Search the Community
Showing results for tags 'தமிழீழம்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 845 replies
-
- 7
-
-
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
-
(and 49 more)
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத் தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 304 replies
-
- 1
-
-
- தமிழீழம்
- தமிழ் ஈழம்
-
(and 26 more)
Tagged with:
- தமிழீழம்
- தமிழ் ஈழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
-
கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" திரும்பியது வேரறுந்த வாழ்வு! "அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று! அன்றாடங்காய்ச்சிகள் முதல் அன்னைமண் காத்தோர் வரை உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் உதித்திட முன்னரே காவுகொண்டாய்! புத்தனை வணங்கிய பேய்கள் ஓய்ந்தனவென்றிருக்க, புதுப்பேயாய், நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ? தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்) அவர் நடந்த கரையோரம், திரைதொட்ட காலம் மலையேறிட, அவர் கிடக்கக் கரையெங்கும், திரைதொட்ட காலமானதன்று! நாம் நத்தார் நாளில் திழைத்திருக்க, நம் வீதிபோட வந்தவை எம்மைத் தூக்க, உலையேற்றக்கூட வழியின்றி திரும்பியது வேரறுந்த வாழ்வு! --> நன்னிச் சோழன்
- 4 replies
-
- சுனாமி கவிதை
- இலங்கை
-
(and 1 more)
Tagged with:
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1982 - 20 நவம்பர் 2008 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,390 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 6)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'பாதையும் தரவை ஒலிமுகமும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' கனகபுரம் ஒலிமுகம்: 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதந்தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' ஏனைய 8 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) https://www.tamilwin.com/articles/01/199494http://eelamhouse.com/wp-content/uploads/2010/08/MaaveerarNaalKaiyedu.pdfhttps://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it https://www.tamilwin.com/articles/01/199494 https://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it படிமப்புரவு vimeo seatigers 85% screen shot only எழுத்து & வெளியீடு நன்னிச் சோழன்
- 4 replies
-
- நினைவுக்கற்கள்
- மாவீரர் நாள்
- (and 9 more)
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)….. வணக்கம் தோழர்களே.. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்.. கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்…….. கூடுதல் தகவல்கள்: https://yarl.com/forum3/topic/258290-புலிகளின்-உள்நாட்டு-உற்பத்தி-சேணேவிகள்artillery-மற்றும்-உந்துகணைகள்-ஆவணம்/ நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து… ' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு. இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். ' கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention) இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல. அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (புலன கிட்டிப்பு:புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan. ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்: முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்? பெண்கள்: மார்பகம் இடை மரும பகுதி ஆண்கள்: நெஞ்சு இடை இவற்றில் இரு வகையுண்டு.. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும். ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)' 'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்' கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர். மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை. அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும். 'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து' 'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்' ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்! 'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி' பல்வேறு வகையான வெடியுடைகள்: இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟 கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்: 'படிமப்புரவு: Where global solutions are shaped for you' மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com' இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :- 'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.' பெண்களுக்கான 'pantie வெடியுடை:- தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்: மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles) 1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி: 2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி: இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle) 1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle) அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன. இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில். செண்பகம் குறிசூட்டு துமுக்கி: செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி: 'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்' உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle) 1) இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 2) இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்) (படிமம் கிடைக்கப்பெறவில்லை) இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun) 1) இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை. துமுக்கி எறிகுண்டு (rifle grenade) 1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade) வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை: 100g உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1 நெடுக்கம் : 100 மீ அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988 மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2 தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர் இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது. அருள்-89 விதம்-I அருள்-89 விதம்-II அருள்-89 விதம்-III அருள்-89 விதம்-IV போருக்குப் பின்னான காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வேறுபாடான அருள் வகையைச் சேர்ந்தது எனச் சந்தேகிக்கப்படும் வெடிபொருள். கைக்குண்டு (hand grenade) 1) குணா கைக்குண்டு (Kuna hand grenade) இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும். 2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade) புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) வெடிமருந்து: TNT வெடிமருந்து நிறை: 50–100g நிறம்: பச்சை & நீலம் இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும். Can Charge - கான் சார்ச் தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம். இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன். 'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து' இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்) உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun) 1) இது ஒரு விதமான மூன்று AK-வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. முன்பக்கம்: பின்பக்கம்: 'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)' 2. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள துமுக்கி என்னவென்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது… உள்நாட்டு 30 மி.மீ சுடுகலன் (indigenous 30 mm gun) புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது 30 மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது.. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்.. இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது. புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-I (Pulikkutti 30mm gun Mk-I) இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது. பக்கவாட்டுத் தோற்றம்: 'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி' 2) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-II (Pulikkutti 30mm gun Mk - II) இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது. 3) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்- III (Pulikkutti 30mm gun Mk-III) இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர். ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே வடிவமைத்துள்ளனர். உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான ஏவரிகளை விளைவித்துள்ளனர் என்பது பெரும் வியப்பான விடையமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் ஏவரிகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மானுறுத்தும் ஏவரிகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவரியை ஏவி அதன் பாதையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலையியக்கி (remote control) மூலம் இயக்கக்கூடிய ஏவரிகளை புலிகள் துல்லியமாக விளைவித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, ஏவரியைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுனது. 2009 ஆம் ஆண்டு புலிகள் அழியும் வரை உலகிலே இவ்வகையான பாரிய வலிமையான ஏவரிகளை உடைய ஒரே இயக்கம், புலிகள் மட்டுமே . அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான சுடுகல சன்னங்களைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற பாரிய ஆய்தங்களை மிக இலகுவாக மானுறுத்தக் கற்றுக்கொண்டனர் மலைப்பான குறிப்பிடத்தக்க விடையமாகும். இது சிங்கள தேசத்திற்கு வெட்கக்கேடான ஒரு செய்தியாகும். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்' 4) இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது. 1) என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை. கண்ணிவெடி (Mine): இவையெல்லம் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்! கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கொச்சரையர்(கப்டன்) கொலின் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. 2) 3) 4) Limpet கடற் கண்ணிவெடி 5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine) கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் . 6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine) 7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி இதன் பின்பகுதி: ஆளெதிர்ப்பு கண்ணிவெடி(anti-personal mine) : புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine) 1) ஜொனி 95 (johny 95) புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன் மொத்த நிறை : 250g வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை : 30 g 'தாட்டும் போது இருக்கும் நிலை' 'வெடிக்கும் போது இருக்கும் நிலை' 'முன்பக்கத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும். ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் . ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். செய்முறை: துருவி இணையத்தளத்தில் இருந்து…. 'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.' 2) ஜொனி 99 (Johny 99) / ரங்கன் 99 (Rangkan 99) புதுப்புனையபட்ட ஆண்டு: 1999 வெடிமருந்து : 150g TNT உயரம்: 9cm அமுக்க நிறை (pressure weight): 6kg கொளுத்து அமைப்பு: விற்சுருள் மூலம் இயக்கப்பட்டு பந்துமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது (spring operated ball controled). இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured).. இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும். 3)ஜொனி மின்சார மிதிவெடி (johny electric APA) இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இதைக் கையாள முயன்றால் வெடிக்கும், எனவே ஜொனி மின்சார மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும். இது அம்மா 2000 ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது. 'ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் detonator' . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) 4)தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM) இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு. 5) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) 6)தமிழன் மிதிவெடி (Thamizhan APM) புதுப்புனைந்தவர்: கேணல் சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) இதைத் தவிர வேறு படிமங்கள்(images) என்னிடம் இல்லை! 'படிமப்புரவு: எதிரி இணையம்' 7)டப்பி மிதிவெடி (Dappi APM) இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர். வகை - 1:- வகை - 2:- திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine) அமுக்கவெடி (claymore) 1) செந்தூரன் 96 (senthuran 96) தாக்கும் ஆரை: 80 பாகை மொத்த நிறை : 10kg வெடிமருந்து : c4 இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர். 2) பகலவன் (Pakalavan) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) மொத்த நிறை : 2.5 kg விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது. இதற்கான தொலையியக்கிகள்: 3)இராகவன் (Irakavan) உயரம் : 100cm விட்டம் : 75cm மொத்த நிறை : 54kg தாக்கும் ஆரை: 360 பாகை வெடிமருந்து நிறை : 44kg (TNT) ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு) வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control) இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும். இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று! 4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore) மொத்த நிறை: 25kg 5)தோழநம்பி 2000 (Thozanampi 2000) மொத்த நிறை: 15kg தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது . 6) பவான் 99 (Pavaan 99 ) மொத்த நிறை: 15.5 kg இது கப்டன் பவான் அ ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற அமுக்கவெடி ஆகும். மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine) 1)இளவழுதி (Ilavazuthi) மொத்த நிறை : 5kg தமிழீழ மானுறுத்தமான இது மின்சார துள்ளல் கண்ணிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ETM மதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கண்ணிவெடி அகற்றுபவர்களாலும் கண்ணிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ETM என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும். 'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது இதில் இரு விதம் இருந்தது: இளவழுதி 1 (ETM 01) இளவழுதி 2 (ETM 02) உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines) 1) கீர்த்தன் (Keerththan) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். 1)சலாகை அமுக்கவெடி (salakai) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine) 1) அம்மா 2000 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 2000 anti-tank mine) மொத்த நிறை: 11 +/- 2.2 வெடிமருந்து : TNT(45%), RDX(55%) உயரம்: 13 cm அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும். அம்மா 2000 இன் பக்கவாட்டுத் தோற்றம்: . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை. 2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine😞 லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும். இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். 3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine). 4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine). 5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine). சிறியவகை ஊர்திகளுக்கான மதிவெடி. 6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine) சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது. 7)பெயர் தெரியவில்லை! 8)செந்தூரன் 2000 (Senthuuran 2000) ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி... பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும். தடைவெடி('Bangalore torpedo 'like torpedos' ) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தென்னவன் தடைவெடி(Thennavan torpedo) 2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo) 3)குருவி தடைவெடி(Kuruvi torpedo) இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது. 4) மாயவன் தடைவெடி(Maayavan torpedo) சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள். 5)சாந்தகுமாரி தடைவெடி(Saanthakumaari torpedo) விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 6) ரங்கன் தடைவெடி(Rangkan torpedo) ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடிஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1995ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்: இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்! முன்பகுதி: பின்பகுதி: 2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது 3) & 4) 5) 6) காந்தக் குண்டு (magnet bomb) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது. செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device) 1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED ) இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை! 2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED) வெடிமருந்து: TNT 3) 4) 5) 6) 7) 8 ) 9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive) 10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED) 11) அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம். வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்: இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf சூழ்ச்சிப் பொறி (booby traps) 1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. (நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்) 2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap) 'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்' 'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி' 3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap) 4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap) புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும். 5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap) 6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான். 7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது. சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்.. (இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே) வில்லுகள் - படைக்கலங்கள்(Munition) தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14) அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar) சாரை - KPV அப்பாச்சி - 14.5mm ZPU-1 பூமா - 14.5mm ZPU-2 ஆலை - 37mm T- 65/74 (M1939) டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL) மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL) பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் ) 97 - M16 ஒலிகன் - Oerlikon 20mm Cannon வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை → இனி வருபவை அனைத்தும் புஸ்பகுமார் சற்குணநாதன் அவர்கள் அளித்த தகவல்கள்: XR2 - RPG 29 நாயகன் - M141 BDM 17 - FGM 172 Javelin & FGM 172B உசாத்துணை dossier on ltte weapons - pdf மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…! - தொடர் கட்டுரை மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 The story of Thambimuththus (SAMs) (The story of Thambimuththus (SAMs)) (https://www.army.lk/news/troops-led-unearth-two-more-ltte-torpedoes-0) (தென்னாசியாவே பார்த்து நடுங்கிய விடுதலை புலிகளின் நீர்மூழ்கி ஏவுகணை!!) https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf இந்திய இராணுவத்தை தடுத்து நிறுத்திய ஜொனி - துருவி Type 53 torpedo - Wikipedia Shershen-class torpedo boat - Wikipedia Torpedo tube - Wikipedia கிளைமோர் - தமிழ் விக்கிப்பீடியா ரங்கன் 99 - தமிழ் விக்கிப்பீடியா அம்மான் 2000 - தமிழ் விக்கிப்பீடியா SLAF Recoveries in the Pudukuduirippu area yarl Tamileela seithikal. No . 40_0- August 1990 படிமப்புரவு * dossier on ltte weapons - pdf ruupabahini * https://www.cartagenasummit.org/fileadmin/APMBC-RC2/regional-conference/Bangkok_WS/Bangkok-ClearingMine-2April2009-SriLanka-SL.pdf கரிகாலன் garikaalan) Banner | National Mine Action Center, Sri Lanka) * Mapio.net (Mapio.net) * http://youtube.com/watch?v=2kKYXvVBG_Y * YouTube (YouTube) * CAT-UXO - Rangan 99 landmine (CAT-UXO - Rangan 99 landmine) * Asiri (Asiri (@AsiriFernandoLK) | Twitter) * Weapons, Ammo, Diesel & other LTTE Warlike Items Found * https://www.apminebanconvention.org/fileadmin/APMBC/clearing-mined-areas/2018-SriLanka-InitialArt7Report.pdf * Ceylon Today (Sri Lanka: Anti-personnel mine found ) * kumaran satha (kumaran satha) WordPress.com: Create a Free Website or Blog * LiveJournal (Простая тамильская баба.) * http://Flickr.com (http://Flickr.com) * Latest Sri Lankan News Updates (http://lankadailynews.com/) * Sri Lanka Army (Sri Lanka Army) * The Hindu Images * CAT-UXO * Sri Lankan Security Forces (Sri Lankan Security Forces) தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் * https://alt.army.lk/slsr/11slsr_2 (Sri Lanka Sinha Regiment) * https://steemit.com/photography/ (https://steemit.com/photography/) Troops Led to Unearth Two more LTTE Torpedoes * stuartddaniel (stuartddaniel) * Experiments with weapons- Part I (http://www.srilankaguardian.org/2008/04/experiments-with-weapons-part-i.html) * IBC Tamil * Jaffna News 15kg bomb found buried in Ukkulan Kulam Vavuniya. - Srilanka News | DSRmedias.com * Vanakkam London Emerging Out Of The Shadows Does recovery of arms from former LTTE cadres indicate revival of Tamil insurgency in Sri Lanka? Landmines, unexploded ordnance a barrier to return SLAF Trikonamadu recovers cache of weapons in Pudukuduirippu Alibaba தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்r
- 4 replies
-
- சுடுகலங்கள்
- கடற்புலி
-
(and 38 more)
Tagged with:
- சுடுகலங்கள்
- கடற்புலி
- புலிகளின் ஆயுதங்கள்
- தடைவெடி
- ஈழத்தமிழரின் ஆயுதங்கள்
- ஈழத் தமிழரின் ஆயுதங்கள்
- தமிழர் ஆயுதங்கள்
- தமிழீழம்
- சுடுகலன்
- தமிழரின் படைக்கலங்கள்
- புலிகளின் உள்நாட்டு உற்பத்திகள்
- ஈழ ஆயுதங்கள்
- தமிழரின் கைக்குண்டுகள்
- விடுதலைப் புலிகள்
- ஈழ உள்நாட்டு தயாரிப்புகள்
- புலிகளின் உள்நாட்டு தயாரிப்புகள்
- ஈழப் படைக்கலங்கள்
- தமிழீழ ஆவணங்கள்
- தமிழீழ தயாரிப்புகள்
- துமுக்கி
- வெடிகுண்டு பெல்ட்
- விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்
- விடுதலைப் புலிகளின் படைக்கலங்கள்
- தமிழர் ஆயுதம்
- விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்
- ஈழ ஆவணங்கள்
- கைக்குண்டுகள்
- தமிழரின் ஆயுதங்கள்
- பண்டைய தமிழரின் ஆயுதங்கள்
- விடுதலைப்புலிகளின் படைக்கலங்கள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- கண்ணிவெடி
- முள்ளிவாய்க்கால்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte home made weapons
- ltte weapons
- tamil eelam home made weapons
- tamil tigers weapons
- sri lankan rebels weapons
- sri lanka home made weapons
-
நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை. புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade வரலாற்றில் மறைபட்டது! எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற ஒரு திரைப்பிடிப்பும் தெளிவாகத் தெரியாத அதேநேரம் சிதைந்த நிலையிலான படிமத்தையே நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 'இதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 38 replies
-
- tamil eelam artillery
- ஆட்லறி
-
(and 40 more)
Tagged with:
- tamil eelam artillery
- ஆட்லறி
- விடுதலைப்புலிகள்
- புலிகள் ஆட்லறி
- புலிகளின் சேணேவிகள்
- புலிகளின் தெறோச்சி
- தெறோச்சி
- விடுதலைப் புலிகளின்
- eelam artillery
- tamil eelam howitzer
- கௌவிட்சர்
- sri lanka artillery
- tamil tigers
- புலிகளின் கௌவிட்சர்
- ltte howitzer
- புலிகளின் ஆட்டிலறி
- ltte
- தமிழீழம்
- புலிகளின் சேணேவி
- புலிகளின் ஆட்லெறி
- புலிகளின் ஆட்டிலெறி
- நீண்ட தூர வீச்சு
- புலிகளின் ஆட்லறிகள்
- விடுதலைப் புலிகளின் சேணேவிகள்
- ஆட்லறிகள்
- புலிகளின் ஆட்லறி
- ltte artillery
- srilankan artillery
- long range weapons ltte
- விடுதலைப் புலிகள்
- புலிகள்
- ஆட்டிலறிகள்
- ஆட்டிலறி
- kittu artillery brigade
- johnson artillery brigade
- tamil artillery
- liberation tigers of tamil eelam
- tamil tigers images
- ltte images
- tamil eelam army
- tamil howitzer
- eelam howitzer
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால், எல்லாவற்றையும் இங்கே சொல்வது நல்லதல்ல.... எனவே, ஈழத்தமிழர்களால் அணியப்பட்ட தொப்பிகளின் வகைகளைப் பற்றி மட்டும் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் தாவுகிறேன். புலிகளின் தொப்பிகளின் வகைகள்:- சாக்குத் தொப்பி - Gunny cap ஒரு பக்கத் தொப்பி - One side cap குணகு மகுடக்கவி- Slouch hat வரைகவி - Barret செண்டாட்டத் தொப்பி - Baseball cap சுற்றுக்காவல் தொப்பி - Patrol cap செவிமறை தொப்பி - earflap cap மகுடக்கவி- hat இவ்வகைத் தொப்பிகள் யாவும் மகுடம் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் மகுடம் என்னும் சொல்லையும், தொப்பி என்பதன் ஒத்தசொல்லான கவி என்பதையும் இணைத்து மகுடக்கவி என்னும் சொல்லை வழங்கலாயினேன் மகுடக்கவி என்னுஞ்சொல்லானது சேர்த்தே தமிழில் வழங்கப்படல் வேண்டும் கௌபோய் மகுடக்கவி- Cowboy hat வாளி மகுடக்கவி- Bucket hat நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- earflap floppy hat சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat சூரியக் காப்பு தொப்பி - Sun protection cap கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig உச்சிமுடி தொப்பி - Paked cap இனி, கட்டுரைக்குள் சென்று ஒவ்வொன்றாக விரிவாகக் காண்போம்! சாக்குக் தொப்பி- Gunny cap:- இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச்(link) சொடுக்கி சாக்குத் தொப்பி பற்றி வாசிக்கவும்: 2. & 3. ஒரு பக்கத் தொப்பி - One side cap & குணகு மகுடக்கவி- Slouch hat இவை கவற்றுறையினரால் அணியப்பட்டவை ஆகும். இவை பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். எனவே இக்கொழுவியைச் சொடுக்கி இவற்றை பற்றி வாசிக்கவும்: 4. வரைகவி - Barret இவை, விடுதலைப் புலிகளின் தரைப்புலிகளால் 90களின் தொடக்க காலத்திலும், கடற்புலிகளால் 90- 96 வரையிலும் (96 - 2000 வரை என்ன வகையான தொப்பி அணிந்தார்கள் என்பது அறியில்லை), கரும்புலிகளின் அனைத்து உட்பிரிவுகள், எல்லைப்படை மற்றும் சிறப்பு எல்லைப்படை ஆகியவற்றால் 2000 ஆம் ஆண்டு வரையிலும், கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகளால் 2004 ஆம் ஆண்டு வரையிலும், சிறுத்தை அதிரடிப்படையின் அனைத்து உட்பிரிவுகளால் 2009 மே மாதம் வரையிலும் அணியப்பட்டிருந்தன. அவற்றின் நிறங்களாவன:- தொடக்க காலத்தில் - கறுப்பு & சிவப்பு வரைகவி கீழ்கண்ட படத்தில் இருப்பவர்கள் புலிகளின் (1984–1987) உறுப்பினர்கள் ஆவர். இவர்களில் சிவப்பு வரைகவி அணிந்திருப்பவர் கட்டளையாளர் ஆவர். கறுப்பு வரைகவி அணிந்திருப்பவர் உயரதிகாரி(high) ஆவர். இதே போல, ஒரு சிவப்பு நிற வரைகவியினையே புலிகளின் தலைவர்(leader) அக்காலத்தில் அணிந்திருந்தார் . இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது . 'இவர்கள் கையில் ஏந்தியிருப்பது வகை-56 விதம்-2 (T-56 type-2) ஐச் சேர்ந்த துமுக்கிகளாகும்(Rifles). அவற்றுள் சிவப்பு வரைகவி அணிந்தவர் ஏந்தியிருக்கும் துமுக்கியானது மாற்றியமைக்கப்பட்டது(modified) ஆகும். ' 'இப்படம் 1983ற்கு முன்னர் எடுக்கப்பட்டது ஆகும்.' தரைப்புலிகள் - கறுப்பு நிறம் இவை புலி உறுப்பினர்களால் 1990-1995 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. '1994 யாழில் காவலிற்கு நிற்கும் புலிவீரர்' தரைப்புலிகள் இவை புலி உறுப்பினர்களால் 1995-1996 வரை யாழ்ப்பாணத்தில் புலிகளால் அணியப்பட்டவை ஆகும். இவர்களின் வரைகவியில் புலிச்சின்னம் குத்தப்பட்டிருந்தது. அதன் தோரணி சீருடை நிறத்திலான வரிப்புலிக் கோடுகளாக இருந்தது. மக்கள்படை: எல்லைப்படை - இளம்பச்சை நிறம் இப்படையின் ஆண்களும் பெண்களும் தொடக்க காலத்தில்(1999) கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'தொடக்ககாலத்தில் கறுப்பு நிற வரைகவி அணிந்து அணிநடை போடும் எல்லைப்படை வீரிகள் | இவர்களின் வரைகவியில் படை வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' அடுத்த ஆண்டிலும் - 2000 ஆம் ஆண்டளவில் - கறுப்பு நிற வரைகவியினையே அணிந்திருந்தந்தாலும் அவர்களின் சீருடை பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது. அதேநேரம், இதே 1999-2000 காலகட்டத்தில், இவர்களின் கட்டளையாளர்கள் சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர். 'இடது பக்கத்தில் பச்சை வரிப்புலியில் சிவப்பு நிற வரைகவி அணிந்து வருபவரே இவர்களிற்கான கட்டளையாளர் ஆவார்' இவர்கள் 2005 க்குப் பின் செண்டாட்டத் தொப்பி(baseball cap)யினை அணிந்திருந்தாலும் ஒருசிலர் வரைகவியினையும் அணிந்திருந்ததாக கீழ்க்கண்ட படம் மூலம் என்னால் அறிய முடிகிறது. '2008 ஆம் ஆண்டு வவுனியாவில் சிங்களப் படைத்தாவளம்(military camp) ஒன்றினை அழித்தபின் ஆய்த சேகரிப்பில் ஈடுபட்டுள்ள புலிகள் | பச்சை வரைகவி அணிந்திருப்பவர் எல்லைப்படை வீரர் ஆவார். இவரின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கிட்டு பீரங்கிப் படையணியின் மோட்டார் பிரிவு 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கப்பட்ட இப்பிரிவானது அதனது தொடக்க காலத்தில் கிட்டு பீரங்கிப் படையணியின் ஒரு உறுப்பாகவே செயல்பட்டது. 2000 வரை அப்படித்தான் இருந்துள்ளதாக புலிகளின் செய்தித்தாள்களில் வெளி வந்த செய்திகளின் அடிபப்டையில் அறிய முடிகிறது. இவர்கள் கறுப்புநிற வரைகவியினை 1999இன் இறுதிப்பகுதிவரை அணிந்திருந்தனர். சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு - தொடக்க காலத்தில் - கருநீல நிறம் 'படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள சிறப்பு ப்படையினர் | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' கடற்புலி கடற்கலவர் (1992/1993-2002)- இளநீல நிறம் ஆண்களும் பெண்களும் இளநீல நிற வரைகவியினை அணிந்திருந்தனர். கரும்புலிகள் - கறுப்பு நிறம் கரும்புலிகளும் 1990இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரை வரைகவியினையே அணிந்திருந்தனர். கிழக்கில் தரிபெற்றிருந்த படையணிகள்:- இவர்கள் அணிந்திருந்த வரைகவிகளின்(?- 2004 ஐந்தாம் மாதம் வரை) நிறங்கள் மிகவும் குழப்புகிறது. இருந்தாலும் நானறிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தவறென்றால் திருத்த உதவவும். அதிகாரிகள்(high) - Maroon நிறம் சிங்களத் தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலான சீருடை அணிந்தோர்: கடுஞ்சிவப்பு கடைநிலை வீரர்கள் - கடும்பச்சை & சேர்ப்பன் நீல நிறம் (Admiral blue) - இரு நிறத்திற்குமிடையிலான தரநிலை வேறு பாடு தெரியவில்லை! 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 'இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' ''சிங்களத் தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலான சீருடை அணிந்தோர் கடுஞ்சிவப்பு நிற வரைகவியினை அணிந்திருப்பதை நோக்குக. இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க'' சிறுத்தை அதிரடிப்படை - Azure நிறம் 'சிறுத்தைப்படை | இவர்களின் வரைகவியில் படையணி வில்லை குத்தப்பட்டிருக்கிறதைக் காண்க' 5. செண்டாட்டத் தொப்பி - Baseball cap இவை தமிழீழ மக்கள் படையான எல்லைப்படையினராலும் கடற்புலிகளின் துணைப்படையான 'ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணி''யினராலும் அணியப்பட்டவை ஆகும். 'எல்லைப்படையினர்(2006–2009 இறுதிவரை) | இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை.' 'லெப் கேணல் மங்களேஸ்' அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைக்க அதற்கு ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியினர் கொடிவணக்கம் செலுத்துகின்றனர் | இவர்களின் வரைகவியில் படையணி இலச்சினை பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்க' ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியின் செண்டாட்டத் தொப்பி பற்றி நான் இங்கு விரித்திருக்கிறேன்:- (இதில் கடைசி பத்தியைக் காணவும்) 6. சுற்றுக்காவல் தொப்பி- Patrol cap புலிகளின் சுற்றுக்காவல் தொப்பியானது, உலக நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பியில் இருந்து வேறுபட்டு, ஓர் வேறான வடிவினை கொண்டிருந்தது. அந்த வடிவமானது புலிகளிற்கே உரித்தானது ஆகும். இதைப் போன்றதொரு வடிவினை உடைய தொப்பியானது உலகில் இன்றுவரை ( 02.03.2021) எங்குமே பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். புலிகளின் சுற்றுக்காவல் தொப்பிகளின் காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது 1979–2001 வரை காலம் ஒன்று எனவும், 2001 இல் இருந்து 2009 வரை காலம் இரண்டு எனவும் பிரிக்கலாம். இவற்றிற்கு முந்தைய கால தொப்பியானது மிகவும் வேறான சாதாரணமில்லா வடிவத்தில் இருந்தது. பார்ப்பதற்கு வரைகவிக்கு சுண்டு வைத்தது போல இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 1979–2000 சுற்றுகாவல் தொப்பியில் 2 வகை இருந்தது. 1) சுண்டு(bill) கட்டையான சுற்றுக்காவல் தொப்பி:- 79-இல் இருந்து 2001 வரையிலான காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட இத் தொப்பியானது அனைத்து மட்ட புலிவீரர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது உலகில் அனைத்து படைத்துறைகளாலும் பயன்படுத்தப்படும் பொதுவான சுற்றுக்காவல் தொப்பியின் வடிவமைப்பைக் கொண்டதொன்றாகும். இதில் வரிப்புலியில் இல்லை. மாறாக சாம்பல் நிறமே இருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'பட விளக்கம்: 1985 இந்திய பயிற்சித் தாவளத்தில் போது Guard of honour நடக்கிறது | இங்கு புலிவீரர்கள் அணிந்திருக்கும் தொப்பியினை நோக்குக.' '2000 ஆம் ஆண்டு இத்தாவில் பெட்டியினுள் கேணல் நகுலன் அவர்கள் கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறார் | இவரது தலையில் நான் சொன்ன தொப்பி இருப்பதை நோக்குக ' இதே காலப் பகுதியில், 1993 இல் 'தவளைப் பாச்சல்' நடவடிக்கையின்போது பலாலியினுள் புகுந்த கரும்புலிகள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பியானது சற்று வேறுபாடுள்ளதாக காணப்பட்டது. இது பிற்காலத்திய தமிழீழ காவற்றுறையின் தொப்பியின் முன்மாதிரி வடிவம் போன்று தோற்றமளிக்கின்றது. அதாவது இதனது பலகத்தின் அடிப்பாகத்து துணியானது சற்று அதிகப்படுத்தப்பட்டு கீழிருந்து மேனோக்கி மடிக்கப்பட்டுள்ளது. 'பலாலி மீதான கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற லெப். ஜீவரஞ்சன் தலையில் அணிந்துள்ள தொப்பியினை நோக்குக.' 2) வடிவமைப்பே வேறுபட்டதான ஒரு சுற்றுக்காவல் தொப்பி:- இதுவும் புலிகளிற்கே உரித்தானதான வடிமைப்பைக் கொண்டிருந்தது. இந்த வடிவமைப்பை ஒத்த தொப்பிகளை நான் இதுவரை எங்குமே கண்டதில்லை. இது 1994 இறுதி - 1996 வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இதே கால கட்டத்தில் கடைநிலை போராளிகளால் வரைகவி பயன்படுத்தப்பட்டது. இதன் பலகங்களில் விறைப்புத் தன்மை இல்லை. அவற்றின் உச்சந்தலை கொஞ்சம் பெரிதாகவும் வரவர ஒடுங்கியதாகவும் காணப்படுகிறது. அதேநேரம் இதன் பலகம் மிகவும் உயரமானது ஆகும். ஆனால், இதன் சொண்டானது பிற்காலத்தியது போன்று நன்கு பரந்து பட்டதாகவும் நீளமானதாகவும் உள்ளது. ஆனால் இந்த சுண்டின் முன்பகுதியானது அகண்ட கரண்டி வடிவினைக் கொண்டுள்ளது. இக்தொப்பியே 2000 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட செந்தரமான சுற்றுக்காவல் தொப்பிகளின் மூலப்படிமம்(prototype) எனலாம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'மகளீர் ஒருவர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'மகளீர் படையணியினர் அத்தகைய சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' பிந்தைய கால(2001–2009) செந்தரப்படுத்தப்பட்ட சுற்றுக்காவல் தொப்பி:- வடிவம்:- இதன் பக்கவாட்டு பலகமானது ஓரளவிற்கு விறைப்பானதாக இருக்கின்றது. உச்சந்தலை பலகமானது(panal) தளர்ந்ததாக, சாதாரண துணித் தன்மை உடையதாக இருக்கிறது. இந்த பலகத்தின் இருபக்கங்களிலும் இரு கண்கள்(eyelets) உள்ளன(சாதாரண தொப்பி போன்று). இதன் சுண்டானது(bill) வளைவாக இல்லாமல் தட்டையாகவும் கட்டையாக இல்லாமல் ஓரளவு தொப்பிக்கேற்ற நீளத்துடனும் முன்பக்கத்தில் நன்கு பரந்தும் காணப்படுகிறது. இத் தொப்பியின் முன்பக்கத்தின் நடுவில்தான் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட வில்லையானது(badge) தொப்பியுடனே சேர்த்து தைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு, 'தரைப்புலி படையணிகளின் சீருடை உருமறைப்பு நிறமான பச்சை கபில வரியானது அவர்களிற்கான தொப்பியில் இருக்க, தமிழீழத் தேசிய துணைப்படையின் தொப்பியில், அவர்களுடைய சீருடையில் உள்ள பச்சை கபில தொடர் கட்டங்கள் போன்ற உருமறைப்பு நிறமானது இருக்கும்.' தொப்பியின் பலகத்தின் நடுவில், அந்த கண்ணுள்ள நடுப்பகுதி, சுற்றிவர ஒரு பட்டை தைக்கப்பட்டிருக்கும். இந்தப் பட்டையானது முற்றுமுழுதாக பலகத்தோடு ஒட்டியிருக்காது. மாறாக ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்கும். தையல் போடப்படாத இடங்களை உருமறைப்பிற்குப் பயன்படுத்தலாம்(கீழ் வரும் 3வது படிமத்தைக் காண்க) இதன் உருமறைப்பு(camoflage) மற்றும் நிறங்களானவை, ஒவ்வொரு படையணியின் சீருடைக்கு தக்கவாறு மாறுபட்டிருந்தது. 