Jump to content

Search the Community

Showing results for tags 'கடற்புலிகளின் கடற்கலன்கள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். இவ்வகைப் படகுகளிற்கு இடியன், கவிப்படகு, கரும்புலிப்படகு, குண்டுப்படகு, வெடிப்படகு மற்றும் சக்கை வண்டி என்று 6 பெயர்கள் உண்டு. இவ்வாறு இக்கரும்புலிப் படகுகளில் செல்வோர் 'இடியர்' என அழைக்கப்பட்டனர். இக் கடற் தற்கொடைப்படையில் ஆண்களிற்கும் பெண்களிற்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. அங்கிருந்து சிறிது தொலைவுவரை இவர்களோடு வேறுசில கடற்புலி போராளிகள் அல்லது கடல்வேவுப்புலிகள் நீந்திச் செல்வதுமுண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதிவரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்படலாயிற்று. ) கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 இறுதிவரை 'சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு' என அழைக்கப்பட்டு வந்து, அதன் பின்னர், 96 நடுப்பகுதி வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 'சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000 கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை - சிங்களவரால் கைப்பற்றப்பட்டவற்றை வைத்து கணிப்பிடப்பட்டவை: கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு/ இடியன் என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink). இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை. இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்: கட்டைப் படகு வகை: தியாகன் மாந்த ஏவரி (Human Torpedo): MS-380 கவிர் வகுப்புப் படகு: ஸ்ரெல்த் 16' : தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) ஸ்ரெல்த் 23' : (அறியில்லை) குட்டி மிராஜ் வகுப்புப் படகு: செம்பிறை, வீமன் வெள்ளை வகுப்புப் படகு: வாமன், தர்சன் மிராஜ் வகுப்புப் படகு: முத்துமணி, தீக்கதிர் குருவி வகுப்புப் படகு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: அமுதன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: இசைமாறன் வகுப்புப் பெயர் அறியா ஒரே வகுப்பைச் சேர்ந்த கலத்தின் பெயர்: வரதன் மற்றும் மதன் சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும். முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong — கவிர் வகுப்புக் கலன் (Kfir class craft) நீளம் = 16' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1998 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இதில் 2 விதம் உண்டு. இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள். இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை … இந்த வகைக் கலங்கள் அகச்சிவப்புத் திரையில் இப்படித்தான் தெரியும். முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது. ' கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை' → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது. விதம் 1: வெடிப்படகாகச் செல்லும் போது இதில் இருவர் பயணம் செய்தனர்; ஒரு ஓட்டியும் ஒரு தொலைத்தொடர்பாளரும். இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன. 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'மூலைப்பார்வை' விதம் 2 : இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வார், இடியனாகச் செல்லும் போது. விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான கவிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம். இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்! கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 நீளம் = 23' அகலம்= 10' 'நீரினில் பாயும் கடற்கலம்' 'கடையால்' — குட்டி மிராஜ் வகுப்புக் கலன் (Kutti Miraj class craft) இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது. நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி: "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → லெப் கேணல் நிசாந்தன், → லெப் கேணல் எழிற்கண்ணன். → லெப் கேணல் பழனி, → லெப் கேணல் தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர்." பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. 1) 'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது, 2009' 'இதன் இரு கவர்கள்' 2) 'பயிற்சியின் போது' 3) மேற்கண்ட Pink போன்று பச்சை கறுப்பிலும் ஒன்று இருந்தது. 4) அதே போன்று கபில (Brown) நிறத்திலும் ஒன்று இருந்தது — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு. உயரம் = 2.0 (விதம் 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1 வேகம் = ??? ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1: 1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது. மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை: விதம் 2: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இவை எரிபொருள் காவிகளாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1. மேற்கண்ட கலத்தின் கடையால் : 2) 3) மேற்கண்ட கலத்தின் பின் பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1) 'ஓட்டியிருக்கை' 'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)' 'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)' அணியம்(பக்கவாட்டுப் பார்வை) 'கடையால்' 'கடையால்' 2) அணியம்' 'ஓட்டியிருக்கை' 'கடையார்' 'அடிப்பக்கம்' — வகுப்புப் பெயர் அறியாக் கலன் (Class name unknown Craft) இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும் நீளம் = ?? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = ??? கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG 'பக்கவாட்டுத் தோற்றம்' 'சத்தார் தோற்றம்' 'கடையால், கழுகு சத்தார் பார்வை' 'கடையால்' — ??? வகுப்புக் கலங்கள்: நீளம் = ??? அகலம் = ??? உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1) 'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)' 'பக்கவாட்டுத் தோற்றம்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1) 2) — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts) வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் வேவ் ரைடர் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன. 1996 ஆம் ஆண்டு முடியும் மட்டில் வரை சண்டைப்படகாகவும் அதற்குப் பின்னர் தேவைக்கேற்ப குண்டுப்படகாகவும் குறித்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் வழங்கல் படகாகவும் பயன்படுத்தப்பட்டன நீளம் = ??? அகலம்= ?? வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 3/4 வேகம் = ??? தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன. வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:- இதன் உட்புறம் இப்படி இருக்கும்:- இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:- 1) 'சிறீலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்ட கரும்புலிக் கலம் 2) 3) 'பக்கவாட்டுக் காட்சி' 'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)' 'கலத்தின் கடையால்' 'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி' இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன: நெடுமாறன், டீசல் இவற்றின் இன்னொரு விருத்து நான்காம் ஈழப்போரில் தாக்குதல் கலமாக பாவிக்கப்பட்டது. அவற்றிற்கு வெள்ளை போன்றே கத்தேட்றல் கலக்கூடும் அணியமும் இருந்தாலும் வெள்ளையின் முதன்மை விருத்து போன்று நடுப்பகுதி மற்றும் கடையார் இருக்கவில்லை. எனினும் வெள்ளை போன்றே தளத்தில் ஒரு திறந்து மூடத்தக்க பெட்டி இருந்தது. தளப் பகுதியானது தட்டையாகவும் பக்கவோரத்திற்கு (gunwale) கம்பிவேலியும் இருந்தது. தளத்தில் ஒரு கனவகை தெறுவேயம் முதன்மையாக பூட்டத்தக்கவாறு சுடுகலத் தண்டும் அதற்கு முன்னால் ஒரு நடுத்தர சுடுகலன் பூட்டத்தக்கதாக ஒரு சுடுகலத் தண்டும் இருந்தது. கடையாரில் இயந்திரப் பகுதியின் பக்கவோரத்தின் மேல் இரு சிறிய வகை (இலகு இயந்திர சுடுகலன்) பூட்டத்தக்கதாக இரு சுடுகலத் தண்டுகள் இருந்தன. இதன் மின்னோடிகள் வெளியிணைப்பு மின்னோடிகளே. மொத்தம் இரண்டு பூட்டலாம். அணியம் கடையாரிலிருந்து அணியம் நோக்கிய பார்வை கடையார். . கடையாரின் பக்கவோரத்தில் சுடுகலத் தண்டு ஒன்று பூட்டப்பட்டிருப்பதைக் காண்க — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இவை 300 கிகி வெடிமருந்தை ஏற்றிச்செல்ல வல்லவை ஆகும். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும். கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP 'ஓட்டியிருக்கை' 'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content). 'பின்பகுதி' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வகுப்பைச் சேர்ந்த இரு கலங்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை வரதன் மற்றும் மதன் என்பதாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். 2 & 3) 'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2 மேற்கண்ட கலத்தின் அணியம்:- 2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1) 2) இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும். 3) 4) 'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்' 5) — மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. நீளம் =??? அகலம்= ??? உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 35-40 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும். வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன. உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக… 'சக்கை வைக்கும் உட்பகுதி' 'உ.மி. வைக்கும் பின்புறம்' 'பொறி உள்ள பின் பகுதி' 'ஓட்டியின் இருக்கை' 'மிராஜ் வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் ' கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன. புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்… சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே! மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 1) வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1 'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி ' 'மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி' 2) இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது. வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1 3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும். 