யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'ஒருநிமிடக் கதை'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 4 results

 1. ஒரு நிமிடக் கதைகள் விசாரிப்பு பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர்கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதற்காக, மாணிக்கம் தன் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்... ‘‘ஏங்க, கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்துபோன கதையா, என்னென்னவோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவருடைய உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே... அவர் என்ன நினைச்சுப்பார்?’’ மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்... ‘‘ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷம் தான் படுவான். நான் வேணும்னுதான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சைகள் பத்தி சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்!’’ - சொ.ஞானசம்பந்தன் முதல் இடம்! சு ந்தரியின் மகள் கவிதா பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்திருக்க, முதல் இடத்தைப் பிடித்தது, வேலைக்காரியின் மகள் அமிர்தா! இதை ஏதோ தனக்கு ஏற்பட்ட மானக்கேடாகவே எண்ணி, அன்றைக்கே வேலைக்காரியை நிறுத்திவிட்டாள் சுந்தரி. ‘‘என்னம்மா நீங்க, பாடங்கள்ல எனக்குத் தெரியாத சந்தேகங்களை எல்லாம் நான் அமிர்தாகிட்டேதான் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அவ மட்டும் இல்லேன்னா, ஸ்கூல்ல நான் பத்தாவதாவோ பதினஞ்சா வதாவோதான் வந்திருப்பேன். இப்ப அவ அம்மாவை நீங்க வேலையை விட்டு நிறுத் திட்டீங்கன்னதும், அமிர்தா என்கிட்டே முகம் கொடுத்தே பேச மாட்டேங்கறா!’’ என்று கவிதா சிணுங்கவும், ‘அப்படியா விஷயம்’ என, மீண்டும் தேவியை வேலைக்கு வரச் சொன்னாள் சுந்தரி. மறுநாள் ஸ்கூலில்... ‘‘நடந்ததெல்லாம் அம்மா சொன்னாங்க கவிதா! உனக்கு நான் எதுவுமே சொல்லிக்கொடுக்கலே! இருந் தாலும், எங்க கஷ்டம் புரிஞ்சு, எனக்காகப் பொய் சொல்லி, மறுபடியும் அம்மாவை வேலைக்கு எடுத்துக்க வெச்சிருக்கே. ரொம்பத் தேங்க்ஸ்!’’- கவிதாவின் கை பற்றி, நெகிழ்ந்தாள் அமிர்தா. - ஆர்.ஜெசிந்தா எதிர்பாராத உதவி ஊரெல்லாம் கொலை, கொள்ளைகள். காவல்துறை இரவு நேர ரோந்துக்காவலை அதிகப்படுத்தி இருந்தது. நைட் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பிய ராஜுவை மறித்து, ‘ஐ.டி. கார்ட் இருக்கா? செல்போன் இருக்கா? ஆபீஸ் போன் நம்பர் இருக்கா?’ என்றுஎன் னென்னவோ கேட்டுக் குடைந்துவிட்டனர். ராஜு என்ன எடுத்துச் சொல்லியும், அவர் கள் சமாதானம் ஆகவில்லை. குழுமியிருந்த காவலர்களில் ஒருத்தர், தான் கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பகுதியிலேயேதான் சுற்றி வருவதாகவும், அவனை ஒருநாள்கூடப் பார்த்ததே இல்லை என்றும் சொல்லி வயிற்றில் புளியைக்கரைத்தார். அந்த நேரம், திடுதிடுவென ஏழெட்டுதெரு நாய்கள் ஓடிவந்தன. ராஜுவைச் சுற்றி நின்று வாலை ஆட்டிக் குழைந்தன. பேட்ரோல் வண்டியில் அமர்ந்திருந்த காவல் அதிகாரி மற்ற காவலர்களுக்குஉத்தர விட்டார்... ‘‘அந்த ஆளை விடுய்யா! அவர் இந்தப் பக்கத்து ஆள் மாதிரிதான் தெரியுது!’’ - ஆர்.ஜெகந்நாதன் https://www.vikatan.com