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தென் தமிழீழ படையணிகள் யாவும் தம் வரைகவி விடுத்து சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளனர். இதனால் 4ஆம் ஈழப்போரில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் செந்தரமான தொப்பிகளை அணிந்திருந்தமை காணக்கூடியவாறு இருந்தது. இவர்களின் தொப்பியில் புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. 'தரைப்புலி வீரன் ஒருவனின் தலையில் உள்ள சுற்றுக்காவல் தொப்பி | தலையில் அணியப்பட்டாலும் பக்கவாட்டு பலகங்கள் விறைப்பாக உள்ளதை நோக்குக' 'இயந்திரச் சுடுகலச் சூட்டணி (MG fire team) ஒன்று சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்துள்ளதை நோக்குக' 'இவ்வீரனின் தொப்பியில் உள்ள பட்டையை நோக்குக. அதில் ஆங்காங்கே மட்டுமே தையல்கள் போடப்பட்டிருப்பதையும் இவற்றிற்கிடையில் உருமறைப்பிற்காய் புல்லுகள் செருகப்பட்டிருப்பதையும் காண்க.' 7.செவிமறை தொப்பி- Earflap cap இது புலிகளின் தொலைத் தொடர்பாளர்கள் & முன்னிலை நோக்குநர்கள் மட்டுமே அணியப்பட்ட ஒருவகை தொப்பியாகும். இது வரிப்புலியை நிறமாகக் கொண்டிருந்தது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 8. வாளி மகுடக்கவி- Bucket hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக, இது கட்டளையாளர்களால் மட்டும் அணியப்பட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'கேணல் ராஜு அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'மேஜர் சேரலாதன் அவர்களின் தலையில் உள்ள வாளி மகுடக்கவியினை நோக்குக' 'தவிபு இயக்கத்தின் அலுவல்சாரில்லா முதலாவது சீருடையில் வாளி மகுடக்கவி அணிந்து G-3ஐ ஏந்தி நிற்கும் முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன்' 9.மகுடக்கவி- Hat இது தரைப்புலிகளின் அனைத்துப் படையணிகளால் மட்டும் அணியப்பட்ட மகுடக்கவியாகும். இதை அவர்களின் கட்டளையாளர்கள் முதல் இயக்கத் தலைவர் வரை அணிந்திருந்தினம். இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஆண்புலிகள்' 'பெண்புலிகள்' 10.கௌபோய் மகுடக்கவி- Cowboy hat 90களின் தொடக்கத்தில்…. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. இத்தொப்பியில் வரியும் இருந்தது. இதை எல்லோரும் பொதுவாக அணிவர். 11. நெகிழ்வான மகுடக்கவி- Floppy Hat இது தனியாக எந்தவொரு படையணிக்கோ இல்லை படைக்கோ சொந்தமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக இது எல்லா வீரர்கள் மற்றும் தளபதிகளால் சூழலிற்கும் இடத்திற்கும் ஏற்ப அணியப்பட்டது. அதன் உருமறைப்பு நிறமும் அணியும் வீரரின் படையணி சீருடை நிறத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஜோன்சன் படையணியினது வீரன் அணிந்துள்ள கடும்பச்சை நிற மகுடக்கவி' இச்சீருடையினை, திருமலை பற்றிய நிகழ்படம்(video) ஒன்றில் தான் புலிகள் முதன்முதலாக காண்பித்ததோடு, அப்படையணியின் பெயரைக் கூறியபோது, அந்நிகழ்படத்தில், இந்நிற சீருடை அணிந்த போராளிகளே அணிநடை செய்தனர். எனவேதான், அப்படையணிக்கான சீருடை இதுவென்ற முடிவிற்கு நான் வந்தேன். '5 - 9 - 2008 அன்று வன்னேரிக்குள மண்ணரணில் நின்றவாறு சமராடும் புலிகளின் அணிகள். உவர்களில், முன்னால் உள்ள இருவரும் மகுடக்கவி அணிந்துள்ளதை நோக்குக.' இதில் தென்படும் நான்கு பேரும் மூன்று விதமான சீருடையில் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விதயம் யாதெனில், இந்த மகுடக்கவி அணிந்துள்ள இருவரும் இருவேறு நிறத்திலான சீருடை அணிந்துள்ளதோடு அவர்களின் மகுடக்கவியும் அதற்கேற்றவாறான நிறத்தையே கொண்டுள்ளதை நோக்குக. 'போராளி ஒருவர் நெகிழ்வான மகுடக்கவி அணிந்துள்ளார்' 12. செவிமறை நெகிழ்வான மகுடக்கவி- Earflap floppy hat இது புலிகளின் உந்துருளி படையணியால் மட்டுமே அணியப்பட்டது ஆகும். மகுடக்கவியின் கீழ்ப்பக்கத்தில் காதுமறை உள்ளது. மேலும் இதன் விளிம்புகள் யாவும் நெகிழ்ந்தவையாக உள்ளன. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. குறிப்பு: புலிகளின் அதிவேக உந்துருளி படையணியின் தொப்பியானது இதிலிருந்து வேறுபட்டது ஆகும். அஃது செங்குத்து வரி கொண்ட சுற்றுக்காவல் தொப்பியாகும் 13. சூரியக் காப்பு மகுடக்கவி- Sun protection hat இவ்வகை மகுடக்கவியின் பின்பக்கத்தில் , ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 'ஓயாத அலைகள் மூன்றின் 4 கட்டமான ஆனையிறவுச் சமரில், குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று(Snipe team)' 14. சூரியக் காப்பு தொப்பி- Sun protection cap இவ்வகை தொப்பியின் பின்பக்கத்தில் , நீளமான ஒரு துண்டம்(துண்டுத் துணி) பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பின்னால் உள்ள துண்டின் நீளம் முதுகின் முக்கால்வாசித் தூரம் வரை உள்ளது. 97-2000 ஆம் ஆண்டு வரை: இதில் எந்தவொரு வில்லையும் பொறிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு: அதில் வட்ட வடிவ படையணி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. 15. கடற்கலவர் சதுரத் தொப்பி - Sailors square rig இது இவர்களால் 2002 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் அணியப்பட்ட சீருடையாகும். அதில் புலி இலச்சினை கொண்ட வில்லை குத்தப்பட்டிருப்பதை நோக்குக. இவர்களின் அதிகாரிகளின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளது: 'அதிகாரியின் கடற்கலவர் சதுரத் தொப்பியில் குறுகிய சொண்டு உள்ளதை நோக்குக | அதில் கடற்புலி இலச்சினை குத்தப்பட்டிருப்பது வட்டமிடப்பட்டுள்ளது.' 2004இற்குப் பின்னான காலத்தில் சதுரத் தொப்பியில் ஒரு தகடு பொருத்தப்பட்டிருந்தது. அந்தத் தகட்டில் 'விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்' என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. 16. உச்சிமுடி தொப்பி - Peaked cap இது கணினிப் பிரிவு என்று அழைக்கப்படும் 'கேணல் ராயு படைய அறிவியல் தொழினுட்பவியல் கல்லூரி'இன் கீழ் செயற்பட்ட படைய தொழினுட்பவியல் கல்லூரி யின் போராளிகளால் அணியப்பட்டதாகும். இது ஒரு விதமான கபில நிறத்தில் இருந்தது. இதன் மையத்தில் உள்ள சட்டத்தில் கணினிப் பிரிவின் சின்னம் இருந்தது. அது தங்க நிறத்தில் இருந்தது. உசாத்துணை: செ.சொ.பே.மு. படங்களைப் கவனித்து சொந்தமாக எழுதியது படிமப்புரவு: YouTube - Journeyman Pictures http://aruchuna.com/http://gettyimages.com/http://tamilnet.com/ NTT ஈழ நாளேடுகள் ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
- 1
-
-
- tamil tigers
- தமிழீழம்
- (and 13 more)
-
தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதைப்புலிகள் இயக்கப் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய இசுலாமியத் தமிழர்கள் 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முசிலீம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலனறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20. வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21. வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22. வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23. வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24. வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25. வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26. வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27. வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 --> யாழ்ப்பாணத்தை விடுவிப்பதற்கான படையெடுப்பின்போது வீரச்சாவு. 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 54) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 55) லெப். ராஜிவ் எ ரகீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூரி, புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் சுகவீனம் காரணமாக சாவு. 56) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 57) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 58) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 59) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 60) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 61) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 62) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர். லெப் ஈழமாறன் என்பதாகும். 63) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப்பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த புலனாய்வுத்துறை போராளிகள் மற்றும் இறுதிப்போரிற்குப் பின்னராக தப்பிவந்து பிறரால் காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டு படுகொலை செய்ப்பட்டவர்கள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
- 9 replies
-
- 4
-
-
-
- முஸ்லீம் மாவீரர்கள்
- இஸ்லாமிய மாவீரர்கள்
- (and 4 more)
-
நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
- 135 replies
-
- 11
-
-
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
-
(and 4 more)
Tagged with:
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவற்றுறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுகிறேன். சரி இவ்வாவணத்தை அவர்களின் சீருடையில் இருந்து ஒவ்வொன்றாகத் தொடங்குவோம்….. சீருடை (Uniform):- தமிழீழக் காவற்றுறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே உடுத்தியிருந்தனர். ஆண்:- முழுக் காற்சட்டை (full pant)- கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் பெண்:- முழுக் காற்சட்டை - கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் → தமிழீழக் காவற்றுறையில் யார் முழுக்கைச் சட்டை அணிவார்கள்? யார் அரைக்கைச் சட்டை அணிவார்கள்? என்று எனக்குத் தெரியாது. ← → ஆண்களும் பெண்களும் மேற்சட்டையில் மூன்று தெறிகள்(button) மட்டுமே வெளியில் தெரியுமாறு மேற்சட்டை அணிந்திருந்தனர். → பெண்களினது மேற்சட்டையில் 4 பக்குகள்(pocket) இருந்தன; ஆண்களினது மேற்சட்டையில் 2 பக்குகள் இருந்தன. அவற்றின் நடுவிலே பூட்டுவதற்கு ஒரு தெறி(button) இருந்தது. ->ஆண்களினது முழுக் காற்சட்டையின் பின்பக்கத்தின் பிட்டத்தில் இரு பக்குகள் இருந்தன. அவற்றினைப் பூட்டுவதற்கு பக்கின் மூடியின் கீழ் இரு மூலையிலும் தலா ஒரு தெறி இருந்தது. தமிழீழக் காவற்றுறையின் ஆண் & பெண் காவலர்கள் அனைவரும் 1996 வரை இருவேறு விதமான தொப்பிகளை(cap) அணிந்திருந்தார்கள். அவை ஆவன ஒரு பக்கக் தொப்பி(one side cap) - பெண்கள் ஆனால் அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள்(higher officers) யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். முழுக்கை:- 'யாழில் படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் | வலது பக்க ஓரத்தில் நன்கு உத்துப் பாருங்கள், அரைக்கைச் சட்டையும் குணகு மகுடக்கவியும் அணிந்த இரண்டு ஆண் காவலர்களும் தெரிகின்றனர்' இதன் பக்கவாட்டு நடுப்பகுதி சரியரைவாசியாக பிரிக்கப்பட்டு அதில் ஓர் வில்லை(badge) தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். குணகு மகுடக்கவி(Slouch hat) - ஆண்கள் ஆனால், அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள் யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். ஆனால், அக்காலத்தில் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறம் கறுப்பு ஆகும். முழுக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள ஆண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள ஆண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவற்றுறை பொறுப்பாளர் ப.நடேசன், படைத்துறை கட்டளையாளர்களான அதியரையர்(Brig) ஜெயம்(வ) & அதியரையர்(Brig.) சொர்ணம்(இ) மற்றும் காவற்றுறை உயர் அலுவலர்(ஈ)* ' *ஈ- ஈற்று இக்குணகு மகுடக்கவியின் சுண்டிற்கு(bill) அண்டவாக ஓர் வில்லை தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். 96 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் ஆண்காவலரும் பெண்காவலரும் இரு வகையான தொப்பிகள்(caps) அணிந்திருந்தார்கள். கடுநீல வரைகவி(beret) 'கிளி. காவற்றுறை நடுவப்பணியகத் திறப்பு விழாவில் கடுநீல 'வரைகவி ' அணிந்து T-56 கொண்டு சீராக நிற்கும் காவலர்' இக்கவியணிந்தோர் பணி யாதென்று நானறியேன். அறிந்தவர் புலனம் கொடுத்து உதவவும். _/\_ இவ் வரைகவியில் வில்லையில்லை. வில்லையானது இடது நெற்றிற்கு மேல் இருந்தது. கடுநீல சுற்றுக்காவல் தொப்பி(patrol cap) இவை புலிகளிற்கே உரித்தான தொப்பிகளாகும்(caps) முன் பக்கப் பார்வை: பக்கவாட்டுப் பார்வை 'படத்தில் கொஞ்சம் நிறம் மாறியுள்ளது, தவறாக நினைக்க வேண்டாம். நல்ல படம் கிடைக்கவில்லை' இந்த தொப்பியின் பக்கவாடுகளில் இரு கண்ணிகள் (eyelets) இருக்கும். இவர்களுடைய தொப்பியின் [வரைகவி(Barret) நீங்கலாக] சுண்டிற்கு(bill) நெருக்கமான மேற்புறத்தில் வில்லை ஒன்று சுற்றிவரக் தைக்கப்பட்டிருக்கும். அது மூன்று பகுதியாக்கப்பட்டு மேலும் கீழும் சிவப்பாகவும் நடுவில் ஒக்க வெளிறிய மஞ்சளாகவும் இருந்தது. இந்நிறங்கள் குறித்து நிற்கும் பொருள் பற்றி நான் அறியேன்(unknown). இவை சில வேளை ஈழத்தமிழரின் மஞ்சள் சிவப்பு நிறங்களை குறித்தனவாக இருக்கலாம் என்பது என் துணிபு. இதை தொப்பியின் இரு பக்கவாட்டிலும் இருந்து தொடங்கி பிற்பகுதி முழுதும் மூடிமறைக்கும் விதமாக, தேவைப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் இருந்து மேனோக்கி தொப்பியில் 33% கொள்ளும் வகையில் ஓர் துணியானது தைக்கப்பட்டு அது மேன்னோக்கி மடிக்கப்பட்டு தொப்பியூசி(அதான் தொப்பி ஊசி) கொண்டு இருபக்கத்திலும் குத்தப்பட்டிருக்கும். குத்தப்பட்ட இடம் சொண்டு(bill) தொடங்கும் இடமாகும். இதன் சொண்டானது புலிகளின் படைத்துறை சுற்றுக்கவல் தொப்பி(military patrol cap) போல நன்கு தட்டையாகவும் உலகளாவிய சுற்றுக்கவல் தொப்பி போன்றல்லாமல் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. இதன் பலகம்(panel) மிகவும் விறைத்தது(stiff) ஆகும். வில்லை - Badge பொதுவாக அனைத்துக் தொப்பிகளின் முன்பக்கத்திலும் இந்தப் வில்லையின் மையத்தின் மேற்பகுதியில் கொஞ்சமாக தொடும்படியாக காவற்றுறை வில்லையினைக் (badge) குத்தியிருப்பார்கள். அது வெள்ளியால் ஆனது ஆகும். தலைச்சீரா - Helmet போக்குவரத்துக் காவலர்கள் இரு விதமான தலைச்சீராவினை அணிந்திருந்தனர். விதம் - 1 \ விதம் - 2 இந்த வித தலைச்சீராவில் இரு வெவ்வேறு தோற்றமுடைய இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 1) இந்த தலைச்சீராவின் முன்பகுதியில் 'Police' என்று ஆங்கிலத்தில் கடுநீல நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்கு மேலே, இதன் தலை முன்பகுதியில் சிவப்பு நிறத்திலான வட்டத்திற்குள் முக்கோணம் இருப்பது போன்ற தோற்றத்திலான ஒரு இலச்சினை உள்ளது. அது குறித்துநிற்கும் பொருள் அறியில்லை. 2) இத தலைச்சீராவின் நெற்றிப்பக்கத்தில் கிடைமட்டமான நீளவட்டத்தினுள் மூன்று சுருக்க ஆங்கில எழுத்துக்கள் (U.P.Co) - உபாலி பெரேரா கொம்பனி - எழுதப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்களுடனான வேறு சில காவலர்கள் அணிந்துள்ள தலைச்சீராவில், இந்த ஆங்கில எழுத்துக்களுக்குக்(U.P.Co) கீழே 'Police' என்று கடுநீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. அலகு வில்லை - Unit Badge இருபாலரும் இருபுயத்திலும் அணிந்திருந்தனர். எண் தகடு இதை, →பெண்கள் தங்களின் இடது & வலது தோள்மூட்டில் உள்ள தோள் மணையில் இதைக் குத்தியிருப்பர். →ஆண்கள் வலது மார்பில் பக்கிற்கு(pocket) மேலே குத்தியிருப்பர். ஆண்கள் பெண்களைப் போலல்லாமல் வெறும் எண்களை மட்டுமே குத்தியிருந்தனர். 'பெண்கள் குத்துவது' பதவிக்குறி - Chevrons பதவிக்குறிகளை தமது இடது கையில் குத்திய காவலர்கள் இருக்கும் இரண்டு படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சிலர் இரண்டு பதவிக்கோடுகளையும் வேறுசிலர் மூன்று பதவிக்கோடுகளையும் குத்தியிருந்ததை காணக்கூடியவாறு உள்ளது. அவை இடது கையில் புயவில்லைக்கு கீழே கீழ்நோக்கி பார்த்தப்படியாக குத்தப்பட்டிருந்தன. அவ்வாறு குத்தப்பட்டிருந்த வில்லைகள் பால் வான்னீல நிறத்தில் இருந்தன. இவற்றை குத்திய காவலர்களின் படங்கள் வேறு கிடைக்காமையால் இது பற்றிய வேறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. காவற்றுறை சீக்காயி - Police whistle இருபாலரும் இடது பக்கத் தோளில் காவற்றுறைக்கே உரித்தான கயிறுமூலம் அதை கட்டி இடது பக்க பக்கிற்குள்(pocket) வைத்திருப்பர். தோள் மணை - Shoulder board பெண் அலுவலர்கள் தோளில் கடுநீல நிற தோள் மணை அணிந்திருப்பர். ஆண் அலுவலர்கள் ஏதும் அணியார் மேல் அலுவலர்களில்(Superior officers) இருபாலரும் தோள் மணை அணியார். ஆனால் தோள் மணை இருக்கும் இடத்தில் உள்ள துண்டத்தின்(piece of cloth) மேல் ஒன்று, இரண்டு, மூன்று என்று பதவிக்கேற்ப அறுமுக தாரகைகள் குத்தியிருந்தனர். அத்தாரகையின் நடுவே தட்டையான கூம்பு ஒன்று இருந்தது. 'இம் மேல் அலுவலர்களின் தோள் துண்டத்தின் மேல் அறுமுக தாரகைகள் இருப்பதை கவனி. ஒவ்வொருவரின் தோளிலும் அவரவர் பதவிக்கேற்ப அறுமுக தாரகைகளின் எண்ணிக்கை கூடிக்குறைந்திருப்பதை நோக்குக.' கைத்துப்பு தடறு - Pistol Holster இதை உயர் & மேல் அலுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். இதை இவர்கள் இடுப்பில் கட்டுவார்கள். இதற்காக ஒரு வார் ஒன்றினை வலது பக்கத் தோளின் துண்டத்தில் இருந்து நெஞ்சிற்குக் குறுக்காக கைச்சுடுகலனின் பிடங்கோடு இணைத்திருப்பர். இடைவார் - Belt 96 வரை: ஆண்கள் - கறுப்பு நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தன. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. இது புலிகளின் பாணி! பெண்கள் - வெள்ளை நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள் இருந்தன. 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவற்றுறை பொறுப்பாளர் ப.நடேசன்(இ), படைத்துறை கட்டளையாளரான(Military Commander) சொர்ணம் (வ) மற்றும் காவற்றுறை உயர் அலுவலர்(பி) ' 96 இல் இருந்து: ஆண்கள் - கடுநீல நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர் இருந்தது. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. 'போக்குவரத்துக் காவலர் கதுவீ சுடுகலன் (RADAR Gun) கொண்டு வேகத்தை அளவிடும் காட்சி | ' பெண்கள் - வெள்ளை நிறம் & கடுநீல நிறம் →அலுவலர் - வெள்ளை நிறம் →உயர் அலுவலர்(Higher officers) - கடுநீல நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தது. 'பணிக்குச் செல்ல முன் உறுதியேற்கும் பெண் காவலர். இது தமிழீழ காவற்றுறை வழக்கம்' உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - HIgh Visibility safety vest இது செம்மஞ்சள் நிறத்தில் வீதி போகுவரத்துக் காவலர்களால் அணியப்பட்டது. சப்பாத்து(Shoe): படைத்துறையினைச் சார்ந்தவர்கள் அணியும் சண்டைச் சப்பாத்திற்கு(combat shoe) மாற்றாக சாதாரண சப்பாத்தினை அணிந்திருந்தார்கள். பெண்கைளின் தலைமயிர்: இவர்கள் புலிகளின் படைத்துறையில் இருந்த பெண்களைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரை வேறுபட்ட விதத்தில் இதோ இப்படித் தூக்கிக் கட்டியிருந்தனர்: ஆண்களின் தலைமயிர்: இவர்களும் புலிகளுக்கே உரித்தான விதத்தில் படைத்துறையில் பணியாற்ற்றும் ஆண்களைப் போலவே மயிர் வெட்டியிருந்தனர். உந்துருளி - Motor bike இவர்கள் வெள்ளை நிற 'கீரோ கொண்டா பாசன்(Hero Honda passion)' உந்துருளியினைப் பயன்படுத்தினர். அவற்றில் காற்றுத்தட்டியும் பொருத்தப்பட்டிருந்தது. 'முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2006' ''முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2002'' 'தமிழீழக் காவற்றுறை உந்துருளியின் பக்கவாட்டுப் பார்வை | பின் இருக்கைக்கு கீழே ''Police" என நீல நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்குக' ஊர்திகள்: அவை பிக்அப், பஜரோ, கண்டர் என்று பற்பல விதமானவை. இவற்றின் நிறங்கள் வெள்ளை அல்லது கடு நீலத்தில் இருந்தன. போக்குவரத்துக் காவலரின் கைமேசு(Gloves of the TE Traffic Police):- வெள்ளை நிறத்தில் இருந்தது.அதன் உள்ளங்கைப் பகுடியில் ஒரு சிவப்பு நிறத்திலான வட்டம் இருந்தது. புறங்கையில் சத்தாருக்கு இரு பட்டை போன்ற கோடுகள் இருந்தன. அணிநடையின்போது (During Marchpast) காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை (Police Special Commando) இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான உடையினை அணிந்திருந்தனர் 'படிமப்புரவு: வேசுபுக்கு' இவர்களின் பெண்கள் பிரிவினர் படத்தில் தெரிவது போன்ற ஒரு வித பச்சை நிறத்திலான இடைவாரினை அணிந்திருந்தனர். காவற்றுறை சிறப்பு அதிரடிப்படையினரின் தொப்பி சுற்றுக்காவல் தொப்பியுடனான ஒத்த தோற்றத்தைக் கொண்டிருந்தது. 'காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை' 'காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை' 'காவற்றுறை சிறப்பு அதிரடிப்படை' காவற்றுறைு படையணி இவர்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் என்னிடம் இல்லை. இவர்கள் ஒரு விதமான கடுஞ்சாம்பல் போன்ற நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். இரு புயங்களிலும் வில்லைகள்(badges) குத்தியுள்ளனர். ஆண்களும் பெண்களும் இதில் பணியாற்றியுள்ளனர். பச்சை - சிறப்பு அதிரடிப்படை கடுஞ்சாம்பல் போன்ற நிறம் - காவற்றுறை படையணி? இறுதிவரை படித்த தங்களிற்கு மிக்க நன்றி! இத்துடன் இக்கட்டுரை நிறைவடைகிறது. அடுத்த கட்டுரையில் மீண்டும் சந்திப்போம். உசாத்துணை: படங்களை வைத்து சொந்தமாக எழுதியது. அவற்றில் காவல்துறை சிறப்புப்படைக்கான ஆதாரமாக இந்த ஒரு படத்தினை தருகிறேன்: https://www.sundaytimes.lk/020609/columns/sitrep1.html செ.சொ.பே.மு. படிமப்புரவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Stock Photos, Stock Images & Vectors அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube http://Thaaraakam.com Log In or Sign Up ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 2 replies
-
- ஈழக் காவல் துறை
- தமிழ் ஈழக் காவல்துறை
- (and 10 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
46847340_2230034450585174_7804472806858555392_n.jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
46684443_2230034410585178_8168794623217500160_n.jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
46666573_2230034540585165_5953262213459345408_n.jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
46665332_2230034633918489_6322144039546126336_n.jpg
நன்னிச் சோழன் posted a gallery image in விம்பகம்
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with:
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
- ltte
- விடுதலைப்புலிகள்
-
(and 4 more)
Tagged with: