Search the Community

Showing results for tags 'உயிர்த்த ஞாயிறு'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 6 results

  1. சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சஹ்ரானின்-முடக்கப்பட்ட-சொத்து-விவரம்-நீதிமன்றில்-அறிவிப்பு/175-236484 தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில் ; 13.4 கோடி ரூபா பணம், 100 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம் 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார். 21/4 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புள்ள பிரதான சந்தேக நபர்கள் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் பயங்கரவாத அமைப்பின் 90 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் சி.ஐ.டி. பொறுப்பில் தற்போது 63 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் குண்டுத் தககுதல்களை நடத்த தயாராக இருந்த 15 பேரும், சஹ்ரானுடன் உடன் இருந்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிய 5 பேர் வரையிலும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார். இதேவேளை இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், இதுவரை குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர்கள் சார்பிலான நிறுவங்கள் என 41 பேருக்கு சொந்தமான 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்குகளில் உள்ள குரித்த பணம் விசாரணைகளுக்காக மேல் நீதிமன்ற ஆணை ஊடாக முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்கு சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் கூறினர். https://www.virakesari.lk/article/62279
  2. 21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தில், 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார். எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61055
  3. நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/business/220157/நாட்டின்-பொருளாதாரம்-ஸ்திரமான-மட்டத்தில்
  4. மனிதப் படுகொலை குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை - நீதிவான் லங்கா ஜயரத்ன 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே அவ்விருவரும் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயம் பிரகாரம் மரண தண்டனைக் குரிய குற்றமான மனிதப் படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள போதும், அவ்வாறு மனிதப் படு கொலைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும், சாட்சியும் இல்லை என அறிவித்த நீதிவான் அக்குற்றச்சாட்டின் கீழ் வழக்கை முன் கொண்டு செல்ல முடியாது என அறிவித்தார். இந் நிலையிலேயே ' பொலிசார் கோருகின்றார்கள் என்பதற்காகவோ அல்லது வேறு ஒரு தரப்பின் மனதை சந்தோஷப்படுத்துவதற்காக ஒருவரை விளக்கமறியலில் வைக்க முடியாது என முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் வழக்குத் தீர்ப்பொன்றினை முன்னிலைப்படுத்தி சுட்டிக்கட்டிய நீதிவான் லங்கா ஜயரத்ன, ஹேமசிறி, பூஜித் ஆகிய சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க தனக்கு பூரண அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். குற்றவியல் சட்டக் கோவையின் 396,397,398,399 ஆம் அத்தியாயங்களின் கீழான விடயப்பரப்புக்கள் பிரகாரம், இந்த விவகாரத்தில் பிணையளிக்க தான் சட்ட மா அதிபரில் தங்கியிருக்க வேண்டியதில்லை என அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, பிணை சட்டத்தின் கீழ் பிணையை மறுப்பதற்கான எந்த காரணியும் இல்லாததால் பிணையில் செல்ல அனுமதிப்பதாக அறிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்ப்ட்ட விவகாரத்தில், அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிணை தொடர்பில் தீர்மானிக்க அது குரித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே இது தொடர்பிலான தனது தீர்ப்பை அறிவித்து நீதிவான் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, சந்தேக நபர்களான ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோர் மன்றில் ஆஜர்செய்யயப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நாரஹேன்பிட்டி, பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெறுவதாக சிறைச்சாலை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் கீழ், சட்டத்தரணிகளான சந்துன் கமகே, கிரிஷான் கம்பலகே, இமாரா சேனாதீர, புத்திக ஜயசிங்க, கெளஷல்யா ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆஜராகினர். முறைப்பாட்டாளர் தரப்பில் சட்ட மா அதிபரை பிரதி நிதித்துவம் செய்து அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே ஆஜரானதுடன் விசாரணையாளர்களை பிரதி நிதித்துவம் செய்து சி.ஐ.டி.யின் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹெலௌடகே தலைமையிலான குழுவினர் ஆஜராகினர். இந் நிலையிலேயே நீதிவான் லங்கா ஜயரத்ன தனது பிணை குறித்த தீர்ப்பை அறிவித்தார். https://www.virakesari.lk/article/60110
  5. இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர். அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர். இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது. உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூஜ்ஜயம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ஒரு இடமான இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி - உனவட்டுன பகுதிக்கு நாம் சென்றிருந்தோம். சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-48921586 இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி - உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார். "ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்" என்றார் அவர். உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினர். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார். இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  6. 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார். https://www.virakesari.lk/article/60119 ரி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹமீத் ஹிஸ்புல்லா! கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ஷாஹுல் ஹமீத் ஹிஸ்புல்லா (வயது 21) ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் விசாரணைக்காக இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய ஹம்பாந்தோட்டை ஆயுதப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றக் குற்றச்சாட்டுக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். https://www.virakesari.lk/article/60113