• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'தூத்துக்குடி'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. இந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. “வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது! நண்பர்களே, இது என்ன நிலைப்பாடு? அப்படியானால், மக்கள் வன்முறையில் இறங்கினால் சுட்டுத் தள்ளலாம் என்கிறீர்களா? எனில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டது உண்மைதான் எனக் காவல்துறையினர் சான்றுகள் காட்டி விட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான் என ஏற்றுக் கொள்ளப் போகிறோமா நாம்? உண்மையில், இந்த நேரத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, “கலவரங்களை அடக்குவது குறித்த இந்தியச் சட்டங்கள் சரியானவையா?” என்பதுதான். மேலை நாடுகளில் கலவரங்கள் கைமீறிப் போனால் இரப்பர் குண்டுகளைக் கையாளும் வழக்கம் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரோடு தங்களை ஒப்பிட்டுக் கழுத்துப்பட்டை நுனியைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு இரப்பர் குண்டு என ஒன்று இருப்பதாவது தெரியுமா? கேட்டால், நம் நாடு இன்னும் அந்தளவு முன்னேறவில்லை என்பார்கள் நம் ‘தினமலர்’ படிப்பாளிகள். அட நாதாறிகளே! செவ்வாய்க் கோளுக்குச் செயற்கைக்கோள் விடுமளவுக்குத் தொழில்நுட்பத்தில் தொக்குத் தாளிக்கும் நாடு மனித உரிமை சார்ந்த விதயங்களில் மட்டும் முடியாட்சிக் காலத்தை விட்டு முடியளவும் முன்னேறவில்லை எனச் சொல்ல உங்களுக்கு நாக் கூசவில்லை? ஆக, இந்த நாடு பொருளாதாரமும் வெட்டி வீராப்பும் சார்ந்த துறைகளில் மட்டும்தான் முன்னேறத் துடிக்கிறது; தனி மனித நலனும் குடிமக்கள் உரிமையும் சார்ந்த விதயங்களில் வளர எந்தவிதமான ஆர்வமும் இந்நாட்டுக்கு இல்லை என்பதுதானே இதன் பொருள்? இந்தப் போக்கை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதுதானே இந்த நேரத்தில் நம் கடமை? மாறாக நாமோ, முதலில் வானத்தை நோக்கிச் சுடுவது, பின்னர் இடுப்புக்குக் கீழே சுடுவது முதலான துப்பாக்கிச் சூடு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோமே, இதை விட ஏமாளித்தனம் உண்டா? மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள்! அதிகார அமைப்பு நம் உயிரைக் காவு வாங்குகிறது; ஏன் என்னைக் கொல்கிறாய் எனக் கேட்க வேண்டிய நாம் தகுந்த காரணத்தோடுதான் என்னைக் கொல்கிறாயா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! இதுதான் இந்தக் கட்டமைப்பின் (structuralism) வெற்றி! கட்டமைப்பியலாளர்களின் (structuralists) வெற்றி! தவறு செய்தால் சொந்தக் குடிமக்களையே சுட்டுக் கொல்லலாம் என ஒரு சட்டம் இருப்பதே வெட்கக்கேடு! ஆனால் அதுதான் சரி என இந்தக் கட்டமைப்பும் கட்டமைப்பியலாளர்களும் நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு கொடூரம் நம் கண் முன்னே நடந்து முடிந்த பின்னும் இதற்கு ஆதரவாக இருக்கும் அந்தச் சட்டத்தைக் குறித்த கேள்வியை நாம் எழுப்பாமல், நடந்த கொடூரம் அந்தச் சட்டப்படி ஏற்கத்தக்கதுதானா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! தவறான சட்டத்தைத் தூக்கி எறிவதற்கு மாறாக அதற்குள்ளேயே நமக்கான நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! இது நடந்தேறிய அந்தப் படுகொலையை விடவும் கொடூரமானது! எனவே தொலைக்காட்சி விவாதங்களில் அமரும் மனித உரிமை ஆர்வலர்களே, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஊடக நண்பர்களே, சமூக அக்கறையாளர்களே, கட்சித் தோழர்களே, தலைவர்களே, பொதுமக்களே இந்தத் தமிழ்நாட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான உங்கள் வாதங்களை அருள் கூர்ந்து மாற்றுங்கள்! எப்படிப்பட்ட சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் எனச் சட்டம் சொல்லும் முறைப்படிதான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறதா எனக் கேட்காதீர்கள்! எப்பேர்ப்பட்ட சூழலாயிருந்தாலும் சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறுங்கள்! மக்கள் கட்டிய வரிப் பணத்தில் வாங்கிய துப்பாக்கியை வைத்து அவர்களையே சுடுவது மானங்கெட்ட செயல் எனச் சுட்டிக் காட்டுங்கள்! அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், மண்ணாங்கட்டி என அத்தனையையும் மேலை நாடுகளைப் பார்த்துப் படியெடுக்கும் (copy) நம் அரசுகள் மக்களை நடத்தும் விதத்தை மட்டும் அங்கிருந்து ஏன் கற்றுக் கொள்ள மறுக்கின்றன என்பதைக் கேளுங்கள்! மற்ற துறைகளில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் பற்றி மட்டும் வக்கணையாகப் பேசும் நம் ஆட்சியாளர்கள் மனித உரிமைத்துறையில் மட்டும் இன்னும் தமது கற்காலக் காட்டாட்சி முறைகளை விட்டு வெளியில் எட்டிக் கூடப் பார்க்க மறுப்பது ஏன் என வினவுங்கள்! தீர ஆராய்ந்து, முறையாக விசாரித்த பின்னும் அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே அளிக்கச் சொல்லியிருக்கும் தூக்குத் தண்டனையையே ஒழிக்கும்படி கேட்குமளவு முன்னேறிவிட்ட சமூகத்தில், கலவரக்காரர் எனக் குற்றம் சுமத்திவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கேள்விமுறையே இல்லாமல் கொல்லலாம் என ஒரு சட்டம் அமலில் இருப்பதே சமூகப் பேரிழிவு என்பதை எடுத்துரையுங்கள்! இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவற்றையெல்லாம் புரிய வைப்பது எளிதில்லைதான். நாட்டின் கணிசமான பகுதியைத் துப்பாக்கி முனையிலேயே ஆளும் இந்த அதிகார அமைப்புக்குக் கலவரத்தை அடக்கக் கூடத் துப்பாக்கி எடுப்பது தவறு என உணர்த்துவது மிகக் கடினம்தான். ஆனால் நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மறுநாள் வருமென எதிர்பார்த்திருந்த பள்ளிச் சிறுமி, திருமணமாகி மூன்று மாதங்களே ஆன கருச்சுமந்த மனைவியை விட்டு வாழ வேண்டிய வயதில் மறைந்த கணவன் எனப் பதின்மூன்று பேர் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு கூடக் கேட்காவிட்டால் இதை நாம் இனி எப்பொழுதுதான் கேட்பது?! பி.கு: “முழுக்க முழுக்கச் சட்டத்திருத்தம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறாயே? அது மட்டும் போதுமா? நடந்த படுகொலைக்குக் காரணம் யார், இதற்கு உத்தரவிட்டது யார் என்பவையெல்லாம் தெரிய வேண்டாவா?” எனக் கேட்பவர்களுக்கு என் மறுமொழி, அவையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை; கட்டுரையின் முதல் எழுத்துடைய நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அசல் சுட்டி: http://agasivapputhamizh.blogspot.com/2018/05/Sterlite-Massacre-An-important-question-we-fail-to-raise.html
  2. வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார். பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!! "History Repeats Itself!" என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான். "ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவனின் காணொளித் துண்டை தொலைக்காட்சியில் கண்டபோது "என் துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்துவிட்டன! இல்லையேல் இன்னும் பலரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்!" என்று கொக்கரித்த மேலைஆரிய வெள்ளையன் ஜெனெரல் ஓ டயர் இன்று உயிருடன் மீண்டு வந்திருக்கிறான் தூத்துக்குடிக்கு என்பது புரிந்து போனது. ஒரே வேறுபாடு, இன்று அவன் நேரடியாக வந்து சுடவில்லை; கீழை ஆரியனாக தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டுவிட்டானோ என்று நம்மை எண்ண வைக்கின்றது வடஇந்தியத் தொலைக்காட்சிகளில் "செத்தவர்கள் மாவோயிஸ்டுகள்!" என்று கொக்கரிக்கும் தமிழகத்தில் வசிக்கும் ஆரியர்களின் கூச்சல்.. ஏனைய மாநிலங்கள் அனைத்தும் துரத்திவிட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தூத்துக்குடியில் நிறுவினர். அன்றாடம் அவ்வாலை வெளியேற்றும் நச்சுக்கழிவுகளால் குடிக்கும் நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் நஞ்சாகிப் போனதால் ஏற்பட்ட பல்வேறு நோய்களால் கொத்துக்கொத்தாக சகமனிதர்கள் சாவதைப் பொறுக்க இயலாமல், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை என்று அப்பகுதி மக்களே ஒன்றுதிரண்டு முன்னெடுத்த நெடுநாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தன் மக்களையே கொன்று, அச்சத்தை உருவாக்கும் கொலைபாதகத்தை, நிறைவேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். சுவாசிக்கக் காற்றுக்கும், குடிக்க நீருக்கும் நீதி கேட்டுப் போராடிய அப்பாவித் தமிழர்களை 'மாவோயிஸ்டுகள்' என்று முத்திரை குத்தி, காவல்துறையை ஏவிவிட்டுத் துப்பாக்கிக் குண்டுகளால் கொன்று தீர்த்ததைக் கொண்டாடிக் கொக்கரிக்கின்றன மக்கள் விரோத ஆரிய சக்திகள்! "எங்களுக்கு வேலையும் வேண்டாம்! வளர்ச்சியும் வேண்டாம்! நாங்கள் சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்காமல் இருந்தாலே போதும்!" என்று கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கொத்துக் கொத்தாகச் சாகும் தூத்துக்குடி மக்களின் கதறலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிதத்தோடு நிற்காமல், இப்போதுள்ளவற்றைக் காட்டிலும் இருமடங்கு பெரிதான புதிய ஸ்டெர்லைட் விரிவாக்க ஆலைக்கும் அனுமதி அளித்தனர் மத்திய, மாநில அரசினர். 25 ஆண்டுகளாக ஆண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துரோகச்செயலைப் பொறுக்க இயலாமல் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர் தூத்துக்குடி மக்கள். ஸ்டெர்லைட்டிடம் விலைபோன அரசியல் கட்சிகளை நம்பமாட்டோம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றனர் போராடும் தூத்துக்குடி மக்கள். அசராமல் தாங்களே அமைதியான வழியில் தொடர்போராட்டங்களைத் தொடர்ந்தனர்; இப்போராட்டங்களை நிறுத்தவே ஜல்லிக்கட்டு பார்முலாவைக் கையிலெடுத்தனர் ஆட்சியாளர்கள் என்று வலுவாகக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசே வாகனங்களுக்குத் தீவைத்ததைப் படம்பிடித்துச் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள், இம்முறை போராட்டங்களை ஒடுக்க மாற்றுவழியைக் கையாண்டனர் என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைக்கின்றனர் போராடிய தூத்துக்குடி மக்கள். (இத்தனை முன்னேற்பாடுகளையும் தாண்டி, பொதுமக்களில் எவராவது சமூக வலைத்தளங்களில் கையும் களவுமாகப் பிடிபட்டவற்றைப் பதிவேற்றிவிட்டால் என்னசெய்வது என்று யோசித்தார்களோ என்னவோ, மாநில உள்துறை, தென்மாவட்டங்களில் இணையதளத்தையே ஐந்து நாட்கள் முடக்கிவைக்கும் முடிவை அவசரநிலைப் பிரகடனம் செய்து கொண்டுவந்தது ஒரு தனிக்கதை.) சீருடை அணியாத போலீசைக் கொண்டும், சமூக விரோதிகளை ஏவியும் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதாகப் போராடிய