Jump to content

Search the Community

Showing results for tags 'தமிழீழ படைத்துறை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's தொகுத்த ஆவணம்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 3 results

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! ---------------------------------------------- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உலகின் அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருக்கும் மரபுவழிப்படை போன்று முப்படைகளையும் கொண்டிருந்ததது. அம்முப்படைகளுடன் சேர்த்து முற்றிலும் புதிதாக ஓர் படையையும் கொண்டிருந்தனர்.. அதுதான் தற்கொடைப்படை, அதாவது கரும்புலிகள் என்று அவர்கள் மொழியில்.. இவைதான் அவர்களிடம் இருந்த தமிழர்களின் புதுமைக்கால நாற்படைகள் ஆகும்.. அவை மொத்தமாக, தரைப்புலிகள் வான்புலிகள் கடற்புலிகள் கரும்புலிகள் இத்துடன் வேவுப்புலிகள் என்னும் ஐந்தாம் படையையும் அவர்கள் வைத்திருந்தனர் . இவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்லாமல் நடைமுறையரசாக(de-facto) செயற்பட்டதால் 'படைவீரர்கள்' எனாமல் போராளிகள் எனப்பட்டனர். எண்ணிக்கை: 10 - 15 ஆ ( மக்கள்படை & பணியாளர்கள் நீங்கலாக) வீரச்சாவு = 25,500 - 26,500 (2009 மே-19 வரை களமாடி மடிந்தோர்… ) ஆயுதம் மௌனித்து சிங்களத்திடம் சென்றபிறகு அங்கு சரணடைந்தோர்: ~13,000 இவர்களில் பதின்மூவாயிரத்து எழுநூற்றுச் சொச்சம் பேர்தான் தன்னிடம் இருப்பதாக கோத்தபாய மாமா முன்னொரு காலத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அவர்களில் ஆயிரத்து எண்ணூற்றுச் சொச்சம்பேர் 'முதற் தரக் குற்றவாளிகளாகவும்' பதினோராயிரத்து தொள்ளாயிரத்திச் சொச்சம்பேர் 'இரண்டாந் தரக் குற்றவாளிகளாகவும்' அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் காலத்தில் (2015 கிட்டதாக) செய்திகள் வெளிவந்திருந்தது. இவ்வியக்கத்தினரின், பழைய பெயர்: புதிய தமிழ்ப் புலிகள் (1972 இல் 'மாமனிதர்' இராசரத்தினம் அவர்களின் ஆலோசனையில் சூட்டப்பட்டது) புதிய பெயர்: தமிழீழ விடுதலைப் புலிகள்- தவிபு - (5-5-1976 இல் இருந்து) புலிகள் - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்ற பன்மையால் பலரால் தொடர்ந்து சுட்டப்படுகின்றனர். பட்டப்பெயர்கள்: இயக்கம் - இப்பெயர் கூலிப்படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்களால் புலிகளைக் குறிக்கப் பயன்பட்டது ஆகும். கொம்பனி - படையின் ஒரு அலகான கொம்பனியை, Company என்று ஆங்கிலத்தில் புலிகள் அழைத்தனர். அதனால் புலிகளிற்கும் இதுவே பெயரானது. சிங்களப் படையினருக்கு புரியாது இருக்க புலிகளின் புலனாய்வுத்துறையினரும் மக்களுக்கு தங்களை அடையாளம் காட்ட இந்தப் பெயரை பயன்படுத்தினர். ஆகையால் இது மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. | புலன கிட்டிப்பு(credit): ஐங்கரன் தமிழரசன் புலிப்படை - வீரத்தின் பெயரால் ஒட்டுமொத்த தமிழர் சேனையையும் குறிக்க அமைந்த பெயர். பயத்தால் பட்டப்பெயர்: பீரங்கி - இது 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தில் 'கட்டாய ஆட்சேர்ப்பு' காரணமாக இளைஞர்களால் புலிகளை சுட்டப் பயன்பட்டது ஆகும்.. (அவர்களின் ஓர் குறும்படத்தில் இருந்து இப் பற்றியத்தை எடுத்தேன்) செல்லப்பெயர்: பெடியள்- புலிகள் இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஆண்களே இருந்ததால் மக்களால் பெடியள் என்று அழைக்கப்பட்டு அதுவே இவர்களை இறுதி வரையும் சுட்டலாயிற்று. உலகத்தால் வழங்கப்பட்ட அடைமொழி: Tamil Tigers - இவர்களின் இயக்கத்தின் பெயரின் இறுதியில் உள்ள 'புலிகள்' என்பதன் ஒருமையான 'புலி' என்பதையும், அவர்தம் இனம் தமிழர்களாகவும் இருந்ததால் இரண்டையும் ஒன்றிணைத்து 'தமிழ்ப்புலி' என்று அழைக்கப்படலாயினர். இவ்வாறு ஈழத்தினில் வழங்கப்பட்டது மிக அரிதாகும். சரி இனி படையணிகளைப் பற்றிப் பார்ப்போம். இப்புலனங்களை புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் மூலமாகவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பெற்ற ஒரு சில புத்தகங்களின் துணைகொண்டும் தேடியெடுத்து தொகுத்து பதிவிட்டிருக்கிறேன்.. வாசித்து அறிந்து கொள்ளவும்… தரைப்புலிகள் (தரைப்படை):- நிரந்தரப்படை (ஆ&பெ):- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (இதுவே முதலாவது மரபுவழிப் படையணியாகும். இதில் யாழ் & வன்னியைச் போராளிகள் இடம்பெற்றிருந்தனர். உருவாக்கப்பட்டது: 1991.04.10 ) | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 1000–2000 (2008) வான்காப்பு அணி(சாள்ஸ் அன்ரனிக்கானது) கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு சாள்ஸ் அன்ரனி வேவு அணி ஜெயந்தன் படையணி (இதில் தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஆண் போராளிகள் இடம்பெற்றிருந்தனர்.) | உருவாக்கப்பட்டது: 1993.05.04 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை. சில தாக்குதலணிகள் வட தமிழீழத்திலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். | எண்ணிக்கை: 1000-2000 (2008) கனவகை ஆயுதப் பிரிவு பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி (இது இயந்திர சுடுகலன்களுக்கான அணியாகும்.. எல்லாப் படையணிகள் கீழும் இது இயங்கியது) விசாலகன் சிறப்புப் படையணி | உருவாக்கப்பட்டது: 1991-1994 | தரிப்பிடம்: வாகரைக் கோட்டம் | எண்ணிக்கை: <1000 வினோதன் படையணி | உருவாக்கப்பட்டது: ~1996 | தரிப்பிடம்: குடும்பிமலைக் கோட்டம் | எண்ணிக்கை: <1000 இளங்கோ படையணி | தரிப்பிடம்: திருகோணமலை . இதன் கட்டளையாளர் 'விமல்' என்பவர் ஆவார். | எண்ணிக்கை: <1000 மாலதி படையணி | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். மாலதி படையணியானது அதற்கு முன்னர் மகளிர் படையணி என்னும் பெயரில் செயல்பட்டு வந்தது. கனவகை ஆயுதப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை சிறப்பு உந்துகணை செலுத்திப்பிரிவு அன்பரசி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 | உருவாக்கப்பட்டது: சூரியக்கதிர் -1 எதிர்ச்சமரின் முடிவில். அன்பரசி படையணியானது அதற்கு முன்னர் மட்டு-அம்பாறை மகளிர் படையணி என்னும் பெயரில் செயற்பட்டு வந்தது. வான்காப்பு அணி கனவகை ஆயுதப்பிரிவு சோதியா படையணி | உருவாக்கப்பட்டது : 14.07.1996 | தரிப்பிடம்: வட தமிழீழம் | எண்ணிக்கை: 500 - 1000 கனவகை ஆயுதப்பிரிவு மதனா படையணி | உருவாக்கப்பட்டது: 1997 | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை | எண்ணிக்கை: 250-750 கனவகை ஆய்தப்பிரிவு திலகா படையணி யாழ் செல்லும் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது: 1999 ராதா வான்காப்புப் படையணி | (2002 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படும் வரை இவர்கள் இம்ரான் - பாண்டியனின் ஓர் உறுப்பாக 'ராதா வானூர்தி எதிர்ப்பு அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர்.) யேசுதாஸ் பாதுகாப்பு அணி வான் எதிர்ப்பு ஏவுகணை அணி வான் கண்காணிப்பு அணி பூநகரி படையணி (2007 - 2008 இறுதிவரை) (ஆ&பெ) சிறப்பு அதிரடிப்படை வேவு அணி கிட்டு பீரங்கிப் படையணி(ஆ&பெ) | உருவாக்கப்பட்டது : 1995 முன்னிலை நோக்குநர் அணி | புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (இவர்கள் முன்களத்தில் நிற்பார்கள், ஆனால் சமரில் ஈடுபடாமல் தமது உயிரை பணயம் வைத்து சமர்க் களத்தில் தம்மையும் பாதுகாத்துக்கொண்டு பின்களத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணைகளுக்கு ஏற்றக்கோண வேறுபாடு(Elevation Deference) பார்த்து தெரிவிப்பார்கள்.) ஜோன்சன் பீரங்கிப் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை முன்னிலை நோக்குநர் அணி குட்டிசிறி மோட்டார் படையணி(ஆ&பெ) | தரிப்பிடம்: வட தமிழீழம் முன்னிலை நோக்குநர் அணி பசீலன் மோட்டார் பிரிவு (தமிழீழத்தில் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சேணேவி(artillery) படைத்துறை பிரிவு) மாருதியன் படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை ரிம் 1.5 விசேட படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை இப்படையணி வீரர்கள், இதன் கட்டளையாளரும் தமிழ் வஞ்சகனுமான 'வஞ்சகன் றொபேட்' ஆல் நேரடியாகவே பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் 'ரிம் 1.5 சொந்த விசேட படையணி' என்றும், இதன் தாக்குதல் திறனால் "அமெரிக்கன் படை" என்றும் மட்டக்களப்பைச் சார்ந்தோரால் அழைக்கப்படுவதுண்டு. 4.1 படையணி (ஆ&பெ) (மீளச் சேர்ந்தோருக்கானது) 3.1 படையணி இம்ரான் - பாண்டியன் படையணி/ சைவர் பிரிவு (இது தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் செயல்பட்ட ஒரு கூட்டுப் படையணியாகும். 1–10–1992ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்.கட்டைக்காட்டு தாக்குதலின் போதுதான் இவர்களின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது) இதன் கீழ் இருந்த அணிகள், பிரிவுகள், படையணிகள் ஆவன: சூரன் கவச அணி பதுங்கித் தாக்குதல் அணிகள் கௌதமன் புலனாய்வு அணி சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி - (LTTE's DPU) படைக்காவலர் அணி பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு (பெ) - 1999.04.28 இல் உருவாக்கப்பட்டது சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு குறிசூட்டுப்பிரிவு (ஆ&பெ) மயூரன் குறிசூட்டுப்பிரிவு செண்பகம் குறிசூட்டுப்பிரிவு - (செண்பகம் என்ற குறிசூட்டுத் துமுக்கியைப் பயன்படுத்துவோர்) சிறப்பு உந்துருளி படையணி | எண்ணிக்கை: <250 அதிவேக உந்துருளி சிறப்பு அணி செம்பியன் வேவு அணி விக்டர் கவச எதிர்புப் படையணி (1997 இன் முற்பாதியில் உருவாக்கப்பட்டது. இப்படையணியின் உந்துகணை சூட்டாளரிற்கு RPG Commando என்னும் அடைமொழி வழங்கப்பட்டிருந்தது. இப்படையணியின் வீரர்கள் 1997 இற்கு முன்னர் ராங்கி எதிர்ப்பு அணி என்ற 04- 1992 இல் உருவாக்கப்பட்ட அணியில் பணியாற்றியோர் ஆவர்.)(ஆ&பெ) அனைத்துலகத் தொடர்பகம் வெடிபொருள் களஞ்சியம் & விநியோகப்பிரிவு ஆயுதக் களஞ்சியம் / பராமரிப்பு & விநியோகப்பிரிவு கிழக்கில் தரித்திருந்த ஓர் உந்துகணை செலுத்திப் படையணி. இப்படையணி தனக்கென இலச்சினை எல்லாம் கொண்டிருந்தது. ஆனால் இதன் பெயரை அறிய முடியவில்லை! வண்ணாளன் உந்துருளி படையணி | தரிப்பிடம்: மட்டு-அம்பாறை பாதுகாவலர் பிரிவு(ஆ&பெ) களமுனை முறியடிப்புப்பிரிவு(ஆ&பெ) சிறப்பு வரைபடப்பிரிவு(ஆ&பெ) நீலன் துணைப்படை(ஆ) தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ) இவர்கள் 1991 வைகாசியில் இருந்து ஆடி 1992 வரை 'எல்லைக் கிராம பாதுகாப்புப் படை' என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். உந்துகணை செலுத்தி பிரிவு பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி என தரைப்புலிகளின் படையணிகள் மிடுக்குடன் நடந்தன. இவற்றோடு மகளிர் படையணிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு 'மகளிர் பேரவை' என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பெண்போராளிகளின் பரிணமிப்பு: 1984ல் "சுதந்திரப் பறவைகள்" பின் "மகளிர் அமைப்பு" பின் 1990ல் "மகளிர் படையணி & மட்டு-அம்பாறை மகளிர் படையணி" பேந்து சூரிய கதிர் ஒன்றின் முடிவில் "மாலதி படையணி" மற்றும் "அன்பரசி படையணி" களாக பரிணமித்து பின் பற்பல சண்டை உருவாக்கங்களாகி வீறுநடை போட்டனர். படையணிகள் தவிர்த்து மக்களுக்கும் படைத்துறைப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி என பல்வகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றோர் அனைவரும் மக்கள் படையென நிமிர்ந்தனர். அம்மக்கள் படையானது மக்கள்படை:- எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள் ' எனவும் அழைக்கப்பட்டனர் சிறப்பு எல்லைப்படை(ஆ&பெ) ஊரகத் தொண்டர் சிறப்புப்படை(ஆ) பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி உந்துகணை செலுத்திப் பிரிவு போருதவிப்படை(ஆ) கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் கிராமிய விசேட படையணி உள்ளகப் பாதுகாப்புப் படை (ஆ&பெ) உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ) லெப். 'தமிழ்ப்பாண்டி உள்ளகப் பாதுகாப்பு அணி' மாணவர் படை என மக்கள்படைக் கட்டமைப்புகளாக செயலுருப்பெற்றன. மேற்கண்ட மக்கள்படைக் கட்டமைப்பை 'தமிழீழ தேசிய எழுச்சிப் பேரவை' ஆளுவப்படுத்தியது. மேலும், புலிகள் தாங்களாக தங்கள் நிருவாகப் பகுதிகளுக்குள் உருவாக்கியிருந்த துறைகளில் ஒவ்வொரு துறையும் தத்தம் பணியாளர்களைத் தனித்தனி தாக்குதலணியாக உருவாக்கி களமுனைகளிற்கு சுழற்சி முறையில் பணிக்கனுப்பியது: அத்தாக்குதலணிகள் ஆவன, அரசியல்துறை தாக்குதலணி புலனாய்வுத்துறை தாக்குதலணி வருவாய்த்துறை தாக்குதலணி நிதித்துறை தாக்குதலணி ஈரூடகப்படை ( marines)- சேரன் ஈருடகத் தாக்குதலணி விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் (கடற்படை) :- “கடற்புறா “ என்ற சிறு அணி இந்திய தமிழீழ கடல்வழி நகர்வுகளைக்காக உருவாக்கப்பட்டது. அது பின்பு தமிழீழக் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காகவும் நடவடிக்கைகளுக்குமாக 1990 ஆம் ஆண்டு படையாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதுவே கடற்புலிகள் என்றானது! | எண்ணிக்கை: 1000 - 2000 ஆசிர் சிறப்புக் கடற்தாக்குதல் படையணி (இதுதான் முதலாவது கடற்றாக்குதல் படையணி. இது மேஜர் ஆசிர் நினைவாக கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 1993 தை மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பின்னாளில் வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்.) சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணி(ஆ) (உருவாக்கப்பட்டது : 11-11-1993. நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி" என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி(பெ) நடவடிக்கை அணி தாக்குதலணி (இது முதலில் "சிறப்புக் கடற்படையணி " என்றே இருந்ததாக அவர்களின் நாளிதழ்களின் மூலமாக அறிய முடிகிறது. (களத்தில் 05-1994). ஆனால் 1997 ஆம் ஆண்டு நடந்த கடற்சமர் பற்றி பின்னாளில் வெளியிடப்பட்ட கரும்புலிகள் பற்றிய ஓர் நிகழ்படத்தில் "கடல் தாக்குதலணி " என்றும் அதன் பின்னர் வெளிவந்திருந்த ஒரு சில நாளிதழ்களிலும் இதன் பெயர் "கடல் தாக்குதலணி "என்றே வழங்கப்படுவதால், இதுவோர் கடல் தாக்குதலணி என்ற முடிவிற்கே வர முடிகிறது. எனவே இதன் பெயர் மாற்றம் 2000இற்கு பின்னரே நிகழ்ந்திருக்கக் கூடும்) பாக்கியன் ஆழ்கடல் தாக்குதல் அணி (ஆ & பெ) வசந்தன் கடற்படையணி (உருவாக்கப்பட்டது : 1994. பின்னாளில்(~2000) வேறு கடல் தாக்குதலணியோடு இணைக்கப்பட்டதாக அறிந்தேன்) சங்கர் கடற்படையணி நரேஷ் கடற்படையணி டேவிற் படையணி எழிற்கண்ணன் படையணி கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி புனிதா தரைத்தாக்குதல் அணி(பெ) சுகன்யா தரைத்தாக்குதல் அணி(பெ) சூட்டி தரைத்தாக்குதல் அணி(ஆ) | உருவாக்கப்பட்டது: 5.7.1995 சிறப்புப் படையணி கப்பல் பிரிவு (இதில் பணியாற்றியவர்கள் ஆழ்கடலோடிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களிடம் சொந்தமாக 20–25 கப்பல்கள் இருந்தன. அவற்றுள் 15 போரின் போது மூழ்கடிக்கப்பட்டு விட்டது) சிறப்பு பணிப்பிரிவு நீரடி நீச்சல் பிரிவு கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) (சுலோயன் என்று இருந்த இதன் பெயர் 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ஆம் மாதத்திற்குப் பின்னர்) (பெ), சிறப்பு சுற்றுக்காவல் அணி கடல் வேவு அணி வானூர்தி எதிர்ப்பு அணி கடற் கண்காணிப்புப்பிரிவு (radar monitoring) சதீஸ் இயந்திரவியல் பிரிவு உள்ளிணைப்பு இயந்திரப்பிரிவு வெளியிணைப்பு இயந்திரப்பிரிவு டீசல் இயந்திரப்பிரிவு வழங்கல் பிரிவு படகு கட்டுமான பகுதி மங்கை படகு கட்டுமானப்பிரிவு & டேவிட்(சண்முகம்) படகு கட்டுமானப்பிரிவு ஆடியிழை கட்டுத்துறை (Fibreglass yard ) மாதிரி கட்டுத்துறை(Model yard) , மாதிரி கட்டுத்துறை வரைபடப்பிரிவு மலரவன் வெடிமருந்துப் பிரிவு தமிழீழ கடற் துணைப்படை(ஆ):- தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:- மறவன் துணைப்படை திருவடி துணைப்படை நவரசன் துணைப்படை ஜோன்சன் துணைப்படை ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும் இவற்றுடன் கடற்புலிகளிற்கென்று நிருவாகச்செயலகம் அரசியல்துறை (1991 இல் தொட.) புலனாய்வுத்துறை பொறியியல்துறை மருத்துவப்பகுதி என்பனவும் இருந்தன. கனவகை கடற்றாக்குதல் ஆய்தங்கள் தேவைப்படும் இடங்களில் கடற்புலிகளின் கடல் தாக்குதல் படையணிகளும் தாக்குதலணிகளும் ஈடுபடுத்தப்பட்டன. விடுதலைப்புலிகள் வான்புலிகள் (வான்படை ):- வானூர்தி தாக்குதலணி வானோடிகள் அணி ராஜன் கல்விப்பிரிவு வானூர்தி தொழில்நுட்பப்பிரிவு வானூர்தி ஓடுதளப் பாதுகாப்புப்பிரிவு வான் கண்காணிப்புப்பிரிவு சிறப்புத் தாக்குதலணி சிறுத்தைப்படை (அதிரடிப்படை):- தரைச் சிறுத்தைகள் - land commandos (ஆ&பெ) காட்டுச் சிறுத்தைகள் - jungle commandos (ஆ&பெ) கடற்சிறுத்தைகள் - naval commandos (ஆ&பெ) கரும்புலிகள் (சிறப்புப்படை & தற்கொடைப்படை) கரும்புலிகள் பொத்தாம் பொதுவாக 'தடைநீக்கிகள்' என்று அழைக்கப்பட்டனர். மறைமுகக் கரும்புலிகள் (புலனாய்வுத்துறையின் கீழ் இயங்கியது) தரைக்கரும்புலிகள் (இவர்கள் தேசத்தின் புயல்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்; இ.பா. படையணியின் கீழ் இயங்கியது.) வான்கரும்புலிகள் (வான்புலிகளின் கீழ் இயங்கியது) கடற்கரும்புலிகள் (இவர்கள் உயிராயுதங்கள் என்றும் அழைக்கப்பட்டனர்; கடற்புலிகளின் கீழ் இயங்கியது.) நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் (இவர்கள் 'இடியர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். மேலும் கடற்கரும்புலிகள் என்று பொதுவாக குறிக்கப்பட்டனர்.) செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994) (ஆ) அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு (உருவாக்கப்பட்டது: 1994- 8ம் மாதத்திற்கு பின்னர்) (பெ) என சண்டை உருவாக்கங்கள் நிமிர்ந்து நின்றன. இவற்றை விட ஒவ்வொரு களமுனைகளையும் ஒருங்கிணைத்து வடபோர்முனை கட்டளைப்பணியகம் மன்னார் கட்டளைப்பணியகம் மணலாறு கட்டளைப்பணியகம் வவுனியா கட்டளைப்பணியகம் மட்டக்களப்பு கட்டளைப்பணியகம் அம்பாறை கட்டளைப்பணியகம் திருமலை கட்டளைப்பணியகம் என கட்டளைப் பணியகங்களையும் புலிகள் உருவாக்கியிருந்தனர். புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை) → உளவுத்துறை பெயர்: புலி இயக்கப் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS புலனாய்வுத்துறை தாக்குதலணி பன்னாட்டுப் புலனாய்வு அணி தேசிய புலனாய்வுப்பிரிவு தகவல் சேகரிப்புப்பிரிவு ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு படையப் புலனாய்வுப்பிரிவு தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு உள்ளகப் புலனாய்வுப்பிரிவு வெளியகப் புலனாய்வுப்பிரிவு நிருவாகப் புலனாய்வுப்பிரிவு