Jump to content

Search the Community

Showing results for tags 'கடற்கரும்புலி'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ! அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது. மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும். எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு. அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள். அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள். இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள். “கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.” இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள். கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது. 1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன. நன்றி: களத்தில் இதழ் (04.06.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-maliga/
  2. கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப். கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். ‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. ‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லோருக்குமே பரபரப்பு, தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். ‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது. இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள். நன்றி: உயிராயுதம் பாகம் 01 நூல். https://thesakkatru.com/black-sea-tiger-captain-angaiyarkanni/
  3. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். அப்படகிற்கு குண்டுப்படகு அ சக்கை வண்டி என்று பெயர். இவர்கள் ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர். செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. ) கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000 கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink). இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை. இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்: கரும்புலிக் கலங்கள்: இடியன் வகுப்பு: தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) குட்டி மிராஜ் வகுப்பு: செம்பிறை, வீமன் வெள்ளை வகுப்பு: தீக்கதிர், வாமன், தர்சன் திரிக்கா வகுப்பு: முத்துமணி டிங்கி வகுப்பு: தியாகன் குருவி வகுப்பு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா அமுதன் (வகை பெயர் தெரியவில்லை) இசைமாறன் (வகை பெயர் தெரியவில்லை) வரதன் மற்றும் மதன் (வகை பெயர் தெரியவில்லை) மாந்த ஏவரி(Human Torpedo): MS-380 சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும். முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong — இடியன் வகுப்புக் கலன் (Idiyan class craft) நீளம் = 18' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1995 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டதால் ஆமையோடு என அழைக்கப்படலாயினது. இதில் 2 விதம் உண்டு. இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள். இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை … இந்த வகைக் கலங்கள் கதுவீ(Radar) திரையில் இப்படித்தான் தெரியும்.. கண்ணில் படுவதே அரிது: முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது. 'ஆமையோடு வகைக் கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை' → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது. விதம் 1: இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன. 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'மூலைப்பார்வை' விதம் 2 : விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான இடியன் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம். இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்! 'நீரினில் பாயும் கடற்கலம்' 'கடையால்' — குட்டிமிராஜ் வகுப்புக் கலன் (kutti-miraj class craft) இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது. நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி: "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → இள பேரரையன் (லெப் கேணல்) நிசாந்தன், → இள பேரரையன்(லெப் கேணல்) எழிற்கண்ணன். → இள பேரரையன்(லெப் கேணல்) பழனி, → இள பேரரையன்(லெப் கேணல்) தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள்(Commanders) வழங்கியிருந்தனர்." பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) 'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009' 'இதன் இரு கவர்கள்' 2) 'பயிற்சியின் போது' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு. உயரம் = 2.0 (type 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1/2 வேகம் - 30 kts ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1: 1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது. மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை: 2) விதம் 2: 1. மேற்கண்ட கலத்தின் கடையால் : 2) 3) மேற்கண்ட கலத்தின் பின் பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1) 'ஓட்டியிருக்கை' 'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)' 'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)' அணியம்(பக்கவாட்டுப் பார்வை) 'கடையால்' 'கடையால்' 2) அணியம்' 'ஓட்டியிருக்கை' 'கடையால்' — கிபிர் வகுப்புக் கலன் (kfir class Craft) இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றால் 1.5 தொன் அளவிலான வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும் நீளம் = 30’ அகலம்= 9½’ வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 45–53 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG 'பக்கவாட்டுத் தோற்றம்' 'சத்தார் தோற்றம்' 'கடையால், கழுகு சத்தார் பார்வை' 'கடையால்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை நீளம் = 26’ அகலம் = 7 ½’ உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1) 'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)' 'பக்கவாட்டுத் தோற்றம்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1) 2) — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts) வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் முராஜ், தல்ராஜ் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 2/3/4 வேகம் = 45kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன. வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:- இதன் உட்புறம் இப்படி இருக்கும்:- இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:- 1) 'சிறீலங்காப் படைகளால் கைப்பற்ற்ப்பட்ட கரும்புலிக் கலன் 2) 3) 'பக்கவாட்டுக் காட்சி' 'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)' 'கலத்தின் கடையால்' 'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி' இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல் — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இக்கலங்களில் கடற்கரும்புலிகளான மேயர் வரதன்/நிலவன் உம் சேர்வைக்காரர்(கப்டன்) மதன் உம் முறையே உயிராயுதமாகிச் சென்றனர். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும். கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP 'ஓட்டியிருக்கை' 'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content). 'பின்பகுதி' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 'படிமப்புரவு: இன்சுராகிறாம்' 'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2 மேற்கண்ட கலத்தின் அணியம்:- 2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1) 2)இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும். 3) 4) 'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்' 5) — திரிக்கா வகுப்புக் கலன் (thirikka class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. நீளம் = விதம் - 45' விதம் - 35 ' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 40-45 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக… 'சக்கை வைக்கும் உட்பகுதி' 'உ.மி. வைக்கும் பின்புறம்' 'பொறி உள்ள பின் பகுதி' 'ஓட்டியின் இருக்கை' 'திரிக்கா வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் ' கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன. புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்… சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே! மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1) வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி ' 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி' 2) இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது. வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1 3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும். 'பக்கவாட்டுப் பார்வை' 'மேலிருந்து சத்தார்ப்பார்வை' மேற்கண்ட கலத்தின் பின்பகுதி: — மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். 'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன' 1. 2. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 3. 4. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்' 5. 'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை' நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel) 'சுக்கான் (மேலிருந்த பார்வை)' 2) கடற்புலிகளின் நீரடி நீச்சல் அணிகளான கங்கை அமரன் & அங்கயற்கண்ணி அணிகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர். 'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி' 'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி' 'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி' 3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள் சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders) இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம். 'IDA71 மீளுயிர்ப்பி' 'IDA71 மீளுயிர்ப்பி' மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters . மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது) 'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்' 'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்' 'தூவிகள் (fins)' 'IDA-71 முகமூடி' 'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்' 'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)' 'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)' 'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)' மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது. 'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது' இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்... நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் " என்று முழங்கி, அதன் பின்னர் "கடலிலே காவியம் படைப்போம்" என்று முழங்கி மோதி வெடிப்பார்கள். உசாத்துணை: Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் படிமப்புரவு: - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.