Search the Community

Showing results for tags 'தமிழ் சினிமா'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 3 results

  1. நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும் வைத்த காட்சிகள் படத்தின் ஒரு பலம். மறுபுறம் காதல், உணர்வுபூர்வமான காட்சிகளும் ஏராளம் உண்டு; குறிப்பாக கௌதம் மேனனின் படத்திற்கான auditionக்காக ஹீரோ அஷோக்செல்வன் நடித்துக் காட்டுவதாக அமைந்த ஒரு close-up காட்சி படக்காட்சியில் மட்டுமல்ல தியேட்டரிலும் கைதட்டல் வாங்குகிறது. இன்னும், மழையில் நனைந்தபடியான காதல் காட்சிகள் அவ்வப்போது வந்தாலும், ஒவ்வொன்றும் இயற்கைக் கவிதை! படத்தின் வலுவான கதைக்கு, அதைச் சொன்ன விதம் மேலும் வலுச்சேர்க்கிறது. 12B திரைப்படப் பாணியிலான இரு வேறு தேர்வுகளை எடுத்திருந்தால் வரும் விளைவுகளை நேர்த்தியான காட்சிகளால் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். (12B க்கும் இப்படத்துக்கும் கதையளவில் தொடர்பு இல்லை.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட கற்பனையில் வரும் காட்சிகள் தான் இப்படத்தின் போக்கில் திருப்புமுனையாக அமைந்தாலும், உண்மையிலேயே புதுமையாகவும், கதைக்கு இக்காட்சிகள் தேவை என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படி அமைத்ததும் இயக்குனரின் வெற்றியே. இரு வேறு கோணங்களில் உணர்வோட்டங்களைக் காட்சிப்படுத்திய விதம் காதலர்களுக்கு / இளைய தம்பதிகளுக்கு ஓர் செய்முறை விளக்கம் போன்றது. ரசிக மனங்களை மெதுவாகத் தைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் - முள்ளினால் அல்ல, வெட்டுக் காயத்தை மாற்றத் தையல் போடுவது போன்ற பக்குவத்துடன்! படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். ஒரு கதாநாயகி ரித்திகாசிங்கின் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருந்தேன். இப்படத்திலும் அவருக்கு வலுவான பாத்திரம்; இங்கும் கலக்கியிருக்கிறார். அவரது முகவெட்டும், கண்களும் உணர்வுகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தப் பெரிதும் பலம். நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு கதாநாயகி தான்! துணிச்சலான, புத்திசாலியான, நகர்ப்புற நாயகி வேடங்களுக்கு இயல்பாகப் பொருந்துகிறார். இன்னொரு கதாநாயகி வாணி போஜன் தொலைக்காட்சி நாடக நடிகையாம்; ஆனால் அவரது இயல்பான நடிப்பு மனதைக் கவர்ந்தது. ரித்திகா சிங்கிற்கு இணையாகக் கலக்கியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் அக்கா, தங்கை வேடம் கொடுக்காமல் இருந்தால் சரி! இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் சேதுபதியின் நீண்ட cameo role அமைந்தது. திலக்குடன் சேர்ந்து அஷோக்செல்வனைக் கேள்விகேட்டுக் கலாய்க்கும் காட்சிகள் கலகலப்பானவை. மற்றும்படி அவருக்கு இப்படத்தில் அவ்வளவாக வேலை இல்லை. எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர வேடத்திலும், ஷா ரா வழமையான திருட்டு முழிகளுடன் நகைச்சுவை வேடத்திலும் ஜொலிக்கின்றனர். இசை: மென்மையான காதல் கதைக்கு ஏற்ற ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னணி இசை meditation music கேட்கும் ஒரு உணர்வைத் தருகிறது. கூடவே, அவ்வப்போது வரும் திகிலான காட்சிகளில் நம்முள்ளும் திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையின் ஓட்டத்துடன் ஒட்டும் வகையில் பாடற்காட்சிகள் அமைந்துள்ளன. சித் ஶ்ரீராமின் பாடல்கள் பொதுவாக அவரது ‘ ஐ ‘ படப் பாடலான ‘என்னோடு நீயிருந்தால்’ பாடற்காட்சியில் விக்ரம் beast ஆக வருவதை நினைவுபடுத்தித் தொலைக்கும். அதனால் அக்குரல் மீது ஒருவித வெறுப்பு இருந்தது. ஆனால், இப்படத்தில் இவ்வாறு தோன்றாது சகிக்கும்படியாக இருந்தது நிம்மதியாக இருந்தது! சுருக்கமாகக் கூறினால் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் காதலர் தின விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பது நிச்சயம். இங்கே முழுக்கதையையும் எழுதிப் படம் பார்க்கும் அனுபவத்தை நான் குழப்பவிரும்பவில்லை. பார்த்தால் புரியும் - பல்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்கலாம்; அந்த அளவுக்கு