Search the Community
Showing results for tags 'தமிழீழ விடுதலைப் புலிகள்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 845 replies
-
- 7
-
-
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
-
(and 49 more)
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கரந்தடிப் போர்முறைக் கால (1990 மார்ச் வரை) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) என அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். -------------------------------- "காகங்களே! காகங்களே! காட்டுக்குப் போவீங்களா? காட்டுப் போயெங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்களா? - இதை காதில் உரைப்பீர்களா?" -------------------------------- "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 185 replies
-
- ltte
- guerrilla
-
(and 69 more)
Tagged with:
- ltte
- guerrilla
- guerrillas
- ltte guerrilla
- ltte guerrillas
- eelam guerrillas
- tamil guerrillas
- tamil tiger rebels
- tamil rebels
- eelam rebels
- ltt
- tamil eelam images
- liberation tigers of tamil eelam
- tamil ltte
- eelam tamils
- tamil eelam liberation struggle
- ltte pirabhakaran
- guerrilla warefare eelam
- guerrilla warefare
- eelam war
- tamil eelam liberation
- eelam guerrilla
- eelam images
- ltte images
- tamil
- tamils
- tamil eelam tamils
- eelam history
- tamil eelam history
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் கெரிலா
- கெரிலாக்காள்
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- ஈழ கெரில்லாக்கள்
- ஈழ கெரில்லா
- tamil guerilla
- tamil eelam
- tamil liberation army
- sri lankan guerillas
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
- புலிகள்
- தமிழ் போராளிகள்
- போராளிகள்
- போராளி
- புலிவீரர்கள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழ்ப் புலிகள்
- தமிழ் புலிகள்
- புலி
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரில்லாப்படை
- கெரில்லாப் படை
- கெரில்லாக்கள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடி போராளிகள்
- tamil tigers images
- tamil images
- tamils army
- tamil eelam army
- tamil warriors
- sri lankan army
- tamil military
- tamil eelam military
- eelam military
- tamils military
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1982 - 20 நவம்பர் 2008 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,390 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 6)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'பாதையும் தரவை ஒலிமுகமும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' கனகபுரம் ஒலிமுகம்: 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதந்தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' ஏனைய 8 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) https://www.tamilwin.com/articles/01/199494http://eelamhouse.com/wp-content/uploads/2010/08/MaaveerarNaalKaiyedu.pdfhttps://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it https://www.tamilwin.com/articles/01/199494 https://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it படிமப்புரவு vimeo seatigers 85% screen shot only எழுத்து & வெளியீடு நன்னிச் சோழன்
- 4 replies
-
- நினைவுக்கற்கள்
- மாவீரர் நாள்
- (and 9 more)
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)….. வணக்கம் தோழர்களே.. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்.. கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்…….. கூடுதல் தகவல்கள்: https://yarl.com/forum3/topic/258290-புலிகளின்-உள்நாட்டு-உற்பத்தி-சேணேவிகள்artillery-மற்றும்-உந்துகணைகள்-ஆவணம்/ நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து… ' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு. இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். ' கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention) இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல. அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (புலன கிட்டிப்பு:புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan. ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்: முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்? பெண்கள்: மார்பகம் இடை மரும பகுதி ஆண்கள்: நெஞ்சு இடை இவற்றில் இரு வகையுண்டு.. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும். ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)' 'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்' கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர். மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை. அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும். 'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து' 'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்' ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்! 'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி' பல்வேறு வகையான வெடியுடைகள்: இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟 கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்: 'படிமப்புரவு: Where global solutions are shaped for you' மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com' இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :- 'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.' பெண்களுக்கான 'pantie வெடியுடை:- தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்: மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles) 1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி: 2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி: இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle) 1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle) அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன. இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில். செண்பகம் குறிசூட்டு துமுக்கி: செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி: 'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்' உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle) 1) இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 2) இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்) (படிமம் கிடைக்கப்பெறவில்லை) இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun) 1) இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை. துமுக்கி எறிகுண்டு (rifle grenade) 1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade) வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை: 100g உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1 நெடுக்கம் : 100 மீ அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988 மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2 தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர் இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது. அருள்-89 விதம்-I அருள்-89 விதம்-II அருள்-89 விதம்-III அருள்-89 விதம்-IV போருக்குப் பின்னான காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வேறுபாடான அருள் வகையைச் சேர்ந்தது எனச் சந்தேகிக்கப்படும் வெடிபொருள். கைக்குண்டு (hand grenade) 1) குணா கைக்குண்டு (Kuna hand grenade) இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும். 2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade) புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) வெடிமருந்து: TNT வெடிமருந்து நிறை: 50–100g நிறம்: பச்சை & நீலம் இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும். Can Charge - கான் சார்ச் தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம். இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன். 'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து' இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்) உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun) 1) இது ஒரு விதமான மூன்று AK-வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. முன்பக்கம்: பின்பக்கம்: 'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)' 2. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள துமுக்கி என்னவென்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது… உள்நாட்டு 30 மி.மீ சுடுகலன் (indigenous 30 mm gun) புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது 30 மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது.. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்.. இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது. புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-I (Pulikkutti 30mm gun Mk-I) இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது. பக்கவாட்டுத் தோற்றம்: 'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி' 2) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-II (Pulikkutti 30mm gun Mk - II) இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது. 3) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்- III (Pulikkutti 30mm gun Mk-III) இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர். ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே வடிவமைத்துள்ளனர். உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான ஏவரிகளை விளைவித்துள்ளனர் என்பது பெரும் வியப்பான விடையமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் ஏவரிகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மானுறுத்தும் ஏவரிகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவரியை ஏவி அதன் பாதையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலையியக்கி (remote control) மூலம் இயக்கக்கூடிய ஏவரிகளை புலிகள் துல்லியமாக விளைவித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, ஏவரியைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுனது. 2009 ஆம் ஆண்டு புலிகள் அழியும் வரை உலகிலே இவ்வகையான பாரிய வலிமையான ஏவரிகளை உடைய ஒரே இயக்கம், புலிகள் மட்டுமே . அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான சுடுகல சன்னங்களைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற பாரிய ஆய்தங்களை மிக இலகுவாக மானுறுத்தக் கற்றுக்கொண்டனர் மலைப்பான குறிப்பிடத்தக்க விடையமாகும். இது சிங்கள தேசத்திற்கு வெட்கக்கேடான ஒரு செய்தியாகும். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்' 4) இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது. 1) என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை. கண்ணிவெடி (Mine): இவையெல்லம் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்! கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கொச்சரையர்(கப்டன்) கொலின் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. 2) 3) 4) Limpet கடற் கண்ணிவெடி 5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine) கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் . 6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine) 7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி இதன் பின்பகுதி: ஆளெதிர்ப்பு கண்ணிவெடி(anti-personal mine) : புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine) 1) ஜொனி 95 (johny 95) புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன் மொத்த நிறை : 250g வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை : 30 g 'தாட்டும் போது இருக்கும் நிலை' 'வெடிக்கும் போது இருக்கும் நிலை' 'முன்பக்கத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும். ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் . ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். செய்முறை: துருவி இணையத்தளத்தில் இருந்து…. 'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.' 2) ஜொனி 99 (Johny 99) / ரங்கன் 99 (Rangkan 99) புதுப்புனையபட்ட ஆண்டு: 1999 வெடிமருந்து : 150g TNT உயரம்: 9cm அமுக்க நிறை (pressure weight): 6kg கொளுத்து அமைப்பு: விற்சுருள் மூலம் இயக்கப்பட்டு பந்துமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது (spring operated ball controled). இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured).. இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும். 3)ஜொனி மின்சார மிதிவெடி (johny electric APA) இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இதைக் கையாள முயன்றால் வெடிக்கும், எனவே ஜொனி மின்சார மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும். இது அம்மா 2000 ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது. 'ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் detonator' . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) 4)தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM) இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு. 5) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) 6)தமிழன் மிதிவெடி (Thamizhan APM) புதுப்புனைந்தவர்: கேணல் சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) இதைத் தவிர வேறு படிமங்கள்(images) என்னிடம் இல்லை! 'படிமப்புரவு: எதிரி இணையம்' 7)டப்பி மிதிவெடி (Dappi APM) இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர். வகை - 1:- வகை - 2:- திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine) அமுக்கவெடி (claymore) 1) செந்தூரன் 96 (senthuran 96) தாக்கும் ஆரை: 80 பாகை மொத்த நிறை : 10kg வெடிமருந்து : c4 இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர். 2) பகலவன் (Pakalavan) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) மொத்த நிறை : 2.5 kg விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது. இதற்கான தொலையியக்கிகள்: 3)இராகவன் (Irakavan) உயரம் : 100cm விட்டம் : 75cm மொத்த நிறை : 54kg தாக்கும் ஆரை: 360 பாகை வெடிமருந்து நிறை : 44kg (TNT) ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு) வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control) இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும். இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று! 4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore) மொத்த நிறை: 25kg 5)தோழநம்பி 2000 (Thozanampi 2000) மொத்த நிறை: 15kg தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது . 6) பவான் 99 (Pavaan 99 ) மொத்த நிறை: 15.5 kg இது கப்டன் பவான் அ ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற அமுக்கவெடி ஆகும். மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine) 1)இளவழுதி (Ilavazuthi) மொத்த நிறை : 5kg தமிழீழ மானுறுத்தமான இது மின்சார துள்ளல் கண்ணிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ETM மதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கண்ணிவெடி அகற்றுபவர்களாலும் கண்ணிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ETM என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும். 'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது இதில் இரு விதம் இருந்தது: இளவழுதி 1 (ETM 01) இளவழுதி 2 (ETM 02) உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines) 1) கீர்த்தன் (Keerththan) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். 1)சலாகை அமுக்கவெடி (salakai) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine) 1) அம்மா 2000 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 2000 anti-tank mine) மொத்த நிறை: 11 +/- 2.2 வெடிமருந்து : TNT(45%), RDX(55%) உயரம்: 13 cm அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும். அம்மா 2000 இன் பக்கவாட்டுத் தோற்றம்: . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை. 2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine😞 லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும். இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். 3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine). 4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine). 5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine). சிறியவகை ஊர்திகளுக்கான மதிவெடி. 6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine) சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது. 7)பெயர் தெரியவில்லை! 8)செந்தூரன் 2000 (Senthuuran 2000) ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி... பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும். தடைவெடி('Bangalore torpedo 'like torpedos' ) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தென்னவன் தடைவெடி(Thennavan torpedo) 2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo) 3)குருவி தடைவெடி(Kuruvi torpedo) இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது. 4) மாயவன் தடைவெடி(Maayavan torpedo) சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள். 5)சாந்தகுமாரி தடைவெடி(Saanthakumaari torpedo) விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 6) ரங்கன் தடைவெடி(Rangkan torpedo) ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடிஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1995ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்: இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்! முன்பகுதி: பின்பகுதி: 2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது 3) & 4) 5) 6) காந்தக் குண்டு (magnet bomb) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது. செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device) 1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED ) இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை! 2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED) வெடிமருந்து: TNT 3) 4) 5) 6) 7) 8 ) 9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive) 10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED) 11) அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம். வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்: இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf சூழ்ச்சிப் பொறி (booby traps) 1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. (நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்) 2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap) 'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்' 'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி' 3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap) 4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap) புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும். 5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap) 6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான். 7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது. சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்.. (இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே) வில்லுகள் - படைக்கலங்கள்(Munition) தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14) அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar) சாரை - KPV அப்பாச்சி - 14.5mm ZPU-1 பூமா - 14.5mm ZPU-2 ஆலை - 37mm T- 65/74 (M1939) டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL) மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL) பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் ) 97 - M16 ஒலிகன் - Oerlikon 20mm Cannon வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை → இனி வருபவை அனைத்தும் புஸ்பகுமார் சற்குணநாதன் அவர்கள் அளித்த தகவல்கள்: XR2 - RPG 29 நாயகன் - M141 BDM 17 - FGM 172 Javelin & FGM 172B உசாத்துணை dossier on ltte weapons - pdf மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…! - தொடர் கட்டுரை மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 The story of Thambimuththus (SAMs) (The story of Thambimuththus (SAMs)) (https://www.army.lk/news/troops-led-unearth-two-more-ltte-torpedoes-0) (தென்னாசியாவே பார்த்து நடுங்கிய விடுதலை புலிகளின் நீர்மூழ்கி ஏவுகணை!!) https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf இந்திய இராணுவத்தை தடுத்து நிறுத்திய ஜொனி - துருவி Type 53 torpedo - Wikipedia Shershen-class torpedo boat - Wikipedia Torpedo tube - Wikipedia கிளைமோர் - தமிழ் விக்கிப்பீடியா ரங்கன் 99 - தமிழ் விக்கிப்பீடியா அம்மான் 2000 - தமிழ் விக்கிப்பீடியா SLAF Recoveries in the Pudukuduirippu area yarl Tamileela seithikal. No . 40_0- August 1990 படிமப்புரவு * dossier on ltte weapons - pdf ruupabahini * https://www.cartagenasummit.org/fileadmin/APMBC-RC2/regional-conference/Bangkok_WS/Bangkok-ClearingMine-2April2009-SriLanka-SL.pdf கரிகாலன் garikaalan) Banner | National Mine Action Center, Sri Lanka) * Mapio.net (Mapio.net) * http://youtube.com/watch?v=2kKYXvVBG_Y * YouTube (YouTube) * CAT-UXO - Rangan 99 landmine (CAT-UXO - Rangan 99 landmine) * Asiri (Asiri (@AsiriFernandoLK) | Twitter) * Weapons, Ammo, Diesel & other LTTE Warlike Items Found * https://www.apminebanconvention.org/fileadmin/APMBC/clearing-mined-areas/2018-SriLanka-InitialArt7Report.pdf * Ceylon Today (Sri Lanka: Anti-personnel mine found ) * kumaran satha (kumaran satha) WordPress.com: Create a Free Website or Blog * LiveJournal (Простая тамильская баба.) * http://Flickr.com (http://Flickr.com) * Latest Sri Lankan News Updates (http://lankadailynews.com/) * Sri Lanka Army (Sri Lanka Army) * The Hindu Images * CAT-UXO * Sri Lankan Security Forces (Sri Lankan Security Forces) தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் * https://alt.army.lk/slsr/11slsr_2 (Sri Lanka Sinha Regiment) * https://steemit.com/photography/ (https://steemit.com/photography/) Troops Led to Unearth Two more LTTE Torpedoes * stuartddaniel (stuartddaniel) * Experiments with weapons- Part I (http://www.srilankaguardian.org/2008/04/experiments-with-weapons-part-i.html) * IBC Tamil * Jaffna News 15kg bomb found buried in Ukkulan Kulam Vavuniya. - Srilanka News | DSRmedias.com * Vanakkam London Emerging Out Of The Shadows Does recovery of arms from former LTTE cadres indicate revival of Tamil insurgency in Sri Lanka? Landmines, unexploded ordnance a barrier to return SLAF Trikonamadu recovers cache of weapons in Pudukuduirippu Alibaba தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்r
- 4 replies
-
- சுடுகலங்கள்
- கடற்புலி
-
(and 38 more)
Tagged with:
- சுடுகலங்கள்
- கடற்புலி
- புலிகளின் ஆயுதங்கள்
- தடைவெடி
- ஈழத்தமிழரின் ஆயுதங்கள்
- ஈழத் தமிழரின் ஆயுதங்கள்
- தமிழர் ஆயுதங்கள்
- தமிழீழம்
- சுடுகலன்
- தமிழரின் படைக்கலங்கள்
- புலிகளின் உள்நாட்டு உற்பத்திகள்
- ஈழ ஆயுதங்கள்
- தமிழரின் கைக்குண்டுகள்
- விடுதலைப் புலிகள்
- ஈழ உள்நாட்டு தயாரிப்புகள்
- புலிகளின் உள்நாட்டு தயாரிப்புகள்
- ஈழப் படைக்கலங்கள்
- தமிழீழ ஆவணங்கள்
- தமிழீழ தயாரிப்புகள்
- துமுக்கி
- வெடிகுண்டு பெல்ட்
- விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்
- விடுதலைப் புலிகளின் படைக்கலங்கள்
- தமிழர் ஆயுதம்
- விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்
- ஈழ ஆவணங்கள்
- கைக்குண்டுகள்
- தமிழரின் ஆயுதங்கள்
- பண்டைய தமிழரின் ஆயுதங்கள்
- விடுதலைப்புலிகளின் படைக்கலங்கள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- கண்ணிவெடி
- முள்ளிவாய்க்கால்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte home made weapons
- ltte weapons
- tamil eelam home made weapons
- tamil tigers weapons
- sri lankan rebels weapons
- sri lanka home made weapons
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால், எல்லாவற்றையும் இங்கே சொல்வது நல்லதல்ல.... எனவே, ஈழத்தமிழர்களால் அணியப்பட்ட தொப்பிகளின் வகைகளைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் தாவுகிறேன். புலிகளின் தொப்பிகளின் வகைகள்:- சாக்குத் தொப்பி - Gunny cap ஒரு பக்கத் தொப்பி - One side cap குணகு மகுடக்கவி- Slouch hat வரைகவி - Barret செண்டாட்டத் தொப்பி - Baseball cap சுற்றுக்காவல் தொப்பி - Patrol cap செவிமறை தொப்பி - earflap cap மகுடக்கவி- hat இவ்வகைத் தொப்பிகள் யாவும் மகுடம் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் மகுடம் என்னும் சொல்லையும், தொப்பி என்பதன் ஒத்தசொல்லான கவி என்பதையும் இணைத்து மகுடக்கவி என்னும் சொல்லை வழங்கலாயினேன் மகுடக்கவி என்னுஞ்சொல்லானது சேர்த்தே தமிழில் வழங்கப்படல் வேண்டும் கௌபோய் மகுடக்கவி- Cowboy hat வாளி மகுடக்கவி- Bucket hat நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- earflap floppy hat சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat சூரியக் காப்பு தொப்பி - Sun protection cap கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig உச்சிமுடி தொப்பி - Paked cap இனி, கட்டுரைக்குள் சென்று ஒவ்வொன்றாக விரிவாகக் காண்போம்! சாக்குக் தொப்பி- Gunny cap:- இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச்(link) சொடுக்கி சாக்குத் தொப்பி பற்றி வாசிக்கவும்: 2. & 3. ஒரு பக்கத் தொப்பி - One side cap & குணகு மகுடக்கவி- Slouch hat இவை கவற்றுறையினரால் அணியப்பட்டவை ஆகும். இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச் சொடுக்கி இவற்றை பற்றி வாசிக்கவும்: 4. வரைகவி - Barret இவை, விடுதலைப் புலிகளின் தரைப்புலிகளால் 90களின் தொடக்க காலத்திலும், கடற்புலிகளால் 90- 96 வரையிலும் (96 - 2000 வரை என்ன வகையான தொப்பி அணிந்தார்கள் என்பது அறியில்லை), கரும்புலிகளின் அனைத்து உட்பிரிவுகள், எல்லைப்படை மற்றும் சிறப்பு எல்லைப்படை ஆகியவற்றால் 2000 ஆம் ஆண்டு வரையிலும், கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகளால் 2004 ஆம் ஆண்டு வரையிலும், சிறுத்தை அதிரடிப்படையின் அனைத்து உட்பிரிவுகளால் 2009 மே மாதம் வரையிலும் அணியப்பட்டிருந்தன. அவற்றின் நிறங்களாவன:- தொடக்க காலத்தில் - கறுப்பு & சிவப்பு வரைகவி கீழ்கண்ட படத்தில் இருப்பவர்கள் புலிகளின் (1984–1987) உறுப்பினர்கள் ஆவர். இவர்களில் சிவப்பு வரைகவி அணிந்திருப்பவர் கட்டளையாளர் ஆவர். கறுப்பு வரைகவி அணிந்திருப்பவர் உயரதிகாரி(high) ஆவர். இதே போல, ஒரு சிவப்பு நிற வரைகவியினையே புலிகளின் தலைவர்(leader) அக்காலத்தில் அணிந்திருந்தார் . இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது . 'இவர்கள் கையில் ஏந்தியிருப்பது வகை-56 விதம்-2 (T-56 type-2) ஐச் சேர்ந்த துமுக்கிகளாகும்(Rifles). அவற்றுள் சிவப்பு வரைகவி அணிந்தவர் ஏந்தியிருக்கும் துமுக்கியானது மாற்றியமைக்கப்பட்டது(modified) ஆகும். ' 'இப்படம் 1983ற்கு முன்னர் எடுக்கப்பட்டது ஆகும்.' தரைப்புலிகள் - கறுப்பு நிறம் இவை புலி உறுப்பினர்களால் 1990-1995 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. '1994 யாழில் காவலிற்கு நிற்கும் புலிவீரர்' தரைப்புலிகள் இவை புலி உறுப்பினர்களால் 1995-1996 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. அதன் தோரணி சீருடை நிறத்திலான வரிப்புலிக் கோடுகளாக இருந்தது. மக்கள்படை: எல்லைப்படை - இளம்பச்சை நிறம் இப்படையின் ஆண்களும் பெண்களும் தொடக்க காலத்தில்(1999) கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'தொடக்ககாலத்தில் கறுப்பு நிற வரைகவி அணிந்து அணிநடை போடும் எல்லைப்படை வீரிகள் | இவர்களின் வரைகவியில் படை வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' அடுத்த ஆண்டிலும் - 2000 ஆம் ஆண்டளவில் - கறுப்பு நிற வரைகவியினையே அணிந்திருந்தந்தாலும் அவர்களின் சீருடை பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது. அதேநேரம், இதே 1999-2000 காலகட்டத்தில், இவர்களின் கட்டளையாளர்கள் சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'இடது பக்கத்தில் பச்சை வரிப்புலியில் சிவப்பு நிற வரைகவி அணிந்து வருபவரே இவர்களிற்கான கட்டளையாளர் ஆவார்' இவர்கள் 2005 க்குப் பின் செண்டாட்டத் தொப்பி(baseball cap)யினை அணிந்திருந்தாலும் ஒருசிலர் வரைகவியினையும் அணிந்திருந்ததாக கீழ்க்கண்ட படம் மூலம் என்னால் அறிய முடிகிறது. '2008 ஆம் ஆண்டு வவுனியாவில் சிங்களப் படைத்தாவளம்(military camp) ஒன்றினை அழித்தபின் ஆய்த சேகரிப்பில் ஈடுபட்டுள்ள புலிகள் | பச்சை வரைகவி அணிந்திருப்பவர் எல்லைப்படை வீரர் ஆவார். இவரின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கிட்டு பீரங்கிப் படையணியின் மோட்டார் பிரிவு 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கப்பட்ட இப்பிரிவானது அதனது தொடக்க காலத்தில் கிட்டு பீரங்கிப் படையணியின் ஒரு உறுப்பாகவே செயல்பட்டது. 