தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம்.
அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள்