• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'கலைஞர்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. திறமான புலமையெனில்...! மகாகவி பாரதியின், ""பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'' என்கிற இந்த ஆதங்க அறைகூவல் நிச்சயம் பரிதிமாற் கலைஞரின் செவிவழிப் புகுந்து சிந்தையில் தைத்திருக்க வேண்டும். அன்னை மொழியாம் தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் ஆழமாகப் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர், அக்காலத்தே ஆங்கில மொழியில் புகழ்பெற்று விளங்கிய "சானெட்' என்னும் யாப்பு வகையை நம் தமிழ்மொழியில் அறிமுகம் செய்துவைக்க ஆசைப்பட்டார். இந்த யாப்பு வகையும்கூட இத்தாலி மொழியின் "Sonetto'' என்னும் "பா' வகையைத் தழுவியது என்று ஆய்வாளர்கள் கூறுவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்நாளில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய ந. பலராம் ஐயர், இந்தச் செய்யுள் வகையின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்: ""ஆங்கிலத்தில் ஒரேவொரு விஷயத்தைப் பற்றிப் பதினான்கடி பெற்றதாய் - செய்யுளின் முதல், இடை, கடையென்னும் முப்பகுதிகளிலும் முறையே தோற்றுவாய், வளர்ச்சி, முடிவு பேறு என்னும் மூன்றும் விளங்குவதாய் வரையப்படும் ஒருவகைக் கவிக்குச் "சானெட்' என்பது பெயர்''. ஆங்கிலப் பெருங்கவிஞர்களாக விளங்கிய ஸ்பென்ஸர், மில்டன், ஷேக்ஸ்பியர் போன்றோர் பாடியுள்ள இவ்வகையான தனிச் செய்யுள்கள் பற்பலராலும் பாராட்டப்பட்டதைக் கண்டு பரிதிமாற் கலைஞர் அந்தப் பாவகை நமது செந்தமிழுக்குச் செழுமை சேர்க்கும் என்று எண்ணியிருக்க வேண்டும். அதனால் கடவுள், மலை, கடல், அருவி எனப் பல்வேறு வகையான தலைப்புகளில் 41 தனிப்பாடல்களை இயற்றினார். அப் பாடல்களின் தொகுப்பு "தனிப் பாசுரத் தொகை' (எ புக் ஆஃப் தமிழ் சானெட்) என்னும் நூலாக 1.8.1901-இல் முதல் பதிப்பைக் கண்டது. இந்தப் பிறமொழி யாப்பு வகையைக்கூடத் தமிழின் இலக்கண மரபு வழுவாமல் நமக்கு ஆக்கியளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர். அந்தப் பாடல்கள் 14 அடிகள் என்னும் அளவில் அமைந்த நேரிசை ஆசிரியப்பாக்களாகும். ஆங்கில "சானெட்' கவிதைகள் அங்க இலக்கணமாக அடியிறுதி எதுகைகளோடு (இயைபுத் தொடை) அமைவன. ஆனால் பரிதிமாற் கலைஞர், "அகவற்பா'வில் இன்னோசை அமைவதற்காக அடி முதல் எதுகை அமைப்பை எடுத்தாண்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் தமது புத்தாக்கப் படைப்பின் முதற்பதிப்பு முன்னுரையில் இந்த நூலை இயற்றியமைக்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ""ஆங்கில நூல் பயிற்சியுடைய தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பெரிதும் கவனித்தல் இன்றிக் கைசோர விடுகின்றனர் எனப் பலரும் கூறும் வசை மொழி எம் செவிவழிப் படப்படலும், மனம் பொறேம். புதுமை வழியில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று புகுந்தேம்...'' (கட்டுரையில் உள்ளபடி) இப்புதுமை நூலைப் பொருத்தவரை இன்னுமொரு வியப்பான செய்தி என்னவென்றால், அதுவரை வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாக அறியப்பட்டவர் தமது பெயரை, "பரிதிமாற் கலைஞர்' என்று புனைந்து கொண்டதே இந்தத் தனிப் பாடல்களை "ஞான போதினி' என்னும் இதழில் வெளியிட்ட போதுதான்! அதற்கு அவர்கூறும் காரணம், சுவையானது மட்டுமன்று; புதிய படைப்புகளை ஆள் பார்த்து விமர்சனம் செய்யும் இலக்கிய உலகின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் உள்ளது. அதனை அவரது வாக்கு மூலத்தின் வாயிலாகவே கேட்போம்: ""இப் பாசுரங்களில் சில புதுக் கருத்துகள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம். எமது மெய்ப்பெயரின் வெளியிடாது, "பரிதிமாற் கலைஞன்' என்னும் புனைவுப் பெயரின் வெளியிடுவே மாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையால் இகழப் பட்டொழிதலும் புன்னூல் ஒன்று செய்தானது உயர்ச்சியால் சாலவும் புகழப்பட்டிலங்கலும் நாடொறும் காண்டலின், இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்...'' (இனைத்து-இப்படிப்பட்ட, இத்தனை, இவ்வளவு). பரிதிமாற் கலைஞரின் தமிழ் புத்தமுதாகிய "தனிப் பாசுரத் தொகை'யின் சுவையும் மணமும் தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமன்று; ஆழ்கடல் கடந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரை பரவியது. பரிதியின் படைப்பின் மூலம் புதியதொரு பரிமாணத்தில் தமிழைக் கண்ட ஜி.யு.போப் பாதிரியார் பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்தார். வி.கோ.சூ.வின் புதுமைப் புலமையை வியந்து போற்றிய ஜி.யு.போப், தனிப் பாசுரத் தொகையின் 41 நற்றமிழ்ப் பாக்களையும் ஆங்கில சானெட்டுகளாக மொழிமாற்றம் செய்து, பரிதிமாற் கலைஞருக்கு அனுப்பி வைக்கிறார். பரிதிமாற் கலைஞர் அந்தப் பாடல்களையும் தனிப் பாசுரத் தொகையோடு இணைத்து, ந.பலராம ஐயர் குறிப்புரையோடும் "தனிப் பாசுரத் தொகை' (A Book of Tamil Sonnets with English Echoes and Notes) 1933-ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பைக் கண்டது. இந்நூலுக்கு ஜி.யு.போப் தந்திருக்கும் அணிந்துரையில், ""இப்புதுப் புனைவு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு வனப்பான சாதனை! இந்நூற் பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் கவித்துவம் முற்றும் ஓங்கி நிற்கிறது. ஏற்கெனவே தொன்மையான இலக்கியச் செல்வங்களால் செழித்துச் சிறந்து நிற்கும் செந்தமிழ்ச் சரஸ்வதி, கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுபோன்ற புதுமைகளை பூண்டு, மேலும் பொலிவுறுவாள்'' என்று புகழ்ந்துள்ளார். திருக்குறள், திருவாசகம், நன்னூல், நாலடியார் முதலிய தன்னேரில்லாத் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பாதிரியாரால் பரிதிமாற் கலைஞரின் தனிப் பாசுரத் தொகையும் மொழிபெயர்க்கப்பட்டதை அறியும்போது, நூலின் தரமும், நூலாசிரியரின் தகுதியும் நன்கு விளங்குகிறது. ""திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்'' என்று மகாகவி பாரதி வகுத்த அளவுகோலுக்குப் பரிதிமாற் கலைஞர் முற்றிலும் பொருந்தி நிற்கிறார். குரு.சீனிவாசன் https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jun/21/திறமான-புலமையெனில்-3428388.html
  2. கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன? தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்! அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்! தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன? நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்! இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம். இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள்!... அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்!... ஈழ துரோகத்தால் உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்!... செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்!... இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்!... இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய்!!! இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர். இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார். இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அதற்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது). ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது). எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே! நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார். கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம் இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது! உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., சொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம்! உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது. அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன? என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே? தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே? எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன? இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வேண்டாவா அவர்? அதையாவது செய்தாரா? இல்லை! மாறாக, தானே கழுத்தைத் திருகிப் போட்ட ‘டெசோ’ எனும் உயிரில்லாப் பிண்டத்துக்குப் பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்; அதுவும் தமிழினப்படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து! உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள்! இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்! அது முடியாது! இதை இப்படிச் செய்ய முடியாது! இதற்கு வழி வேறு உண்டு! அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள்! தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள்! இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்! கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள்! இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம்! நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம்! அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது! எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள்! வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள்! கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள்! அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. தொடர்புடைய பதிவுகள்: ✎ தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்! ✎ யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! ✎ 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்! தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி! – திருமாவேலன், விகடன் ✎ ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் ✎ ஈழத் தமிழர் படுகொலை! கருணாநிதி துரோகம்! வரலாறு மன்னிக்காது!