 2. ஒருநிமிடக்கதை: நடிப்பு! ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்‌ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார். செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும். “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..” வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ளாமல் சிவாஜி கணக்காக சிரித்துக்கொண்டே அழுவான் பாருங்கள். அதேபோல் அழகான பெண்களைப்பார்க்கும் போது சதாரணமாக அவன் பாப்பாயி போல் ஆவதுண்டு. ஆண்கள் பலருக்கு இதன் அர்த்தம் புரிந்திருக்கும். மனைவி எதிரில் வேறொரு பெண்ணின் கால்களின் கீழ் உள்ள செருப்பை மட்டும் பார்த்து, செருப்பு புதுசா அல்லது பழசா என்று யோசிப்பது போல நடிப்பில் தேறிவிட்டான். ஆனால் அவனுக்கே இன்று தன் பாடம் மறந்து அதிர்ச்சியைக் காட்ட வேண்டிய அந்த வார்த்தைகளை அவள் சொன்னாள். “என்னங்க... வேலைக்கார பெண்ணை அடுத்த மாசம் நிப்பாட்டிடப்போறேன்” - அந்த ஒரு நிமிட கண்களின் அதிர்ச்சி ப்ளாஷ் அவளுக்கு போதுமானதாக இருந்தது.. “சரி இல்லியே, நீங்க என்னாத்துக்கு அதிர்ச்சி அடையுறீங்க?” உள்ளே பதிந்திருந்த சிவாஜிகணேசன் தலையைக்காட்டினார். “ மக்கு, நாள் முழுக்க வேலை. இப்பவே ரொம்பவும் டயர்டா தெரியுறே... வேலை செய்றவளையும் நிறுத்திட்டா... நோ... என் தங்கத்தை கஷ்டப்பட விடமாட்டேன் “ நைஸாகத் திரும்பி வாசலில் வேலை செய்துகொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்தான். வயது... இருபது தாண்டாது. பளிச் முகம். டைட் ஃபிட்டிங் சுடிதார்தான் உடை. அவ்வப்போது இவனைப் பார்த்து ’களுக்’ சிரிப்பு. இவளை நிறுத்திவிட்டால்.? “ ராஜாத்தி, ஏண்டா இந்த யோசனை..” “பின்ன என்னங்க, மத்த வீடுகள்ல ஐநூறுதான் தராங்க..நாம எண்ணூறு. ஆனா வேலை சுத்தமில்லீங்க.. ரொம்பவே வாயாடறா....” - காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாள். இதை எப்படித் தடுப்பது? உள்ளே சிவாஜிகணேசனுடன் கதை டிஸ்கஷனில் இருந்த பாரதிராஜா மெதுவாகத் தலை காட்டினார். “இல்ல, எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய்... நேத்துதான் , அந்தத் தெருக்கோடி வீட்டு அம்மா, இவளை வாசல்ல வெச்சு ஏதோ பேசுறதைப் பாத்தேன். இவளை வேலைக்கு கூப்பிடாங்களோ என்னவோ?இவ அங்கே போய் நம்ம வீட்டுச் சமாசாரத்தை சொல்லிடப்போறா ” அந்த வீட்டுடன் இவளுக்கு ஆகவே ஆகாது. கொளுத்திப்போட்டது நன்றாக வேலை செய்தது. “ஆ... நேத்தா... பேசினாளா... சரியான ஊமக்கோட்டானுங்க நீங்க.. சொல்லவேஇல்ல. அவதான் இவளை கலைச்சுவிட்டிருக்கா...