யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'கூர்ப்பியல் மனித வரலாறு'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம். ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும் சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது. கூர்ப்பியல் சார்ந்த இந்த இலகுவான விளக்கத்தை அடிப்படை வாதக் கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்து Intelligent Design எனும் தங்கள் கற்பனைக் கொள்கையொன்றை ஊக்குவிக்கிறார்கள். இன்ரெலிஜென்ட் டிசைன் கூர்ப்பினால் மனிதன் பெற்ற சிறப்புகளின் உரிமையை அப்படியே தங்கள் கடவுளின் கைவண்ணமாகச் சித்திரிக்கிற ஒரு நொண்டி முயற்சி. அமெரிக்காவின் சில தென் மானிலங்கள், தமது பாடசாலைகளில் கூர்ப்புக் கொள்கையின் "நன்மை தீமைகளை" ஆராயும் பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டுமென்று சட்டமியற்றியிருக்கின்றன. இதன் நீண்ட கால இலக்கு, மத நம்பிக்கையின் பால் பட்ட இன்ரெலிஜென்ற் டிசைன் ஒரு மாற்றுத் தியரியாக திணிக்கப் பட்டு குழந்தைகளை அதை ஏற்கச் செய்வதாக இருக்கிறது. டார்வின் கூர்ப்பினால் தக்கன பிழைத்து சூழலுக்கு இயைபாக்கம் அடைந்து புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று ஊகித்த போது "ஜீன்" என்ற ஐடியாவே உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இயற்பியலில் ஐன்ஸ்ரைனின் கோட்பாடுகள் நவீன பௌதீகவியலாளர்களால் இன்றும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருப்பது போல, டார்வினின் கூர்ப்பியல் நூல் வெளியாகி சரியாக நூறு ஆண்டுகளில் பின்னர் டி.என்.ஏ (DNA) மூலக்கூறினை விஞ்ஞானிகள் வாட்சனும் கிறிக்கும் கண்டு பிடித்து, கூர்ப்பின் மூலக்கூற்று அடிப்படையை ஆரம்பித்து வைத்தனர். தற்போதைய கூர்ப்பை நிரூபிக்கும் ஆய்வுகள், வெளித்தோற்றங்களைத் தாண்டி, நேரடியாக டி.என்.ஏ மூலக் கூறுகளையே ஆய்வு செய்து பல தகவல்களை உறுதி செய்கின்றன. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் அப்படியான ஒரு டி.என்.ஏ சார் கூர்ப்பியல் ஆய்வு தான். ரஷ்யாவுக்கும் மொங்கோலியாவுக்கும் இடையே இருக்கும் டெனிசோவா எனும் பனி உறைந்த குகையொன்றை மனித வரலாறு தொடர்பான ஆய்வாளர்கள் 1980 இல் இருந்து அகழ்வு செய்து ஆராய்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே கண்டெடுக்கப் பட்ட என்புத் துகள்கள், மற்றும் கல்லாயுதங்கள் என்பவற்றை அவை அங்கே படிமமாகிய காலக் கணிப்பீட்டோடு ஆய்வு செய்யப் பட்ட போது பல சுவாரசியமான , மனிதக் கூர்ப்பின் படிமுறைகளை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குகையில் கிடைத்த ஒரு என்பின் டி.என்.ஏயின் படி, ஹோமோ சேபியன்ஸுக்கு நெருக்கமான டெனிசோவியன்ஸ் என்ற ஆதிமனிதர்களும் அவர்களுக்கு முன்னைய ஆதி மனிதர்களான நியண்டதால் (Homo neanderthalensis) மனிதர்களும் இனப் பெருக்க ரீதியில் கலப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள் (அதான்பா, அந்தக் குஜால் மேட்டர்!) என்பது தெளிவாகியிருக்கிறது. இது, மனிதனின் கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு. ஏன்? கூர்ப்பு என்பதன் அடிப்படை "ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. இந்த டெனிசோவாக் குகைகளில் நடந்த இன்னுமொரு ஆய்வில், 50,000 வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கக் கூடிய நவீன ஹோமோ சேபியன்ஸ் இனத்துடன் தொடர்பான கல்லாயுதங்களும் கண்டெடுக்கப் பட்டிருப்பது, இந்த ஊகத்திற்கு மேலதிக உறுதி சேர்க்கிறது. நாம் பல இடங்களில் காண்பது போல, அறிவியல் ஆய்வு முயற்சிகள் கடினமானவை, நீண்ட முயற்சியை வேண்டுபவை. அந்த அறிவியல் வியர்வை சிந்தி வெளிக்கொண்டு வரும் எமது கதையை கடவுளின் பக்தர்கள் தங்கள் அடிப்படை வாதத்தை வளப்படுத்தப் பாவிப்பது இன்னும் தொடரும் என நம்பலாம். இந்த இறுதிக் கண்டு பிடிப்பு இன்ரெலிஜென்ற் டிசைன் காரர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள்: 1. Dating of hominin discoveries at Denisova, Dennell, R. Nature, vol 565, 571–572 (2019). 2. Timing of archaic hominin occupation of Denisova Cave in southern Siberia, Nature, vol 565, 594–599 (2019) .