Search the Community
Showing results for tags 'தீபச்செல்வன்'.
-
ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன். அண்மைய நாட்களில் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பினரும் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறந்த தலைவர் என போட்டி போட்டு பேசியபடியுள்ளனர். வரலாறு உன்னதமான தலைவர்களையும் போராளிகளையும் ஒரு நாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இதனால்தான் வரலாறு என்னை விடுவிக்கும் என்றார் பிடல் காஸ்ரோ. இத்தகைய தலை சிறந்த போராளிகளின் ஒரு அதிசய நாயகனாக, வியப்பூட்டும் உன்னத போராளியாக மதிப்பு பெறுகிறார் மாவீரன் பொன். சிவகுமாரன். இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை.
-
உலகின் இருதயங்களை துண்டாடும் கொரோனா: தீபச்செல்வன் மனிதன் தனித்து வாழ முடியாத காரணத்தினால்தான் குடும்பம் என்ற அலகாகவும் சமூகம் என்ற நிறுவனமாகவும் வாழத் துவங்கினான். மனிதனுக்கு உணவும் உறையுளும் எப்படி முக்கியமோ அப்படித்தான், சக பாடிகளும் ஜோடிகளும் உறவுகளும் முக்கியமானவர்கள். மனிதர்களுக்கு உறவின் தீணியாக, உணர்வின் தீனியாக சக மனிதர்கள் தேவைப்படுகின்றனர். உலகம் இந்த கூட்டிணைவின் புள்ளியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகங்களும் வாழ்க்கையும் இந்தப் புள்ளியில் புதிய உலகை படைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்துவுக்குப் பிற்ப்ட்ட இந்த உலகத்திற்கு 2020 வருடங்கள் வரலாறு. இந்த வரலாற
-
இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது. ஈழத் தமிழ் மக்களைப் பொ
-
ஈழத்தில் மனித உரிமைகள் - தீபச்செல்வன். Posted on December 29, 2019 by செய்தியாளர் பூங்குன்றன் அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும் வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை திருவாய் மலர்ந்துள்ளார். இன அழிப்பு போருக்கு மனிதாபிமானப் போர் என்று பெயர் சூட்டியவர்கள் இப்படி எல்லாம் பேசுவது ஆச்சரியமானதல்ல. இந்த உலகப் பந்தில் வரலாறு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒரு தனித்துவமான இனமாக இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள், சிங்கள அரசாலும் அனைத்துலக சமூடூகத்தினாலும் எப்படி நோக்கப்படு