Search the Community
Showing results for tags 'சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு'.
-
அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர். அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார். இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது. அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன. சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல... https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail