை கவனிக்குக. ஆக மொத்தம் மூன்று பேர் இப்பறனை உடுப்பினை அணிந்துள்ளனர், 1998இல்.' --> 18 செப்ரெம்பர், 1998இல் ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை(Gyroplane) பறப்பின் போது: இந்த ஆண்டில் தற்சுழல்பறனை ஓட்டிய வானோடிகள் இருவரில் ஒருவர் மட்டும் (அச்சுதன் அவர்கள்) அக்காலத்தில் சிங்கள வானோடிகளின் பறனை உடுப்பு நிறமான பாசிப்பச்சை நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தார். இவர் பராக்குடையோ(parachute) அல்லது தேவையான பாதுகாப்பு அணியங்களோ அணிந்திருக்கவில்லை. ஆனால் வானோடிகள் இருவரும் அதே பாசிப்பச்சை நிறத்திலான முந்தையதைக் காட்டிலும் தொழில்நுட்பம் கொஞ்சம் முன்னேறியதாக உள்ள ஒரு தலைச்சீராவினை அணிந்திருந்தனர். இவை யாவும் கீழ்வரும் படிமங்கள் மூலம் அறியப்பட்டவையே. 'இடமிருந்து வலமாக: பேரரையர்(Col) சங்கர் , மற்றும் அச்சுதன் அவர்கள்' 'இடமிருந்து வலமாக: இள பேரரையர்(Lt. Col.) குசந்தன், பெயர் அறியா வான்கலவர் மற்றும் அச்சுதன் அவர்கள்' --> 2005< சிலின் சி 143(Zlin Z 143) மற்றும் செசுனா வித(Cessna type) வானூர்தி ஆகியவற்றை ஓட்டிய வானோடிகள் அணிந்தவை: இடமிருந்து வலமாக: சிரித்திரன் அவர்கள், தெய்வீகன்/தேவியன் அவர்கள் மற்றும் ரூபன் அவர்கள் ஆகியோர் தாக்குதல் வானூர்தியாக மாற்றப்படாத சிலின் 143 இற்கு முன்னால் நிற்கின்றனர். இவ்வானூர்திகள் 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் ஓட்டப்பட்டவை ஆகும்(என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் 10 படிமங்களின் காலம் 03/04/2005 ஆகும்). இக்காலத்தில் இதனை ஓட்டிய தமிழீழ வானோடிகள் இரண்டு நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்திருந்தனர். ஒன்று கறுப்பு மற்றொன்று கடுநீலம் ஆகும். இவை இரண்டையும் நீங்கள் மேலுள்ள படிமத்தினை நன்கு அண்மையாக்கி ஒளியினை அதிகரிப்பதன் மூலம் காணலாம். மேலுள்ள படிமத்தில், இள பேரரையர்(Lt. Col.) சிரித்திரன் மற்றும் தேவியன்(நிலை இல்லை) ஆகியோர் கறுப்பு நிற பறனை உடுப்பினை அணிந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் அணிந்துள்ள வான்படை கஞ்சுகத்தின் கழுத்துப்பட்டையில் நீல நிற உடுப்பு ஒன்றின் கழுத்துப்பட்டை தெரிகிறது. அது யாதென எனக்குத் தெரியவில்லை. இவர்களில் மூன்றாமவரான பேரரையர்(Col.) ரூபன் அவர்கள் நீல நிறத்திலான பறனை உடுப்பினை அணிந்துள்ளார். அதேநேரம் இவர்கள் மூவரும் தத்தமது பறனை உடுப்பின் மேல் கறுப்பு நிற வான்படை கத்தனம்(Air Force jacket) ஒன்றினையும் அணிந்துள்ளனர். மேலும் மேற்கண்ட படிமத்தில் வானோடி தேவியன் அவர்கள் கையில் பச்சை நிற கைமேசினை(gloves) அணிந்துள்ளதையும் கவனிக்குக. சிங்களம் கைப்பற்றிய பறனை உடுப்பும் கொளுத்திய வெடியும்: இவ்வுடுப்பினில் ஒன்றினை சிங்களப் படைகள் இறுதிப் போரில் கைப்பற்றி இருந்தன. கைப்பற்றிய உடுப்பு விடுதலைப் புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருந்த இரு வில்லைகளும் விடுதலைப் புலிகளினது இல்லை. ஏனெனில் புலிகளினால் வெளியிடப்பட்ட பறப்பர் வில்லை மற்றும் 'வானோடி' என எழுதப்பட்ட வாசகம் கொண்ட வில்லை ஆகிய இரண்டிலும் புலிச் சின்னம் இருப்பதோடு அவை தமிழிலும் உள்ளன. ஆனால் இந்த உடுப்பில் குத்தப்பட்டுள்ள வில்லைகளில் புலிச்சின்னமும் இல்லை, வானோடி என்ற வாசகம் தமிழிலும் இல்லை! பகரமாக 'Pilot' என்ற ஆங்கில