Jump to content

Search the Community

Showing results for tags 'தமிழரின் படைக்கலங்கள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)….. வணக்கம் தோழர்களே.. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்.. கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்…….. கூடுதல் தகவல்கள்: https://yarl.com/forum3/topic/258290-புலிகளின்-உள்நாட்டு-உற்பத்தி-சேணேவிகள்artillery-மற்றும்-உந்துகணைகள்-ஆவணம்/ நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து… ' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு. இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். ' கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention) இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல. அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (புலன கிட்டிப்பு:புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan. ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்: முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்? பெண்கள்: மார்பகம் இடை மரும பகுதி ஆண்கள்: நெஞ்சு இடை இவற்றில் இரு வகையுண்டு.. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும். ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)' 'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்' கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர். மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை. அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும். 'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து' 'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்' ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்! 'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி' பல்வேறு வகையான வெடியுடைகள்: இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟 கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்: 'படிமப்புரவு: Where global solutions are shaped for you' மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com' இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :- 'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.' பெண்களுக்கான 'pantie வெடியுடை:- தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்: மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles) 1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி: 2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி: இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle) 1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle) அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன. இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில். செண்பகம் குறிசூட்டு துமுக்கி: செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி: 'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்' உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle) 1) இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 2) இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்) இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun) 1) இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை. துமுக்கி எறிகுண்டு (rifle grenade) 1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade) வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை: 100g உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1 நெடுக்கம் : 100 மீ அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988 மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2 தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர் இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது. அருள்-89 விதம்-I அருள்-89 விதம்-II அருள்-89 விதம்-III அருள்-89 விதம்-IV கைக்குண்டு (hand grenade) 1) குணா கைக்குண்டு (Kuna hand grenade) இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும். 2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade) புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) வெடிமருந்து: TNT வெடிமருந்து நிறை: 50–100g நிறம்: பச்சை & நீலம் இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும். Can Charge - கான் சார்ச் தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம். இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன். 'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து' இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்) உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun) இது ஒரு விதமான மூன்று T-56 வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. இவை ஒரே நேரத்தில் மூன்று சுடுகுழல்கள் வழியாக சன்னங்களை துப்பும். 1) முன்பக்கம்: பின்பக்கம்: 'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)' 2. சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது… உள்நாட்டு 30 மி.மீ சுடுகலன் (indigenous 30 mm gun) புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது 30 மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது.. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்.. இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது. புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-I (Pulikkutti 30mm gun Mk-I) இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது. பக்கவாட்டுத் தோற்றம்: 'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி' 2) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-II (Pulikkutti 30mm gun Mk - II) இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது. 3) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்- III (Pulikkutti 30mm gun Mk-III) இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர். ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே வடிவமைத்துள்ளனர். உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான ஏவரிகளை விளைவித்துள்ளனர் என்பது பெரும் வியப்பான விடையமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் ஏவரிகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மானுறுத்தும் ஏவரிகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவரியை ஏவி அதன் பாதையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலையியக்கி (remote control) மூலம் இயக்கக்கூடிய ஏவரிகளை புலிகள் துல்லியமாக விளைவித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, ஏவரியைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுனது. 