Search the Community

Showing results for tags 'தமிழ் தேசிய கூட்டமைப்பு'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 7 results

  1. தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து உரையாடினர். குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும் எனவும் தெரிவித்தார். எனவே தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம் யாதெனில், மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையிலே பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா என்பதுமேயாகும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் விளைவாக பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்மொழியப்பட்டன ஆனால் அவற்றுள் எதுவும் முன்னெடுத்து செல்லப்படவில்லை. எனவே தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/62483
  2. கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவளார்களை தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கோத்தாபய ரஜபக்ச நான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவேன் என்று தெரிவித்துள்ளார் இது சாத்தியமான விடயமாக நீங்கள் பார்க்கின்றீர்களா? அதற்கு பிறகு அவர் சொல்லியிருக்கின்றார் அவ்வாறு சொல்லவில்லை என்று அவ்வாறு சொன்னாரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது நேற்றைய உரையில் கூறியுள்ளார் தமிழ் மக்களுக்கு அபிலாசைகள் இருக்கின்றது அதனையும் நான் நிறைவேற்றுவேன் என ஏதோ சொல்லியிருக்கின்றார். அவர் தமிழ் மக்களின் ஆதரவின்றி நிச்சயமாக வெல்லமுடியாது ஆதனால்தான் முதலில் அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தற்போது அவரின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளார் போல் தெரிகின்றது. ஜக்கிய தேசியக்கட்சி சார்பாக சஜித், கருஜெயசூரிய இருவரில் யார் போட்டியிட்டால் யார் கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து வெற்றிபெறுவார் என நினைக்கின்றீர்கள் ? ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை தீர்மானிப்பது அது உட்கட்சி விவகாரம் ஆகும் இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது ஆனபடியால் அதில் தாக்கல் செலுத்தும் படியான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா இல்லையா? நாங்கள் யாரை ஆதரிப்பது யாரை ஆதரிக்காமல் விடுவது யாரையும் ஆததரிப்பதா என்ற எந்த தீர்மானமும் இன்னும் எடுக்கவில்லை. அவ்வாறென்றால் மஹிந்த அரசாங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை கொண்டு வந்ததாக நீங்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள். ஆகவே நீங்கள் மஹிந்த சார்பான கோத்தாபய ராஜபக்சவை ஆரதரிக்க முடியுமா இல்லையா என தற்போது அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கமுடியாதா? அழுத்தம் திருத்தமாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான ஒரு கருத்தினை வெளியிடுவோம் அந்த நேரம் இப்போதில்லை . உங்களது கோரிக்கைகளுக்கு கோத்தபாய ராஜபக்ச ஆதரவளித்தால் ஆதரவு வழங்குவீர்களா? நான் ஏற்கனவே சொன்னது போன்று ஆதரவு வழங்குவதா? இல்லையா என்ற தீர்மானங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கட்டும் எல்லா கட்சிகளும் தங்களின் கொள்கைகளை முன்வைக்கட்டும் நாங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் பேசுவோம் அதன் பின்னர் நிதானமான ஒரு முடிவினை நாங்கள் எடுப்போம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மனோகணேசன், தயாகமகே உடன் உலங்கு வானூர்தியில் வந்து அரசாங்கத்தின் முடிவினை அறிவிக்கும் போது தங்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஏற்பட்டது இது திட்டமிடப்பட்ட சதி என நீங்கள் அறிந்திருக்கவில்லையா? இதனை திட்டமிட்டசதியாக நான் பார்க்கவில்லை மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அதனை சிலர் உண்ணாவிரதமாக வடிவமைத்திருந்தார்கள் அவர்களிடத்தில் போய் நிலைப்பாட்டை கூறினேன் அவ்வாறு கூறவேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது அதனையே நான் மேற்கொண்டேன். ஆந்த சூழ் நிலையை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தியிருக்கலாம் என்னைப்பற்றி நாங்கள் சிந்திக்கப்போவதில்லை எங்களுக்கு இருக்கின்ற பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம். அவளவுதான் என இதன்போது பதிலளித்தார். https://www.virakesari.lk/article/62472
  3. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஷ்வனுடனான தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் தொடர்பில் எவ்வித அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை. போலியான வாக்குறுதிகளினால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் இன்று கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பொதுஜன பெரமுன பயணிக்கும் . பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் சுதந்திர கட்சி ஒரு சிறந்த தீர்வினை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். வரலாற்று பின்னியை கொண்டுள்ள சுதந்திர கட்சியுடன் ஒன்றினைந்து செயற்படுவதே எதிர் தரப்பினரது பிரதான நோக்கமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/61566
  4. கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றனர். கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்துவரம் விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/61419
  5. தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்துக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே இல்லாமலாக்கினார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடார். புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு, தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கிகரித்துக்கொள்ள முற்பட்டபோது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கி மக்கள் கருத்துக்கணிப்புடன் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அபிலாஷையை சுமந்திரன் நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சியால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது. அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்திக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக்கொண்ட பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இனி கிடைப்பது சந்தேகம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் இனி ஒருபோது இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் இதன்போது கூறினார். https://www.virakesari.lk/article/61242
  6. தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது கௌரவத்தை வெளிப்படுத்துவதுடன், நாமனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60374
  7. பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்ததுடன் 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. https://www.virakesari.lk/article/60299 வாக்குறுதிக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் - ரிஷாத் மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளக்கங்கள் நூறுவீதம் உண்மையாகும். என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அத்துடன் எதிர்க்கட்சி என் மீது முன்வைத்திருக்கும் பத்து குற்றச்சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்தால் நான் எனது அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக்கேட்க முட்டாள்கள் அல்ல. எமக்கிடையே இருக்கும் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம். அத்துடன் அவர் ஷாபி வைத்தியர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவர் எதிர்பார்க்கும் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார் என்றும் இதன்போது குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60302