இப்படத்தின் கதையில் நிறைய ‘layers’ உண்டு. நகர்ப்புற ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய படம், சற்றே இழுவலான நிறைவுப்பகுதி ஆகியவற்றை இத்திரைப்படத்தின் குறைகளாகச் சொல்லலாம். இவ்வாறான தரமான காதல் படங்கள் தற்காலத்தில் அபூர்வம், உண்மைக் காதலைப் போலத் தான்! எனவே, இப்படம் காதலர்களை/பிரிந்த தம்பதிகளை மனம் மாறச் செய்து மீண்டும் சேர வைக்குமா என்ற கேள்விக்கு ‘ இது அவர்களுடைய காதலின் உண்மைத் தன்மையைப் பொறுத்தது; படம் பற்றிய அவர்களின் புரிதலையும் பொறுத்தது. இன்னும் அவர்கள் பார்க்கவிருக்கும் குப்பைப்படங்களை, ரிவி சீரியல்களையும் பொறுத்தது ‘ என்பதே எனது கருத்தாகும்! இப்படியொரு படம் இனி எப்ப வரும்? ஓ மை கடவுளே!
  2. இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?! இவ்வாறு கேளிக்கை ஊடகங்கள் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்த இக்காலத்தில், நாம் முன்பொருகாலத்தில் பொறுமையாக நல்லதோர் திரைப்படத்தை நண்பர்கள், உறவினருடன் கண்டு ரசித்த அனுபவத்தை நம்மில் பலர் மறந்திருப்போம். தற்போதும் கூட சினிமாவுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ திரைப்படங்களை கண்டு களிக்கிறோமே என்கிறீர்களா? இந்தச் சமூகவலை உலகில் நாம் திரைப்படங்களை ரசிக்கும் அனுபவ உணர்வும் மாறிவிட்டது. உதாரணத்துக்கு நாகேஷ், கவுண்டமணி - செந்தில், வடிவேலு, விவேக் போன்ற சிறந்த நகைச்சுவையாளர்களை ரசித்த நாம் இன்றைய திரைப்படங்களில் வரும் மொக்கையான நகைச்சுவைகளை வேறு வழியின்றி ரசிக்கப்பழகிவிட்டோம். அழுத்தங்கள் நிறைந்த, எந்திரத்தனமான வாழ்க்கைச்சூழல் எதற்கெடுத்தாலும் சிரிக்கப் பழகவேண்டும் என்று கற்றுக்கொடுத்துவிட்டதோ தெரியவில்லை, இன்றைய காலத்தில் இது தான் 'Trend' என்கிறார்கள். ஆக, பொழுதுபோக்கிற்குப் பல தெரிவுகள் உள்ள (அத்துடன் குப்பைகளும் நிறைந்த) இன்றைய காலத்தில் நாம் இளைப்பாறி சிறந்த தமிழ்த் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைப் பெறுவது எப்படி? இதற்கு சிறந்த திரைப்படங்களைத் தெரிந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் ஒரு திரைப்பத்தில் நாம் எவற்றை எதிர்பார்க்கின்றோம் / எதிர்பார்க்கலாம் என்ற தெளிவும் நமக்குத் தேவை. இது பற்றி கீழ்வரும் பகுதிகள் விளக்கும்: படத் தெரிவு புதிதாக வெளியாகும் திரைப்படங்களைத் திரையில் பார்க்கும் முன்னர் அது வெளியானவுடன் வரும் விமர்சனங்களை முதலில் படிப்பேன் / யூடூபில் (YouTube) பார்ப்பேன். நண்பர்களின் முகநூல் நிலைத்தகவல்கள், செவி வழியான கருத்துக்களைக் கேட்டறிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயம். ரஜினி, விஜய், அஜித் என அவர்களின் அபிமான நடிகர்களின், அல்லது சங்கர், மணிரத்னம் என தம் மனம் கவர்ந்த இயக்குனர்களின் படத்தை அநேகமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் தானே! (இதையே பிடிக்காத திரைக்கலைஞர்களின் திரைப்படமென்றால் எதிராகவும் சொல்வார்கள்). எனவே, இவ்வாறு பிரபலங்களின் திரைப்படம் பற்றிய அவர்களின் விமர்சனத்தை மூளையின் ஒரு பகுதியில் போட்டுவிட்டு, யூடூபில் நமது 'தலை' 'நீலச்சட்டை' மாறனின் (Tamil Talkies) விமர்சனத்தை பார்ப்பேன். அவரது விமர்சனம் பார்ப்பதே எனக்கு ஒரு கேளிக்கை தான்! ஆனால், அவர் படத்தின் கதையையும் சொல்வார். எனவே அப்பகுதிகள் நீங்கலாக முழு விமர்சனத்தையும் கேட்பேன். நான் பார்த்ததில் மிகவும் நேர்மையான விமர்சனங்கள் என்று மாறனுடையதை அடித்துச் சொல்வேன். அவர் 'வழக்கம் போல ஹீரோ....., 'வழக்கம் போல லூசுத்தனமான ஹீரோயின்', 'வழக்கம் போல கதை...' என்று தொடங்கினாலே அந்தப் படத்தை பார்க்கவேண்டியதில்லை என்று அர்த்தமெடுக்கப் பழகிவிட்டேன்! அவர் சிறந்த படங்கள் என்று கூறியவை என்னை ஏமாற்றியதில்லை. தவிரவும் இந்துவின் கார்த்திக்கும் ஓரளவுக்கு நம்பகமான விமர்சனங்களைக் கொடுக்கிறார். எனவே என்னதான் நல்ல விமர்சனங்கள் நண்பர்கள், முகநூல் மூலம் கேட்டறிந்தாலும் அநேகமான வேளைகளில் இந்த இரு விமர்சகர்களின் தீர்ப்புத் தான் ஒரு புதிய திரைப்படத்தை சினிமாவில் பார்ப்பதா, அல்லது ஆறுதலாக வீட்டில் பார்ப்பதற்கு நல்ல பிரதி வரும் வரை காத்திருப்பதா அல்லது பார்ப்பதே இல்லையா என்ற முடிவை எடுக்கவைக்கும். நல்ல கதை, திரைக்கதை, சிறந்த நடிப்பு, லாஜிக் மீறல்கள் இன்மை என்று மிகத்தரமான திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவர்கள் இவர்களின் விமர்சனத்துடன், IMDB வலைப்பக்கத்தில் திரைப்படம் பற்றிய மதிப்பீடு, விமர்சனங்களை வாசித்தறியலாம். இன்னொரு பக்கம் இன்றைய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான, பிரபலமற்ற நடிகர்கள், இயக்குனர்களின் தரமான திரைப்படங்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளது. மசாலா படங்களையே பார்த்துச் சலித்தவர்களுக்கு ஒரு மாறுதலாக வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை கொண்ட இப்படங்கள் ஆறுதலாக அமையும். உதாரணமாக கடந்த வருடம் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற திரைக்கவியங்களைச் சொல்லலாம். எனினும் பிரபலமற்றவர்களின் திரைப்படம் என்பதால் புலத்தில் உள்ள பலருக்கு இவற்றைத் திரையில் கண்டு களிக்கும் அனுபவம் கிட்டாது என்பது துரதிஷ்டம் தான். பலருக்கு இவ்வாறான திரைப்படங்கள் வெளியானது கூடத் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிய நீண்ட நாளாகலாம். Tamil Talkies மாறன் போன்றோர் இப்படியான தரமான திரைப்படங்களை விமர்சனம் செய்வதால் அவர்களின் YouTube பகுதில் சென்று அறிந்து கொள்ளலாம். (கடந்த காலங்களில் வெளியான புதிய, பழைய திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்). இவ்வாறான திரைப்படங்களின் எழுச்சி இனிவரும் காலங்களிலும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இது நீண்ட காலத்தில் தமிழ் சினிமாவின் தலைவிதியையே மாற்றுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திரைப்படங்களைத் தெரிவு செய்யும் போது நாம் எந்த நேரத்தில், என்ன மனநிலையில் இருந்து ரசிக்கப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அழுத்தம் நிறைந்த வேலை நாளின் முடிவில் மாலை வீடு வந்தால் நகைச்சுவையான படங்கள், ரஜினி, விஜய் போன்றோரின் மனதை இலேசாக்கும் திரைப்படங்கள், அல்லது நல்ல பாடல்கள், அழகான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் மன அமைதி தரலாம். மாறாக ஓர் திகில், மர்மம் நிறைந்த அனுபவத்தை வார இறுதி இரவொன்றில் அனுபவிக்க விரும்பின் பரபரப்பான / ஆவிகள் சம்பந்தமான திரைப்படங்களைத் தேர்தெடுக்கலாம். எனினும், அபிமான நடிகரின் திரைப்படத்தை சினிமா சென்று முதற் காட்சியில் பார்ப்பதற்கு நேர காலம் தேவையில்லை தானே! எதிர்பார்ப்பும் / கண்ணோட்டமும் வாழ்க்கையில் நமக்கு எப்படி நியாயமான எதிர்பார்ப்பு தேவையோ, ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்திலும் நமது எதிர்பார்ப்பு பற்றிய தெளிவு இருத்தல் அவசியமானது. ஒரு ரஜனி படத்திற்குச் சென்று விஜய் சேதுபதி படங்கள் போன்று கதையம்சம் இல்லையே என வருத்தப்படுவதை விட விஜய் சேதுபதியின் எதாவது படத்தை ரசிப்பதே புத்திசாலித்தனமானது (மறுதலையும் உண்மை!). ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு என்பது போலத்தான், இதுவும் ஓர் எழுதப்படாத விதி. இது மிக வெளிப்படையான உதாரணம். மற்றய படங்களை எப்படி பார்ப்பது? இங்கு தான் நீங்கள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள், என்ன மன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுத் தெளிந்த பின் ஒரு திரைப்படம் பற்றிய தகவல்களை மேலுள்ள பகுதிகளில் கூறியது போல் அறிந்து அது உங்கள் எதிர்பார்ப்புக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும். பொருத்தமில்லாத திரைப்படத்தை 2,3 மணித்தியாலங்கள் இருந்து பார்ப்பது என்பது இந்தக் காலத்தில் ஓர் வாய்ப்புச் செலவு (opportunity cost) தான்! இதைவிட தரமான பொழுதுகளை உங்கள் குழந்தையுடன் செலவளித்திருக்க முடியுமல்லவா? தரமான திரைப்படங்கள் எனப் பரவலாகச் சொல்லப்படுபவை எல்லாம் நமது எதிர்பார்ப்புக்கு அமையவேண்டிய அவசியமில்லை.