மக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அமைதியாகப் போராடிய மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுடுவதற்குக் காரணம் இப்போது கிடைத்துவிட்டது. பலரைச் சுட்டுக் கொன்றபிறகு, ஆட்சியாளர்களும் ஆரியக் கைக்கூலிகளும் செத்தவர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே! என்று பாடிய பாரதி, தூத்துக்குடிப் படுகொலைகளைக் கண்டிருந்தால், சொந்தச் சகோதரர்களைத் துடிதுடிக்கக் கொல்லல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே! மாவோயிஸ்ட் என்றாறடி! செத்தவர் மாவோயிஸ்ட் என்றாறடி! கிளியே! அவர் கொல்லப்படல் இறையாண்மை தர்மமென்றாரடி! என்று பாடியிருப்பார். "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும்" கேட்டுப் போராடிய குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் சாவை, தமிழ்நாட்டில் வாழும் ஆரியர்களும், ஆரியக்கைக்கூலிகளும் "போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்தான் கொல்லப்பட்டார்கள்! அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே! அவர்கள் செத்து ஒழியட்டும்!" என்று வடஇந்திய ஆரியக்கைக்கூலிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொக்கரித்துக் கொண்டாடினார்கள். இவர்களின் கொக்கரிப்பை அப்படியே பரப்புரை செய்கின்றனர் ஆரியக்கொள்கையேற்ற அடிவருடித் தமிழினக் கோடரிக் காம்புகள். தம் உடன்பிறப்புக்களை ரத்தம் சொட்டச்சொட்டத் துடிதுடிக்கக் கொன்ற படுகொலைச் சாவைக் கொண்டாடும் கொடூரர்களாக ஆரிய வெறிநாய்க்கடிபட்ட தமிழர்கள் வெறிகொண்டு கொக்கரிப்பதைக் கண்டு மனம் பதைக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! மேலை ஆரியன் ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் "கஞ்சி குடிப்பதற்கு இலார்!" என்றிருந்த ஏழை மக்களின் நிலை, இந்தியாவை எழுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கீழை ஆரிய அரசுகள், அவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட பல்வேறு தமிழக அரசுகளின் ஆட்சியால் "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும் இலார்" என்ற அளவுக்கு மோசமடைந்துள்ளது. இந்தியா என்னும் அமைப்பு இந்தியா என்பது பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு. ஒன்றன்பின் ஒன்றாக ஐம்பத்தியாறுக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட நாடுகளைப் பிடித்து ஆண்ட மேலை ஆரிய ஆங்கிலேயர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெளியேறிய பின்னர், உருவான கூட்டமைப்பு நாடுதான் இந்தியா என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் "India shall be a Union of States " என்று பிரகடனம் செய்கிறது. ஆரியர்களின் நலனுக்காகவே உருவான RSS-ம் அதன் அரசியல் கட்சியான பிஜேபி-யும் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான இந்தியாவை "ஒரே (ஆரிய)நாடு! ஒரே (ஆரிய)மொழி! ஒரே மதம்(ஆரியம்-இந்து) ஒரே மக்கள்(ஆரியர்கள்)!" என்று மாற்றும் ஒற்றைக் கலாச்சார முழக்கத்தை முன்வைக்கின்றது. இங்கு, 'ஒரே' என்பது 'வடஆரியர்களை'க் குறிக்கும் சொல். "பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள்" என்ற பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் ஒற்றுமையாக வாழ்வது சாத்தியம். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பன்மைத்துவத்தின் இருப்பில்தான் அடங்கியுள்ளது. 'ஒரே' என்னும் 'uniformity'யைத் தூக்கிப்பிடிப்பது இந்திய யூனியன் அமைப்பைத் துண்டாடும் முயற்சி என்பதை வட ஆரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.