Jump to content

Search the Community

Showing results for tags 'கடற்படை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்... உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era. இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். 'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam' 'இடமிருந்து வலமாக : தரைத் தாக்குதலாளிகள்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர்கள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர். 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும். 'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.' 1990-2001 காலப்பகுதியில் இவர்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்தனரா என்பது பற்றிய தகவல் இல்லை! 1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: இச்சீருடையானது சிறீலங்கா கடற்படையின் சீருடை ஆகும். ஆனால் அதை புலிகளும் அணிந்திருந்தனர். அவரகள் அதை வீரவணக்க ஊர்வல அணிவகுப்பிலும் அணிந்திருந்தனர். ஆகையால் இதனது சரியான பயன்பாடு அறியில்லாததாக உள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே நிறத்திலும் தோரணியிலுமான சீருடை அணிந்திருந்தனர். இவர்களின் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது. 'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக' 'கடற்கரும்புலி மாவீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இச்சீருடையினை அணிந்து பங்கேற்றுள்ள பெண் கடற்புலிப் போராளிகளை நோக்குக.' இதே காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் கடற்பயணங்களின் போது அவருடைய மெய்க்காவலர்கள் ஒரு வேறுபாடான கடற்சீருடை ஒன்றினை அணிந்திருந்திருந்தனர். இனி அச்சீருடை பற்றிப் பார்ப்போம். இச்சீருடை ஆனது உருமறைப்புடைய காற்சட்டை மற்றும் வேலைப்பாடில்லா ரி-சட்டை ஆகியவற்றால் ஆனது ஆகும். இச்சீருடையின் ரி-சட்டை ஆனது அரைக்கையுடையதான சாதராண நீல நிறத்தில் உள்ளது. இதன் கைகளில் புயத்திற்கு ஏற்ப கைமடிப்பு இருக்கும் திறவல் உள்ள இடத்தில் சுருக்கம் உள்ளது. காற்சட்டையானது மிகவும் கட்டையானதாகவும் இதன் உருமறைப்பானது இக்காலகட்டத்தில் புலிவீரர்களின் செந்தரமான கடற்படைச் சீருடையின் உருமறைப்பைக் கொண்டதானதாகவும் உள்ளது. 'இதில் நிற்கும் புலி வீரர்கள் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும். இதில் கவசக் கஞ்சுகம் அணிந்து கொண்டு நிற்கும் 'ஜக்கெற் மெய்க்காவலர்' இன் இயற்பெயர் மோகன் என்பதாகும். இவர் 10.06.2021 அன்று தமிழ்நாட்டில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.' 'இதில் அம்புக்குறியிட்டுள்ள அனைத்து புலி வீரர்களும் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும்.' 1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) வரியில் இருந்த நிறங்களாவன: RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 1992/93 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- மேலே நான் குறிப்பிட்டுள்ள கடற்சீருடையினைக் காட்டிலும் தமக்கே உரித்தான உருமறைப்பான வரிப்புலியில் நீல நிறம் கொண்டதான 'நீல வரிப்புலியையும்' இதே 1992/1993 - 1995 காலத்திலும் அதன் பின்னரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீல நிற வரிப்புலியில் கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை. இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது. ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1992/1993- 2002 வரையிலான கடற் கட்டளையாளர் சீருடை :- இவர்களின் சீருடையும் நீலநிற வரிதான். ஆனால் இவர்கள் கடற்கலவர் அணிவது போன்ற அந்த வட்ட வடிவ துணியினை அணியார். அத்தோடு வரைகவிக்குப் பகரமாக தொப்பியே அணிவர். 'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசை | | படிமப்புரவு: Tharakam' 2002 இல் கடற்கலவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது. 'கடற்புலிகளிர் சேர்ப்பன்(Admiral) சூசை | படிமப்புரவு: Aruchuna.com' 2003 இல் தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது. இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' 2004 - 2009(18–05–2009) வரையிலான தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசையும் அவருடைய மெய்க்காவலர் ஒருவரும் தரைத் தாக்குதலாளி சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Aruchuna' 2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்திருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது. ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com'' 'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com' ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர். வேலைச் சீருடை: வழங்கலின் போது அழுக்குகளோ இல்லை பிசுக்குகளோ சீருடையில் பிரண்டிடாமல் இருக்க கடற்புலிகள் இச்சீருடையினை அணிவர் '18|8|2002 தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com' தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்! 'கடற்புலி போராளி' 'மிராஜ் வகையின் மதன் வகுப்பு சண்டைப்படகு. இப்படகில் உள்ள கடற்கலவரை நோக்குக. அவர்கள் நான் மேற்குறிப்பிட்ட வழங்கல் சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக' இதில் இருவேறு நிறங்கள் இருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் தொடக்கத்தில் அணியபட்டது நல்ல நீல நிறத்திலும் (2002) அதன் பின்னரான காலத்தில்(2003<) அணியப்பட்டது கடுநீல நிறதிலும் இருந்துள்ளது. இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது. '2003| இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர். ----------------------------------------- ----------------------------------------- கூடுதல் செய்திகள்: வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்: ----------------------------------------- ----------------------------------------- உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்து அவற்றின் காலத்தைக் கணித்து எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  3. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எல்லா(hello)... வாங்கோ! வாங்கோ ! வணக்கம்... என்னென்டு சொன்னால் இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும். இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும். இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.