வாசகமே உள்ளது. தமிழ் கொண்டு ஆண்ட நாட்டின் படையில் ஆங்கிலமா? வாய்ப்பேயில்லை! அத்துடன் அவற்றினது வடிவமும் தோற்றமும் புலிகளால் வெளியிடப்பட்ட வில்லையில் இருந்து முற்றாக வேறுபடுகிறது. மேலும், இந்த உடுப்பானது வில்லைகள் குத்தப்பட்ட நிலையில்தான் சிங்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. இதுதான் மிகப் பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எந்தவொரு வானோடியும் தனது உடையில் வில்லையினை குத்திவைத்த நிலையில் புதைத்துவிட்டுச் செல்ல மாட்டான். ஆனால் இங்கு சிங்களமோ அப்படியே புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்து கிளப்பி எடுத்ததாக அறிவித்திருக்கிறது. நான் எண்ணுவது யாதெனில் உங்கள் மனதில் இப்போது தோன்றுவதே. ஓம், எடுத்த பின்னர் ஊடக்கத்திற்காக இப்படி ஏதேனும் குத்திவிட்டிருக்கலாம் என்பது என் துணிபு. ஆக, இந்த பறனை உடுப்பு வான்புலிகளினதுதான், ஆனால் அதில் குத்தப்பட்டிருக்கும் வில்லைகள் வான்புலிகளினது அல்ல! அவை புலிகளினது பொருள் ஒன்றினை கைப்பற்றி விட்டோம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்து சிங்கள மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிங்களம் செய்த உத்தியே ஒழிய இது புலிகளினது வில்லைகள் அன்று. 'கைப்பற்றப்பட்ட புலிகளின் கடுநீல நிற பறனை உடுப்பு' '13-மே-2009 அன்று சிங்களத்தால் கைப்பற்றப்பட்டு உலகிற்கு புலிகளின் பறனை உடுப்பு என அறிவிக்கப்பட்டது | படிமப்புரவு: யூடியூப் & ITN News| மூன்று திரைப்படிப்புகளை ஒன்றாக ஒட்டி இப்படிமத்தை உருவாக்கியுள்ளேன்' தமிழரின் பறனை உடுப்பில் குத்தப்பட்டிருக்கலாம் என நான் கணிக்கும் வில்லைகள்: மேலே சிங்களம் கொழுத்திய வெடியை வைத்துப் பார்க்கும்போது எம்முடைய வானோடிகளின் பறனை உடுப்பில் வலது மார்புப் பக்கத்தில் நான் மேலே கூறியுள்ளது போன்ற 'வானோடி' என்ற வாசகம் கொண்ட மஞ்சள் நிற வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இடது பக்கத்தில் 'நீலப்புலி' என்ற பறப்பர் வில்லை குத்தப்பட்டிருந்திருக்கலாம்; இரு தோட்களிலும் தோள்மணை(Shoulder boards) மேலுள்ளது போல குத்தப்பட்டிருந்திருக்கலாம். அந்த தோள்மணையில் குறுக்குப்பாட்டிற்கு - இனமறியா பொருளால் ஆன - ஒன்றிணைக்கப்பட்ட மூன்று வெண்ணிற பட்டைகள் பிணைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். மாறாக இவ்வில்லைகளை குத்தாமல் வெறுமனே அணிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இந்த வில்லைகள் குத்தப்பட்டிருக்கலாம் என்பது வெறும் கருதுகோள் மட்டுமே. ஆனால் வான்புலிகள் இப்பறனை உடையினை அணிந்திருக்கின்றனர் என்பது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி, அந்தப் படிமம் மூலமாக! உசாத்துணை: https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html https://eelam.tv/watch/sky-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-tamil-tigers_pKPYEXSJjezSrqV.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-பறன-உட-ப-ப-sky-tigers-flight-suit_ZZIOE7E9guMrWAD.html கிடைத்த படிமங்களை ஆராய்ந்து எழுதியுள்ளேன். படிமப்புரவு: dossier on LTTE Tamilnet.com eelamview.com ஏனையவை திரைப்பிடிப்புகள் ஆகும் (youtube.com, eelam.tv) ஆக்கம் & வெளியீடு நன்னிச்சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.