தனது பிரதேசத்தில் எவராவது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரின் சடலத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதுகாக்க உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என அவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ருவான்வெலிசயா அருகே ஜனாதிபதி பதவியேற்றதால், மன்னர் துட்டகைமுனு மற்றும் அனாகரிக தர்மபாலா ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி மாட்டிறைச்சி கடைகள், விபச்சார விடுதிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.ibctamil.com/srilanka/80/146993