உ.
நிலம் தழுவாத நிழல்கள்.
நிலம் ..... 1.
அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரை