Search the Community
Showing results for tags 'கொரோனா'.
-
ஃப்ளோரா கார்மிச்சேல் பிபிசி ரியாலிட்டி செக் கொரோனா வைரஸிலிருந்து 90 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒரு தடுப்பூசி குறித்த செய்தி வெளியானவுடன் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ தொடங்கி விட்டன. தடுப்பூசி என்ற பெயரில் உடலில் மைரோசிப்ஸ்களை பொருத்தி நமது உடலின் "ஜெனிடிக்கல் கோட்" மறு கட்டமைப்பு செய்யப்படும் என்பது, அதில் முதன்மையானது. தடுப்பூசி தொடர்பான செய்திகள் வந்தவுடன், ட்விட்டரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது. கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பில் கேட்ஸ் தொடர்பான பல பொய் செய்திகள் இண
-
ஜேம்ஸ் கலேகர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் க்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான 'மாடர்னா' தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த செய்தி வந்துள்ள
-
மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்பேன் : பிள்ளையான் November 10, 2020 (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொரோனாவை ஒழிப்போம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார். அதேவேளை காத்திகை 27ஆம் திகதி மாவீரர் தினத்தையும் அவர் நினைவுபடுத்தினார். மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வழக்கிற்கு வருகைதந்த பிள்ளையானை வழக்கு முடிவடைந்த பின்னர் சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள
-
20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு Bharati November 7, 2020 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு2020-11-07T13:11:14+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கலாவர்ஷ்னி கனகரட்ணம் “உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர
- 1 reply
-
- கொரோனா
- கொரோனா வைரஸ்
-
(and 1 more)
Tagged with:
-
மக்கள் ஒத்துளைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது- அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவிப்பு BATTINEWS MAINNovember 6, 2020 அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துளைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4வது விசேட கூட்டம் இன்று(06) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,கொரோ
-
கொரோனா பற்றிய பயத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதில் மால்வேர்களைப் பரப்பி வருகின்றனர். உங்களுக்கும் அது போன்ற இ-மெயில்கள் வந்தால் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது எப்படி என்ற பெயரில் பல கணினி வைரஸ்கள் புதிதாக முளைத்திருக்கின்றன. மருத்துவ ஆலோசனைகள் அல்லது பாதுகாப்பாக இருப்பது என்ற பெயரில் இ-மெயில்கள் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவற்றின் மூலம் கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர் ஹேக்கர்கள். IBM நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் இதுபோன்ற மால்வேர்கள் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். அவ
-
அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்க
-
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா? ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வெளிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர
-
கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் எச்சரித்த சீன மருத்துவர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://tamil.adaderana.lk/news.php?nid=125478
-
உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும் கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்ப்படுத்தப்படவில்லை. ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால்) பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். எ
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு! சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குற
-
சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை என்றார். ஒருவேளை பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால்
-
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang) வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்
-
சீனா உட்பட பல உலகநாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. சீனாவை மையமாக கொண்டு பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸ் விலங்கிடமிருந்தது, மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. உறுதி இல்லை: சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவ துவங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்நகரில் விற்கப்பட்ட வெளவால்கள் மூலம் இந்த கொடிய வைரஸ், மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என வலுவாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. அச்சுறுத்தும் வெளவால்கள்: சார்ஸ் மற்றும் மெர்ஸ் உள்ளிட்ட பல கொடிய வைரஸ்கள் வெளவால்கள் மூலமே பரவியதாக கூறியுள்ளனர் ஆராய்ச்ச
-
கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு பாதிப்பு Getty Images சித்தரிக்கும் படம் சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உண்டாகியுள்ளவர்களில் மிகவும் இளம் வயது இந்தக் குழந்தைக்குத்தான். கொரோனா வைரஸ் பரவலின் மூலமாக இருக்கும் வுஹான் நகரில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்னர் இந்தக் குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது இ
-
போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக பிரசாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் வைத்தியர் டெனிஸ்டர் எல்.பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயமாகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்க
-
2600 வருடங்களுக்கு முன்னரே கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார் என கலபொட அத்தே ஞானசார குறிப்பிட்டார். மத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், அன்னதானம் பெற சென்ற பிக்கு ஒருவருக்கு வித்தியாசமான உணவு தானமாக வழங்கப்பட்டிருந்ததை அவதானித்த புத்த பெருமான் அதனை உண்ணுவதை தடை செய்தார். குறித்த உணவு பாம்பு கறி என கூறியே புத்த பெருமான் அதனை தடை செய்தார். குறித்த உணவை உற்கொண்டால் ஒருவகை காய்ச்சல் வரும் என அவர் அன்றே கூறிவிட்டார். பாம்பு குதிரை வௌவால் பன்றி உள்ளிட்ட 10 வகையான மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் https:
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் 23 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. அத்துடன், ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூ
-
சுமார் 3700 பேருடன் யோகோஹாமா துறைமுகத்தை வந்தடைந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பலை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளதுடன், அதில் பயணித்த பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரையில் இறங்குவதற்கு இதுவரை அனுமதியும் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜப்பானின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான யோகோஹாமாவில் இருந்து ஹொங்கொங்கிற்கு மேற்படி கப்பல் சென்றது. இந்த கப்பலில் சுமார் 2,666 பயணிகளும், 1,045 ஊழியர்களும் பயணித்தனர். இந்த கப்பல் கடந்த 25 ஆம் திகதி ஹொங்கொங் சென்றடைந்தது. இதன்போது கப்பலில் பயணம் செய்த ஹொங்கொங்கைச் சேர்ந்த 80 வயது முதியவர் தரையில் இறங்கினார். அ
-
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து. சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று (5) யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு யாழ். போ
-
துறைமுகங்களின் ஊடாக கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த கப்பல் ஒன்று நேற்று (04) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சுகாதார ஊழியர்களால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், கொரோனா வ
-
சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைப்பு கொழும்பில் இருந்து சீனாவின் மூன்று பிரதேசங்களுக்கான விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பயணிகளின் பயணங்கள் குறைவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=125394
-
இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 05 சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது. இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஊடகங்களில், கடந்த நாள்களில், இந்த நோயைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் பெருமளவில் வெளியாகியிருந்தன. சீ.என்.என், பி.பி.சி, அல் ஜெசீரா, டி.டபிள்
-
கொரோனா வைரஸால் ஹொங்கொங்கில் முதல் உயிரிழப்பு பதிவானது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான எல்லையை ஹொங்கொங் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஹொங்கொங் சென்ற 39 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து சென்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த நிலையில் சீனாவுக்கு வெளியே இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் சீனா
-
சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் வெளியேறவேண்டும் : வெளியுறவு அலுவலகம் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் அனைவரும் வெளியேறவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்திலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிப்பு அபாயத்தைக் குறைக்க சீனாவில் உள்ள பிரித்தானியப் பிரஜைகளை விரைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். ஹூபே மாகாணத்