கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/