2009 ஆம் ஆண்டு புலிகள் அழியும் வரை உலகிலே இவ்வகையான பாரிய வலிமையான ஏவரிகளை உடைய ஒரே இயக்கம், புலிகள் மட்டுமே . அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான சுடுகல சன்னங்களைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற பாரிய ஆய்தங்களை மிக இலகுவாக மானுறுத்தக் கற்றுக்கொண்டனர் மலைப்பான குறிப்பிடத்தக்க விடையமாகும். இது சிங்கள தேசத்திற்கு வெட்கக்கேடான ஒரு செய்தியாகும். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்' 4) இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது. 1) என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை. கண்ணிவெடி (Mine): இவையெல்லம் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்! கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. 2) 3) 4) Limpet கடற் கண்ணிவெடி 5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine) கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் . 6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine) 7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி இதன் பின்பகுதி: ஆளெதிர்ப்பு கண்ணிவெடி(anti-personal mine) : புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine) 1) ஜொனி 95 (johny 95) புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன் மொத்த நிறை : 250g வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை : 30 g 'தாட்டும் போது இருக்கும் நிலை' 'வெடிக்கும் போது இருக்கும் நிலை' 'முன்பக்கத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும். ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் . ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். செய்முறை: துருவி இணையத்தளத்தில் இருந்து…. 'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.' 2) ஜொனி 99 (Johny 99) / ரங்கன் 99 (Rangkan 99) புதுப்புனையபட்ட ஆண்டு: 1999 வெடிமருந்து : 150g TNT உயரம்: 9cm அமுக்க நிறை (pressure weight): 6kg கொளுத்து அமைப்பு: விற்சுருள் மூலம் இயக்கப்பட்டு பந்துமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது (spring operated ball controled). இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured).. இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும். 3)ஜொனி மின்சார மிதிவெடி (johny electric APA) இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இதைக் கையாள முயன்றால் வெடிக்கும், எனவே ஜொனி மின்சார மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும். இது அம்மா 2000 ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது. 'ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் detonator' . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) 4)தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM) இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு. 5) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) கோராவில் நான் சந்தித்த ஒரு தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் இதன் பெயர் வான்நிலா என்று கூறினார். ஆனால் சிங்கள அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு இதன் பெயர் கோமது என்று கூறியுள்ளது. எது சரியென நானறியேன், அறியவும் இயலவில்லை. 6)தமிழன் மிதிவெடி (Thamizhan APM) புதுப்புனைந்தவர்: கேணல் சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) இதைத் தவிர வேறு படிமங்கள்(images) என்னிடம் இல்லை! 'படிமப்புரவு: எதிரி இணையம்' 7)டப்பி மிதிவெடி (Dappi APM) இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர். வகை - 1:- வகை - 2:- திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine) அமுக்கவெடி (claymore) 1) செந்தூரன் 96 (senthuran 96) தாக்கும் ஆரை: 80 பாகை மொத்த நிறை : 10kg வெடிமருந்து : c4 இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர். 2) பகலவன் (Pakalavan) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) மொத்த நிறை : 2.5 kg விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது. இதற்கான தொலையியக்கிகள்: 3)இராகவன் (Irakavan) உயரம் : 100cm விட்டம் : 75cm மொத்த நிறை : 54kg தாக்கும் ஆரை: 360 பாகை வெடிமருந்து நிறை : 44kg (TNT) ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு) வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control) இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும். இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று! 4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore) மொத்த நிறை: 25kg 5)தோழநம்பி 2000 (Thozanampi 2000) மொத்த நிறை: 15kg தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது . 6) பவான் (ஐயா) - 99 (Pavaan (Aiyaa) - 99 ) மொத்த நிறை: 15.5 kg இது கப்டன் பவான் அ ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற ஊர்தி தகர்ப்பு வெடிமருந்து ஆகும். 'இடது பக்கம் இருப்பதுவே இதுவாகும்' மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine) 1)இளவழுதி (Ilavazuthi) மொத்த நிறை : 5kg தமிழீழ மானுறுத்தமான இது மின்சார துள்ளல் கண்ணிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ETM மதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கண்ணிவெடி அகற்றுபவர்களாலும் கண்ணிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ETM என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும். 'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது இதில் இரு விதம் இருந்தது: இளவழுதி 1 (ETM 01) இளவழுதி 2 (ETM 02) உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines) 1) கீர்த்தன் (Keerththan) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். 1)சலாகை அமுக்கவெடி (salakai) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine) 1) அம்மா 2000 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 2000 anti-tank mine) மொத்த நிறை: 11 +/- 2.2 வெடிமருந்து : TNT(45%), RDX(55%) உயரம்: 13 cm அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும். அம்மா 2000 இன் பக்கவாட்டுத் தோற்றம்: . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை. 2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine😞 லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும். இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். 3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine). 4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine). 5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine). சிறியவகை ஊர்திகளுக்கான மதிவெடி. 6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine) சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது. 7)பெயர் தெரியவில்லை! 8)செந்தூரன் 2000 (Senthuuran 2000) ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி... பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும். 9) இரண்டு அன்பு 2000 கண்ணிவெடிகளை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது போன்ற வடிவம் உடையதாக உள்ளது. இதில் "கரும்புலி" என்ற பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் வகைப் பெயர் தெரியவில்லை. தடைவெடி('Bangalore torpedo 'like torpedos' ) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தென்னவன் தடைவெடி(Thennavan torpedo) 2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo) 3)குருவி தடைவெடி(Kuruvi torpedo) இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது. 4) மாயவன் தடைவெடி(Maayavan torpedo) சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள். 5)சாந்தகுமாரி தடைவெடி(Saanthakumaari torpedo) விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 6) ரங்கன் தடைவெடி(Rangkan torpedo) ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடிஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1995ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்: இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்! முன்பகுதி: பின்பகுதி: 2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது 3) & 4) 5) 6) காந்தக் குண்டு (magnet bomb) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது. செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device) 1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED ) இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை! 2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED) வெடிமருந்து: TNT 3) 4) 5) 6) 7) 8 ) 9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive) 10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED) 11) அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம். வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்: இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf சூழ்ச்சிப் பொறி (booby traps) 1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. (நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்) 2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap) 'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்' 'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி' 3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap) 4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap) புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும். 5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap) 6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான். 7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது. சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்.. (இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே) வில்லுகள் - படைக்கலங்கள்(Munition) தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14) அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar) சாரை - ZPU-1 பூமா - 14.5mm ZPU-2 ஆலை - 14.5mm ZPU-4 அப்பாச்சி - ??? டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL) மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL) பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் ) 97 - M16 ஒலிகன் - Oerlikon 20mm Cannon வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை → இனி வருபவை அனைத்தும் புஸ்பகுமார் சற்குணநாதன் அவர்கள் அளித்த தகவல்கள்: XR2 - RPG 29 நாயகன் - M141 BDM 17 - FGM 172 Javelin & FGM 172B உசாத்துணை dossier on ltte weapons - pdf மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…! - தொடர் கட்டுரை மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 The story of Thambimuththus (SAMs) (The story of Thambimuththus (SAMs)) (https://www.army.lk/news/troops-led-unearth-two-more-ltte-torpedoes-0) (தென்னாசியாவே பார்த்து நடுங்கிய விடுதலை புலிகளின் நீர்மூழ்கி ஏவுகணை!!) https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf இந்திய இராணுவத்தை தடுத்து நிறுத்திய ஜொனி - துருவி Type 53 torpedo - Wikipedia Shershen-class torpedo boat - Wikipedia Torpedo tube - Wikipedia கிளைமோர் - தமிழ் விக்கிப்பீடியா ரங்கன் 99 - தமிழ் விக்கிப்பீடியா அம்மான் 2000 - தமிழ் விக்கிப்பீடியா SLAF Recoveries in the Pudukuduirippu area yarl Tamileela seithikal. No . 40_0- August 1990 படிமப்புரவு * dossier on ltte weapons - pdf ruupabahini * https://www.cartagenasummit.org/fileadmin/APMBC-RC2/regional-conference/Bangkok_WS/Bangkok-ClearingMine-2April2009-SriLanka-SL.pdf கரிகாலன் garikaalan) Banner | National Mine Action Center, Sri Lanka) * Mapio.net (Mapio.net) * http://youtube.com/watch?v=2kKYXvVBG_Y * YouTube (YouTube) * CAT-UXO - Rangan 99 landmine (CAT-UXO - Rangan 99 landmine) * Asiri (Asiri (@AsiriFernandoLK) | Twitter) * Weapons, Ammo, Diesel & other LTTE Warlike Items Found * https://www.apminebanconvention.org/fileadmin/APMBC/clearing-mined-areas/2018-SriLanka-InitialArt7Report.pdf * Ceylon Today (Sri Lanka: Anti-personnel mine found ) * kumaran satha (kumaran satha) WordPress.com: Create a Free Website or Blog * LiveJournal (Простая тамильская баба.) * http://Flickr.com (http://Flickr.com) * Latest Sri Lankan News Updates (http://lankadailynews.com/) * Sri Lanka Army (Sri Lanka Army) * The Hindu Images * CAT-UXO * Sri Lankan Security Forces (Sri Lankan Security Forces) தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் * https://alt.army.lk/slsr/11slsr_2 (Sri Lanka Sinha Regiment) * https://steemit.com/photography/ (https://steemit.com/photography/) Troops Led to Unearth Two more LTTE Torpedoes * stuartddaniel (stuartddaniel) * Experiments with weapons- Part I (http://www.srilankaguardian.org/2008/04/experiments-with-weapons-part-i.html) * IBC Tamil * Jaffna News 15kg bomb found buried in Ukkulan Kulam Vavuniya. - Srilanka News | DSRmedias.com * Vanakkam London Emerging Out Of The Shadows Does recovery of arms from former LTTE cadres indicate revival of Tamil insurgency in Sri Lanka? Landmines, unexploded ordnance a barrier to return SLAF Trikonamadu recovers cache of weapons in Pudukuduirippu Alibaba தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்r
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.