2000 வரை அப்படித்தான் இருந்துள்ளதாக புலிகளின் செய்தித்தாள்களில் வெளி வந்த செய்திகளின் அடிபப்டையில் அறிய முடிகிறது. இவர்கள் கறுப்புநிற வரைகவியினை 1999இன் இறுதிப்பகுதிவரை அணிந்திருந்தனர். சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு - தொடக்க காலத்தில் - கருநீல நிறம் 'படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள சிறப்பு ப்படையினர் | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கடற்புலி கடற்கலவர் (1992/1993-2002)- இளநீல நிறம் ஆண்களும் பெண்களும் இளநீல நிற வரைகவியினை அணிந்திருந்தனர். கரும்புலிகள் - கறுப்பு நிறம் கரும்புலிகளும் 1990இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரை வரைகவியினையே அணிந்திருந்தனர். கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகள்:- இவர்கள் அணிந்திருந்த வரைகவிகளின்(?- 2004 ஐந்தாம் மாதம் வரை) நிறங்கள் மிகவும் குழப்புகிறது. இருந்தாலும் நானறிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தவறென்றால் திருத்த உதவவும். அதிகாரிகள்(high) - Maroon நிறம் சிங்களத் தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலான சீருடை அணிந்தோர்: கடுஞ்சிவப்பு கடைநிலை வீரர்கள் - கடும்பச்சை & சேர்ப்பன் நீல நிறம் (Admiral blue) - இரு நிறத்திற்குமிடையிலான தரநிலை வேறு பாடு தெரியவில்லை! 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' ''சிங்களத் தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலான சீருடை அணிந்தோர் கடுஞ்சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருப்பதை நோக்குக. இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க'' சிறுத்தை அதிரடிப்படை - Azure நிறம் 'சிறுத்தைப்படை | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 5. செண்டாட்டத் தொப்பி - Baseball cap இவை தமிழீழ மக்கள் படையான எல்லைப்படையினராலும் கடற்புலிகளின் துணைப்படையான 'ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணி''யினராலும் அணியப்பட்டவை ஆகும். 'எல்லைப்படையினர்(2006–2009 இறுதிவரை) | இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை.' 'லெப் கேணல் மங்களேஸ்' அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைக்க அதற்கு ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியினர் கொடிவணக்கம் செலுத்துகின்றனர் | இவர்களின் வரைகவியில் படையணி இலச்சினை பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்க' ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியின் செண்டாட்டத் தொப்பி பற்றி நான் இங்கு விரித்திருக்கிறேன்:- (இதில் கடைசி பத்தியைக் காணவும்) 6. சுற்றுக்காவல் தொப்பி- Patrol cap புலிகளின் சுற்றுக்காவல் தொப்பியானது, உலக நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பியில் இருந்து வேறுபட்டு, ஓர் வேறான வடிவினை கொண்டிருந்தது. அந்த வடிவமானது புலிகளிற்கே உரித்தானது ஆகும். இதைப் போன்றதொரு வடிவினை உடைய தொப்பியானது உலகில் இன்றுவரை ( 02.03.2021) எங்குமே பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். புலிகளின் சுற்றுக்காவல் தொப்பிகளின் காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது 1979–2001 வரை காலம் ஒன்று எனவும், 2001 இல் இருந்து 2009 வரை காலம் இரண்டு எனவும் பிரிக்கலாம். இவற்றிற்கு முந்தைய கால தொப்பியானது மிகவும் வேறான சாதாரணமில்லா வடிவத்தில் இருந்தது. பார்ப்பதற்கு வரைகவிக்கு சுண்டு வைத்தது போல இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 1979–2000 சுற்றுகாவல் தொப்பியில் 2 வகை இருந்தது. 1) சுண்டு(bill) கட்டையான சுற்றுக்காவல் தொப்பி:- 79-இல் இருந்து 2001 வரையிலான காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட இத் தொப்பியானது அனைத்து மட்ட புலிவீரர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது உலகில் அனைத்து படைத்துறைகளாலும் பயன்படுத்தப்படும் பொதுவான சுற்றுக்காவல் தொப்பியின் வடிவமைப்பைக் கொண்டதொன்றாகும். இதில் வரிப்புலியில் இல்லை. மாறாக சாம்பல் நிறமே இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'பட விளக்கம்: 1985 இந்திய பயிற்சித் தாவளத்தில் போது Guard of honour நடக்கிறது | இங்கு புலிவீரர்கள் அணிந்திருக்கும் தொப்பியினை நோக்குக.' '2000 ஆம் ஆண்டு இத்தாவில் பெட்டியினுள் கேணல் நகுலன் அவர்கள் கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறார் | இவரது தலையில் நான் சொன்ன தொப்பி இருப்பதை நோக்குக ' இதே காலப் பகுதியில், 1993 இல் 'தவளைப் பாச்சல்' நடவடிக்கையின்போது பலாலியினுள் புகுந்த கரும்புலிகள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பியானது சற்று வேறுபாடுள்ளதாக காணப்பட்டது. இது பிற்காலத்திய தமிழீழ காவற்றுறையின் தொப்பியின் முன்மாதிரி வடிவம் போன்று தோற்றமளிக்கின்றது. அதாவது இதனது பலகத்தின் அடிப்பாகத்து துணியானது சற்று அதிகப்படுத்தப்பட்டு கீழிருந்து மேனோக்கி மடிக்கப்பட்டுள்ளது. 'பலாலி மீதான கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற லெப். ஜீவரஞ்சன் தலையில் அணிந்துள்ள தொப்பியினை நோக்குக.' 2) வடிவமைப்பே வேறுபட்டதான ஒரு சுற்றுக்காவல் தொப்பி:- இதுவும் புலிகளிற்கே உரித்தானதான வடிமைப்பைக் கொண்டிருந்தது. இந்த வடிவமைப்பை ஒத்த தொப்பிகளை நான் இதுவரை எங்குமே கண்டதில்லை. இது 1994 இறுதி - 1996 வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இதே கால கட்டத்தில் கடைநிலை போராளிகளால் வரைகவி பயன்படுத்தப்பட்டது. இதன் பலகங்களில் விறைப்புத் தன்மை இல்லை. அவற்றின் உச்சந்தலை கொஞ்சம் பெரிதாகவும் வரவர ஒடுங்கியதாகவும் காணப்படுகிறது. அதேநேரம் இதன் பலகம் மிகவும் உயரமானது ஆகும். ஆனால், இதன் சொண்டானது பிற்காலத்தியது போன்று நன்கு பரந்து பட்டதாகவும் நீளமானதாகவும் உள்ளது. ஆனால் இந்த சுண்டின் முன்பகுதியானது அகண்ட கரண்டி வடிவினைக் கொண்டுள்ளது. இக்தொப்பியே 2000 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட செந்தரமான சுற்றுக்காவல் தொப்பிகளின் மூலப்படிமம்(prototype) எனலாம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'மகளீர் ஒருவர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'மகளீர் படையணியினர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' பிந்தைய கால(2001–2009) செந்தரப்படுத்தப்பட்ட சுற்றுக்காவல் தொப்பி:- வடிவம்:- இதன் பக்கவாட்டு பலகமானது ஓரளவிற்கு விறைப்பானதாக இருக்கின்றது. உச்சந்தலை பலகமானது(panal) தளர்ந்ததாக, சாதாரண துணித் தன்மை உடையதாக இருக்கிறது. இந்த பலகத்தின் இருபக்கங்களிலும் இரு கண்கள்(eyelets) உள்ளன(சாதாரண தொப்பி போன்று). இதன் சுண்டானது(bill) வளைவாக இல்லாமல் தட்டையாகவும் கட்டையாக இல்லாமல் ஓரளவு தொப்பிக்கேற்ற நீளத்துடனும் முன்பக்கத்தில் நன்கு பரந்தும் காணப்படுகிறது. இத் தொப்பியின் முன்பக்கத்தின் நடுவில்தான் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட வில்லையானது(badge) தொப்பியுடனே சேர்த்து தைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு, 'தரைப்புலி படையணிகளின் சீருடை உருமறைப்பு நிறமான பச்சை கபில வரியானது அவர்களிற்கான தொப்பியில் இருக்க, தமிழீழத் தேசிய துணைப்படையின் தொப்பியில், அவர்களுடைய சீருடையில் உள்ள பச்சை கபில தொடர் கட்டங்கள் போன்ற உருமறைப்பு நிறமானது இருக்கும்.' தொப்பியின் பலகத்தின் நடுவில், அந்த கண்ணுள்ள நடுப்பகுதி, சுற்றிவர ஒரு பட்டை தைக்கப்பட்டிருக்கும். இந்தப் பட்டையானது முற்றுமுழுதாக பலகத்தோடு ஒட்டியிருக்காது. மாறாக ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்கும். தையல் போடப்படாத இடங்களை உருமறைப்பிற்குப் பயன்படுத்தலாம்(கீழ் வரும் 3வது படிமத்தைக் காண்க) இதன் உருமறைப்பு(camoflage) மற்றும் நிறங்களானவை, ஒவ்வொரு படையணியின் சீருடைக்கு தக்கவாறு மாறுபட்டிருந்தது. 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தென் தமிழீழ படையணிகள் யாவும் தம் வரைகவி விடுத்து சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளனர். இதனால் 4ஆம் ஈழப்போரில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் செந்தரமான தொப்பிகளை அணிந்திருந்தமை காணக்கூடியவாறு இருந்தது. இவர்களின் தொப்பியில் புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. 'தரைப்புலி வீரன் ஒருவனின் தலையில் உள்ள சுற்றுக்காவல் தொப்பி | தலையில் அணியப்பட்டாலும் பக்கவாட்டு பலகங்கள் விறைப்பாக உள்ளதை நோக்குக' 'இயந்திரச் சுடுகலச் சூட்டணி (MG fire team) ஒன்று சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'இவ்வீரனின் தொப்பியில் உள்ள பட்டையை நோக்குக. அதில் ஆங்காங்கே மட்டுமே தையல்கள் போடப்பட்டிருப்பதையும் இவற்றிற்கிடையில் உருமறைப்பிற்காய் புல்லுகள் செருகப்பட்டிருப்பதையும் காண்க.' 7.செவிமறை தொப்பி- Earflap cap இது புலிகளின் தொலைத் தொடர்பாளர்கள் & முன்னிலை நோக்குநர்கள் மட்டுமே அணியப்பட்ட ஒருவகை தொப்பியாகும். இது வரிப்புலியை நிறமாகக் கொண்டிருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 8. வாளி மகுடக்கவி- Bucket hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக, இது கட்டளையாளர்களால் மட்டும் அணியப்பட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'மேஜர் சேரலாதன் அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'தவிபு இயக்கத்தின் அலுவல்சாரில்லா முதலாவது சீருடையில் வாளி மகுடக்கவி அணிந்து G-3ஐ ஏந்தி நிற்கும் முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன்' 9.மகுடக்கவி- Hat இது தரைப்புலிகளின் அனைத்துப் படையணிகளால் மட்டும் அணியப்பட்ட மகுடக்கவியாகும். இதை அவர்களின் கட்டளையாளர்கள் முதல் இயக்கத் தலைவர் வரை அணிந்திருந்தினம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஆண்புலிகள்' 'பெண்புலிகள்' 10.கௌபோய் மகுடக்கவி- Cowboy hat 90களின் தொடக்கத்தில்…. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. இத்தொப்பியில் வரியும் இருந்தது. இதை எல்லோரும் பொதுவாக அணிவர். 11. நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக இது எல்லா வீரர்கள் மற்றும் தளபதிகளால் சூழலிற்கும் இடத்திற்கும் ஏற்ப அணியப்பட்டது. அதன் உருமறைப்பு நிறமும் அணியும் வீரரின் படையணி சீருடை நிறத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஜோன்சன் படையணியினது வீரன் அணிந்துள்ள கடும்பச்சை நிற மகுடக்கவி' இச்சீருடையினை, திருமலை பற்றிய நிகழ்படம்(video) ஒன்றில் தான் புலிகள் முதன்முதலாக காண்பித்ததோடு, அப்படையணியின் பெயரைக் கூறியபோது, அந்நிகழ்படத்தில், இந்நிற சீருடை அணிந்த போராளிகளே அணிநடை செய்தனர். எனவேதான், அப்படையணிக்கான சீருடை இதுவென்ற முடிவிற்கு நான் வந்தேன். '5 - 9 - 2008 அன்று வன்னேரிக்குள மண்ணரணில் நின்றவாறு சமராடும் புலிகளின் அணிகள். உவர்களில், முன்னால் உள்ள இருவரும் மகுடக்கவி அணிந்துள்ளதை நோக்குக.' இதில் தென்படும் நான்கு பேரும் மூன்று விதமான சீருடையில் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விதயம் யாதெனில், இந்த மகுடக்கவி அணிந்துள்ள இருவரும் இருவேறு நிறத்திலான சீருடை அணிந்துள்ளதோடு அவர்களின் மகுடக்கவியும் அதற்கேற்றவாறான நிறத்தையே கொண்டுள்ளதை நோக்குக. 'போராளி ஒருவர் நெகிழ்வான மகுடக்கவி அணிந்துள்ளார்' 12. செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- Earflap floppy hat இது புலிகளின் உந்துருளி படையணியால் மட்டுமே அணியப்பட்டது ஆகும். மகுடக்கவியின் கீழ்ப்பக்கத்தில் காதுமறை உள்ளது. மேலும் இதன் விளிம்புகள் யாவும் நெகிழ்ந்தவையாக உள்ளன. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. குறிப்பு: புலிகளின் அதிவேக உந்துருளி படையணியின் தொப்பியானது இதிலிருந்து வேறுபட்டது ஆகும். அஃது செங்குத்து வரி கொண்ட சுற்றுக்காவல் தொப்பியாகும் 13. சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat இவ்வகை மகுடக்கவியின் பின்பக்கத்தில் , ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஓயாத அலைகள் மூன்றின் 4 கட்டமான ஆனையிறவுச் சமரில், குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று(Snipe team)' 14. சூரியக் காப்பு தொப்பி- Sun protection cap இவ்வகை தொப்பியின் பின்பக்கத்தில் , நீளமான ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பின்னால் உள்ள துண்டின் நீளம் முதுகின் முக்கால்வாசித் தூரம் வரை உள்ளது. 97-2000 ஆம் ஆண்டு வரை: இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு: அதில் வட்ட வடிவ படையணி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. 15. கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig இது இவர்களால் 2002 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் அணியப்பட்ட சீருடையாகும். அதில் புலி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. இவர்களின் அதிகாரிகளின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளது: 'அதிகாரியின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளதை நோக்குக | அதில் கடற்புலி இலச்சினை குத்தப்பட்டிருப்பது வட்டமிடப்பட்டுள்ளது.' 2004இற்குப் பின்னான காலத்தில் சதுரத் தொப்பியில் ஒரு தகடு பொருத்தப்பட்டிருந்தது. அந்தத் தகட்டில் 'விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்' என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. 16. உச்சிமுடி தொப்பி - Peaked cap இது கணினிப் பிரிவு என்று அழைக்கப்படும் 'கேணல் ராயு படைய அறிவியல் தொழினுட்பவியல் கல்லூரி'இன் கீழ் செயற்பட்ட படைய தொழினுட்பவியல் கல்லூரி யின் போராளிகளால் அணியப்பட்டதாகும். இது ஒரு விதமான கபில நிறத்தில் இருந்தது. இதன் மையத்தில் உள்ள சட்டத்தில் கணினிப் பிரிவின் சின்னம் இருந்தது. அது தங்க நிறத்தில் இருந்தது. உசாத்துணை: செ.சொ.பே.மு. படங்களைப் கவனித்து சொந்தமாக எழுதியது படிமப்புரவு: YouTube - Journeyman Pictures http://aruchuna.com/http://gettyimages.com/http://tamilnet.com/ NTT ஈழ நாளேடுகள் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
- 1
-
-
- tamil tigers
- தமிழீழம்
- (and 13 more)
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்…/\… தோழர்களே! கடந்த 15 நாட்களாய் வலைத்தளங்கள் முழுவதும் துளாவியாய்ந்து ஒருவழியாய் இந்த ஆய்வு விடையினை முடித்து விட்டேன்.. வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\... முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்.. இது என்னுடைய கடற்கலங்கள் பற்றிய இரண்டாவது ஆய்வு விடை (முதலாவது)…. போன கடற்கலங்கள் பற்றிய விடையில் பண்டைய தமிழர்களால் உருவோட்டப்பட்ட(sail) கலங்களை பற்றிப் எழுதியிருந்தேன்; வாசித்திருந்தீர்கள்.. இவ்விடையில் நாம் ஈழத்தீவில் வாழும் தமிழர்களுக்கென்று தனிநாடு (தமிழீழம்) கேட்டுப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் (தமிழீழக் கடற்படை என்று அவர்களால் குறிக்கப்பட்டது) போரில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்.. கடற்புலிகளின் மொத்த எண்ணிக்கை: 1000 - 2000 2004 ஆம் அண்டு வரை(கார்த்திகை வரை) வீரச்சாவடைந்தோர் - 1066 பேர் இவர்களால் கடற்சமர்களின் போது ஆடப் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்: வேவ் ரைடர் & வேங்கை சண்டைப் படகுகள் - 20-30 குமுதன் என்ற டோறா தோற்றப் படகு - 2 வோட்டர் ஜெட் படகுகள் - 4 நீர்த் தாரைகள் (water jets) - எண்ணிக்கை அறியில்லை போக்குவரவுப் படகுகள் (transport boats)- 20+ தொலையியக்கி கட்டுப்படுத்தி படகு (remote control boat)-1 (படம் கிடைக்கப்பெறவில்லை) கட்டைப்படகு (Dinghy) - 115+ சரக்குப் படகுகள் (cargo boats)- 25+ ஏனைய ஆடியிழைப் படகுகள்(சகடம், திரிக்கா, சூடை, வெள்ளை,… ) - 75+ (மேற்கண்ட பற்றியத்திற்கு ஆதாரம்: சிங்களத்தால் வெளியிடப்பட்ட "humanitarian(!?) operation factual analysis") உப்பயானம் (Inflatable boat) - 10+ குருவி வகுப்புக் கலன் (Kuruvi class craft) - 10–15 சுப்பர் சொனிக் வகுப்புக் கலன் (Super Sonic class craft) = 15–20 புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோராக்களைப் (mk-III) போல அதிவேகமாக கடலில் ஓடின... ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC , Garmin & Ray Marine ஆகிய கதுவீகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..) கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களைச் சூட்டியிருந்தனர்.. அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன.. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன். அவையாவன, சூடை வகுப்புக் கலங்கள்: சுதர்சன், மது, கருவிழி தாழ் தோற்றுவக் கலன்(LPV): ஊடுருவி- 200G-01 அரை நீர்மூழ்கி: சதீஸ், கோகுலன்-2, கோகுலன்-24, கோகுலன்-45 மிராஜ் வகுப்புக் கலன்: ராகினி, சித்திரா, முத்துமணி, இலங்கேஸ்வரன் குருவி வகுப்புக் கலன்: ஜீவன், 004 நளன், ஜெயந்தன், [குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா (இவை 3ம் பின்னாளில் குண்டுப்படகாகி விட்டன)] சுப்பர் சொனிக் கலன் ஜெயந்தன், சிதம்பரம், மதன் தாங்கி(Tanker) படகு: பழனி, மகேஸ்வரி வோட்டர் ஜெட் வகுப்பு கலன்: நீ-004, பாமா சகடம் வகுப்பு கலன்: செங்கண்ணன், நெடுமாறன் வகை பெயர் அறியா ஒரே வகையைச் சேர்ந்த கலங்களின் பெயர்கள்: அன்புமாறன், ஓவியா, ரகு, செங்கண்ணன் வகை பெயர் அறியா ஒரே வகையைச் சேர்ந்த கலத்தின் பெயர் : பரணி வினியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிவேகப் படகுகள் : வினோத், தர்மன் இந்தப் பாடல் கடற்புலிகள் படகு தள்ளும் போது பாடும் 'ஏலேலோ' மாதிரியான ஓர் பாடல்.. இப்பாடல் அவர்களின் ஓர் திரைப்படத்தில்(கடலோரக் காற்று) இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதை திரைப்படத்திற்காகப் பாடினார்களா இல்லை உண்மையிலே பாடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் கொடுக்கிறேன்.. இது உறுதிப்படுத்தப்படாத செய்தி! (கவிப்படகு வழிமறிக்க டோரா சுக்குநூறு….) கடற்புலி டோரா கரும்புலி வெடிக்கும் ..... (கவிப்) கடற்புலி மோத கரும்புலி வெடிக்கும் .... (கவிப்) கடற்புலி மோத இந்தா ஒண்டு, இந்தா ரண்டு, இந்தா மூண்டு.... ஏஏஏ… மேலும் வாசிக்க: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள் கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக 2)சரக்குக் காவிகளாக கலவர் = தேவைக்கேற்ப — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை மேலே நீங்கள் கண்ட கடற்கலங்களின் சிறிய வகை போல உள்ளது இக்கடற்கலன். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = பச்சை மேற்கண்ட கலத்தின் உட்பகுதி: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது கட்டைப்படகு வகைக் (dinghi class craft) கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக, காவிகளாக, இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP / சில வேளைகளில் 1x40 HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts தாக்குதல் கலங்களாக…. ஆய்தம் = 1x ZPU -1/ 1x 7.62 GPMG கலவர் = 3/4 தொலைத்தொடர்பு = VHF 1) மேற்கண்ட கலத்தினில் இருப்பவர் கடற்புலி அல்ல.. இவர் சிறீலங்காக் கடற்படையின் கலவர். 2) 'கலத்தினில் கடற்புலிகள் ' 3) &4) 'கலங்களில் கடற்புலிகள் ' 5) 'மேலே தெரியும் ஆறு கலங்களும் சண்டைக் கலங்களே.. ஆறிலும் சுடுகலன் பூட்டுவதற்கான தலா ஒரு தண்டு இருந்தது. இவை சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.' 'இதில் சுடுகலன் பூட்டுவதற்கான இரண்டு தண்டுகள் இருந்தன. இது சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.' காவிகளாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் 1)ஆட்காவி 2)சரக்குகாவி 2) 'கடற்புலிகளின் நாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறீலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகள்' — மிராஜ் வகுப்புக் கலன் (Miraj class craft) இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு. ஒரே சமயத்தில் நாற்பது பேரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றவல்லது. நீளம் = 45' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 30 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் 1) 2) வகுப்பு II மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. ஆனால் இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. எனவே, இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட படகாகும். இதே போல இருந்த மற்றொரு படகு இடியனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு உள்ளிணைப்பு மின்னோடிகள்(IBM) இருந்தது அறியப்பட்டுள்ளது. வகுப்பு III பார்ப்பதற்கு மிராஜ் வகையைச் சேர்ந்ததாக தோன்றினாலும் இதன் கடையால் தோற்றத்தால் அதனினின்று வேறுபடுகிறது. மிராஜைவிட பெரிதாக நல்ல உயரமாக உள்ளது. கடையாலில் இரு சுடுகலன்கள் பூட்டுவதற்கேற்ப இரு தண்டுகள் உள்ளன. கடையால் பக்கமாக மிராஜின் கடையாலைக் காட்டிலும் நீளம் குறைவாக மிகவும் கட்டையாக உள்ளது. இதன் மேற்பரப்பில் கோபுரம் போன்று ஏதோ பொருத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. வட்டு வரைக்குமான உயரம்: 5.6' - 5.8 மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது 'மேலே உள்ள கலத்தின் மேல் உள்ள கோபுரம் போன்றதுதான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது' 'மேற்கண்ட கலத்தின் உட்புறத்தோற்றம்' — திரிக்கா வகைப் படகு (Thirikka class craft): இவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:- வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP வேகம் : 25-32 kts இதுவும் கடற்புலிகளின் ஒருவகையான படையேற்பாட்டுக் கலம்தான். இதால் 50 பேர் வரை அவர்களுக்கான படையப்பொருட்களுடன் ஏற்றிச்செல்ல முடியும். இதன் நீளத்தை வைத்துப் பார்க்கும் போது இது மிராஜின் நீளமளவிற்கு இருப்பதாகத் தென்படுகிறது. 1) 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை அதிவேக தாக்குதல் கலங்களாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு (கறுப்பு& மஞ்சள்) ஆய்தம் = 14.5 mm ZPU-1, 1x 7.62mm GPMG கலவர் = 6 1) இக்கலத்தின் கலப்பெயர் பரணி ஆகும் 'அணியம், பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால்' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி= 3 x 200 நிறம் = உருமறைப்பு கலவர் = 07 வேகம் = 30–35kts தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் உயரம் = 3.4' ஆய்தம் = 01 x 20 mm(முன்); 01 x 12.7mm (பின் ); 01 x RPG ; 01 x PK(பின்) 1) 2) 3) இக்கலத்தின் பெயர்: அன்புமாறன் ''அன்புமாறன்' கலத்தின் அடிப்பகுதி' 4)இக்கலத்தின் பெயர்: ஓவியா 'கலத்தின் கடையால்' 'கலத்தில் பின்னிருந்து முன்னோக்கிய தோற்றம்' 5) & 6) இதே போல இருந்த மற்றைய இரு படகுகளின் பெயர்: ரகு & செங்கண்ணன் — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும். 1) 2) — சூடை வகுப்பு கலன் ( Sudai class craft ) இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவைதான் புலிகளால் முராஜ் வகைத் தாக்குதல் கலங்களிற்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டவையாகும். இவை புலிகளிடம் 15- 20 ஆவது இருந்திருக்கலாம் என்று கணிக்கிறேன். இதன் கலக்கூடு பிரசாந்த் வகுப்பைப் போன்றே இருந்தாலும், இவற்றின் பக்கவோரத்தின் மேற்புறமானது இலேசாக உட்புறமாக வளைக்கப்பட்டிருக்கிறது. நீளம் = 35.8' அகலம் = 8.9' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = கறுப்பு, சாம்பல் கலவர் = 6-8 வேகம் = 40–42 kts எடை = 10-kilo tonne கதுவீ =வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = ZU-23 mm/20mm (முன்), 1x GPMG(பின்), 1x12.7mm(பின்), 1xRPG 1) 2) 3) 'சூடை கலத்தின் தோற்றம்' 'கலத்தின் கடையால்' 4.இவற்றின் ஒருசிலவற்றின் மீகாமன் இருப்பிடத்திற்கு கூடும் போடப்பட்டிருந்தது 5) & 6) — சகடம் வகுப்புக் கலன்(Sahadam Class craft) இவை பார்ப்பதற்கு சூடை வகை போன்று தென்பட்டாலும் இவை அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை போக்குவரத்திற்கும் வழங்கலிற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றினது கலப்பெயர் **திரு கி.கண்ணன்** ஆகும் வெளியிணைப்பு மின்னோடி = 3x200Hp நிறம் = பச்சை, சாம்பல், உருமறைப்பு வேகம் = 30kts (புலனம் கிடைத்த இடம்: கடற்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col) சூசை வழங்கிய நேர்காணல்) கலவர் = தேவைக்கேற்ப தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 20mm / .50cal M2 Browning(முன்), Pk (பின்), 1xRPG 1) 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' → இதன் பெயர் திரு.கி கண்ணன் என்பதாகும் 2) 3)மற்றொரு கலத்தின் பெயர் நெடுமாறன் என்பதாகும். இதைவிடவும் இன்னும் பல கலங்கள் புலிகளிடம் இருந்தன. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இதன் கலப்பெயர் அதன் கலவோட்டில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. இக்கலமானது மேலே உள்ள கலத்தைப் போலவே பார்வைக்கு தோன்றினாலும், அதனினின்று முற்றிலுமாக வேறுபட்டது. மேற்கண்ட கலத்திலிருந்து இக்கலத்தின் - பக்கவோரங்கள் மிகவும் சிறியவை; மீகாமனறை மிகவும் உயர்ந்தது; அணியப் பக்கவோரங்களில் கட்டைகள் உள்ளன; பிடிகம்பிகள் இதற்கில்லை - ஆகியன வேறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்க. இப்படகு 1994 அ 1995 காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது(தேசியத் தலைவரின் சீருடையின் நிறம் இக்காலத்தைச் சேர்ந்ததே. அதற்குப் பின்னர் இந்நிறம் மாறிவிட்டது.) 1) 'இவ்வகைக் கலத்தின் முழுப்படம்' 'இவ்வகைக் கலத்தின் முழுப்படம்' 'முதன்மைச் சுடுகலன்' 'முதன்மைச் சுடுகலன்' கடையால் வேவ் ரைடர் மற்றும் தல்ராஜ் வகைப் படகுகள்: குமுதன் டோறா வகுப்புக் கடற்கலன் : — வோட்டர் ஜெட் சுற்றுக்காவல் படகுகள் (Water Jet patrol boat) இவை சிறீலங்காக் கடற்படையிடம் இருந்து விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும் நீளம் = 13.5m அகலம் = 3m உயரம் = 1m வேகம் = 40 kts நிறம் = உருமறைப்பு தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் =1x 12.7mm(பின்), 1x 12.7/20mm(முன்) கலவர் = 8–12 கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200 HP 1)இங்கே நீங்கள் கீழே பார்க்கும் கலத்தின் பெயர் : {ச _(இது ஒரு மெய்யெழுத்து) _ _ } ஆக மொத்தம் நான்கு எழுத்துக்கள் உள்ளன. 2) கலத்தின் பெயர் நீ-004/ பாமா 3) இக்கலத்தின் பெயர் தெரியவில்லை 'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன' 4) இதன் முன்புறத்தில் முதன்மைச் சுடுகலம் தவிர இருபக்கவாட்டிற்கும் இரு இயந்திரச் சுடுகலன்கள்(7.62 மி.மீ) பொருத்தப்பட்டிருந்தன. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது Air duplication craft ஆகும். இவ்வகைக் கலங்கள் சரக்குக்காவிக் கலங்கள் ஆகும். இக்கலங்கள் பெரிய கப்பல்களில் இருந்து ஊர்திகளை கரைக்குக் கொண்டுவரப் பயன்பட்டன. நீளம் = 42' அகலம்= 16' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு, பச்சை கலவர் = 4 வேகம் = 30 kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = சிறியளவிலான ஆய்தங்கள் — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft) இவ்வகைக் கலங்கள் ஆட்காவி அ சுற்றுக்காவல் கலங்களாகும். நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = சுற்றுக்காவல் - 3/4 ஆட்காவி - பணியைப் பொறுத்து ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk 1) 2) 3)&4) 5)இது இரட்டை வெளியிணைப்புப் பொறி கொண்ட படகாகும் 6) இப்படகிற்கு மீகாமன் இருக்குமிடத்திற்கு சாளரம் போல ஆடி(glass) பூட்டப்பட்டுள்ளது. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை 1) 'வலப்பக்கத்தில் உள்ள கடற்கலன்தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்தது ' 2) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை கலவர் = 3 ஆய்தம் = 1x.50cal/14.5mm single barrel(முன்) & 1xRPG(தனியாள்) 1) 2) 'கடையால் பார்வை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை முன்பகுதியில் சரக்கறைகள் இருக்கின்றது. கலவர் = 5-6 ஆய்தம் = 1x.50cal/14.5mm single barrel(முன்), 1xpk/lmg(பின் இடது மூலை) & 1xRPG(தனியாள்) 1) 2) — சுப்பர் சொனிக் வகுப்புப் படகுகள் (Super Sonic class boats) இவை புலிகளின் தாக்குதல் கலங்களாகவும் சுற்றுக்காவல் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்ட படகுகளாகும். இவற்றில் புலிகளிடம் இரு விதம் இருந்தது. நீளம் = 16 அடி(ஒரு சில படகுகளில் கதுவீ(RADAR) இருந்தது) ஆய்தம்: 16 அடி = .50 mm (முன்) கலவர் 16 அடி = 3 வேகம்: 16 அடி = 20–25kts வெளியிணைப்பு மின்னோடி: 16 அடி = 1 x 200 HP/ 2 x 200 HP தொலைத்தொடர்பு = VHF நிறம் = உருமறைப்பு, பச்சை, நீலம், கறுப்பு இப்படகின் வரலாறு மிகவும் சுவையானது.. தன்துரையை அழிக்க தானே துணைபோன பெருமை இப்படகினைச் சேரும். அதாவது ஈழக் கடற்போரியல் வரலாற்றில் கடற்புலிகள்தான் முதற் தடவையாக 16 அடி நீளக் கலன்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். பின்னர், அதனை கைப்பற்றி கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அதன் வலுவைப் பயன்படுத்தி புலிகளுடனான கடற்போரில் பெரும் திருப்பங்களை விளைவித்தது எனலாம்… ஆனால் இன்று சிங்கள அரசாங்கமானதோ அதனைத் தானே முதன்முதலில் புதுப்புனைந்ததாக(invent) உலகரங்கில் கூசாமல் பறைகிறது... சரி அப்படியென்றால் இது எப்படி சிங்களப் படைகளின் கைகளுக்குப் போனது? .. சுருக்கமாகப் பார்த்து விடுவோம், வாருங்கள்… https://globalecco.org/ctx-v1n1/lashkar-e-taiba?p_p_auth=KcgCT0Hx&p_p_id=101&p_p_lifecycle=0&p_p_state=maximized&p_p_mode=view&_101_struts_action=%2Fasset_publisher%2Fview_content&_101_assetEntryId=611601&_101_type=content&_101_urlTitle=learning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers&redirect=https%3A%2F%2Fglobalecco.org%2Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers%3Fp_p_id%3D3%26p_p_lifecycle%3D0%26p_p_state%3Dmaximized%26p_p_mode%3Dview%26_3_keywords%3Dsea%2Btigers%26_3_struts_action%3D%252Fsearch%252Fsearch%26_3_redirect%3D%252Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers அது ஆழிப்பேரலை வந்து முடிந்த முதலாம் ஆண்டு. சிறிலங்காப் படைகளின் சிறப்பு படகு சதளம் (special boat squadron) என்னும் சிறப்புப் பிரிவு 2006 ஆம் ஆண்டு முடியன்செலகே பந்துள திஸ்ஸநாயக்கே என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் படகு கட்டுமானத்தளம் இருந்த காட்டு இடத்துக்குள் ஆழஊடுருவி அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 16-அடி நீள படகினை தோண்டி திருகோணமலைக்கு எடுத்துச் சென்றனர்.. பின்னர் அதை மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் மீளுருவாக்கம் செய்து தற்போதைய அம்புப்படகுகள் என்னும் அதே 16 அடி நீளப் படகுகளாக வடிவமைத்தனர். https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254 இதில் இப்போது 18 அடி, 23 அடி என்று மேலும் இரண்டு புதிய விதங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதன் இப்போதைய பெயர் செட்ரிக் சுற்றுக்காவல் கலன் ஆகும் (பழைய அதிகாரியின் பெயரால்…) ஆக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், இங்கு யார் புதுபுனைவர்கள் என்று! சொந்தமாக உருவாக்கியதாகவே கூசாமல் பரப்புமை...!.. ம்.. மக்களே, போரில் இரிபுநாட்டின் செல்வத்தையெல்லாம் வாகைநாடு சூறையாடுவது பரவலானது.. ஆனால் இதுகால் வரை சொந்தமாக ஒன்றினையும் உருவாக்காமல் தோற்றவனிடம் இருந்து ஊரறிந்த ஒன்றினை எடுத்துவிட்டு அதைப் புதுப்னைந்தவனே நான்தான் என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் வாகைநாட்டை என்னவென்று விளிப்பது? ஆதாரங்கள் பின்வருமாறு: எனக்குக் கிடைத்த புலனங்கள் அடிப்படையில் இவையெல்லாம் 2006 ஆம் காலப்பகுதிக்கு முன்பாக எடுக்கப்பட்ட நிழற்படங்கள் என்று உறுதியளிக்கிறேன்… 1) 'கடற்புலிகளின் 16 அடி நீளக் கலன் | தவளை நடவடிக்கையின் போது' 2) 'சம்பூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படகு' 3) 'கடற்புலிகளின் 16 அடி நீளக் கலங்கள்' 4) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே கடற்புலிகளின் கலத்தினைப் பாருங்கள். கீழ்கண்டது கடற்புலிகளின் 16 அடி நீளக் கலமாகும். இக்கலன் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெருகல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். படம் மட்டக்களப்பில் எடுக்கப்பட்டதாகும். 'இக்கலத்தினை நன்கு உத்துப் பாருங்கள். முன்னால் பின்னால் சுடுகலன்கள் பூட்டுவதற்கு ஏற்ற தண்டுகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன' 5) கீழ்கண்டது கடற்புலிகளின் 16 அடி நீளக் கலமாகும். இக்கலத்தின் பெயர் அதன் கூட்டில்(hul) எழுதப்பட்டுள்ளது.. ஆனால் கட்புலனாகவில்லை. இது 2000 ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும். 6) 7) மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சிங்களத்தின் படகினைப் பாருங்கள். படியெடுக்கும் இயந்திரத்தில் (photocopy machine) போட்டு எடுத்தது என்று மட்டும் நினைக்க வேண்டாம் …./\… 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 16' அம்புப் படகு' | படிமப்புரவு : Sri Lanka "Arrow" RAB it was designed... - The Boats of Warboats ..., Facebook அடுத்து சிங்களவரின் 23 அடி நீளக் கலங்களையும் காண்போம். இந்த 16 அடி அம்புப் படகுகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 23 அடிக் அம்புக் கலங்களாகும். 'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு | படிமப்புரவு: RP Defense - Overblog' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இதுவும் கடற்புலிகளிடம் இருந்த ஒரு வகைக் கலன். நீளம்: 17.3 அடி அகலம் : 3 அடி கலவர் : 1–2 வேகம்: 25–30 kts வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகையைச் சேர்ந்த கடற்புலிகளின் கலமாகும். இவ்வகையிற்குப் புலிகள் பெயர் சூட்டினார்களா என்பது தெரியவில்லை. இதன் கலக்கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலில் நல்ல வேகமாக உருவோட முடியும்.. வெளியிணைப்பு மின்னோடி = 3 x X 1. 'அணியம்' 'கடையால்' 2. இதன் கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. வெளியிணைப்பு மின்னோடி = 1 x X 'கடையால் மூலைப் பார்வை' 'அணியத்தோற்றம், இழுவையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது' 'அணியத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' 'கடையால் தோற்றம்' இஃது இரட்டை கூடு கொண்ட ஓர் கடற்கலனாகும். வெளியிணைப்பு மின்னோடி = 1 x X மேலே உள்ளது தான் கீழே உள்ளது:- 'பின்பகுதி' 'அணியம்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இது ஒற்றை இருக்கை கொண்ட , முக்கூட்டினை உடைய ஒரு சரக்குக் காவிக் கலனாகும். இதுவும் முக்கூட்டினை(tri hull) உடைய படகாகும். வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250HP வேகம் = 40–50 kts கலவர் = பணியைப் பொறுத்து 'பின்னிருந்த பார்வை' முன்னிருந்த பார்வை' பக்கவாட்டுப் பார்வை மேல்நோக்கிய அடிப்புறப் பார்வை கலத்தின் அணியம் கலத்தின் அணியம் பக்கவாட்டு சத்தார் பார்வை மேலிருந்து பின்புறச் சத்தார் பார்வை பின்புறப் பார்வை பின்புற சத்தார் பார்வை முன்பகுதி உட்புறம் மேலிருந்து சத்தார் ஓட்டியிருக்கைப் பார்வை நடுப்பகுதி உட்புறம் 'நடுப்பகுதி உட்புறம்' 'ஓட்டி இருக்கை' 'ஓட்டி இருக்கை' — ஆழ்கடல் மீன்பிடிப் படகு முன்னொரு காலத்தில் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்களை படுகொலை செய்தும் கைது செய்து காணாமல் போகவும் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த காலத்தில் மீனவர் தொழில் செய்வதில் பெரும் பின்னடைவைச் சந்தித்தித்திருந்தனர். பொதுமக்கள் சந்தைகளில் அதிக விலை கொடுத்தும் மீன்களை பெற்றுகொள்ள முடியாதிருந்தது. அதனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடற்புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய கடற்கலங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினர் . அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய கடற்கலங்கள்தான் இவையாகும். வகை: படகு 1) 2) கலப்பெயர்: அன்னை வேளாங்கண்ணி 3) 4) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'வெளிப்புறம்' 'உட்புறம்' 'வெளிப்புறம்' வகை: வள்ளம் 1)கலப்பெயர்: அந்தோணி. வகை: பாதை நீளம்: 30அடி இவ்வகைக் கலங்கள் புலிகளிடம் 5 இருந்தது. 1) & 2) 3) & 4) 5) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும். நீளம்: 80+ அடி 'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்' 'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று! 'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன். 'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை: இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை' — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை பார்ப்பதற்கு ஆட்காவிக் கடற்கலன் போன்று உள்ளது... இதே போன்று 2 கடற்கலங்கள் சிறீலங்காத் தரைப்படைகளால் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. 1) — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இக்கலத்தினைப் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் தெரியவில்லை — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை படகு வகையைச் சேர்ந்த புலிகளின் ஓர் கடற்கலன்.. கதுவீ = வட்டு வடிவம் ஆய்தம் = 2x 7.62 mm 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை... படத்தின் முன்னே தண்டு போல நிமிர்ந்து நிற்பது சுடுகலன் தாங்கி.. பின்னால் தெரிவது கதுவீ' ' 'முதலில் தெரிவது சுடுகலன் தாங்கி.. அதற்குப் பின்னால் தெரிவது கதுவீ'' 'படகில் இருந்த இரும்புச் சட்டகத்தில் மேலே உள்ளது போன்ற இரும்பு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன.. பயன் தெரியவில்லை' இது ஒரு வலிப்பு படகு(rowing boat). இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல். நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women diver) உள்ளனர். — உப்பயானம் (Inflatable boat) / இறப்பர் படகு (Rubber boat) இக்கலங்களுக்கு புலிகள் எப்பெயரும் சூட்டவில்லை. இது ஆட்காவுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நீளம் : 15'- 17' கலவர் : தேவையைப் பொறுத்து வெளியிணைப்பு மின்னோடி = 1 x <150 HP நிறம் = சிவப்பு, நீலம், சாம்பல் — மிதவைகள் (floaters) இந்த உப்பயானத்தில் அமர்ந்திருப்பவர்கள் கடற்சிறுத்தைகள் (sea leopard commandos) ஆவர். இவர்களின் கையில் இருப்பது ஒரு மிதவை ஆகும். இதனுள் ஆய்தங்கள் வைக்கப்பட்டிருக்கும்.. மேலும் இதைப் பயன்படுத்தி நீரினிலும் மிதந்து நகர்வார்கள். 