'பக்கவாட்டுப் பார்வை' 'மேலிருந்து சத்தார்ப்பார்வை' மேற்கண்ட கலத்தின் பின்பகுதி: 4) — மன்னியக்க வலிமை மடவைப் பலகை (manually powered paddle board) கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம். 'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க வலு மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன' 1. 2. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 3. 4. 'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்' 5. 'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை' நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel) 'சுக்கான் (மேலிருந்த பார்வை)' 2) கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவுகளான கங்கையமரன் & அங்கயற்கண்ணி பிரிவுகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர். 'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி' 'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி' 'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி' 3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள் சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders) இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம். 'IDA71 மீளுயிர்ப்பி' 'IDA71 மீளுயிர்ப்பி' மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters . மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது) 'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்' 'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்' 'தூவிகள் (fins)' 'IDA-71 முகமூடி' 'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்' 'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)' 'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)' 'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)' மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது. 'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது' இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்... நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று முழங்கி, அதன் பின்னர் "கடலிலே காவியம் படைப்போம்" என்று முழங்கி மோதி வெடிப்பார்கள். நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் ஈழநாதம்: 27.08.1993 படிமப்புரவு: - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 3 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவை 1993 இல் இருந்து 2009 ஐந்தாம் மாதம் வரை கடலில் ஓடின. பின்னாளில் சிங்களக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு 'Wave Rider' என்னும் அதே பெயரிலே மீண்டும் கடலில் ஓடுகின்றன. இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன. கடற்புலிகளிடம் இவை 10–20 வரை இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின. ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன. கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் கட்டப்பட்ட ஒரு இவ்வகுப்பான சண்டைப் படகுகளானவை 50 நோட்ஸ் வேகத்தில் ஓடியவை ஆகும். அதன் படம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. அந்த சண்டைக் கலத்தின் வெள்ளோட்டத்தின் போது தான் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் நேர்ச்சியாகக் காயப்பட்டவர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) இக்கலங்கள் யாவும் தரித்து நிற்க துறைமுகங்கள் இல்லையாதலால் இவை படகுகாவிகளில்(dock) ஏற்றி அவர்கட்கு தேவையான இடங்களில் உருமறைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின் கடற்சமர் வரும்போது உழுபொறியின்(tractor) உதவியுடன் கரைக்கு இழுத்துவரப்பட்டு அங்கு நிற்கு ஒருவகை இடிவாருவகத்தின்(Bulldozer) உதவியுடன் கடலினுள்ளே இறக்கப்படும். இறக்கும் போது கரையோர மணல் சாய்வாக தோண்டப்பட்டே இறக்கப்படும். இறக்கிய பின்னர் படகுகாவிகள் எல்லாம் அருகில் உருமறைக்கக் கூடிய இடங்களில் தரிபெறும். பின்னர், கடற்சமர் முடித்து கரைக்கு திரும்பிவரும் படகுகள் யாவும் படகுகாவிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்படும். தொடர்தடம் (Continuous track) உடைய இடிவாருவகங்கள் மட்டும் கடற்புலிகளிடம் ஆகக் குறைஉந்தது 6 இருந்தன. இவை யாவும் ஓயாத அலைகள் - 2 இன் போது சிறிலங்கா படைத்துறையிடமிருந்து விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும். 'பலவகை படகுகாவிகள்' 'மணலைத் தோண்ட வரும் அந்த இடிவாருவகம்(bulldozer) | கவனி: இவ்வூர்தியினை ஓட்டுபவர் ஒரு பெண் போராளியாவார்' 'மணலைத் தோண்டும் இடிவாருவகம்' 'தோண்டப்பட்ட சாய்வான இடத்தினூடாக கடலினுள் இறக்கபடும் வேவ் ரைடர் படகு | படகு, படகுகாவியின் மேலே வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்' கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை (கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன. இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சில கலங்களின் கலக்கூட்டில் அவற்றின் கலப் பெயர்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, வேவ் ரைடர்(Wave Rider) வகுப்புக் கடற்கலன்: இங்கு 25 கடற்கலங்களின் பெயர்களை கொடுத்துள்ளேன். கூர் அணிய வேவ் ரைடர்கள்:- பரந்தாமன், மாதவி, இசையரசி, உதயச்செல்வி, மதன், மருதன், ஆதிமான்(ஒஸ்கார்), பாரதிதாசன், அகச்செழியன், இளநிலா, கடலரசன், இந்துமதி, சுகி, அருணா, கேசவன், றோசா Rosa கரண்டி அணிய கத்தேட்றல் கலக்கூட்டு வேவ் ரைடர்கள்:- பசீலன், எரிமலை, வேங்கை, போர்க், வெண்ணிலா, பிரசாந்த், ராஜ்மோகன், சேரன் கரண்டி அணிய பிளானிங் கலக்கூட்டு வேவ் ரைடர்கள் ஆகக்குறைந்தது ஒரு படகு 'வர்மன்' என்னும் கலப்பெயரைக் கொண்ட இக்கலத்தின் வகுப்பு, வகை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. சரி, இனி ஒவ்வொரு வகையினைப் பற்றியும் காண்போம். — வேவ் ரைடர் வகைப் படகு (Wave Rider Type boat) முதலில் வேவ் ரைடர் வகைப் படகுகள் பற்றி காண்போம். இவை வேவ் ரைடர்(Wave Rider) என்றும் புலிகளால் அழைக்கப்பட்டன. இப்பெயரானது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றில் கடற்புலிகளிடம் 3 விதமான படகுகள் இருந்ததன. அவை ஆவன; கூர் அணியப் படகு (Pointed bow boats) - Planing Hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Cathedral hull கரண்டி அணியப் படகு (spoon bow boats) - Planing hull இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி சீறும் கணையோடு கடலில் விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாவது விதமான வேவ் ரைடரின் பக்கவோரத்தின் கம்பிவேலி அதன் அணியத்தின் நுனி வரை நீண்டுள்ளது. இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் கலக்கூட்டில் கடற்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க(நங்கூரமிட) உதவுகிறது. அத்துடன் கலக்கூட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாரின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாரில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன. இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் வளைவாக இரு கம்பிகள் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பிகள் பக்கவாட்டுச் சாளரத்திற்குச் சமாந்தராமக இருக்கும். இவற்றின் மேல் தொலைதொடர்பு வட்டு, கதுவீ போன்றன பொருத்தப்பட்டிக்கும். தேவைப்படின் கொடிக்கம்பங்களும் இதில் கட்டப்பட்டிருக்கும். (பட விளக்கத்திற்கு கரண்டி அணிய விதம் மூன்றில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க) அடுத்து இவற்றின் கலக்குழு (crew) பற்றிப் பார்ப்போம். குழுவினர்: 13–15 முதன்மைச் சுடுகலனின் முதன்மைச் சூட்டாளர் - 1 கடையாரில் இன்னொரு கனவகை சுடுகலன் பூட்டப்பட்டிருப்பின் அதற்கும் ஒரு முதன்மைச் சூட்டாளர் அமர்த்தப்பட்டிருப்பார். முதன்மைச் சுடுகலனின் உதவியாளர்மார் - 2/3 பொறியியலாளர் & உதவியாளர் - 1+1 பக்கவாட்டில் உள்ள 5/6 சுடுகலன்களிற்குமான சூட்டாளர்மார் - 5/6 தொலைத்தொடர்பாளர் (படகு கட்டளை அதிகாரி) - 1 உந்துகணை சூட்டாளர் - 1 மீகாமன் - 1 இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:- குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலன்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல வேவ் ரைடர் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படுவோர் "கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images" என்ற என்னால் ஆக்கப்பட்ட படிம கப்பகத்தினுள் இருந்து எடுத்துக்கொள்ளவும். கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு - இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் பிளானிங் வகை கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 6 & 7 சுடுகலங்கள் (உதயச்செல்வி(8) தவிர) இருந்தன. இவற்றில் நான்கு விதம் உண்டு. 'கலக்கூடு(hull)' 'மூன்று விதமான இவ்வகை சண்டைப் படகுகள் (வலது படிமம்) | இவற்றில் வலது படிமத்தில் உள்ள படகுகளில் இடது பக்கத்தில் இருக்கும் படகின் இடது பக்கவாட்டுப் பார்வையானது, இடது பக்கத்தில் தனியாக உள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளது' நீளம் = 55' அகலம் = 18' வேகம் : 35–40 kts தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = வட்டு வடிவம் வெளியிணைப்பு மின்னோடி= 4/5 x 250 HP புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ ZU-23 (ஒற்றை & இரட்டை)/ 20mm GIMAT / 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/ W85/ T-85 ]/ M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம்(portable) -01 x RPG/Carl Gustav, AKS துமுக்கிகள்(rifle) விதம் - 1 இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது. இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன. 'தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக' விதம் - 2: இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது. 'இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி' இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் 'உதயச்செல்வி' ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை. இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை இனியில்லை என்ற வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும். 'மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க' விதம் - 3: கலப்பெயர்: றோசா Rosa இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் பொறிகள் ( 3 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்) அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. கரண்டி அணிய வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கத்தேட்றல் கலக்கூடுகளை(cathedral hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்/ 35மி.மீ ஓர்லிகோன்} பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2/W85/ T-85] / M1919, 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) விதம்-1: இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 7 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒன்றே ஒன்றினைத் தவிர ஏனை அனைத்துக் கலங்களிற்கும் மீகாமன் அறை ஒரே மாதிரி இருந்தது. 1) 2) இதன் மீகாமன் அறையும் ஏனைய கலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. அதாவது, மீகாமன் அறையின் சாளரங்கள் வேறுபடுவதோடு அவை சாய்ந்தாரமாக(slopy) இல்லை. முன்பக்க சாளரங்கள் எல்லாக் கலங்களிற்கும் பிரிந்திருப்பது(இடத்திற்கு ஒன்று வலத்திற்கு ஒன்று) போன்று இல்லாமல் இரண்டும் இணைந்து செவ்வக வடிவில் உள்ளன. இதன் மீகாமன் அறை: 'இதன் முகப்புச் சாளரம் பிரிபடாமல் உள்ளதைக் காண்க' விதம்-2: இவை கல்லப்பட்டவில்லை. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது. இவை வெளியிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இதன் கலப்பெயர்: போர்க் விதம்-3: இது, விதம் 2 போன்றே தோற்றத்தில் இருந்தாலும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவை கல்லப்பட்டவில்லை. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும் காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும். இவை 3 உள்ளிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது. உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP 'உள்ளிணைப்பு மின்னோடி' கரண்டி அணிய பிளானிங் கலக்கூடு வகை சண்டைப்படகு இவை கரண்டி வடிவ அணியத்தினையும் பிளானிங் கலக்கூடுகளை (Planning hull) உடையவை. நீளம் = தெரியவில்லை அகலம் = 18' கலவர் = 12–15 வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்) தொலைத்தொடர்பு = EMCON, VHF கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம் புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன. ஆய்தம் = முதன்மை: 1x {2M-3 25மி.மீ இரட்டைக்குழல் / 25mm ஓர்லிகோன்} கடையார்: 1x ZPU-2 பக்கவாடு: 1/2 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ PKT/ M2] /.30mm M1919, 2/3 x 7.62 Pk/FN MAG கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle) அணியத்தின் ஆக முன்பகுதியில் (கீழ்க்கண்ட படத்தில் கம்பிவேலி குத்தென்று விழுமிடத்திற்கு முன்னால்) இதைக் கட்டி வைப்பதற்கான கட்டை உள்ளது. 'புலிகளின் குமுதனின் அணிய கலக்கூடு' 'அணியம்' மேலும் இதன் மீகாமன் அறையின் முகப்புத் தோற்றமும் சால்டாக்கைப் (Shaldaq - 2) போன்று உள்ளது (அதாவது சாளரங்களில் நடுவில் ஒன்று நேராகவும், அதன் இரு பக்கங்களிலும் இரு சாளரங்கள் சற்று சத்தாராகவும், மூலையும் பக்காவடும் தொடங்கும் இடத்தில் முக்கோண வடிவில் இரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றென இரண்டும் போடப்பட்டுள்ளது). மீகாமன் அறை முற்றிலும் வேறுபாடாக உள்ளது. சிறு மறைப்போடு பெரும்பகுதி திறந்த வெளியாகவே உள்ளது . மீகாமன் அறைக்கு மேலே வட்டுவடிவ கதுவீ பொருத்தப்பட்டுள்ளது. 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்' 'அணியச் சுடுகலத் தொகுதி' 'அணியச் சுடுகலன்கள்' உள்ளிணைப்பு மின்னோடிப் பெட்டியுனுள் கடையாரிலிருந்து ஏறுவதற்கு பின்பக்கமாக நிரந்தர ஏணி பொருத்தப்பட்டிருக்கிறது. 'புலிகளின் டோறாவின் கடையால்' இதற்கு வெளியிணைப்பு மின்னோடி(OBM) இல்லை. பெட்டியின் பின்புறத்தின் அடியில் 6 சிறு துவாரங்கள் உள்ளன. இதன் கடையாலின் அடிப்புறத்தை உத்துப் பார்க்கும் போது இதற்கு 3/4 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது . 2) புலிகளிடம் இருந்த இரண்டாவது கடற்கலன்: இது இவ்வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது படகா அல்லது ஒரே படகின் அணியச் சுடுகலன் மட்டும் மாற்றப்பட்டதாலான படகா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் முதன்மைச் சுடுகலனாக வகை - 61 ஐச் சேர்ந்த 25 மி.மீ சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இச்சுடுகலனானது ஓ.அ- 3 இன் மூன்றாங் கட்டமான ஆனையிறவுச் சமர்க்களத்தில் கைப்பற்றப்பட்டதாகும். இதன் கடையாலில் சிபியு 2 பூட்டப்பட்டுள்ளது. கனவகைச் சுடுகலனுக்குப் பின்னால், பக்கவாட்டில், மேலும் இரு சுடுகலன்கள் பூட்டப்பட்டுள்ளன. இக்கடற்கலத்தில் வேறேதும் சுடுகலன் பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை என்னால் அறியமுடியவில்லை! வேவ் ரைடர் வகுப்புக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்: வேவ் ரைடர்கள் மொத்தம் மூன்று வரை மீகாமன் அறை வடிவத்தினைக் கொண்டிருந்தன. அனைத்து கூர் அணிய வடிவங்களும் ஒரே மாதிரியான அறையினைக் கொண்டிருந்தன (இவற்றின் முகப்பில் இரு சாளரங்கள் இருந்தன). இதனை நீங்கள் மேலே காணலாம், கூர் அணிய வடிவில். கரண்டி அணிய வடிவங்களானவை கூர் அணிய வடிவங்களின் அறையோடு இன்னும் இரு (ஒன்றினது முகப்புச் சாளரம் பிரிபடாமல் ஒரே சாளராமகவும் வேறு இரண்டில் இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவமும் காணப்பட்டன) வடிவங்களையும் கொண்டிருந்தன. 'வேவ் ரைடர் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்' 'மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி' 'மீகாமன் அறையினுள் ஒரு மீகாமனும் படகு கட்டளை அதிகாரியும் (வோக்கியுடன்) நிற்கின்றனர்' மேற்கண்ட படத்தில் மீகாமன் அறையின் சாளரத்தை நோக்குக. இம்மீகாமன் அறையின் கூரையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இது பிடித்துக்கொண்டு நிற்பதற்காகும். முகப்புச் சாளரத்தின் மேலே முச்சக்கரவண்டிகளுக்கு இருப்பது போன்று நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான திரை (தரப்பாள் போன்ற பொருண்மத்தால் ஆனது) மடித்துக் கட்டப்பட்டுள்ளது. 'இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவம்' சுடுகலத் தண்டு: வேவ் ரைடர் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத் தண்டு - முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும் நடுத்தரத் தண்டு - 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும் மெல்லிய தண்டு - 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும் ' குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்' 'வேவ் ரைடர் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கைக்குண்டு செலுத்தி (GL)' இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு - ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடியே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும். பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):- இவ்வகைகலங்களில் (வேவ் ரைடர்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது. 'பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை' மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும். 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.' 'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக' நங்கூரம் - இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும் 'மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்' கலப் பெயர்: வர்மன் உயரம்: 6' - 6.3' — புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் தெரியவில்லை இது ஒரு வேறுபட்ட வகுப்பிலான படகாகும். இதன் வடிவம் வேவ் ரைடர் வகையை ஒத்திருப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இது கூர் அணியத்தைக்(pointed bow) கொண்டிருந்தது. இதன் கலக்கூடானது ஏனைய கலங்களின் கலக்கூட்டில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக உள்ளது. (மேலே & கீழே உள்ள படத்தைக் கண்டு தெளிக). 'கலக்கூடு(hull)' 'அணியம்' ' அணியத்தின் தளம் கல்லப்பட்டுள்ளதைக் காண்க' இதற்கு அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையார் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாரிற்குச் செல்வது போல! ' 'Battle field' என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க' 'பக்கவாட்டுத் தளம் கல்லப்படாததைக் காண்க' இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர வேவ் ரைடருக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும். மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாரில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு - என்னால் சரியாக எண்ண முடியவில்லை!). 'இதுதான் மீகாமன் அறை' 'கடையாரும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாரில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் ' இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்! நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: youtube - virusinic http://boatswainslocker.com/ https://www.maritimemanual.com/types-of-bow-designs/)ations Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka, SLN Admiral Jayanath Colombage ஏனைய அனைத்தும் சொந்தமாக எழுதியவையே! லெப். கேணல் நிரோஜன் வாழ்க்கை வரலாறு படிமப்புரவு YouTube Photography Unit of Liberation Tigers Google EelamView Log In or Sign Up Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips நீல அச்சுப்படிகள் ரொகான் குணரத்னேவால் எழுதப்பட்ட "Maritime Terrorism: Technologies, Tactics, and Techniques" இருந்து எடுத்து நான் திருத்தியவை ஆகும் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.