பாருங்க.. சொன்ன வேலையைக்கூட பண்ணாம போறா... அவ வீட்டுக்கு வேலைக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்கா. நான் விட்டுடுவேனா... ஆள் இல்லாம கஷ்டப்படட்டும். நான் நிறுத்தமாட்டேன்” அவனுக்குப் போன உயிர் திரும்ப வந்தது... நல்லவேளையாக மல்லிகா வீட்டில் மீதமாகிப்போன சாப்பாட்டை எடுத்துப்போகிறாள். புதிதாக ஒருத்தி வந்து இந்த படு மட்டமான சாப்பாட்டை எடுத்துச்செல்ல மறுத்தால்..? ஃபிரிஜ்ஜில் அவை வைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்டு , அதை அவன் விழுங்கி, நன்றாக இருப்பது போல் ஓவர் ஆக்டிங் செய்து... அப்பப்பா... தப்பித்ததை நினைத்து ரசித்தான். ரசித்துச் சிரித்தான். https://www.kamadenu.in/news/stories/3788-oru-nimida-kadhai-nadippu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category
 3. ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். " மாட்டேன்...அம்மா கோபப்படும்" பொம்மிக்கு நன்றாக நினைவில் இருந்தது. சில மாதங்கள் முன் நடந்தது. அன்று காலை கஞ்சி சுடச்செய்து கொடுத்து பின் அம்மா வேலைக்குக் கிளம்பும் போது... "அம்மா... இஸ்கோலு கிடையாதுதானே. என்னையும் இட்டு கிட்டுப்போ..." "அய்ய....உனக்கு இன்னாத்துக்கு கண்ணு இந்த கஸ்மாலம் புடிச்ச வேல....நீ படிச்சு ஆபீசரா வரணும். ரெஸ்ட் எடு..." - பேசிக்கொண்டே தலையை ஒரு கோடாலி முடிச்சிட்டு புடவையை இழுத்து மூடிக் கிளம்பினாள். "அம்மா...போரடிக்குது...நானும் வாரேன்...." ஐந்து வயது பெண்ணின் மிகச் சுலபமாக நிறைவேற்றக்கூடிய ஆசையாக இருந்ததால் குடிசை தட்டியை மூடிப் பத்திரப்படுத்தி பொம்மியுடன் கிளம்பினாள். " எந்த வூடும்மா..?" "அதோ.. தெரியுது பார் பங்களா...மொத வேல அங்கதான்.." அவசரமாக பொம்மியை பின் தள்ளி உள்ளே நுழைந்தாள். "என்னடி ரத்தினம்....ஆடி அசைஞ்சு வர...? அது யாரு...உன் பொண்ணா? இதோபாரு...வேலைக்கு வைக்கும்போதே சொன்னேனில்ல.....தனியாதான் வரணும்னு. போ கொண்டு விட்டுட்டு வா. உன்னைத்தவிர வேறு யாரும் உள்ளே நுழையக் கூடாது..." வேலை போய்விடுமோ என்ற பயத்தோடு ரத்தினம், பொம்மியை அவசரமாக கேட்டிற்கு வெளியே தள்ளிச்சென்றாள். "பொம்மி.... இதப்பாரு...இந்த வூடு மட்டும்தான் இப்புடி.. கேட்டாண்டையே நில்லு...நான் வேலை முடிச்சுட்டு ஓடியாந்துடுறேன்" லேசாக உறைக்கத் தொடங்கிய காலை வெயிலில் பொம்மி கேட்டிற்கு வெளியே நின்றாள்.கேட் வழியாகத் தோட்டத்தில் தெரிந்த மிகப்பெரிய கொய்யா மரம் கவனத்தை ஈர்த்தது. " அட....எம்மாம் பெரிசு பார்ரா இந்தக் கொய்யா..." லேசாக இலைகள் மூடப்பட்டு நடு நடுவே மஞ்சள் நிறத்தில் எட்டிப்பார்த்த கொய்யாக்கள் வசீகரித்தன. மெதுவாக கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள். பழங்கள் எட்டாத் தொலைவில் கண்ணடித்தன. பொம்மிக்கு நாக்கில் ஜலம் ஊறியது. சுற்றும்முற்றும் பார்த்தாள். சின்னதாகக் கீழே கிடந்த கூழாங்கல்லைக் கையில் எடுத்து மிக நேர்த்தியாக கிரிக்கெட் பந்து வீசுவதைப்போல் வீசினாள். ஆனால் அங்கே இறைவனுடன் நடந்த மாட்ச் பிக்ஸிங்கால், கல் ஜன்னலில் பட்டு, ஒரு மிகப்பெரிய சத்தத்தை உண்டு பண்ணியது. "யாரது...வாசல்ல யாரு...." தூக்க முடியாத சதை பற்றுக்களைச் சுமந்து ஓடி வந்த எசமானி அம்மாள் போட்ட சத்தத்தில், பொம்மிக்கு ஜுரமே வந்துவிட்டது. ரத்தினம் கை மருந்து கொடுத்தாள். இங்கிலீசு மருந்து கொடுத்தாள். பொம்மி ஜுர வேகத்தில் தூக்கிப்போட்ட உடம்புடன் முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.... எம்மாம் பெரிய கொய்யா... பொம்மிக்கு ஜுரம் வடிந்து சரியாகத்தான் போயிற்று. இரண்டு வாரத்திற்குப் பின் இஸ்கூல் விட்டு வந்த பொம்மி கைகளில் பெரியதாக இரண்டு கொய்யாபழம் வைக்கப்பட்டது. "ஹைய்யா... பங்களா வூட்டு பழமா...?" இரண்டு கைகளிலும் வைத்துத் தின்றவளுக்குக் கிழட்டு வேலைக்காரனுக்கு மறைவில் அம்மா கொடுத்தும் பெற்ற நகக்கீறல்கள் பற்றித்தெரியாது. தோட்டக்கார கிழவன் பொம்மியிடம் வந்தான். " குட்டி....வா வந்து எல்பு பண்ணு...." பொம்மி கலவரத்தோடு அவனைப்பார்த்தாள். "தாத்தா....எசமானி அம்மா திட்டும்....நா வரமாட்டேன்..." - அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வு தோட்டக்காரன் மனதைக் கிள்ள... "சரி பாப்பா, அங்கேயே இரு. உனக்கு அணில் கடிச்சுப்போட்ட கொய்யாப் பழம் கொண்டாரேன், தின்னு." மெதுவாக உள்ளே சென்று கைகளில் பாதி கடித்த பழங்கள் இரண்டுடன் பொம்மியிடம் வந்தான். மேலே, தலைக்கு மேலே பழங்களைக் கடித்துப் போட்ட வவ்வால் ஒன்று வேகமாகப் பறந்து சென்றது. அன்றைய தலைப்புச்செய்தியாக வந்த நீப்பா வைரஸ் பற்றிய செய்தியை படிக்க யாருக்கும் அங்கு நேரமில்லை. இந்த முறை கிடைத்த இலவச கொய்யாக்களின் விலை சற்று அதிகமே! http://www.kamadenu.in
 4. ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது. பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது. சதாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகக் காரணம் நேற்று முக்கியமான மீட்டிங். பேசிக்கொண்டிருந்த அவருக்கு முக்கியமான ஒருவரின் பெயர் சட்டென்று நினைவில் இருந்து நிரந்திர விடுப்பு எடுக்க... தடுமாறி பின் எம்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனால் எதற்குமே உபயோகமில்லாத இந்த வெட்டிப்பயல் குமார் பெயர் மட்டும் எப்படி தானாகவே நினைவில் வந்து விழுகிறது? குமாருக்கும் சதாவிற்குமான முரண்பாடு ஒரு குப்பைக் காரணமாகத்தான். மிகவும் சாதாரண காரணம் என்ற குறியீடாக குப்பை இங்கே உபயோகப்படுத்தப்படவில்லை. நிஜமாகவே வீட்டுக் குப்பைதான் காரணம். குமார், அவர்கள் தெருவை கூட்டிப்பெருக்க ஏற்பாடு செய்யப்பட்டவன். வருவதே வாரத்திற்கு அவனுக்குத் தோன்றுகிற ஒருநாளில்தான். தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையை சதாவின் வீட்டு முன் குவித்து வைத்துவிட்டு போயே போயிந்தி....போய்விடுவான். தெருக் கோடி வீட்டில் சாப்பிட்ட ஹோட்டல் சாம்பார் பொட்டலம், பக்கத்துவீட்டு ஜிம்மியின் காலைக்கடன் சுற்றிய பேப்பர், கோயில் பிரசாத தொன்னைகள், தெருவின் கனவுக்கன்னி லல்லுவின் சானிடரி பாட்...