நேட்டோவில் பின்லாந்து மற்றும் சுவீடனை சேர்க்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த துருக்கி இப்போ அதற்கு இணங்கியுள்ளது.
இதன் மூலம் இந்த நாடுகள் நேட்டோவில் இணைய இருந்த பெரிய தடை நீங்கியுள்ளது.
நேட்டோவின் விஸ்தரிப்பையே உக்ரேன் போரின் காரணியாக ரஸ்யா சுட்டியது.
உக்ரேன் போர் வரை நேட்டோசில் சேர 20-25% பின்லாந்து மக்களும், உக்ரேன் போரின் பின் 79% பின்லாந்து மக்களும் ஆதரவளிப்பதாகவும். சுவீடனில் இந்த சதவீதம் 60%க்கும் மேல் எனவும் கருத்துக்கணிப்புகள் சொல்கிறன.
இந்த நாடுகள் துருக்கி மீது போட்டிருந்த ஆயுத விற்பனை தடை மற்றும் தீவிரவாதிகளை (என துருக்கி சொல்வோரை) துருக்கிக்கு நாடு கடத்தல் போன்ற விடயங்களில் துருக்கியின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக தெரிகிறது.
மூன்று நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்தபின் துருக்கியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நகர்வு பால்டிக் கடலை “நேட்டோ ஏரி” யாக மாற்றும் என்கிறார் பி பி சி யின் பாதுகாப்பு விவகார நிருபர்.
இந்த விஸ்தரிப்பு நடந்தால் பால்டிக் கடலின் சென்பீட்டர்ஸ் பேர்க், கலினின்கிராட் கரைகள் தவிர் ஏனைய கரைகள் எல்லாம் நேட்டோவின் ஆளுகையின் கீழேயே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகு
நேரடி மொழிபெயர்ப்பல்ல. முக்கிய தகவல்கள் மட்டும்.
https://www.bbc.co.uk/news/world-europe-61971858