யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Search the Community

Showing results for tags 'தேநீர் கவிதை'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 7 results

 1. தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்? உன் பிறப்புச் சான்றிதழ் உன் பெற்றோர் வாங்குவர். உன் இறப்புச் சான்றிதழ் உனக்குப் பின்னால் இருப்பவர் வாங்குவர். நீ என்ன வாங்குவாய்? **** பகல் வந்துபோனதற்கு நட்சத்திரங்கள் அடையாளம் இரவு வந்து போனதற்கு விடியலே அடையாளம் நீ வந்து போனதற்கு என்ன அடையாளம்? **** அகராதியில் ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும் அதற்கு அர்த்தமும் இருக்கும் நீ எதில் இடம்பெறுவாய்? உனக்கு என்ன அர்த்தம்? **** தன்னைக் கடப்பதற்கு எந்த நதி ஓடம் கேட்கும்? என்ன கிடைத்தால் நீ உன்னைக் கடப்பாய்? **** ஓர் எறும்பும் - உனக்குத் தெரியும் ஒருமுறைதான் சாகிறது ஆனால் அதற்குள் வாழ்கிறது. நீ எத்தனை முறை சாகிறாய் ஒருமுறை கூட வாழாமல்? **** தன்னைத் திறப்பதற்கு எரிமலை எவரிடம் சாவி கேட்கும்? உன்னைத் திறப்பதற்கு உன்னிடமா... உலகத்திடமா? எவ்விடம் சாவி? **** ஒவ்வொரு இதழிலும் ரோஜா இருப்பதால் ஒரு ரோஜாப் பூ உருவாகிறது. ஒவ்வோர் அடியிலும் உயரம் உழைப்பதால் இமயம் நிமிர்கிறது. **** நீ ஒவ்வொரு நொடியிலும் எதுவாக இருக்கிறாய்? உன் வாழ்க்கை எதுவாக இருக்கிறது? - ஈரோடு தமிழன்பன் http://www.kamadenu.in/news/poems/160-tea-poem-by-erode-thamizhanban.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category
 2. தேநீர் கவிதை: ரசாயன அடிமைகள் பின் தொடர்ந்து வருகிறார்கள் குடிநோயாளியை ஒரு தாயோ தங்கையோ மனைவியோ மகளோ அடிப்பதற்கு விரட்டுகிறான் ஞானமற்ற பாதகன். சுவர் முட்டி நிற்கிறான் குடிநோயாளி குடத்துக்குள் தலை மாட்டிய நாய். தப்பிக்க நினைத்து ஓடுபவனை விரட்டி களைத்து விட்டு விடுகிறது மதுமிருகம். வாழ்க்கையிடம் கற்றுக்கொள்பவன் குடிநோயாளி... வாழ்க்கைக்கு கற்றுத்தருபவன் குடியற்ற வாழ்க்கைக்காரன். நாடெங்கும் ரசாயன அடிமைகள் நோய்மை நிறைந்த வீதியெங்கும் நீதியின் மனப்பிறழ்வு. வெளியே கடை உள்ளே வினை. சண்டையிட்டு ஜெயிக்க முடியாமல் கடிப்பட்டு தப்பிக்க வழியறியாமல் திகைத்து நின்றபோது தெரிந்தது - போத்தல் கரடியாக உருவாகியிருந்தது. எல்லா பாலினத்திலும் உண்டு குடிநோயாளியெனும் நான்காம் பாலினம். கண்காணிப்பு கேமராவுக்கு மேல் சட்டைப் பொத்தானை அவள் கழற்றியபோது ஆறாவது கோப்பை அருந்தலின் சாகச கொண்டாட்டமிது. அவனுக்கு எதுவும் தெரியாது அவனை சட்டத்தின் கண்கள் விடாது துளைக்கும். அவனா இதைச்செய்தான் அவனே திகைப்பூட்டும் சகதியில் ஞாபகத்தின் வேர்கள் உயிரோடு இருந்தும் மரத்து போயிருந்தன எல்லோருக்கும் தெரியும் உடல் ஒவ்வாமை குடிநோய்க்காரனின் வெறிக்கு இது நடந்து விட்டது இருப்பினும் மன்னிப்பில்லை. சுவாசத்துக்குள் அவனறியாமல் பதுங்கிக்கொண்டு நாள் பார்த்துக்கொண்டிருந்தது - மது எனும் திரவக் காட்டேரி. குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல்நலத்தையும் கெடுக்கும் பின் எதற்கு விற்கிறார்கள். போதையில் தடுமாறுகிறான் சத்தமாக பேசி நிதானத்திற்கு திருப்புகிறார் தந்தை! - இயக்குநர் சீனுராமசாமி http://www.kamadenu.in/
