Search the Community
Showing results for tags 'கடற்கரும்புலிகள்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "உயிரின் திரியில் தீமூண்டிட பகையே முடியும் ! உயரும் மலையே கரும்புலிகளின் வெடியில் தகரும் ! பகையின் திமிரும் வெடியதிர்வுடன் முழுதாய் அழியும் ! தலைவன் விழியும் கரும்புலிகளின் கதையில் கசியும் !" --> 'விடியும் திசையில்' பாடல், 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படத்திலிருந்து தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Land Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Land Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Land Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Wored from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 227 replies
-
- 3
-
-
-
- sri lankan army
- ltte commandos
-
(and 71 more)
Tagged with:
- sri lankan army
- ltte commandos
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா கொமாண்டோ
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- புலிகளின் அதிரடிப்படை
- விடுதலை அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- eelam special force
- sri lanka commandos
- சிறப்பு படை
- கரும்புலி
- தமிழ் சிறப்புப் படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
- ltte black tigers
- உயிராயுதங்கள்
- தடைநீக்கிகள்
- மீளா அதிரடிப்படை
- tamil commandos
- தேசப்புயல்கள்
- non returnable mission commandos
- ltte land commandos
- tamil eelam commando
- eelam tamil commando
- tamil commond
- ltte air commandos
- ltte commando
- தமிழ் அதிரடிப்படை
- ltte naval commandos
- sri lankan rebel commandos
- தமிழீழ அதிரடிப்படை
- srilankan rebel commandos
- tamil eelam commandos
- tamil eelam army
- வான் கரும்புலிகள்
- ltte special commandos
- சிறப்புப்படை
- சிறப்பு அதிரடிப்படை
- srilanka special force
- கொமாண்டோ
- இலங்கை அதிரடிப்படை
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- கடற்கரும்புலிகள்
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ltte self benefaction force
- சிறீலங்கா அதிரடிப்படை
- அதிரடிப்படை
- sri lanka special force
- தமிழீழ கொமாண்டோ
- tamil naval commandos
- balck tigers
- கரும்புலிகள்
- ltte special force
- மறைமுகக் கரும்புலிகள்
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- tamil army
- சிங்கள கொமண்டோ
- சிறப்புப் படை
- self-benefaction force
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam
- eelam images
- ltte images
- eelam commando
- tamil commando
- tamil eelam special force
- ltte black tigers images
- கொமாண்டோக்கள்
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். இவ்வகைப் படகுகளிற்கு கரும்புலிப் படகு, குண்டுப் படகு, வெடிப்படகு மற்றும் சக்கை வண்டி என்று 4 பெயர்கள் உண்டு. இவ்வாறு இக்கரும்புலிப் படகுகளில் செல்வோர் 'இடியர்' என அழைக்கப்பட்டனர். இக் கடற் தற்கொடைப்படையில் ஆண்களிற்கும் பெண்களிற்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. ) கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000 கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை - சிங்களவரால் கைப்பற்றப்பட்டவற்றை வைத்து கணிப்பிடப்பட்டவை: கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு/ இடியன் என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink). இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை. இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்: கரும்புலிக் கலங்கள்: கிபிர் வகுப்பு: தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்), ஸ்ரெல்த் 23 குட்டி மிராஜ் வகுப்பு: செம்பிறை, வீமன் வெள்ளை வகுப்பு: தீக்கதிர், வாமன், தர்சன் மிராஜ் வகுப்பு: முத்துமணி டிங்கி வகுப்பு: தியாகன் குருவி வகுப்பு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா அமுதன் (வகை பெயர் தெரியவில்லை) இசைமாறன் (வகை பெயர் தெரியவில்லை) வரதன் மற்றும் மதன் (வகை பெயர் தெரியவில்லை) மாந்த ஏவரி(Human Torpedo): MS-380 சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும். முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong — கிபிர் வகுப்புக் கலன் (Kfir class craft) நீளம் = 18' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1995 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இதில் 2 விதம் உண்டு. இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள். இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை … இந்த வகைக் கலங்கள் கதுவீ(Radar) திரையில் இப்படித்தான் தெரியும்.. கண்ணில் படுவதே அரிது: முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது. ' கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை' → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது. விதம் 1: இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன. 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'மூலைப்பார்வை' விதம் 2 : விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான கிபிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம். இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்! கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 'நீரினில் பாயும் கடற்கலம்' 'கடையால்' — குட்டிமிராஜ் வகுப்புக் கலன் (kutti-miraj class craft) இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது. நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி: "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → இள பேரரையன் (லெப் கேணல்) நிசாந்தன், → இள பேரரையன்(லெப் கேணல்) எழிற்கண்ணன். → இள பேரரையன்(லெப் கேணல்) பழனி, → இள பேரரையன்(லெப் கேணல்) தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள்(Commanders) வழங்கியிருந்தனர்." பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) 'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009' 'இதன் இரு கவர்கள்' 2) 'பயிற்சியின் போது' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு. உயரம் = 2.0 (type 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1/2 வேகம் - 30 kts ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1: 