தெளிவான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படத்தை மட்டுமே நல்ல படம் என்கிறோம். மேலும், ஒருவரது பார்வை காலத்துக்குக் காலம் மாறுபட மாறுபட ஓர் திரைப்படம் பற்றிய பார்வையும் மாறலாம். அதாவது 10 வருடங்களுக்கு முன்னர் ரஜினி படங்களை ரசித்த ஒருவர் தற்போது கமல் ரசிகராக மாறியிருக்கலாம். அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அறிவு முதிர்ச்சி, வயது என்று இன்னும் பல காரணிகள் வாழ்வை புதியதொரு கண்ணோடத்தில் பார்க்கவைப்பதைப் போல, திரைப்படங்கள் மீதான பார்வையையும் மாற்றி இருக்கலாம். இன்னும், ஓர் காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் இன்று புறக்கணிக்கப்படலாம். உதாரணமாக 80களில் பிரபலமான மோகனின் 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தை இன்று பார்த்தால் 'இதையா அன்று கொண்டாடினார்கள்?' என்று தோன்றும். அப்போது பலருக்குப் தெரியாத படங்கள், இப்போது கொண்டாடப்படுவதும் உண்டு. விஜய் சேதுபதி முதலில் கதாநாயகனான 'தென்மேற்குப் பருவக்காற்று' (2010) திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு. எனவே, கால ஓட்டத்தில் ஏற்படும் ரசனை மாற்றங்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். சுருங்கச் சொல்லின் , பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில் தரமான திரைப்படங்களைத் தெரிவு செய்யும் திறனும், அவற்றில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவும் நமக்கிருந்தால் நல்ல திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைக்கும். (குறிப்பு: எனது அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியுள்ளேன். நான் மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் உதாரணத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கம் கருதி நிறைய உதாரணங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். நன்றி )
  3. தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றியை குவித்த விஷால் அணியினர்! தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார். ஆனால், விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மிஷ்கின் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, கேயார் அணியின் கதிரேசன் வெற்றி பெற்றார். விஷால் அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட, எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர். 'எனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மாற்றம் வர வேண்டும் என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு ஆண்டுகளில், தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றம் அடையும். விவசாயிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குற்றசாட்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன். திருட்டு வி.சி.டி எதிரிகள் தயாராக இருங்கள்' என்றார். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார். அவர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கேயார் 224 வாக்குகள் பெற்றுள்ளனர். 22 வாக்குகள் செல்லாதவை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வெற்றியை வெடி வைத்து கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் எட்டு சுற்றுகள் முடிவில் விஷால் 114 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். விஷால் 362 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 248 வாக்குகள், கேயார் 173 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது, ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக, அவரது அணியினர் கோஷமிட்டனர். ஆனால், அப்போது, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து, விஷால் வெற்றி பெற்றதாக, அவரது நம்ம அணியினரும் கோஷமிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது. நீதியரசர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம், 'இதுவரை எந்த வித அசம்பாவிதமின்றி தேர்தலை நடத்தியுள்ளோம். நேர்மையாக நடத்தியுள்ளோம். சரியாக 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். முதலில் தலைவர் உள்பட 4 முக்கியப் பதவிகளுக்கான எண்ணிக்கை 4 அறைகளில் எண்ணப்படும். இந்த முடிவுகள் மாலை 6.30 மணிக்கு தெரிந்து விடும். இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, போட்டியிடும் 5 பேர், ஏஜெண்டுகள் 5 பேர் அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கும். அது அனைவரின் முன்னிலையில் நடத்தப்படும். அதை யார் வேண்டுமானால் காணலாம்' என்றார். நம்ம அணி சார்பாக போட்டியிடும் விஷால் செய்தியாளர்களிடம், 'மாற்றத்தை விரும்பியே 1,059 பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் சினிமாவிற்கு பொற்காலமாக அமையும். வாக்களித்தவர்கள் மற்றும் நீதியரசர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி' என்றார். ஆர். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், 'சிறு தயாரிப்பாளர்களின் ஆதரவு எங்களுக்குதான் அதிகம் உள்ளது. அவர்கள் எங்களுக்குதான் வாக்களித்துள்ளனர். வெற்றியுடன் வந்து சந்திக்கிறோம்' என்றார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 1,211 வாக்குகளில் 1,059 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. நடிகர் ஶ்ரீகாந்த் வாக்களித்தார். தமிழக தயாரிப்பு சங்கத் தேர்தலில் இதுவரை ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் ”மாலை 4.10 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும். அதற்கு மேல் கேட் மூடப்படும். அந்நேரத்தில் உள்ளே உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் ”, என்று தேர்தல் அதிகாரியான நிதியரசர் எஸ்.ராஜேஷ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் நடக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக திரைப் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு அந்தந்த அணியின் ஏஜெண்ட்டுகள் 5 பேர், அணியின் சார்பில் 5 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எஸ்.ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். நடிகர் அர்ஜுன், இயக்குனர் பாலா ஆகியோர் தற்போது வாக்களித்தனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1211 வாக்காளர்கள் உள்ளனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 770 வாக்குகள் பதிவாகி உள்ளன. காலையில் வாக்குப் பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நடிகை சுகாசினி மணிரத்தினம் வாக்களித்தார். இதனையடுத்து காலை 9 மணி நிலவரப்படி 129 வாக்குகள் பதிவானது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பதவி மாற்றத்தை விரும்பியே வாக்களித்துள்ளதாக கூறிவருகிறார்கள். இதனால் விஷால் தலைமையிலான ’நம்ம அணி’ வெற்றிப் பெறும் என்று கூறப்படுகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி 750-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் கந்தசாமி கல்லூரி முன்பு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தலைமையில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர திரண்டு, தமிழர் அல்லாத விஷால், பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை 700 வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மேலும் 300 வாக்குகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முக்கியமான பதவிகளுக்கான முடிவுகள் இன்று இரவு 8 மணிக்கும் தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் குறித்து முழு பட்டியல் இன்று இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்படலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஐஷ்வர்யா தனுஷ், நடிகர் ஆர்யா ஆகியோர் வாக்களித்தனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த், ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர். சென்னையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இதுவரை 135 பேர் வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.. சுகாசினி, சௌத்ரி, பாக்யராஜ் பூர்ணிமா, சசிகுமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான். முருகதாஸ், வாக்களித்தனர். -ரா.வளன், முத்து பகவத், மா. பாண்டியராஜன் படங்கள்: தி.குமரகுருபரன் http://www.vikatan.com/news/tamilnadu/85188-tamil-film-producers-council-elections-latest-photos.html