• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'காதலாகுமோ தெரியவில்லை......!'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. பொட்டல் காட்டில் ஒரு கதை. அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு. காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறுக்கி கொத்திக் கொண்டு பின்னாலே வரும். நாளடைவில் அவைகளை கவனித்த காவேரி அவைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே கூடுதலாக போட்டுகொண்டு நடப்பாள்.அதேபோல் அவள் மாலையில் வேலையால் வரும்போதும் இது தொடரும். அன்று வேலை நேரத்துக்கே முடிந்து விட்டது. அதனால் கொஞ்சம் வெள்ளனவாகவே எட்டி நடை போட்டு வருகிறாள்.அப்படி வரும்போது எதிரே மிதிவண்டியில் ஒருத்தன் வருகின்றான்.பின்னால் கேரியரில் இருக்கும் கூண்டில் சில பறவைகள் கத்திக் கொண்டிருக்கின்றன. காகம் போன்ற ஓரிரு பறவைகள் அந்த மனிதனை விரட்டி விரட்டி கொத்துகின்றன.அவன் ஒருகையால் அவற்றை விரட்டிக்கொண்டு மறுகையால் மிதிவண்டியை பிடித்து சிரமத்துடன் மிதிக்கின்றான்.அவன் பின்னால் ஒரு நாய் வேறு நின்று கொண்டு பெரிதாக குரைத்துக் கொண்டு வருகுது. இவற்றை அவள் பார்த்துக்கொண்டு வரும்போதே சில அடி தூரத்துக்கு முன்னால் மிதிவண்டி ஒரு கல்லின்மேல் மோதி சமநிலை இல்லாது கவுண்டு விழுகின்றது. நாய் பாய்ந்து வெளியில் நின்று கொண்டு குரைப்பதுடன் அவளைப் பார்த்து உறுமிக்கொண்டு கடிக்கவும் வருகின்றது. விழுந்த கூண்டுக்குள் இருந்து குருவிகள் சிறகடித்து பெரிதாக கத்துகின்றன. காவேரிக்கு நிலைமை புரிகின்றது. இவன் ஒரு பறவைத் திருடன்.இந்தப் பொட்டல் காட்டுப் பறவைகளை தந்திரமாக பிடித்து போகிறான் போலும். இதை சும்மா விடக்கூடாது என்று ஒரு சுள்ளியால் நாயை "அடீக் அடீக் " என்று விரட்டிக் கொண்டே கூண்டைத் திறந்து விடுகிறாள். பல பறவைகள் திடுமென வெளியே பறக்கின்றன.பறக்க முடியாமல் அடிபட்ட பறவைகள் சில உள்ளே இருந்து கீச்சிடுகின்றன. உடனே சுதாகரித்து கொண்டு எழுந்த அந்த மனிதன் "எடியே என்னடி செய்கிறாய்" எழுந்து அவளை அடிக்க பாய்ந்து வருகின்றான். காவேரியும் பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்துக் கொண்டு வா உன்ர மண்டையை உடைக்கிறேன் என்று ஆவேசமாக நிக்கிறாள். அவனும் கோபத்துடன் தூஷண வார்த்தைகளால் அவளைத் திட்டுகின்றான். அப்போது அவ் வழியால் வந்த ஓரிருவர் என்ன ஏது என்று விசாரித்து கொண்டு அவ்விடத்துக்கு வர அம் மனிதன் மிதிவண்டியை எடுத்து கொண்டு அவளை முறைத்து பார்த்தபடி நாயையும் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு போகிறான். போகும் பொது நாயும் அவளைப்பார்த்து உறுமிக்கொண்டு கூடவே போகின்றது. சில நாட்களின் பின் ஒருநாள் மாலை நேரம், வழக்கம்போல் அந்த மனிதன் அந்த பொட்டல் காட்டுக்கு வருகின்றான்.கூடவே நாயும் வருகின்றது. மிகச் சரியான ஒரு புதரைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள செடியில் தான் கொண்டுவந்த ஒரு குருவியை கட்டி விடுகின்றான். பின் சில ஈர்க்குச்சிகளை எடுத்து அவற்றின் மீது கொஞ்சம் பிசின் போன்ற பசையை பூசிவிட்டு அந்த செடியில் அங்கங்கே வைத்து விட்டு சற்று தூரத்தில் போய் நாயோடு அமர்ந்து கொள்கிறான்.கட்டி இருந்த குருவி கீச் கீச் என்று கத்துகின்றது. அதை குசலம் விசாரிக்க பறந்து வந்த சில குருவிகளும் பறவைகளும் ஒவ்வொன்றாக வந்து அந்த செடியில் அமர்கின்றன. இன்று நல்ல வேட்டைதான் என்று மகிழ்ச்சியுடன் அவன் அந்த புதருக்கு அருகில் வருகின்றான். அவனையும் நாயையும் கண்டதும் பறவைகள் எல்லாம் ஒருசேரப் பறக்கும் போது பசை தடவிய ஈர்க்குச்சிகள் அவைகளின் சிறகில் ஒட்டிக்கொள்ள அவை நிலைதடுமாறி விழுந்து துடிக்கின்றன.அவன் ஒவ்வொன்றாக அவற்றைப் பிடித்து கூண்டுக்குள் போடுகின்றான். இப்படியே எடுத்து கொண்டு வந்தவன் அந்தப் புதருக்குள் துடித்துக் கொண்டு இருந்த ஒரு குருவியை எடுக்கும்போது அதனுள் இருந்த சர்ப்பம் ஒன்று சடுதியாக அவன் கையில் தீண்டி விடுகின்றது. விபரீதத்தை நாயும் உணர்ந்து கொண்டது.அது புதரை சுற்றி சுற்றி வந்து ஆக்ரோஷமாக குலைக்க பாம்பு புதருக்குள் இருந்து கிளம்பி வேகமாக ஓடி விடுகின்றது. சற்று தூரத்துக்கு பாம்பை விரட்டி சென்ற நாயும் திரும்பிவந்து அவனருகே நின்று ஊளையிடுகின்றது. காவேரியும் அவள் தோழியும் சுவாரஸ்யமாக கதைத்து கொண்டு அவ் வழியே வருகின்றார்கள். அப்பொழுது நாய் வேகமாய் புதரை நோக்கி ஓடுவதை காவேரி பார்த்து விட்டாள். உடனே அங்கே கிடந்த ஒரு கல்லையும் எடுத்து கொண்டு தோழியிடம் பொறடி வாறன் இண்டைக்கு இவங்கட மண்டையை உடைக்காமல் விடுறேல்ல. தோழியும் நில்லடி காவேரி, எங்கடி போறாய் என்று கேட்டுக்கொண்டு பின்னால் ஓடி வருகிறாள். அங்கே அவள் கண்ட காட்சி கொஞ்சம் நிதானிக்க வைக்குது. நாயும் இப்போது குலைக்காமல் அவனை விட்டு விலகி எட்ட நின்று அனுங்குது. அதன் கண்களில் கண்ணீரும் வருவதை பார்த்தவள், அவனை நெருங்கி என்னடா நடந்தது என்று கேட்க அவன் பாம்பு கடித்ததை சொல்லிக் கையை காட்டிக் கொண்டே மயங்கும் நிலைக்கு போகின்றான். காவேரியும் தோழியிடம் எடியே இவனை தூங்கவிடாமல் பேச்சு குடடி என்று சொல்லி விட்டு விரைவாக புதரில் கட்டியிருந்த குருவியை அவிட்டு விட்டு அந்தக் கயிற்றால் அவன் கையில் இறுக்கி கட்டி விடுகிறாள். பின் தாமதிக்காமல் கூண்டைத் திறந்து குருவிகளைத் திரத்தி விட்டுட்டு கூண்டையும் அவிட்டு எறிந்து விட்டு, தோழியின் உதவியுடன் அவனை மிதிவண்டி கேரியரில் இருத்தி தானும் அதில் ஏறி இருந்து கொண்டு அவனது கையிரண்டையும் தனது வயிற்றுடன் சேர்த்து கட்டிக்கொண்டு மெதுவாக பக்கத்தில் இருக்கும் விஷக்கடி வைத்தியர் வீட்டுக்கு வண்டியை ஒட்டிக்கொண்டு முன்செல்ல பின்னால் தோழியும் நாயும் ஓடி வருகின்றார்கள். அவன் உறக்கத்துக்கு போகாமல் அவள் பேச்சு கொடுக்கிறாள். அவனும் தான் இனிமேல் எந்த பறவைகளையும் பிடிக்கவும் துன்புறுத்தவும் போவதில்லை என்று உளறிக்கொண்டு வருகிறான். அன்றிரவு முழுவதும் வைத்தியர் வீட்டில் அவருக்கும் உதவியாக அவனைத் தூங்கவிடாமல் அங்கேயே காவேரி தங்குகிறாள்.தோழியிடம் தனது வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பி விட்டாள். வைத்தியரும் கடிவாயை கீறி கட்டி ரத்தங்களை வெளியே பிதுக்கி விட்டு சில மூலிகைகளை வைத்துக் கட்டிவிட்டு இனி பயமில்லை என்கிறார். காவேரியும் அங்கிருந்த விசிறியால் அவனுக்கு விசிறிக்கொண்டிருக்க நாயும் அவளின் தொடையோடு உரசிக்கொண்டு படுத்து குறட்டை விட்டுக்கொண்டிருக்கு.......! ஆக்கம் சுவி.....!