Search the Community

Showing results for tags 'தமிழின அழிப்பு'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 17 results

  1. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டபேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவர்களால் மேற்கொள்ளபட்டுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்பு போராட்டம் இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளமையை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டது. காலை11.30மணியளவில் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து கண்டிவீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழர்கள் 1976 இல் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், 2015 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்தனர் இப்போது தமிழர்களிற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளகூடிய புதிய தலைமையே தேவை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமக்கான தீர்வை வழங்க கூட்டமைப்பு தடையாகவுள்ளதாகவும் தெரிவித்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/62176
  2. ஆடி அமாவாசை விரதமான இன்று திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது. இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரிகை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது. இப்பகுதியில் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர். http://thinakkural.lk/article/32484
  3. தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா். http://www.hirunews.lk/tamil/220709/கிழக்கில்-சுமார்-300-தமிழ்-கிராமங்கள்-முஸ்லிம்-கிராமங்களாக-மாறியுள்ளதாக-விக்னேஸ்வரன்-குற்றச்சாட்டு
  4. பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா? - சார்ள்ஸ் நிர்மலநாதன் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?. தென்கயிலை ஆதீனம் மீது சிங்களக்காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். https://www.virakesari.lk/article/61149
  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து தனது மகனை கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார் . தனது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் இன்றையதினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . கடந்த 2008,07.௦1 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைந்த நிலையில் இன்றுவரை அவர்குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார் . இவருடைய இழப்புக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது . முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதிகோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெற்றுவரும் போராட்டம் இன்றைய தினம்(24) 869 ஆவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெற்று வருகின்றது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்துப் காணாமல் ஆக்கபட்ட உறவுகளுக்கான நீதியை கோரி போராடி வருகின்ற நிலையில் அந்தக் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மற்றுமொரு தாயார் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார். https://www.virakesari.lk/article/61145
  6. இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள் சுடுநீரை ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதை முதலில் சிங்கள சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள், ஏன் தமது மதவெறிகளைத் தூக்கிவைத்துவிட்டு நியாயபூர்வமாக இந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/61049
  7. திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது. திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார். இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60930 இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன் கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார். இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது. இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது. எனினும் மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது. இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை மேற் கொள்ள முடியும் . என்றார் முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60935
  8. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் மக்கள் சந்திப்பு பாலர் பாடசாலைக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற போது மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம் காணிகள், பெண்கள், உரித்துக்கள் பறிபோகின்றது. இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு காரணத்திற்காக விற்பனை செய்து விட்டு செல்கிறார்கள். நாம் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமைக்கு வந்தால் எமது காணிகளை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏழ்மை நிலையில், வசதியற்ற நிலையில் இருந்தோமானால் மற்றவர்களின் சதிக்குள் செல்ல வேண்டிய நிலைவரும். தங்கள் வாழ்க்கை நிலைமையை மாற்ற சகலதையும் செய்ய வேண்டும். உங்கள் கிராமத்தை முன்னேற்ற நீங்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். புதிய வாழ்க்கையை கொண்டு வரவுள்ளோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். எங்களுடைய கனிய வளங்களை பெறுவதற்காக மக்களிடம் பல பொய்களை கூறி வளத்தினை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. இம் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுவேந்திரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்க உப செயலாளர் த.சிற்பரன் எனப் பலர் கலந்து கொண்டனர். http://www.thinakaran.lk/2019/07/22/உள்நாடு/37500/நாம்-பலமாக-இருந்தால்-எங்களது-காணிகளை-மற்றவர்களால்-கொள்வனவு-செய்ய-முடியாது
  9. கந்தப்பளை கோர்ட்லோஜ் முனுசாமி ஆலயம் முன்னால் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான எழுத்துமூல கோரிக்கையினை தான் முன்வைத்ததாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் எந்தவித அகழ்வு பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்து இன்று திருகோணமலை மேல் நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாரியம்மன் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரான கோகிலரமணி அம்மையாரால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/220838/கோர்ட்லோஜ்-முனுசாமி-ஆலயம்-முன்னால்-புத்த-விகாரை-அமைக்க-இடமில்லை
  10. வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மதியம் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிய கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். அவர்களது போராட்ட களத்தில் மதியம் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து (சிங்கள அதிகார ஜனநாயகத்திலிருந்து) தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை. எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற வாசகங்களைத் தாங்கியவாறும் கதறி அழுது, கண்ணீர்விட்டு தமது போராட்டத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கப்படகோரியும் கடந்த 884 நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/60964
  11. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த பகுதியில் தளபாட கடை ஒன்றை நடத்துவதற்கு மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் ஊடகவியாளர் ஒருவர் தவிசாளரிடம் கேள்வி எழுப்பிய போது நூலகத்திற்குரிய காணியில் பகுதி ஒன்று எமக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. ஆனாலும் தற்பொழுது அவர்களில் அத்து மீறல் இருப்பதால் மர தளபாட கடை ஒன்றிற்கு அத்து மீறலை தடுக்க மாதம் இருபதாயிம் ரூபா குத்தகைக்கு ஒருமாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் ஏன் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கியுள்ளீர்கள் எனக் கேட்டபோது அவாறு எந்த கோரிக்கையும் எமக்கு தரவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை தடுப்பதற்காகவும் சும்மா இருக்கும் நிலத்தில் வருமானத்தை பெறுவதற்காகவும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார் https://www.virakesari.lk/article/60923
  12. நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தாம் வேரூன்ற வேண்டும் என்றே பேரினவாதிகள் கருதுகிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் விடுக்கொடுப்புடன், ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிடின், இந்த பேரினவாத சக்திகளை எதிர்க்க முடியாது என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இன, மதத்தை முன்னிறுத்தி செயற்பட்டவர்களாலேயே அப்போது இனப்பிரச்சினைக்கு தூபமிடப்பட்டது. தற்போது மீண்டும் அத்தகைய இனவாத செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60833 ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி,புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 5ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், அன்றைய தினம் புதிய கூட்டணியின் சின்னம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். http://thinakkural.lk/article/31996
  13. கன்­னியா வெந்நீ­ரூற்றுப் பிள்­ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்தில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன இந்த சந்­திப்­பின்­போது கேள்வி எழுப்­பி­யுள்ளார். அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணே­சனின் ஏற்­பாட்டில் கன்­னியா வென்­னீ­ரூற்று பிள்ளையார் ஆலய விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்­டத்­தையும் ஜனா­தி­பதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இந்­தக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் பி. திகாம்­பரம், எம்.பிக்­க­ளான எம். தில­கராஜ், வேலுக்­குமார் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்.பி. வியா­ழேந்­திரன், ஆகிய ஐவ­ருமே கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்பில் பங்­கேற்­கு­மாறு தமிழ் தேசியக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட கூட்­ட­மைப்பு எம்.பி.க்களிடம் அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு விடுத்­தி­ருந்தார். கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக அவர்­களும் அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு உறுதி வழங்­கி­யி­ருந்­தனர். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­த­னையும் அழைத்­துக்­கொண்டு கூட்­டத்தில் பங்­கேற்­ப­தாக சுமந்­திரன் எம்.பி. உறுதி அளித்­தி­ருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் இந்­தக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை. இந்த நிலையில் கூட்டம் ஆரம்­பித்­த­வுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பிக்கள் வர­வில்லை என்று ஜனா­தி­பதி அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். ஜனா­தி­ப­தி­யு­ட­னான கூட்­டத்தில் பங்­கேற்­கு­மாறு இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட சகல தமிழ் எம்.பி.க்களுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிலர் வெளிநாடு சென்றிருந்தமையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/60739
  14. ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்றையதினம்(19) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 16.07.2019 அன்று தென்கயிலை ஆதினத்தால் கன்னியா பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி அங்கு சென்று சமய வழிபாடுகள் செய்யும் நோக்குடனும் கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாகவும் வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பல பேர் குறிப்பாக வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் இராணுவ, பொலிஸார் சோதனைச் சாவடிகளைக் கடந்து மிரட்டல்களுக்கும் இராணுவ கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சென்றடைந்ததையும் களத்தில் நடந்த சம்பவங்களையும் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்தோரும் அதன் இதிகாச வரலாற்றோடும் தொடர்புடைய கன்னியா வெந்நீரூற்றையும் அதை அண்டி இருந்த கன்னியா பிள்ளையார் கோவிலையும் தொல்லியல் திணைக்களம் அபகரித்ததை யாவரும் அறிந்தது. கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பௌத்த விகாரையின் வரலாறு ஒரு தசாப்ததிற்குட்பட்டது. தமிழரின் பூர்வீகம் அதன் வரலாறு வரலாற்றில் திரிவுபடுத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த மையம் கூர்ந்து இதனூடு சிங்கள பௌத்த தேசியம் தன்னை ஒரு பூர்வீக தூய்மையான கலப்பற்ற இனமாக சித்தரிக்க முற்படுகின்றது. இவ் அரசியல் நிகழ்ச்சி ஏனைய இனங்களின் பூர்வீகத்தையும் அதன் வரலாற்றையும் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்க முற்படுகின்றது. ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும். கன்னியாவின் பூர்வீகம் தமிழின இருப்பின் பூர்வீகம். பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்யச் சென்ற சமயக் குருக்களையும் பக்தர்களையும் பொலிஸார் தடை செய்தது என்பது ஒரு சமயத்திற்குரிய வழிபடுகின்ற உரிமையை மறுத்தலாகும். நீதிமன்ற தடையுத்தரவு கண்பிக்கப்பட்டு அம்முயற்சி தடை செய்யப்பட்டபோது மக்கள் தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் காட்ட முற்பட்ட போது இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை காட்டுவதற்கான வெளி முற்றாகவே குறைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணி அவர்களின் இருப்புசார் கோரிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பதே அதன் உள் நோக்கமாக இருந்தது. ஒரு சமய மதத் தலைவரை அங்கிருந்தவர்கள் அநாகரிகமாக அவதரித்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இதே அவமதிப்பு ஒரு பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் அது அரசியல் மயமாக்கப்பட்டு வன்முறைச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனால் தமிழர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் அகிம்சைவாதிகள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றார்கள். அதிகார ஆயுத அரசியல் பலத்தோடு பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதை ஏனையவர்களின் உரிமையை பறிப்பதாக கூட இருக்கலாம் செய்யலாம் என்ற தோற்றப்பாடு வரலாற்றில் நடந்தேறியுள்ளது மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடு செய்வது நாட்டின் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது அப்பட்டமான பொய். அவ்வாறெனில் வடக்கு கிழக்கில் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில் காளான்களாக முளைத்த பௌத்த விகாரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அது சிங்கள பௌத்தர்களுக்குரியது. ஏன்பதை சுட்டி நிற்கின்றது. அவ்வாறெனில் இலங்கையின் பல்லினத்தன்மைக்கான வெளி மறைக்கப்பட்டு விட்டதா ?? பெரும்பான்மை சனநாயக வெளியில் ஒற்றையாட்சித் தன்மையில் ஏனைய இனக் குழுமங்கள் நாளடைவில் இன அழிப்பை சந்திக்கும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வாறான பாதையை இலங்கை அரசு தெரிந்தெடுத்திருப்பது என்பது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிருபணமாகின்றது. மேற்குலக நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் தன்னை ஒரு சனநாயக நாடு நல்லிணக்க சமாதான விரும்பி என காட்டிக்கொண்டு அதன் இன்னொரு கோர முகத்தை பெரும்பான்மை தவிர்ந்த இனத்தவர் மேல் காட்டுவது என்பது உண்மையில் இலங்கை அரசின் அரசியல் இருப்பில் ஐயம் கொள்ளச் செய்கின்றது. அண்மைய காலங்களில் பௌத்த பிக்குகளின் இலங்கை சனநாயகத்தை சிதைக்கின்ற முயற்சிகளும் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தண்டனை விலக்கீட்டு நிலையில் இறைமை ஆட்சி நோக்கிப் பயணிக்கின்றதா என்று சந்தேகக் கொள்ளச் செய்கின்றது. மேற்கூறப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பில் தங்களை மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் மௌனம் காப்பது இந்நிகழ்சியில் இவர்களும் பங்காளிகள் என சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. இதுவரைக்காலம் இது பற்றி தமிழ் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். தமிழின இனப்படுகொலையின் தமிழ் அரசியல் கட்சிகளதும் அரசியல்வாதிகளதும் வகிபங்கை வரலாறு பதிவு செய்யும். https://www.virakesari.lk/article/60753
  15. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17)முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி .ராஜா,நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள். ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது. அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60612
  16. இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் பலவந்தமாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர். அமைச்சர் மனோகணேசனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார். அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். ஏற்கனவே நேற்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடி இருந்தனர். இதன்அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.hirunews.lk/tamil/220521/தமிழ்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-ஜனாதிபதியுடன்-இன்று-அவசர-சந்திப்பு
  17. மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார். இதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர், உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்று வெள்ளிக்கிளமை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது.. இவை அனைத்தையும் தனித்னியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். பூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது, அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60336 பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொருதொகுதி காணிகள் விடுவிப்பு யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆளுநர் அதனை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு முரளிதரனிடம் வழங்கினார். 2015 ஆண்டு முதல் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையை குறிப்பிட்ட ஆளுநர், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60360