யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'உல்லாசத்துறை'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 4 results

  1. நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/business/220157/நாட்டின்-பொருளாதாரம்-ஸ்திரமான-மட்டத்தில்
  2. தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம் தெரிவிப்பதாக இல்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவ ராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார். இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராமேஸ் வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. http://valampurii.lk/valampurii/content.php?id=18965&ctype=news
  3. இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/39-நாடுகளுக்கு-விசேட-விசா-நடைமுறை/175-235112
  4. இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர். அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர். இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது. உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூஜ்ஜயம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ஒரு இடமான இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி - உனவட்டுன பகுதிக்கு நாம் சென்றிருந்தோம். சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-48921586 இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி - உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார். "ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்" என்றார் அவர். உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் பிபிசி தமிழிடம் சுட்டிக்காட்டினர். இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார். இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.