Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'தமிழீழ கடற்படை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் பற்றித் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய வேவ் ரைடர் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era. இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். 'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam' 'இடமிருந்து வலமாக : தரைத் தாக்குதலாளிகள்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர்கள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர். 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு ' 'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும். 'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.' 1990-2001 காலப்பகுதியில் இவர்கள் வெள்ளை நிறச் சீருடை அணிந்தனரா என்பது பற்றிய தகவல் இல்லை! 1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: இச்சீருடையானது சிறீலங்கா கடற்படையின் சீருடை ஆகும். ஆனால் அதை புலிகளும் அணிந்திருந்தனர். அவரகள் அதை வீரவணக்க ஊர்வல அணிவகுப்பிலும் அணிந்திருந்தனர். ஆகையால் இதனது சரியான பயன்பாடு அறியில்லாததாக உள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே நிறத்திலும் தோரணியிலுமான சீருடை அணிந்திருந்தனர். இவர்களின் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது. 'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக' 'கடற்கரும்புலி மாவீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இச்சீருடையினை அணிந்து பங்கேற்றுள்ள பெண் கடற்புலிப் போராளிகளை நோக்குக.' இதே காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் கடற்பயணங்களின் போது அவருடைய மெய்க்காவலர்கள் ஒரு வேறுபாடான கடற்சீருடை ஒன்றினை அணிந்திருந்திருந்தனர். இனி அச்சீருடை பற்றிப் பார்ப்போம். இச்சீருடை ஆனது உருமறைப்புடைய காற்சட்டை மற்றும் வேலைப்பாடில்லா ரி-சட்டை ஆகியவற்றால் ஆனது ஆகும். இச்சீருடையின் ரி-சட்டை ஆனது அரைக்கையுடையதான சாதராண நீல நிறத்தில் உள்ளது. இதன் கைகளில் புயத்திற்கு ஏற்ப கைமடிப்பு இருக்கும் திறவல் உள்ள இடத்தில் சுருக்கம் உள்ளது. காற்சட்டையானது மிகவும் கட்டையானதாகவும் இதன் உருமறைப்பானது இக்காலகட்டத்தில் புலிவீரர்களின் செந்தரமான கடற்படைச் சீருடையின் உருமறைப்பைக் கொண்டதானதாகவும் உள்ளது. 'இதில் நிற்கும் புலி வீரர்கள் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும். இதில் கவசக் கஞ்சுகம் அணிந்து கொண்டு நிற்கும் 'ஜக்கெற் மெய்க்காவலர்' இன் இயற்பெயர் மோகன் என்பதாகும். இவர் 10.06.2021 அன்று தமிழ்நாட்டில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.' 'இதில் அம்புக்குறியிட்டுள்ள அனைத்து புலி வீரர்களும் அணிந்துள்ள சீருடையே நான் மேற்குறிப்பிட்டுள்ள சீருடை ஆகும். | இது 1993 தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது புலிகளால் கைப்பற்றப்பட்டு பின்னாளில் 'பாமா' எனக் கலப்பெயர் சூட்டப்பட்ட வோட்டர் ஜெட் ஆகும்.' 1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) வரியில் இருந்த நிறங்களாவன: RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 1992/93 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- மேலே நான் குறிப்பிட்டுள்ள கடற்சீருடையினைக் காட்டிலும் தமக்கே உரித்தான உருமறைப்பான வரிப்புலியில் நீல நிறம் கொண்டதான 'நீல வரிப்புலியையும்' இதே 1992/1993 - 1995 காலத்திலும் அதன் பின்னரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீல நிற வரிப்புலியில் கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை. இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது. ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு' 1992/1993- 2002 வரையிலான கடற் கட்டளையாளர் சீருடை :- இவர்களின் சீருடையும் நீலநிற வரிதான். ஆனால் இவர்கள் கடற்கலவர் அணிவது போன்ற அந்த வட்ட வடிவ துணியினை அணியார். அத்தோடு வரைகவிக்குப் பகரமாக தொப்பியே அணிவர். 'கடற்புலிகளின் கேணல் சூசை | | படிமப்புரவு: Tharakam' 2002 இல் கடற்கலவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது. 'கடற்புலிகளிர் கேணல் சூசை | படிமப்புரவு: Aruchuna.com' 2003 இல் தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது. இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' 2004 - 2009(18–05–2009) வரையிலான தரைப்பணிச் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன: (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்) RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்! 'கடற்புலிகளின் கேணல் சூசையும் அவருடைய மெய்க்காவலர் ஒருவரும் தரைத் தாக்குதலாளி சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Aruchuna' 2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்திருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது. ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com'' 'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com' ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர். வேலைச் சீருடை: வழங்கலின் போது அழுக்குகளோ இல்லை பிசுக்குகளோ சீருடையில் பிரண்டிடாமல் இருக்க கடற்புலிகள் இச்சீருடையினை அணிவர் '18|8|2002 தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com' தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்! 'கடற்புலி போராளி' 'மிராஜ் வகையின் மதன் வகுப்பு சண்டைப்படகு. இப்படகில் உள்ள கடற்கலவரை நோக்குக. அவர்கள் நான் மேற்குறிப்பிட்ட வழங்கல் சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக' இதில் இருவேறு நிறங்கள் இருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் தொடக்கத்தில் அணியபட்டது நல்ல நீல நிறத்திலும் (2002) அதன் பின்னரான காலத்தில்(2003<) அணியப்பட்டது கடுநீல நிறதிலும் இருந்துள்ளது. இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது. '2003| இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com' படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர். ----------------------------------------- ----------------------------------------- கூடுதல் செய்திகள்: வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்: ----------------------------------------- ----------------------------------------- உசாத்துணை: செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்து அவற்றின் காலத்தைக் கணித்து எழுதினேன் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  3. கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- 1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன? உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது(பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்த போது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே) எனவே எம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றல் தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பது தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதால் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதானால் எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்ட தளம் தமிழகமாகவும் போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இரு நாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே, 1984 இல் கடற்புறா என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பலை வாங்கி பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது. 2. நிலத்தில் நின்று போராடும் தரைப்படைக்கும் கடலில் நின்று போராடும் கடற்புலிகளுக்குமான வேறுபாட்டை குறிப்பிடுவீர்களா? தரைப்படை, கடற்படைக்குமான வேறுபாடு எனும் போது இது கையிற்கும், காலுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பது போலத்தான் அன்மையும். ஏனெனில் இரண்டும் வெவ்வேறானவை இரண்டிலும் சண்டைகள் என்ற பொது அம்சத்தை, அதாவது கடற்சண்டைக்கும் தரைச்சண்டையொன்றிற்குமான வேறுபாடு என்று பார்ப்போமானால், தரைச்சண்டையானது நீண்டகாலத்தைக் கொண்ட அதில் ஈடுபடுபவர்கள் தத்தமது தன் கடமைகளைச் செய்வதற்குக் கூட பிறிதொரு அணியால் மாற்றீடு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும். எதிரியின் காப்பரண் அருகே நகரும் போது கனவகை ஆயுதங்களைக் கூட காவிச் சென்றே சண்டையிட வேண்டிய நிலை. அதே வேளை வானூர்தி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காப்பு எடுக்க முடியும். கடற்சண்டை குறுகிய நேரச் சண்டையாகும். ஒரு சில சண்டைகள் தவிர ஏனையவை மணித்தியாலத்திற்கு உட்பட்ட சண்டைகளே. ஆனால் அந்த நேரம் அதிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டியது அவசியமாகும். தாக்குதலுக்கான 'காப்பு' என்ற சொல்லிற்கே இடமிருக்காது. தரைச்சண்டையில் முன்நகரும் போது காறமுற்றவர், ஆயுதம் என்பவற்றை நகர்த்துவது சண்டையிடும் போராளிகளே. அவர்களை பின்னணியில் நிற்கும் ஊர்தியில் ஏற்றும் வரை காவிச் செல்ல வேண்டும். கடற் சண்டையில் படகு கரைதிரும்பும் போது காயமுற்றவர் ஆயுதம் என்பன படகுடன் வரும். மற்றும் எமது தரைத்தாக்குதலணியினரின் பணிகள் எதிரியுடன் சண்டையிடல், பிடித்த பிரதேசத்தைப் பாதுகாத்தல், பின் தளத்திலிருந்து அவர்களுக்கான விநியோகம் என்றவாறு அமையும். கடற்புலிகளைப் பொறுத்தவரை கடற்கரையோரத்தைப் பாதுகாத்தல், கிழக்கிற்கும் வடக்கிற்கும் போராளிகளை இடம் நகர்த்தல், அதன்போது எதிரியுடன் சண்டையிட்டு வெற்றிகரமாக அப்போராளிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல், இவையெல்லாவற்றிற்கும் மேலாக போராட்டத்திற்குத் தேவையான ஆயுத வெடிபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் (தொ.தொடர்பு கருவிகள், இயந்திரங்கள், படகுகள்) கொண்டுவந்து சேர்த்தல் என்பனவாகும். மேலும் எமது படகுகளைக் கடலில் தரித்து வைத்திருக்க முடியாது, தேவையின் போது கடலில் இறக்கத்தக்கதாகவும் எதிரியின் வான்கலங்களின் கண்காணிப்பிலிருந்து பாதுகாத்து வைத்திருப்பதாகவும் எனப் பரந்து செல்கிறது. 3. தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்திருக்கிறீர்கள் கடற்போர் அனுபவங்களை பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள் உலக வரலாற்றில் கடற் சண்டை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன அந்த சண்டைகளை பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா? கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லும் பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களையும் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லும் என்றே இருந்தது இக்காலகட்டத்தில் தான் நாம் ஓட்டிகளையும் பின் எமது போராளிகளை ஓட்டிகளாகவும் பயன்படுத்தினோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம், வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். எனவே எதிரியன் கலங்களுக்கு போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்.எல்.ஆர் உட்பட சிறுவகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில் வானத்தில் வட்டமிட்ட உலங்கு வானூர்தியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் உலங்கு வானூர்தி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்.எல்.ஆர் ரைபிள்கள் மூலம் உலங்கு வானூர்தியை நோக்கிச் சுடுகின்றனர். குறி தவறவில்லை. உலங்கு வானூர்தி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது. இக்காலப்பகுதியில் சிறிலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் சுற்றுக்காவல் செல்வதுடன் கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும் மீனவர்கள் மீது தாக்குதல் என அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான 'எடித்தாரா' மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஐர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற 3 கடற்கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 5.4.1991 அன்று 'அபிதா' மீது தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்றுமுழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையனால் தீவகக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர். இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகிப் பின் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் எனும் புதிய பெயர் சூட்டபட்டது. அதே போல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991 இல் தீவகக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன் முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத் தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன் முதல் ஏகே எல்.எம்.ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவக் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். தாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை, இடர் மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தை தொடர்ந்ததை பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு சுற்றுக்காவல் என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது. இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப். மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப். மணியரசன், லெப். சேகர், மேஐர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத்தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது. அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் எ பற்றிக், மேஐர் நிலவன் எ வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்த விசைப்படகை அழித்துக் காவியமாகின்றனர். மேலும், கப்டன் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரந்திரன் என இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித் தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது. வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கவெண்ணி 29.08.1993 அன்று கப்டன் மணியரசன், மேஐர் புகழரசன் ஆகியோர் சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத் தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி, கரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினரின் உதவியுடன் A 516 கட்டளை கண்காணிப்புக் கப்பல் மற்றும் இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம். இதில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக் கடல், மாதகற்கடல், வடமறாட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம் மேற்குப் பகுதிக்கும் விரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வருணிக்கப்படும் 'சாகரவத்தனா' என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. து.