Search the Community
Showing results for tags 'கடற்புலிகளின் நீர்மூழ்கி'.
-
"தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எல்லா(hello)... வாங்கோ! வாங்கோ ! வணக்கம்... என்னென்டு சொன்னால் இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும். இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும். இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 2 replies
-
- 3
-
-
-
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
-
(and 21 more)
Tagged with:
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
- ltte submarine
- தமிழரின் நீர்மூழ்கி
- tamil tigers submarine
- tamil tigers
- கடற்படை
- தமிழீழக் கடல்
- தமிழரின் கடற்படை
- தமிழரின் நீர்மூழ்கிகள்
- tamils subamrine
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- eelam sumbarine
- கடற்புலி
- நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் கடற்கலன்கள்
- கடற்புலிகளின் படகுகள்
- கடற்புலிகள்
- கடற்புலி நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கி
- தாழ் தோற்றுரு கடற்கலன்கள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கிகள்
- கடற்கலன்கள்
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- கடற்புலிகள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- (and 8 more)