1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது. மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை: 2) விதம் 2: 1. மேற்கண்ட கலத்தின் கடையால் : 2) 3) மேற்கண்ட கலத்தின் பின் பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1) 'ஓட்டியிருக்கை' 'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)' 'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)' அணியம்(பக்கவாட்டுப் பார்வை) 'கடையால்' 'கடையால்' 2) அணியம்' 'ஓட்டியிருக்கை' 'கடையால்' — வகுப்புப் பெயர் அறியாக் கலன் (Class name unknown Craft) இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும் நீளம் = 30’ அகலம்= 9½’ வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 45–53 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG 'பக்கவாட்டுத் தோற்றம்' 'சத்தார் தோற்றம்' 'கடையால், கழுகு சத்தார் பார்வை' 'கடையால்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை நீளம் = 26’ அகலம் = 7 ½’ உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1) 'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)' 'பக்கவாட்டுத் தோற்றம்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1) 2) — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts) வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் முராஜ், தல்ராஜ் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 2/3/4 வேகம் = 45kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன. வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:- இதன் உட்புறம் இப்படி இருக்கும்:- இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:- 1) 'சிறீலங்காப் படைகளால் கைப்பற்ற்ப்பட்ட கரும்புலிக் கலன் 2) 3) 'பக்கவாட்டுக் காட்சி' 'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)' 'கலத்தின் கடையால்' 'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி' இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல் — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இக்கலங்களில் கடற்கரும்புலிகளான மேயர் வரதன்/நிலவன் உம் சேர்வைக்காரர்(கப்டன்) மதன் உம் முறையே உயிராயுதமாகிச் சென்றனர். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும். கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP 'ஓட்டியிருக்கை' 'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content). 'பின்பகுதி' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 'படிமப்புரவு: இன்சுராகிறாம்' 'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2 மேற்கண்ட கலத்தின் அணியம்:- 2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1) 2)இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும். 3) 4) 'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்' 5) — மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. நீளம் = விதம் - 45' விதம் - 35 ' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 40-45 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக… 'சக்கை வைக்கும் உட்பகுதி' 'உ.மி. வைக்கும் பின்புறம்' 'பொறி உள்ள பின் பகுதி' 'ஓட்டியின் இருக்கை' 'மிராஜ் வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் ' கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன. புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்… சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே! மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1) வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி ' 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி' 2) இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது. வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1 3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும். 'பக்கவாட்டுப் பார்வை' 'மேலிருந்து சத்தார்ப்பார்வை' மேற்கண்ட கலத்தின் பின்பகுதி: — மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். 'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன' 1. 2. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 3. 4. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்' 5. 'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை' நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel) 'சுக்கான் (மேலிருந்த பார்வை)' 2) கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவுகளான கங்கையமரன் & அங்கயற்கண்ணி பிரிவுகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர். 'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி' 'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி' 'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி' 3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள் சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders) இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம். 'IDA71 மீளுயிர்ப்பி' 'IDA71 மீளுயிர்ப்பி' மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters . மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது) 'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்' 'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்' 'தூவிகள் (fins)' 'IDA-71 முகமூடி' 'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்' 'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)' 'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)' 'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)' மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது. 'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது' இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்... நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று முழங்கி, அதன் பின்னர் "கடலிலே காவியம் படைப்போம்" என்று முழங்கி மோதி வெடிப்பார்கள். நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் படிமப்புரவு: - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
- 5 replies
-
- விடுதலைப் புலிகள்
- கடற்புலி
- (and 13 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்கரும்புலிகள்
- கடற் கரும்புலிகள்
- (and 12 more)