Search the Community

Showing results for tags 'சேயோன் யாழ்வேந்தன்'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 17 results

 1. 2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
 2. இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு. தலைமுறை இடைவேளை “கோழி கூப்புட நாலுமணிக்கு நாலு தூத்தல் போட்டுச்சு மண்வாசமும் வெக்கையும் கிளம்ப வெளிய வந்து பார்த்தா கீகாத்து மழையக் கலச்சுடுச்சு” என்று சொன்ன அப்பத்தாதான், இன்று பிற்பகல் நாலுமணிக்கு விளம்பர இடைவேளையில் வெளியே வந்து “மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள் ஈரவாசல் பார்த்து. -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 18.1.17) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
 3. ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார் நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி ஒருவரும் வாய்திறக்கவில்லை -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 15.2.17) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
 4. 30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மாநகரத்தின் அகதிகள் தேசத்தின் வல்லசுரக் கனவினால் தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு மாநகரத்தின் அகதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள் வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு. அங்குள்ள வங்கிக் கணக்கையும் அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள். கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும் அதில் ஜீவிக்கிறார்கள் பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு பிதுங்கி வழியும் பேருந்துகளிலும் ரயில்களின் கழிவறை அருகிலும் பயணிக்க முடியும் என்பது இம்மாநகரத்தின் அகதிகளுக்கு இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம். -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 30.11.16) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
 5. நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! ஒரு வழிப் போக்குவரத்து ----------------------------------------------- நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு. உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில் ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். சிவப்பு விளக்கு கண்டல்ல, சீருடைக் காவலர் சீறுவாரென்றே விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம். அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும், கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும். அவரின் மழைக்கவிதைகள் பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும். கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை. பரிவும் நேசமும் ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். (கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)
 6. “திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன. ஸ்டிக்கர் --------------- மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்! இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை. நவீன உலகுக்கேற்ப நீதிகளை மறைபொருளாக வழங்குகிறார்கள். மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும் இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர் குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும். குறைந்தபட்சம் கோபத்தில் கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும். சிகரெட் பெட்டிகளின் மீது நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள் குழந்தைகளின் ஸ்டிக்கர் கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் தலை நசுங்கிய ஒருவனின் படத்தை ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது சாலையில் கவனமாக இருக்கவைக்கும். சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை புழக்கடையிலாவது இருப்பை உறுதி செய்யும்! சூத்திரனின் பிறப்பு ----------------------------------------- வழக்கம் போல் நகர் உலாச் சென்ற கடவுள் ஒரு வேசியின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார் ஏதுமறியா வேசிக்கு வந்திருப்பது கடவுளென்று தெரியாவிட்டாலும் யாவுமறிந்த கடவுளுக்கு அவள் வேசியென்பது தெரிந்தே இருந்தது. உள்ளே அழைத்தாள் வேசி. “இல்லை, நான் அதற்காக வரவில்லை”, கடவுள் தயங்கினார். வேசி சிரித்தாள், “நேற்றும்தான் ஒருவன் கவிதை எழுதத்தான் வந்தேன் என்று காகிதம் பேனாவோடு வந்தான் காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை காலையில் தான் போனான்” என்றாள். “நான் அப்.....“ கடவுள் திக்கினார். அதற்கு மேல் கடவுளைப் பேசவிடவில்லை வேசி. ஆட்கொல்லி ஆண்டவன் ஆட்கொள்வதற்கு வேசிகள் ஒன்றும் விலக்கல்லவே! சூத்திரனின் பிறப்பை வேதங்கள் அறிவித்தன, பிரபஞ்சம் கொண்டாடியது! இறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ----------------------------------------------------------------------------- சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டியில் சிற்றெறும்பைக் கண்டதும் சட்டென்று அடக்கி அப்படியே நகர்ந்தேன் அடுத்த பீங்கானுக்கு, அப்படியே அடுத்ததற்கு… ஞாயிற்றுக்கிழமைகளில் பலியிடும் நாட்டுக்கோழிகளை இப்படியாகத்தான் சமன் செய்துகொள்கிறேன்.