என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் இவர் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிடும். இந்த அடாவடி நடவடிக்கைக்குக்காரணம் இவர் அவனுக்கு பணம் தர மறுப்பதுதான். உனக்குத்தான் இந்த வேலைக்கு மாச சம்பளம் பேசி இருக்கில்ல... அப்புறம் ஒவ்வொரு வீட்டுலேயும் வரும்போதெல்லாம் பணம் கேட்குற. என்ன எங்களுக்கு பணம் மரத்துலேயா காய்க்கிறது...என்று ஒரு முறை நியாயத்தைப் பேச... அன்றிலிருந்து குமார், அவனுடன் சுற்றும் அந்த கறுப்பு நாய் என்று குடும்பமாக சதாவை ஏளனப்படுத்த தொடங்கிவிட்டார்கள். குமார் வராத நாட்களில் மிகச்சாதுவாக அந்தத் தெரு கோடி வீட்டில் சுருண்டு படுத்திருக்கும் அந்த கறுப்பு நாய், இவரைப் பார்த்த உடன் குலைக்கத்தொடங்க... வாக் கிளம்பியவர் மராத்தான் கணக்காக ஓடி வீட்டுக்குத்திரும்பி விடுவார். மெதுவாக அந்த குமாரை பார்த்தபடி வாசல் கேட்டை அழுத்தித்தள்ளினார். " சார்...சார்..." கத்திக்கொண்டே குமார் வருவதைப்பார்த்தார். 'தெரியும்....இந்த ரெளடிப்பயல் என்னை வம்பிக் கிழுப்பான்னு....இந்த டிரைவர் முட்டாப்பய.. அவனால வந்தது.. ' அவசரமாகக் கதவைத்திறந்து உள்ளே சென்றார். "சார்...சார்...உங்களைத்தான்... " கத்திக்கொண்டே குமார் ஓடி வருவது தெரிந்தது. அப்பாடா கதவைச்சாத்தி தாளிட்டார். காலிங் பெல் சத்தமிட்டது 'படவா ராஸ்கல்....பெல் அடித்து கூப்பிடறான்...இரு...இதை சும்மா விடக்கூடாது" வாசலில் குமார் நின்றிருந்தான்.கைகளில் ஒரு நூறு ரூபாய். "இதப்பாரு..." அவர் பேச ஆரம்பிக்குமுன் குமார் முந்திக்கொண்டான். " சார், நீங்கக் காரை விட்டு இறங்கும்போது இந்த ரூபா நோட்டு கீழே விழுந்திச்சு...கொடுக்கலாம்னு கூப்பிட்டா... ஓடியாந்துட்டீங்க....இந்தாங்க..." பாதி கையை நீட்டியபடி பேந்த விழித்தார். "இன்னா சார் பாக்குற. இன்னொருத்தர் துட்டு நமக்கெதுக்கு. நா வேலை செய்ய துட்டு கேட்பேன்...பாரு சாரு...நான் தெருவத்தான் கூட்டறேன்.. ஆனா உன் வீட்டு மரக்குப்பை அதுவே எம்மாம் குப்பையா இருக்கு பாரு...அத்தப்பெருக்க பணம் கேட்டா.. நீ சம்பள நார்ம்ஸ்லாம் பேசி என்னை சாவடிக்குறே.. இந்தா இத்தை நான் எடுத்தா அது திருட்டு... வாங்கிக்க உன் ரூபாயை.." சதா லேசாகச் சிரித்தார். "நியாயமான பேச்சுப்பா. சரி இந்த ரூபாயை உனக்கே தரேன். இனிமே தெரு கூட்ட வரும்போது வா... ரெகுலராவும் தரேன்’’ சலாம் போட்டபடி பணத்தை பாக்கெட்டில் சொருகிக்கொண்டே குமார் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். ' ஏ ரூபா நோட்டே நீ ரொம்ப ராசிதான். உன்னை அந்த ஆளு போட்ட நோட்டா காட்டி எப்புடி காரியத்தை சாதிச்சேன்...இந்தத் தெரு கடைசிலே ஒரு வீட்டுலேயும் பணம் கொடுக்காம டபாய்க்கிறாங்க... வா...அங்கேயும் இந்த நாடகம் போடுவோம்.....' கைகளில் பர்சே எடுத்துப்போகாதபோது, அந்த ரூபாய் நோட்டு எப்படி கீழே விழுந்திருக்கமுடியும் என்பதை சதா யோசித்திருந்திருக்கலாம். உணர்ச்சிகளும் உணர்வுகளும் லாஜிக்கை மழுங்கடிக்கக்கூடியவை. இதனால் இன்று சந்தோஷமாக விசில் அடித்தபடி குமாரும், சதாவும்! http://www.kamadenu.in