நிதிப் புலனாய்வுப்பிரிவு உளவியல் செயற்பாட்டுப்பிரிவு முகவர்கள் வெளிக்கள முகவர்கள் < <-இடைநிலையாளர்கள்(குருவிகள்)-> < முதன்மை முகவர்கள் மறைமுக உறுப்பினர்கள் இரகசிய நடவடிக்கை அணிகள் ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு ராதா புலனாய்வுப்பிரிவு புலனாய்வு பயிற்சி மையம் கல்விக்குழு தேசிய மண்மீட்புப்படை (இதை 'பிஸ்ரல் குழு' என்றே குறிப்பிடுவர்.) வேவுப்புலிகள் (ஆ&பெ):- முகிலன் நீண்டதூர விசேட வேவு அணி (LRRP) இவ்வேவு பணியில் சில வேளைகளில் கரும்புலிகளும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. இப்படையணிகளின் வழங்கல்களுக்காகவும் அவற்றினை நெறிப்படுத்துவதற்காகவும் கீழ்க்கண்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. நளன் வானொலி தொலைத்தொடர்புப் பிரிவு போர்க்கருவி தொழிலகம் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவு மலரவன் வெடிமருந்து பிரிவு ஒற்றாடல் பிரிவு ( படைத்துறை நகர்வுகள், வானூர்தி தாக்குதல்கள் பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் பிரிவு) வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி , தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் விளைவிக்கும் அணி) சமராய்வு மையம் செய்தித் தகவல் மையம் களமுனை ஆய்வுப்பிரிவு கள விசாரணைப்பகுதி வழங்கல் பிரிவு இராணுவ தொழிநுட்பப்பிரிவு சமர் நூலாக்கப் பிரிவு- இவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன. இவர்கள் MOD என்னும் ஓர் தமிழ் படைத்துறை அகராதியையும் உருவாக்கியிருந்தார்கள். வாகனப்பகுதி கண்ணிவெடி உற்பத்தித் தொழிற்சாலை கைக்குண்டு உற்பத்தித் தொழிற்சாலை மிதிவெடி உற்பத்தித் தொழிற்சாலை எறிகணை உற்பத்தித் தொழிற்சாலை கடற்புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை பல பயிற்சிப் பாசறைகள் ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம் (கணினிப் பிரிவு) வன்தொழினுட்பப் பிரிவு மென்தொழினுட்பப் பிரிவு- மென்தொழினுட்பப் படையணி - தாரக மந்திரம்: "கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம்" படைய தொழினுட்பவியல் கல்லூரி மென்பொருள் கட்டுமானப்பகுதி தொழில்நுட்பக் கல்லூரிகள் கொள்வனவுப்பகுதி சிறப்புத் தாக்குதலணி திட்டமியல் செயலகம் கடற்புலிகள் இவை தவிர தங்களின் படைத்துறை போராளிகளுக்கு படைத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளையும் திறந்து வைத்திருந்தனர். அவையாவன, தமிழீழ படைத்துறைப்பள்ளி (ஆ&பெ) படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி அன்னக்கிளி பயிற்சிக்கல்லூரி(குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொழிற்பட்டது) சிறப்புப் பயிற்சிக்கல்லூரி திலீபன் அரசியல் கல்லூரி போர்ப்பயிற்சி ஆசிரியர் கல்லூரி பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி- (மட்டு) அப்பையா வெடிபொருள் பயிற்சிக்கல்லூரி ராஜன் படைத்துறை பயிற்சிக்கல்லூரி புலேந்திரன் சிறப்புப்படை பயிற்சிக்கல்லூரி தூயவன் அரசறிவியற்கூடம் சிங்கள மொழி கலாச்சார கல்வி நிலையம் - (புலனாய்வுத்துறை & கரும்புலிகளுக்கானது) சரத்பாபு பயிற்சிக்கல்லூரி மகளீர் அடிப்படை பயிற்சிக்கல்லூரி மகளீர் படைத்துறை பயிற்சிக்கல்லூரி றோய் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கடற்புலிகளின் கடற்படை படைத்துறைப்பள்ளி நிரோயன் ஆரம்பக் கடற்படை பயிற்சிக்கல்லூரி ஆசிர் கடற்படை பயிற்சிக்கல்லூரி (1992 இல் ) நரேஸ் தொழினுட்பக் கல்லூரி பெத்தா அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி கடற்புலிகளின் அரசியற் பயிற்சிப்பள்ளி மொழியாக்கப்பிரிவு அடிபாட்டாளர்களின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டமைப்பு பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. கிடைத்த பற்றியத்தை ஏலுமானவரை கோர்வையாக்கியுள்ளேன். அதில் ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திற்குமென தனித்தனி மருத்துவப்பிரிவுகளும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவு: தமிழீழ மருத்துவக்கற்கை பயிற்சிக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவம் கள மருத்துவப்பிரிவு உப மருத்துவப்பிரிவு தள மருத்துவம் முதன்மை மருத்துவப்பிரிவு (படைய மருத்துவமனைகள்) அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதி படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதி படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) மற்றும் பல அலகுகள் ஒரு பக்கம் பார்த்தால் எப்படி மறுபக்கம் பார்க்க வேண்டாமா? உசாத்துணை : (இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்ட உசாத்துணைகள்தான். ஆதலால் ஒரு சரிபார்ப்பாகவாவது இவற்றைக் கொள்ளவும்.) தமிழீழ விடுதலைப் புலிகள் யார்…? - இ.இ. கவிமகன் EelamView பழ நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகம் (பசீலன் மோட்டர் பிரிவுப் பெயர் இங்கிருந்து கொள்ளப்பட்டது) நிர்வாக முடக்கலுக்கு மண்மீட்கும் படை அழைப்பு. ஈழநாதம்(29.4.2003) எரிமலை-1992 களத்தில் - 27.6.1995 https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm விடுதலைப்புலிகள் மார்கழி-தை 2001 லெப். தமிழ்பாண்டி உள்ளக பாதுகாப்பு அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது https://eelamaravar.wordpress.com/2019/05/15/brigadier-sornam-4/ https://eelamheros.wordpress.com/2019/05/15/ltte-medical-team-kanavi/ https://www.eelamview.com/2016/04/18/ex-ltte-medical-unit/ படிமப்புரவு Log In or Sign Up EelamView https://www.verkal.net/ yarl.com aruchchuna TamilNet தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  3. "தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எல்லா(hello)... வாங்கோ! வாங்கோ ! வணக்கம்... என்னென்டு சொன்னால் இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது… நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை! சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம். 1) &2) கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும். 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் ' 'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்' 'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்' 3) இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும். அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5 'மேற்கண்டதின் பின் புறம்' 4) புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. (இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை) 'உயர் பின்பக்க பார்வை' 5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன். 'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்.. தலைப்பகுதி தலைப்பகுதி தலைப்பகுதி 'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்' பின்பக்கம் பின்பக்கம் 'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி' 'சுழலி' 'சுக்கான் உடன் கூடிய சுழலி' 6) கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7) மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி 8 ) கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள். சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள். தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும். இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1) 'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது' 'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்' 'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்' 'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி' 'கலத்தின் பின்பகுதி' மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண: 2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். 3) மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்! இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது! படிமப்புரவு :H I Sutton மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்: 'பின்பகுதி' 4) 27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். (கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் ) 'கலத்தின் முழுத் தோற்றம்' 'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக' 'அணியம்' தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1) 2) நீளம்: 30 அடி அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும். கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை 1) நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது 'ஓட்டியிருக்கை' 2) கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி அகலம்: 8 அடி உயரம் : 7 அடி வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2- இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும். பொறியின் ஆற்றல்: 400–800 HP 'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை' 'மேற்புறத் தோற்றம்' 'முன்புறத் தோற்றம்' 'உட்புறத் தோற்றங்கள்' 'ஓட்டியிடம் & steering wheel' எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்' 'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.' 'சுழலி ' 3) இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது. நீளம்: 5.4 m அகலம்: 1.5 m 4) கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும். இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. நீளம் : 8m உயரம் : 4.2' 'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை' 5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று: இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை 6) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel). 'உட்புறத் தோற்றம்' 7) நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது' 8 ) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்படுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 'முன்னிருந்து சத்தார் பார்வை' 'மேலிருந்த பார்வை' 'பின்னிருந்து சத்தார் பார்வை' 'பக்கவாட்டுப் பார்வை' 'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை' 'பின்பகுதிப் பார்வை' 9) கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி 'மேற்கண்டதின் பின் புறம்' 'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)' அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும். இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம். 'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை' 'உட்பகுதி' 2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் 'பின்பகுதி' 2) இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம் படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி. 3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும். மேலுள்ள மாதிரியின் முழுக் கலம் கூடுதல் செய்திகள்: உசாத்துணை : H I Sutton - சில தகவல்களை இங்கிருந்து தழுவியே எழுதியுள்ளேன். Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644 ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.