சு.ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா(மற்றையது ஜெயசாகர. இக்கப்பல் தான் 26.3.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து சுற்றுக்காவலில் ஈடுபட்ட கலம்) தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பது எமக்கு எடித்தாரா, அபிதா முன்னைய (1990,1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவம் எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணைகொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 1996 காலப் பகுதி 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்து விட்டு திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த காலம் தம்மைத் தாக்க வந்ததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற எம்மவர் அதன்படி ஒழுகினன். எவ்வளவு முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வா செய்ய வேண்டாமெனக் கூறிப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்தநிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள் பொருட்கள் போர்நிறுத்த உடன்பாட்டை லெப்.கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக் கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. சென்ற வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன் படகையும் போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகளை அழித்துக் கொள்ளவும் விரும்பவில்லை, ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே அவர்களுக்குப் பணிந்தது போல் போக்குக்காட்டிவிட்டு படகையும் போராளிகளையும் பக்குவமாக கரைசேர்கிறான், அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிக்காவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின் திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள். மேலும், எம் போராட்டத்திற்கு வளம் சேர்த்தல் பணியின் போது சிறிலங்காக் கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப் படகுகளை பாதுகாத்த சமர்கள் ஏராளம். எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுக தாக்குதல், எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் ஆகும். யாழ்ப்பாணத்தை விட்டுவந்தும் புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வாற்கு குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை-1 எனப் பெயரிடப்பட்ட இத் தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறிலங்கா வான்படை மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர். ஓயாத அலைகள் ஒன்று, பின் மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓடஓட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம் 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ள முடியமைக்கான காரணம் வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமையே. எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது என முடிவாகிறது. 13 கிமீ கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப்படகுகள் மோத, தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000, இரவு 8:45இற்கு இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு வல்லுநர்களாலும் பரிந்துரைக்கப்பட ஆனையிறவுப் படைத்தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது. இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளிகள் இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர்க் காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித் தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களும் என கடற்புலிகள் தாக்குதலிலும் ஈடுபடத் தொடங்கினார். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரை குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது. மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்களே கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புகளின் துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது. 4. கடல் பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்துபோய்க் காணப்படுகிறது. சிறிலங்காக் கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்திய கடற்படைக்கு நிகரான சிறிலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்? எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலைகுலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தாற்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப் படாவிட்டால் அவனது சன்னம் எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவராக சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையல் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தம் திறன் எனப் பல இதில் அடங்குகின்றன. இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள் அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித் தாக்குதலின் மூலம் 'வோட்டர் ஜெற்' இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார், வோட்டர் ஜெற் அடித்தால் காணாது டோறா மூழ்கடிக்க வேண்டும் என்று. 29.08.1993 இல் சுப்பர் டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி, வீரயாவை அடியுங்கள் பார்ப்பம் என. மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன்மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று. 5. கடலில் பல நீச்சல் பிரிவுகளைத் தாங்கள் உருவாக்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் பல தெரிவிக்கின்றன. நீச்சல் பிரிவின் மிக நீளமான கடலில் நீந்திச் சென்று தாக்குதல்களை நிகழ்த்த வல்லவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள். உண்மை. அதிசயிக்கத் தக்க வகையில் பல சந்தர்ப்பங்களில் எம் போராளிகள் நீந்திக் கரைசேர்ந்த சம்பவங்கள் உண்டு. 1986 இல் படகு விபத்தொன்றில் கடலில் மண்டைதீவிலிருந்து அடித்த தேடொளி வெளிச்சத்தில் பிரிந்து சென்று போராளி மறு நாள் நீந்திக் கரைசேர்ந்தமை கடற்புலிகளுக்கும், தலைவருக்கும் வெளிச்சம். 28.08.1992 கடற்புலிகள் எதிரியின் கலமான வோட்டர் ஜெற்றைச் சேதமெதுவுமின்றி கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது யாவரும் அறிய முடிந்தது. கரும்புலித் தாக்குதல்களில் பல நீச்சல் திறமையினாலே சாதிக்கப்பட்டவையாகும். அந்த வகையில் 15.8.1994 இரவுப் பொழுது. ஊர் உறங்கிவிட்டது. இலட்சிய உறுதியில் இரும்பாகி எதிரிக் கப்பலின் முடிவே தம் வெற்றியாகக் கொண்ட மீன் குஞ்சுகள் வைக்கப்பட வேண்டிய வெடிகுண்டுடன் நீந்துகின்றன. ஆம் பெரிய வெடியோசை உலகமே அதிசயித்து நிற்கிறது. முதற் பெண் கடற்கரும்புலி காவியமாக மற்றைய மீன் நீந்திச் சென்றதை மற்றவர்கள் அறிந்திடவில்லை. இவ்வாறாக 19.09.1994 கற்பிட்டிக் கடற்பரப்பிலும் எமது மீன்களின் செயற்பாடு பற்றி தலைவருக்கும் எங்களுக்கும் மட்டும் தெரிகிறது. ஆனால் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அதன் கப்டன் பொயகொட கைது செய்தமையும், கடற்கரும்புலிகள் நால்வரும் காவியமான கதை உலகறிந்தது. இவ்வாறாக அநேகமான கரும்புலித் தாக்குதல்களிலும் எமது போராளிகளின் நீச்சல் திறமையே எம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கிறது. இங்கு மேலுமொரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். 16.07.1995 புலிபாய்ச்சல் நடவடிக்கையின் ஓரம்சமாக காங்கேசன் துறைமுகத்தில் தாக்குதல் இடம்பெறுகிறது. கரும்புலிப்படகு இடிக்கமுன் வெடிபிடித்தமையால் அதனைக் கைவிட்டு நீந்தும்படி கடற்கரும்புலிகள் இருவருக்கும் கட்டளை இடுகின்றேன். உடன் தனக்குக் கரும்புலிக்கான சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற வேண்டுகோளுடன் கடலில் குதிக்கிறாள் செவ்வானம். இரவு விடிந்து விட்டது. எதிரி இருவரை உயிருடன் பிடித்துவிட்டேன் என எக்காளமிடுகிறான். திசைபார்த்து நீந்தி வருவாள் என எதிர்பார்த்த செவ்வானம் வரவில்லை. விதையாகிப் போனவர்கள் பட்டியலில் சேர்க்க மனமின்றி சேர்க்கப்படுகிறது. மறுநாள் வீரச்சாவு நிகழ்வுகள் இடம்பெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. அதிகாலை மயிலியதனை முகாமினருக்கு ஓர் ஆச்சரியம். வீரச்சாவடைந்து விட்டான் என இருந்த செவ்வானம் தள்ளாடியபடி கடற்கரையில்... நிஜமா? நினைவா? சந்தேகத்துடன் கடற்கரை நோக்கி ஓடுகிறார்கள் போராளிகள். ஆம். நிழலல்ல. நிஜம்தான். செய்தி எங்கும் அறிவிக்கப்படுகிறது. தனது மகளின் வித்துடல் வரக்கூடுமோ கரையொதுங்குமோ? தருவார்களோ? என எதிர்பார்த்த பெற்றோர் முன் செவ்வானம்! ஆம், 24 மணி நேரம் கடலில் நீந்தி இலங்கை வான்படை, கடற்படையினருக்குப் போக்குக் காட்டி காட்டி சரியான திசையில் நீந்திக் கரைசேருகிறாள் செவ்வானம். இதே போல் சுண்டிக்குளத்தில் எமது நிலையத் தாக்குதலுக்கான பழிவாங்கல் தாக்குதல். 07.10.1999 இல் எதிரியின் டோறா படகைத் தாக்கி, அதிலேறி, அதிலிருந்த 20 மிமீ குழல் கழற்ற, பாதுகாப்பிற்கு வந்த டோறா தாக்கத் தொடங்க, அந்த இரும்புக் குழலுடன் நீந்தி எம் படகேறி அதைக் கொண்டு வந்து சேர்க்கிறான் எம் துணைத் தளபதியான லெப்.கேணல் நிரோயன். 'உப்பில் உறைந்த உதிரங்கள்' படம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும். ஆம், உண்மைச் சம்பத்தையே படமாக்கப்பட்டுள்ளது. காயமுற்ற நிலையில் கிளாலியில் எதிரியின் முகாமருகே காயமுற்ற விழுந்த போராளி மறுநாள் நீந்தி எம் கரையேறி இன்று வரை போராளியாகக் கடமையாற்றுகிறான். இவ்வாறு நீச்சல் திறமையின்றேல் நாம் இன்று முன்னேறியிருக்கவே முடியாது. இந்த நீச்சல் திறமையினை வளர்க்கவே வருடாவருடம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டிகளும் உள்ளடக்கப்பட்டு, வெற்றி பெற்றோருக்குப் பரிசளித்து ஊக்குவிக்கிறார் தலைவர் அவர்கள். 6. 1983ம் ஆண்டு காலப்பகுதியில் 'ஓட்டிகள்" என அழைக்கப்படுபவர்கள் கடற் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களுடைய கடற் பயணங்கள் பற்றியும் எங்களுக்குக் கூறுவீர்களா? வடமராட்சியின் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மீனவர்கள். இவர்கள் இந்திய இலங்கை வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்கள் தமது படகுகளிலேயே தம்பயணங்களை மேற்கொண்டனர். நாமும் தமிழகம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது நாம் அவர்களை நாடி எம்மை கூட்டிச் செல்லுமாறு கேட்டு அவர்களின் உதவியுடன் சென்று வந்தோம். எமக்குத் தேவையான பொருட்களை மற்றும் போராளிகளை இடம் மாற்றுவதில் எமக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள். அவர்கள் பயன்படுத்திய சிறிய படகுகளே அப்பொழுது எம் பயணத்திற்கான படகுகள். வேகமும் குறைவு. எனவே தான் எதிரி கண்ணில் பட்டால் திரும்பி வருவது மிகக்குறைவு. எமது பொருட்களைக் கொண்டு வரும் வழியில் எதிரியினால் அவர்கள் மடிவதைப் பொறுக்காது எமது பயணத்தைப் போராளிகளைக் கொண்டே நடத்த முடிவெடுத்த தலைவர் அவர்கள் 1985 இன் பின் கடற்புலிகளின் படகுகளே இப் பணியில் ஈடுபட்டன. 7. ஆசியாவினுடைய மிகப்பெரிய பலமாகத் திகழும் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப் புலிகள் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என சில சக்திகள் அச்சம் கொண்டிருக்கின்றன. கடற்புலிகளுக்குத் தங்களுடைய பலம் பற்றித் தெரியும். அவர்களுக்கு மக்கள் பலம் இருக்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இந்தத் திருகோணமலைத் துறைமுகம் பற்றி நெப்பொலியன் கூட அறிந்திருக்கிறார். அவர் கூட இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசியிருக்கிறார். நீங்கள் இத்துறைமுகம் பற்றிய வரலாறுகளையும், முக்கியத்துவங்களையும் எமக்கு விரிவாகக் கூறுவீர்களா? கடற்கலங்கள் நிறுத்தப்படும்போது காற்றினாலும், கடலலைகளாலும் பாதிக்கப்படாமலிருக்கவே துறைமுகங்களில் கட்டப்படுகின்றன. சிறிய படகுகளாயின் கட்டுப்படுத்த கடலிலே நீர்த்தடைகள் எனப்படும் (water break) கட்டப்படுகின்றது. அந்த வகையில் கொழும்பு, காங்கேசன் துறை என்பவற்றில் இவ்வாறான நீர்த்தடைகளைக் காணலாம். ஆனால் திருக்கோணமலைத் துறைமுகமானது இயற்கையாகவே இந்த பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதுவே இதன் சிறப்பம்சமாகும். இந்த வகையில் திருமலைத் துறைமுகம் உட்துறைமுகப்பகுதி, வெளித் துறைமுகப்பகுதி என வகைப்படுத்தப்படக் கூடியதாயும் வருடம் முழுவதும் கடற்கலங்களைப் பாதுகாப்பாக விடக்கூடியதான இயற்கை அமைப்பை கொண்டிருப்பதையும் காணலாம். இந்த அம்சம் காரணமாகவே ஐரோப்பியர் இதனைத் தமது படையக் கேந்திர மையமாக வைத்திருந்துள்ளனர். அத்துடன் தென்னாசியப் பிராந்தியங்களிலுள்ள துறைமுகங்களில் சிறந்த இயற்கைத் துறைமுகமான இதன் அமைவிடமும் இதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. இந்து சமுத்திரத்தினூடாகப் பயணம் செய்யும் கப்பல்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லக் கூடியதான ஒரு துறைமுகமாக இது விளங்குகிறது. வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், பெரிய கலங்களை உட்கொண்டு செல்லக்கூடியதான ஆழத்தையும் கொண்டிருப்பதன் காரணமாகவே இது பாதுகாப்புப் படையின் கலங்கள் பாதுகாப்பாக விடப்படும் இடமாக உள்ளது. இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமென்பதன் காரணமாகவே 1948.02.04 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்த போதும் பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் (எச்.எம்.எஸ் கை பிளையர் - HMS Highflyer) என்ற இந்தத் துறைமுகத்தை 15.10.1957 இல் தான் இலங்கையிடம் ஒப்படைத்தனர். சிறிலங்காக் கடற்படையின் நடவடிக்கைத் தலைமையகமும் இங்குதான் உள்ளது. கப்பல்கட்டும் நிறுவனமும், கடற்படைப் பயிற்சிக் கல்லூரியும் இங்குண்டு. அத்துடன் கடற்படையின் அதிவேகப் பீரங்கிப் படகு அணியும், அதிவேகத் தாக்குதல் அணியின் கலங்களும் இங்குதான் நிறுத்தப்படுகின்றன. 8. கடல்பற்றிய ஒரு கல்விக்கான பாடசாலையொன்றை நீங்கள் எதிர்காலத்தில் நிறுவுவீர்களா? நிச்சயமாக ஏன் தற்பொழுதுகூட அடிப்படை படைத்துறைப் பயிற்சியை முடித்து வரும் போராளிகளுக்கு எமது பிரிவில் சோக்கப்பட்டவுடன் லெப்.கேணல் நிரோஜன் ஆரம்பக் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் கடல்சார் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே வேலைகளுக்கெனப் பிரித்து விடப்படுகின்றனர். 1992 இல் ஆசிர் கடற்படைப் பயிற்சிக் கல்லூரி,பின் லெப் கேணல் நரேஸ் தொழில் நுட்பக் கல்லூரி, லெப்.கேணல் பெத்தா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, ஏன் இன்று கட்டளை அதிகாரிகளாகக் கடமையாற்றும் பலர் கடற்புலிகளின் கடற்படைப் படைத்துறைப் பள்ளியில் பயின்று வந்தவர்களே. இந்த வகையில் ஆயுதம், இயந்திரம், படகோட்டம், வழிகாட்டலும் தொலைத் தொடர்பும் எனக் காலத்திற்குக் காலம் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு பயிற்றப்படுகின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சியாக நிச்சயமாக 'கடற்படை கல்லூரி' வரும் என்பதை இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். 9. ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் வண்ணமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்களா? ஆம். தலைவர் அவர்கள் இதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.(கிளிநொச்சியில் அறிவியல் நகரில் 'வானிலை ஆராய்ச்சி மையம்') 10. எமது கடல் மாசடைந்து வருகிறதாக ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிந்தேன், கடல் மாசடைவதற்கான காரணங்கள் எவை? கடல் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து வருகிறீர்கள்? வைத்தியசாலைக் கழிவுகள் சந்தைக் கழிவுகள் போன்றன கடலில் கொட்டப்படுதல். கடற்கலங்கள் அழிக்கப்படுதலின் போது அவையும் கடலிலேயே விடப்படுகின்றன. அல்சீனியா என்ற தாவரம் வளர்ந்து சிறு மீன்கள், இறால் உற்பத்தியைத் தடை செய்தல். ஆழிப்பேரலை மூலம் இந்தோனேசியா போன்ற இடங்களிலிருந்து வந்த பெருமரங்கள், கழிவுப்பொருட்கள் என்பன அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அல்சீனியா என்ற தாவரத்தை ஓய்வு நேரங்களில் சமாசம் மூலம் மக்கள் பிடுங்கி அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளர். 11. உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பீட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல போர்க் களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகள் பற்றிப் பேசமுடியுமா? வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது. எமது தமிழீழம் ஒரு புறம் சிறிலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத் தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பறறிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூரநோக்குடைய சிந்தனையைச் செயற்பாட்டை நோக்கக்கூடியதாக உள்ளது. அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுதே கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப்பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்கு பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன் படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன. இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்கு பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து 1985ல் கப்பல் வாங்கி பன்னாட்டு தொடர்பை உருவாக்கினார். கரந்தடிப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத்தினை செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும் போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள், கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991 இல் உருவாக்கி நின்றார். 1992.08.26 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைதீவுக்கடலில் கட்டிநிற்கும் ஒரு வோட்டர் ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது 'ஏன்ரப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட இழுத்து வரலாமே' என்று அண்ணா கேட்டார். அதன்பின் தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள் மக்களுடன் நன்கு பழகி இருக்கவேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்று உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும். 1992 காலப்பகுதி கடற்புலிகள் மகளீரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி, லெப்.கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தை தருகிறேன் எனக் கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன். எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழிவகுத்தது. 1996 ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார், படகில எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடு எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார். அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர். எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்கு வழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப் பற்றிப் பார்ப்போம். 1991 ம் ஆண்டு ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப்பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டிவீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டுபோய் இறக்க மட்டும் தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன். தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போது அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, நான் எமது படகுகளை எரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டு, மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவு என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி கண்டிவீதியால் தான் வருவம் என உறுதியளித்தது அதை நிறைவேற்றினர். போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது. இழப்புக்களையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை, மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தை கொண்ட மனமே உள்ளது. ஒரு முறை மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்புடன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார் "இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில இருக்கிற கடற்படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள் நான் உடனே தாறன்" என்று இழப்புக்குள்ள இருந்து எங்கள தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள்ளையே ஆட்கொண்டு விடாத மன உறுதியையும் காணக் கூடியதாய் இருந்தது. ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந்தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறன். ஒரு முறை தலைவர் ஆர்.பி.ஜி. அனுப்பியிருந்தவர். அதை புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில வைச்சு ராங் ஒன்றை அடிக்க, அதுல ராங் வெடிக்கேல்லை, அது முளைச்சிற்று எங்கோ போயிற்று. அப்ப எல்லோரும் முடிவெடுத்தனர், அந்த ஆயுதம் பயனளிக்காது எண்டு. அப்படியே வைச்சிற்றினம். தலைவர் சொல்லி அனுப்புறார், "மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்" என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறம். அப்ப அண்ணை சொல்லுறார் "ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை". நான் வடமராட்சியில இருக்கேக்க எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்கிறார் "ஆமி சுடச்சுட வாறான்" என்று. அப்ப தலைவர் கேட்கிறார் "சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்" என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மையிலேயே அதற்குச் சரியான காரணம் வந்து சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவன்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்க விடேல்ல என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்து பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டது. தலைவர் இதைச் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றிய எங்களுக்கு தந்தன. தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒரு முறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையை விட வைக்காது. வடமராட்சியில ஒபறேசன் லிபரேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய் தலைவரைச் சந்திக்கிரன். அப்பொழுது தலைவர் சொல்கிறார் "வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டால் அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கட போராட்டத் முன்னெடுக்கும்" என்ற தலைவரின் அந்தக் கட்டளை பின்னாளில் பல வெற்றிகளுக்கு காரணமாயிருந்தது. 1998 காலப்பகுதி எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது, நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளைமையத்திற்கு தளபதியை அனுப்பி நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும் படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில் தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு என்பதை அறியக் கூடியதாய் இருந்தது ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை ஆண்களுக்கு நிகராக களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரசிலை நடத்திக் காட்டியமைக்கு இன்றுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம். வளர்த்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வடமராட்சிக்குப் பொறுப்பாக இருந்த போது தலைவர் என்னை அழைத்து மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து, அவரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவை என்றார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமையால் இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார். நேர்கண்டவர்கள்: எரிமலை மாதயிதழ் குழுமம் - ஓகத்து 2006 எரிமலை மாதயிதழிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை -------------------------------------------------------------------------------------------------------- எழுத்தாக்கம்: (https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm) எழுத்துப்பிழை திருத்தம் & வடிவமைத்தல்: நன்னிச் சோழன்
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும். இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும். இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.