 3. தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய நுங்கு மட்டை வண்டியுருட்டி சக நண்பர்களுடன் தோற்றும் ஜெயித்தும் விளையாடிய நாட்கள்... மொட்டுவிட்ட தட்டாஞ்செடிகளில் பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை காத்துக் கிடந்து நாவூறப் பறித்து ருசித்த நாட்கள்... நினைத்தாலே நினைவுகளில் ஈரம் சுரக்கும் பிள்ளைப் பிராய நாட்களை தொலைத்துவிட்டு *கைகளை விரித்தபடி ஓடிவரும் குழந்தைகளை வெறுமை பூசிய நாட்களால் வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம் இப்போது! - மு.செல்லா http://www.kamadenu.in/
 4. தேநீர் கவிதை: வலிக்கிறது! உயரத் துடிக்கும் முடவன் நான். அடிக்கு ஒருமுறை வழுக்கியோ திறனின்றியோ விழுகிறேன். எப்படியோ கை ஊன்றி எழுந்து விடுகிறேன் யார் தயவும் இல்லாமல். மீண்டும் விழுந்தால் மாண்டுவிடாமல் எழ மனதில் உறுதிகொண்டு. ஒவ்வொரு முறையும் உறுதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைகிறது. தத்தளிக்கும் என்னை தூக்கிவிட்டு துயர் துடைக்கும் தாயுள்ளம் எதிர்பார்க்கும் தற்குறி இல்லை நான். விழுந்தவன் எழட்டும் என வழி விட்டு விலகிச் செல்லும் பண்புகூட எவன் கேட்டான். வாழைப்பழ தோல் வழுக்கி விழுந்தால்கூட சிரிக்க சொல்லித்தானே வளர்த்தார் இங்கு எனவே எள்ளி நகையாடும் குணம்கூட இருந்து தொலைக்கட்டும். கிடைத்தான் ஒரு கழுதை என்று ஏறி மிதிக்கும் இந்த வக்கிரம் மட்டும்தான் வலிக்கிறது! http://www.kamadenu.in/news/poems/
 5. தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் வெப்பத் துளிகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டேயிருக்கின்றன. திசை கடந்து பறந்த தன் குஞ்சுப் பறவைகளின் திசைகளைக் கண்களுக்குள் எழுதி வைத்திருந்து காத்திருந்த காலங்கள் ஐப்பசி, தை-களில் பூத்து மலர்ந்துவிடும். தைப்பூசத்துக்கும் தீபாவளிக்கும் வந்துபோகும் சொந்தங்களுக்கு சமையல் அறையிலிருந்து அவளே மணமாய் மலர்ந்தாள். பேரப் பிள்ளைகளுக்கும் மகளுக்கும் மருமகள்களுக்கும் முறுக்கும் மைசூர்பாவுமாய் சுட்டு வைத்த வாசனை வீட்டுச் சுவரில் வீசிக் கொண்டேயிருக்கிறது. எப்படிக் கரைசேர்வானோ இவன் என்று என் கால்களை வருடிய அவளின் கண்ணீரில் நான் நீந்திநீந்திக் கரைதொட்டபோது மரணத்தின் மடியில் பூவாய் உதிர்ந்து போனாள். இன்னும் எங்கேனும் ராட்டை ஒலி கேட்கையில் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்க்கிறேன்.. தலைகுனிந்து பாட்டிசைத்து பாடிக்கொண்டிருப்பாளோ எனக்கான ஒரு பாடலை! http://tamil.thehindu.com/opinion/blogs/article19767581.ece
 6. தேநீர் கவிதை: வேனல் கோடையின் வாசனையை வேப்பம்பூ காட்டிவிடுகிறது. செய்கூலி இல்லாமல் வெயில் அதிகமாகவே ஜொலிக்கிறது. . பகல் பொழுது மிக நீண்டதாய் ... திண்ணைகளும் காலியாகின்றன செல்சியசும் புரியவில்லை பாரன்ஹீட்டும் விளங்கவில்லை எல் நினோ அத்துப்படியில்லை ஓசோனில் ஓட்டையும் அறியவில்லை போன வருஷத்தைக் காட்டிலும் வெயில் ஜாஸ்தி என்பதே பழகிப்போச்சு சூரியனுக்கும் பூமிக்கும் லட்சம் மைல்கள் தூரம் இல்லை கைக்கு எட்டும் தூரம் தான் சோஷலிசமாய் வெப்பம் சமத்துவம் பேசுகிறது. உழைக்காதவருக்கும் வியர்வை. இளநீர்க் கடையில் தஞ்சம் புகுந்த குளிர்பான பாட்டில்கள் வியர்த்தபடி இருக்கின்றன மின்சாரம் அடங்கிய கணம் ஓலை விசிறியை தன்னிச்சையையாய் கைகள் தேடிக்கொண்டிருக்கின்றன. . நுங்குகள் தந்த பனைமரத்தையும் துவைத்துப் போட்டு விடுகிறது வியர்க்குரு முலாம் பூசி உயிர்ப்பலியில் முடியும் போதே விபரீதம் புரிகிறது . கத்திரி வெயில் சற்றே தாமதமாக தான் உரைக்கிறது. காரணமும் தெரிகிறது கானகம் அழித்த நம் பாவத்திற்கு புவிப்பந்து நிபந்தனையில்லாமல் அக்கினி பிரவேசம் செய்கிறது. இறுமாப்பு மனிதனுக்கா இல்லை வெயிலுக்கா ? வருடந்தோறும் கேள்வி நீண்டு கொண்டே இருக்கிறது. http://tamil.thehindu.com
 7. தேநீர் கவிதை: ஓவியங்கள்! பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள், அழகான சட்டமிடப்பட்டு கண்காட்சிக்கென எடுத்து வைக்கப்பட, ஓவியக் கூடத்தில் வரையும்போது கீழே சிந்தப்பட்ட வண்ணப் பிசிறுகள் பார்வையை ஈர்க்கின்றன... சட்டமிடப்பட்ட ஓவியங்களை விடவும் கூடுதல் அழகோடு. ***** வரைந்து முடித்த ஓவியத்தில் ஏதோவொன்று குறைவதான நிறைவின்மையில் ஆழ்ந்திருந்தான் ஓவியன். உள்ளே ஓடி வந்த குட்டி மகளின் கால் பட்டு, தெறித்து விழுந்த வண்ணக்கிண்ணத்திலிருந்து சிதறிய ஒரு துளி வரையப்பட்டிருந்த ஓவியத்தினூடே பட்டுத் தெறித்தது. அந்த முற்றுப்பெறா ஓவியத்திற்கான முற்றுப்புள்ளியாய். ***** தொலைதூர வானில் பறந்து கொண்டிருந்த அந்த ஒற்றைப் புறாவை வரையத் தொடங்கினான் தூரிகைக்காரன். அவன் வரையத் தொடங்கிய கணத்திலிருந்து பறத்தலை மறந்த புறா அதே இடத்திலேயே நின்றபடி சிறகடிக்க, பறப்பதற்கான விநாடிகளை எதிர்பார்த்தபடியே ஈரமாய் ஒட்டிக் கிடக்கிறது... திரைச்சீலையில் வரையப்பட்ட மற்றொரு புறா. ***** ஓவியமென்பது எதுவெனக் கேட்டால், ‘பேசா கவிதை’ என்கிறான் கவிஞன். கவிதையென்பது யாதெனக் கேட்டால், ‘பேசும் ஓவியம்’ என்கிறான் ஓவியன். விமர்சனமென்பது எதுவெனக் கேட்டேன் ஆய்வாளன் ஒருவனிடம். ‘பேசா கவிதையை பேச வைப்பதும், பேசும் ஓவியத்தை ஊமையாக்குவதும்...’ என்றான். பிறகு - கவிஞன், ஓவியன், நான்... மூவரும் பேசவே இல்லை அவனிடம். ***** சுவரில் காகிதத்தில் பலகையில் தரையில் சாலையில்... எங்கு வரைந்தபோதிலும் வரையப்பட்ட ஓவியம் எப்போதும் வேண்டி நிற்பது ரசிகனின் பார்வை தரிசனத்தையே! http://tamil.thehindu.com