1) 2) கீழே நீங்கள் பச்சை நிறத்தில் பார்ப்பது ஒரு காற்று நிரப்பப்பட்ட ஒரு வகையான மிதவை.. அருகில் நின்று ஆர்.பீ.ஜி -ஆல் அடிப்பவர் ஒரு கடற்சிறுத்தை வீரர் ஆவர். இந்த காற்று நிரப்பப்பட்ட பையானது நீள்சதுர வடிவிலானது ஆகும். 3) கலத்தின் மீகாமன் அறையில் செம்மஞ்சள் நிறத்தில் தொங்கிகொண்டிருப்பது இன்னொரு வகையான மிதவையே — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை இவை எல்லாம் ஒரு தாழ் மட்ட கடற்கல (Low planing Vessel) வகையினைச் சேர்ந்த கலங்களாகும். இவற்றின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இவை ஊடுருவல் கலங்களாக(infiltration crafts) இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கலங்களில் இருக்கை போன்று ஒன்று நடுவில் உள்ளது. கலவர் = 1–2 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP ஆய்தம் = GPMG 7.62mm (முன்) 1. 2. பின்பக்கத் தோற்றம்: 'அடிப்புறம்' 3. 'சத்தார் பக்க வாட்டுத் தோற்றம்' தாரைச்-சறுக்கு (Jetski): 1) 2) இது எறிகணை வீச்சில் சிதைந்துவிட்டது. water scooter: 1) 2) மிதக்கும் பாலம்:- இது வெறுமையான பெற்ரோல் கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அவற்றை ஒன்றாகப் பிணைத்து அதன் மேல் நன்கு வலமான மரப்பலகைகள்(முதிரை போன்ற) போடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் தமது ஊர்திகள் மற்றும் பாரமான பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்திய தட்டைப்படகு கடற்புலிகளின் கலன் சோதனை இடம். நீளம்: 100 அடி உயரம்: 10 அடி கலையரசன் நீரடி நீச்சல் பயிற்சித் தடாகம் இது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு போராளிகளை கடலில் பயிற்சி எடுப்பிப்பதற்கு முன்னர் பயிற்றுவிக்கும் இடமாகும். இது 83 அடி நீளமும் 23 அடி ஆழமும் கொண்டதாகும். இது 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று சிறிலங்கா படைத்துறை கூறியுள்ளது. இதன் மேலுள்ள அந்த கம்பிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் உருமறைப்புகள் (தரப்பாள், மற்றும் இன்னபிறவன) வானிலிருந்து வேவெடுக்கும் போது இதை உருமறைக்கும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது பற்றிய ஒரு நிகழ்படம்(video) கீழ்கண்ட இந்த இழுவைகளில்தான்(trailer) புலிகள் தங்களின் படகுகளை ஏற்றி வைப்பார்கள்.. தேவை வரும்போது இவற்றினை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்வார்கள். பின்னர் அங்கு உள்ள ஓர் ஊர்தி ஒன்றின் மூலம் கரையில் உள்ள மண்ணை தோண்டி அதன் மூலம் கலத்தினைக் கடலினுள் இறக்கிவிடுவார்கள்.. அந்த இறக்கும் ஊபின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம் 'கடலினுட் கலத்தினை இறக்கும் அந்த ஊர்தி' 'அந்த ஊர்தி' அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர். 'படகுகாவிகள் எ இழுவைகள்' 'படகுகாவி எ இழுவை' இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை! இறுதியாக…………….. 'கடல் தன்னில் அலைமீது கவிபாடி விளையாடி புவியாளச் சென்றவரே! - உங்கள் உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு எமை ஏங்க வைத்தவரே!' — கடற்புலிகளின் குறுவெட்டிலிருந்து… நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. உசாத்துணை: https://eelam.tv/ - ஈழத்தமிழர்களின் யூடியுப் போன்றதொன்று Commentary #77) Sundayobserver.lk - Sri Lanka கடலோரக்காற்று - திரைப்படம் உப்பில் உறைந்த உதிரங்கள் - திரைப்படம் http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf EelamView (EelamView) Sea Tigers of the LTTE | Richard Pendavingh) The Island (The Island) (Learning from Our Enemies: Sri Lankan Naval Special Warfare against the Sea Tigers) http://boatswainslocker.com/customer/boloin/customerpages/jetbriefs/HJ_JB427_Sri_Lankan_Patrol_Fleet.pdf Lost Victory (Lost Victory) http://www.fak.dk/en/news/magazine/Documents/ISSUE%2002,%20VOLUME%2002/Whither_the_Hybrid_Threat.pdf புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…! (https://eelavarkural.wordpress.com/2017/06/03/sea-tigers/) LTTE Suicide Boat Found (LTTE Suicide Boat Found) https://www.researchgate.net/figure/Text-accompanying-the-swimming-pool-Source-Author-photo-2013_fig4_276886367) புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் (https://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html?m=0) தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/28219-5-a/) புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா? (புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா?) H I Sutton - Covert Shores (H I Sutton - Covert Shores) IDA71 - Wikipedia (IDA71 - Wikipedia) Stealth boats, mini subs of the LTTE(with janes video) (Stealth boats, mini subs of the LTTE(with janes video)) The last ‘Admiral’ from http://H.M.Cy.S. Coastal Forces (The last ‘Admiral’ from H.M.Cy.S. Coastal Forces) Dossier on weapons of ltte- pdf புலிகளின் மக்கள் சேவைப்படகு போர் காயங்களுடன் அனாதரவாக கிடக்கின்றது!. கடற்படையினரின் கட்டுப்பாட்டு வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தோணிகள் Sea Tigers – Wikipedia கடற்சிறுத்தை பெண்புலி நாதினி. | ஒருபேப்பர் http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf படிமப்புரவு (image courtesy) பெருமளவான படிமங்கள் YouTube இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும் Galledialogue 2019 http://eelamaravar.com Mapio.net IDA71 - Wikipedia தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு TripAdvisor JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Richard Pendavingh ResearchGate Getty Images Wikimedia Commons H I Sutton - Covert Shores YouTube SBS and RABS breaking new grounds Thuppahi's Blog - WordPress.com: Create aFree Website or Blog (http://WordPress.com) Photography Unit of Liberation Tigers (http://aruchuna.com) Eelam Archives on Twitter https://twitter.com/EelamArchives/status/1254396048505798661/photo/1) Getty Images Home (https://www.uyirpu.com/) Steemit (http://steemit.com) LankaWeb News Eela Malar Pulikalin Kural - Pulikalin Kural (http://pulikalinkural.com) https://www.army.lk/ (https://www.army.lk/) http://tiger.javon.us (http://tiger.javon.us) Web Page Under Construction (http://TamilNation.com) EelamView (EelamView) Aruchuna (Photography Unit of Liberation Tigers) Enjoy free comfortable tools to publish, exchange, and share any kind of ocuments online! Explore Sri Lanka (Emerging Out Of The Shadows) Lakdasun Trip Reports Archive Navy Museum - Trincomalee (Navy Museum - Trincomalee) Al Jazeera http://HISutton.com (http://HISutton.com) Sri Lanka: Sea battle (Sri Lanka: Sea battle) Two more LTTE Suicide Boats & Three Vehicles Found (http://WikimediaCommons.com) (no title) Sri Lanka Navy Museum - Captured LTTE Boats) (https://puliveeram.wordpress.com/2018/12/12/ltte-made-weapons/#jp-carousel-37657) http://Flickr.com (http://Flickr.com) EagleSpeak (EagleSpeak) http://www.shunya.net/Pictures/SriLanka/Vanni-East/Vanni-East.htm)) This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. H I Sutton - Covert Shores) Log In or Sign Up LTTE smuggling of diesel and cement foiled in Pesalai கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு. http://www.வேர்கள்.com தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் http://flickr.com - kumaran satha ரூபபாகிணி தொலைக்காட்சி - சிங்களம் TamilNet ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 5 replies
-
- 1
-
-
- tamil rebels navy
- மிராஜ்
-
(and 30 more)
Tagged with:
- tamil rebels navy
- மிராஜ்
- தல்ராஜ்
- rebel navy
- tamil tigers navy
- விடுதலைப் புலிகள்
- ஈழப் புலிகள்
- tamil new tigers
- tamil tigers
- eelam rebel navy
- புலிகள்
- sri lankan navy
- கடற்புலி
- asian rebels navy
- eelam tigers
- sea tigers
- கடற்புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- naval wing of ltte
- விடுதலைப்புலிகள்
- naval wing of tamil tigers
- ltte navy
- eelam navy
- tamil navy
- தமிழீழ கடற்கலன்கள்
- கடற்கலன்
- ltte sea tigers
- eelam tamil navy
- maritime armed wing of ltte
- பண்டைய தமிழரின் கடற்கலன்கள்
- தமிழரின் கடற்கலன்கள்
- ltte miraj class boat
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with:
-
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- விடுதலைப் புலிகள்
-
(and 1 more)
Tagged with: