Search the Community

Showing results for tags 'ஜேவிபியை அடக்கிய வெற்றிவிழா நடப்பதில்லை; தமிழர்களிற்கு எதிரான வெற்றிவிழாவே கொண்டாடப்படுகிறது; கோட்டா நாட்டை படுகுழிக்குள் தள்ளுவார்: விக்னேஸ்வரன்!'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவல் க.வி்.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் – ‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.” இந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப் போகின்றது என்று நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச அவர்கள் இம்மாதம் 19ம் திகதி நடைபெற்ற யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பின்வருமாறு கூறியுள்ளார் – ‘எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை”. எனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார் ஜனாதிபதி அவர்கள் என்று புலப்படுகிறது. வரப் போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும். அவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் பொன்சேகா அவர்களால் இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது. யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோசம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர்காலத்தில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதையே காட்டுகின்றது. ஆனால் போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. அத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. பாதிக்கப்பட்ட நாம் கூட இலங்கையை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவதனுடாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அதனால் தான், இலங்கையை ஜ. நா உறுப்புரிமையை இருந்து நீக்கும்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா வை நான் வலியுறுத்தி வருகின்றேன். ஆனால், இலங்கையை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்துமாறு நாம் கோரும் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்று அதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால், தாம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்புவதற்கும் தொடர்ந்து எமக்கு எதிராக கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் அரசாங்கம் முயலுகின்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விலகுவன் மூலம் இவற்றை அடையலாம் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்தி எமது மக்களை அரசாங்கம் இன அழிப்புக்கு உள்ளாக்கியது. அரசாங்கம், அப்போது சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றியபோது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை Responsibility to Protect (R2P) கோட்பாடுகளுக்கு அமைவாக உரிய முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே இன அழிப்பு நடைபெறுவதற்கு வழிகோலியது. இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப்போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே, முன்னர் போல அல்லாமல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் சுயாதீனமாக விசாரணை செய்வதற்கும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடைபெறுமானால் எமது அப்பாவி சிங்களச் சகோதரர்களுக்கு இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை உணர்த்தி அவர்களின் பௌத்த தர்மம் காட்டும் வழியில் எமக்கான பரிகார நீதியை பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றினை காணமுடியும் என்று நம்புகின்றேன். இதன் மூலம், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், எமது சில சிங்களச் சகோதரர்கள் நாம் தனிநாட்டை உருவாக்க எத்தனித்து வருவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களே வட-கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண்நிலையினுடாக தெட்டத்தெளிவாக இதனை புரிந்துகொள்ளலாம். தெற்கில் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருப்பதுடன் இராணுவத்தினால் மூர்கத்தனமாக கொடூரமான முறையில் பல்லாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன்போது உயிர்நீத்த இளைஞர்கள் இன்றுவரை வருடாவருடம் தென் இலங்கையில் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், போர் வெற்றி விழாக்கள் நடைபெறுவதில்லை. ஆனால், தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொறோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன். மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தற்போது தாம் இராணுவத்தில் இல்லை என்பதையும் இந்த நாடு முழுவதற்கும் அதில் வாழும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு உன்னத பதவியை அவர் வகிக்கின்றார் என்பதையும் தயவுசெய்து இனியாவது மனதில் நிலை நிறுத்துவாராக! https://www.pagetamil.com/125848/