 7. காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும் மின் மட்டைகளில் கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன? -சேயோன் யாழ்வேந்தன் (புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)
 8. 2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! (கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்) வாழ்நாள் முழுவதும் கொசுக்களோடு போராடியவன் கொசுக்கடியால் நோயுற்று செத்தே போனான். சுருள்கள், வில்லைகள், திரவங்கள், மின்மட்டைகள் என்று கொசுவுக்கு எதிராக அவன் பிரயோகித்த ஆயுதங்கள் முடிவுறாத அவனது போராட்டத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவன் மரணத்தை தொலைக்காட்சியில் விவாதித்தவன் சொன்னான், கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில் அவன் சட்டை அணிந்திருந்தால் கொசு கடித்திருக்காதாம்! (பருவங்களை உடுத்துபவள்) சீரிய சுழற்சியில் ஆடைகளை அவிழ்த்து மாற்றி அணிகிறாள். அவள் வெய்யிலை உடுத்தியபோது தவித்துப்போனேன். காற்றை உடுத்தியபோது கலைந்துபோனேன். மழையை உடுத்தியபோது மனம் கிறங்கிப்போனேன் இப்போது அவள் பனியை உடுத்துகையில் போர்வைக்குள் பதுங்குகிறேன் கவிதைக் கனவுகளோடு! (காதலைச் சொல்வதற்கு...) காதலைச் சொல்வதற்கு சரியான இடம் எதுவென்று வினவினான். கடற்கரை? திருமண வீடு? பூங்கா? கல்லூரி வாசல்? பேருந்து நிறுத்தம்? பலரும் யோசனை சொன்னார்கள். காதலைச் சொல்வதற்கு சரியான இடம் மனதில்லையோ? (நன்றி: குங்குமம் 2.9.16)
 9. 10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சமக் குறியீடு நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன் நடந்துவரும் என்னை அழைக்கும்முன் நீ சற்று யோசித்திருக்க வேண்டும். விசிலூதி என்னை உண்ண அழைத்தது உன் தவறுதான். பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது என் தவறுதான் பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான். இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து, நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு என்னை வெளியேற அனுமதி அய்யனே. -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 10.8.16) சேகரிப்பு நண்பர்களின் கிண்டல்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் எதையாவது சேகரித்துக்கொண்டே இருப்பது சேகரின் பால்ய பழக்கம் விதவிதமான இறகுகளை, இலைகளை, மலர்களை, முட்களை, கிளிஞ்சல்களை, வளையல் துண்டுகளைச் சேகரிக்கும் சேகர் பின்னாளில் விதவிதமான அழைப்பிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்தான். திருமணமானமாகி வெகுநாட்களுக்குப் பிறகு தனியே வெறுங்கையோடு எதிரில்வந்த சேகர் இப்போது விதவிதமான ஞாபகங்களைச் சேகரிப்பவன்போல் தோன்றினான். -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 17.8.16) நன்றி: ஆனந்த விகடன் (நன்றி: ஆனந்த விகடன்)
 10. இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…! பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார். மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர் “ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும் தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார். பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில் டிரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில் எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார். ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில் சற்றே பதற்றமடைந்து, சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்! -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன்)
 11. ஜூன் மாத "கணையாழி" இதழில் வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை, யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! அஸ்மிதா எனும் குட்டி தேவதை ----------------------------------------------------- எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு அஸ்மிதா எனும் குட்டி தேவதை கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள். கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை எங்கள் வீட்டில் விரித்து வைத்து, நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து வானவில் காட்டுகிறாள். அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா, அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில் அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம். கோடையை இழுத்துக்கொண்டு நகரும் எறும்புகளை யாரும் மிதித்துவிடாமல் கங்காணியாகிறாள். பறவைகள் கத்தும் ஒலிகளைச் சொல்லிக் கொடுத்த எங்களுக்கு மரங்கள் கத்தும் ஓசையைக் கற்றுக்கொடுக்கிறாள். பீங்கான் பொம்மைகள், கோப்பைகள், மூக்குக் கண்ணாடி என்று அவள் உடைக்கும் பொருள்களெல்லாம் தேவையில்லாத பொருள்கள்தாம் என்று என் அம்மா சான்றளிக்கிறாள். தேவையில்லாத பொருள்களை உடைப்பதற்காகவே அவள் கோடையில் வருவதாக எண்ணிக்கொள்கிறோம். கொடுங்கோடையை நாம் வரவேற்க குட்டி தேவதைகள் காரணமாகிறார்கள்! (நன்றி : கணையாழி)
 12. இந்த வார ஆனந்தவிகடனில் (11.5.16) வெளியாகியுள்ள எனது கவிதை "முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!", யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் வீடு! போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம் “எங்கே எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா. ஒரு திருப்பத்தில் சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும், “ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?” கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி. முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த சூரியனின் வீட்டுக்கு நாங்கள் சென்று சேர்வதற்குள் சூரியன் வீட்டுக்குள் மறைந்துவிட, நாளை மறுபடியும் வரலாம் என்று சமாதானப்படுத்தித் திரும்பினோம். முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் முழுநிலவின் வீட்டுக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம். (நன்றி: ஆனந்த விகடன்) (எனது பதிவுகளில் படத்தை இணைக்க முடியவில்லை. நண்பர்கள், எப்படி இணைப்பதென்று தெரிவிக்கவும்)
 13. இந்த வார குங்குமம் இதழில் (25.4.16) வெளியாகியுள்ள எனது குறுங்கவிதை "சொல்", யாழ்களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சொல் ஆயிரம் இருந்தாலும் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்கிறார்கள். நமக்குள்ளே இருப்பது ஆயிரம் இல்லை ஒன்றுதான், அதை வேறெப்படிச் சொல்வது?
 14. இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)
 15. இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. லட்டு மாதிரி இருப்பது காலையில் வேலைக்குக் கிளம்புகையில் இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி ‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள். ‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று சொல்லிவிட்டு வரும் வழியில், பருத்த உடலா, மஞ்சள் சட்டையா என் கொஞ்சல் பேச்சா லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி, லட்டுகள் உருளும் சாலையில் ஓடி லட்டைக் குடித்து லட்டை உண்டு, லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில் வீடு திரும்பும் வரை, சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது. லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால் யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது. உயிர்த் தீ தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால் அணைத்த அந்தக் கணத்தில்தான் அவளுக்கு அந்த எண்ணம் முதன்முதலாக வந்தது.... உந்திச் சுடர் பற்றி எரியும் அந்தத் தீபத்தை ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால் எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.
 16. ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.
 17. ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் கதவைத் திறந்துவைத்துப் போகிறான். குளியலறையில் ஒரு சிறுவன் சத்தமாகப் பாடுகிறான். படுக்கையறையில் ஒரு சிறுவன் அம்மாவின்மேல் கால்போட்டுத் தூங்குகிறான்.... ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில் சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்! -சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்.