Search the Community

Showing results for tags 'தொடரும் சிங்கள அரச பயங்கரவாதம்'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 8 results

 1. யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் 30 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இராணுவத்தினரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில் பெண் ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர், படையினர் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர். அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சாந்த சுபசிங்க, தனுஷ்க புஸ்பகுமார, பிரியந்த குமார ஆகிய மூன்று இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புஷ்பகுமார சார்பில் முன்னிலையாகிய சட்டவாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, இலங்கை படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு தீவிரவாத குழுவினால், வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டன என வாதிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2015 ஒக்டோபர் நடத்தப்பட்ட விசாரணையின் போது இரு பெண்கள் சாட்சியம் வழங்கியிருந்தனர். இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார். நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்புக்குறித்து 2015 301 முன்னாள் ஐ.நா மனித வுரிமை ஆணையாளர் அல் ஹுசைன் பாராட்டியதுடன் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு என்றும் இத் தீர்ப்பு அரிது என்றும் பாராட்டு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது. https://www.tamilwin.com/community/01/228320?ref=home-imp-parsely
 2. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் ஓரமாக தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்களத்தின் உடைய அனுமதியுடன் குறித்த செயற்பாடு அரசமரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இவ்வாறு தேக்கு மரச் சோலைகள் அழிக்கப்பட்டு இருப்பினும் இதுவரை அந்த இடங்கள் வெட்டை வெளியாக காணப்படுகின்றது. அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 வீதமான வனப்பகுதி இருப்பதாகவும் இதனை பாதுகாக்குமாறும் மக்கள் மத்தியில் பெருமையாக கூறியிருந்தார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த மரங்களுக்கான தேவை இல்லாதபோதும் தொடர்ச்சியாக இவ்வாறு தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அரசமர கூட்டுத்தாபன வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட தொடர்ச்சியாக வெளிமாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வு மணல் அகழ்வு கருங்கல் அகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற. இவற்றையெல்லாம் அவதானித்துக் வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட திணைக்களம் எதற்காக தொடர்ச்சியாக மரங்களை அழித்து வருகிறது என்பது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு குறித்த பகுதியில் இன்றைய தினம் மரம் அறுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த பகுதியில் நடைபெறுகின்ற செயற்பாட்டை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அரசமர கூட்டுத்தாபன அதிகாரிகள் எதற்காக இதை படம் எடுக்கிறீர்கள் என்று ஊடகவியலாளரை தங்களுடைய கைத்தொலைபேசியில் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கிறார். அத்தோடு குறித்த இடத்தில் சிங்கள மொழியிலே ஒரு பதாகையை போட்டுவிட்டு அதிலேயே விடயங்கள் அனைத்தும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றார் .முற்றுமுழுதாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியிலே சிங்கள மொழியிலேயே ஒரு பதாகையை போட்டுவிட்டு தங்களுடைய இந்த பணியை செய்து கொண்டிருக்கின்ற அரசமரம் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடானது அவர்கள் இதில் ஏதாவது சட்டவிரோதமான வேலை செய்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான தேவைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லாத நிலையில் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்காக உழைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்டத்தில் தேவையில்லாத போது மரங்கள் அறுக்கப்படுவது ஒருபுறமாக இடம்பெற ஏன் பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து மரநடுகை செய்ய வேண்டும் இவ்வாறு மரங்கள் அறுப்பதை தடுக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/121897
 3. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/120563?ref=rightsidebar தமிழரின் பழம்பெரும் பூமிக்கு வந்த பேராபத்து; தமிழ் சட்டவாளர்களிடம் அவசர கோரிக்கை! கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மானப்பணிகளின் போது அங்கு காணப்பட்ட இந்துக்கோவிலின் அஸ்திவாரமாந்து உடைக்கப்பட்டு அதற்கு அருகே உள்ள சிவன் ஆலயத்தின் அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று முதல் பதற்ற நிலை ஏற்பட்டது. அதனை அடுத்து இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார வருகைதந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தார். கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதனூடாக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அவ் அத்திவார உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும் எனும் காரணத்தால் அப்பகுதியின் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்ததோடு இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ. சுமணதாச கரு த்துத் தெரிவிக்கையில், “கன்னியா பகுதியில் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது அரசினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நாம் கடந்த 2016ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபின்னர், புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள இருந்த வேளை, போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக குறித்த பணிகள் பிற்போடப்பட்டு அவை மீண்டும் இப்போது ஆரம்பிக்கப்படுள்ளன. இதன்போதே குறித்த பகுதியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் சமூகத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார். இது இவ்வாறிருக்க தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காண காணி உறுதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும் குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகிலறமணி தெரிவித்தார். 1985 களில் குறித்த பிள்ளையார் கோவிலானது பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் 2002ம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக ளுக்காக குறித்த கோவிலானது இடிக்கப்பட்டபோது வில்கம் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டு சுமார் நான்கு வருடங்களாக அது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்றதா கவும் தெரிவித்தார். குறித்த வழக்கின் பிரதான சாட்சியாளரான தேரர், குறித்த வழக்கிற்கு வருகை தராததன் காரணமாக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வருடத்தின் பின்னர் குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார். அரசினால் எந்தவொரு காணியும் கைப்பற்றப்பட முன்னர் குறித்த காணியின் உரிமையாளாருக்கு அது தொடர் பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமெனினும் இது தொடர்பிலான எந்தவொரு அறிவித்தலும் தமக்கு வழங்கப்படாது அடாத்தாக குறித்த காணி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டார். இதற்கு எதிராக வழகு தொடர்வதற்கு தமக்கு நீதித் துறையில் சிரேஷ்ட நிபுணர்களது உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/120616?ref=rightsidebar
 4. பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும் அதனை பூர்த்தி செய்து தருமாறும் பொறுப்பற்று பதிலளித்துள்ளனர். தெஹிவளை பொலிஸாரின் இச்செயற்பாட்டினால் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். http://athavannews.com/தெஹிவளையில்-மீண்டும்-பொல/
 5. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும், ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந் நிகழ்விற்கு பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர். அதாவது நிகழ்வு ஒழுங்கமைப்பு பணியில் ஈடுபட்டவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துச் சென்றதுடன் அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம் தலைமையில் கேக் வெட்டுவதற்கு முயற்சித்த போது அதனையும் பொலிஸார் தடுத்திருந்தனர். இதன் பின்னர் தீருவில் பொதுப் பூங்காவில் வைத்து கேக் வெட்ட முயற்சித்த போது அங்கு நின்றிருந்த சிவாஜிலிங்கம் மற்றும் அவரது சாரதி உள்ளிட்ட நான்குபேரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருந்தனர். இதன் பின்னர் பிறந்தநாளுக்கு வெட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கேக் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து கைது செய்து கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தனர். இதே வேளை இந் நிகழ்வு நடைபெறுவதை அறிந்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக அங்கு நின்றிருந்த ஊடகவியிலாளர்களை தமது கைத் தொலைபேசியில் தொடர்ந்தும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அத்தோடு அங்கு நின்றிருந்த வாகனங்களின் இலக்கங்களையும் தமது கைத்தொலைபேசிகளில் புகைப்படமெடுத்துக் கொண்டனர். இவ்வாறு அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியியலாளர்களால் ஊடக அமைப்புக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/109849
 6. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது. இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை உட்பட பல்வேறு மீறல்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் மதிப்பீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா கலந்து கொண்ட வேளையில், அசோசியேட்டட் பிரஸ் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் மீறல் மற்றும் சித்திரவதைகளை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டதானது சிறிலங்காவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. சித்திரவதைகள் தொடர்பாக தமது நாடானது ‘பூச்சிய சகிப்புத்தன்மைக் கொள்கையைக்’ கடைப்பிடிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சிறிலங்காப் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இவ்வாறான வக்கிரம் மிக்க வன்முறைச் சம்பவங்களைத் தான் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என மனித உரிமை விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரைப் பொறுத்தளவில் இது அசாதாரண சம்பவமல்ல. இவ்வாறான பல்வேறு சம்பவங்களை சிறிலங்காப் படையினர் ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். 2016ல், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போது தாம் பாலியல் வன்புணர்வுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘சித்திரவதையிலிருந்து விடுபடல்’ (Freedom From Torture) அமைப்பால் 2016ல் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் 71 சதவீதமான தமிழர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். தமிழர்கள் தமது கலாசாரம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை வெளியில் தெரிவிப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களும் தாம் சந்தித்த மீறல்களை வெளிப்படுத்தினார் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என ‘சித்திரவதையிலிருந்து விடுபடல்’ அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அத்துடன் இங்கு இடம்பெற்ற அதிகாரத்துவ ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவிற்கு வந்தது. இந்நிலையில் தற்போதும் இவ்வாறன சித்திரவதைகள் மற்றும் மீறல்கள் சிறிலங்காவில் தொடர்வது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. சிறிலங்காவில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு விட்டதாக அனைத்துலக சமூகம் பாராட்டி வரும் இந்த வேளையில் அங்கு தொடரும் மீறல்களை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது அனைத்துலக சமூகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசால் பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு தடையாகவே உள்ளது. போர் முடிவிற்கு வரும் போது இவ்வாறான வன்முறைகள் தொடரப்பட்டால் மீண்டும் சிறிலங்காவில் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களைத் தூக்கும் நிலை ஏற்படலாம். இதனால் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வோர் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு இடையூறு ஏற்படும். அத்துடன் சிறிலங்காவில் குற்றச்செயல்கள் மேலும் அதிகரிக்கும். சிறிலங்கா அரசாங்கமானது போர் இடம்பெற்ற வலயங்களில் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாவதைத் தடுப்பதற்காக மிகப் பலமான இராணுவ மயமாக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் இருவருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான பலத்த இராணுவ மயமாக்கலுக்கு உட்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்காப் படையினரால் கண்காணிக்கப்படுவதுடன் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் இன்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். போர்க்காலத்திலும் சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் ஒப்பீட்டளவில் இந்தச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றன. ஏனெனில் போரில் பங்குபற்றிய ஒரு தரப்பினரான சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் மட்டுமே இவ்வாறான பாலியல் வன்புணர்வு மீறல்களை மேற்கொண்டனர். மற்றைய தரப்பினரான தமிழீழ விடுதலைப் புலிகள் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடவில்லை. இவர்கள் இந்த மீறலுக்கு எதிராக மிகக் கடுமையான கோட்பாடு ஒன்றை உருவாக்கியிருந்தனர். சிறிலங்காப் படையினர் சோதனைச் சாவடிகளில் தமிழ் மக்களை சோதனை செய்யும் போது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டனர். இதேபோன்று போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர்களை மிகக் கொடுமையாக பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுத்திய காணொலிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடைத்தங்கல் முகாம்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களை மேற்கொண்டனர். வெளிநாட்டில் அமைதி காக்கும் பணிக்காகச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்கும் பல்வேறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெய்ட்டியில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவப் படையினர் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திற்கு உட்படுத்தினர். சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் ஐந்து தமிழர்களில் ஒருவர் சிறிலங்காப் படைகளால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு மீறல் சம்பவங்களில் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுகின்ற போதிலும் போர் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற ஒரேயொரு பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திற்காகவும் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்காகவும் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஹெய்ற்றியில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பில் இதுவரை எந்தவொரு சிறிலங்கா இராணுவ வீரனும் தண்டிக்கப்படவில்லை. சிறிலங்கா இராணுவ வீரர்கள் இவ்வாறான மீறல் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு பொறுப்பாகவிருக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படும் போது மாத்திரமே இவ்வாறான திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும். சிறிலங்காவானது அனைத்துலக சமூகத்திற்கு தனது நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதாகவும் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதாகவும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இன்னமும் இந்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்படவில்லை. போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதாக சிறிலங்கா வாக்குறுதி வழங்கிய போதிலும் தனது படையினர் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் உறுதிப்பாட்டை அளித்து வருகிறது. வெளியிடப்படவுள்ள பூகோள கால மீளாய்வு அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் விபரமாகப் பதிவுசெய்யப்படும். அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் சிறிலங்காவை விசுவாசமிக்க நல்லதொரு நாடு போன்று நடாத்துவதுடன் இதனுடன் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் ஆழமான இராணுவ உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைத்துலக சமூகம் கருதினாலும் கூட, சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பாலியல் மீறல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது கருத்திற் கொள்ளப்பட வேண்டும். ஆங்கிலத்தில் – Kate Cronin-Furman* வழிமூலம் – Washington post மொழியாக்கம் – நித்தியபாரதி *Kate Cronin- Furman is a postdoctoral research fellow in the International Security Program at the Harvard Kennedy School’s Belfer Center for Science and International Affairs. http://www.puthinappalakai.net/2017/11/22/news/27457
 7. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர். தற்போது இராணுவத்தினர் போர்த் தளபாடங்களுடன் நிற்கின்றனர். பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். அது இன்னமும் நடைமுறையாகவில்லை. முன்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இதே பரவிபாஞ்சனில் இருந்த விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திற்கு சென்றார். ஆனால் இக்காலத்தில் பொதுமக்களின் போரட்டங்களுக்கு மதிப்பளித்து பாதுகாப்பு செயலாளர் ஏன் அங்கு செல்லவில்லை? அது மட்டுமல்ல நாட்டின் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுக்கு அவர் ஏன் மதிப்பளிக்கவில்லை? இவ்வாறே கடந்த கால அரசாங்கங்களும் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகவே இருந்தது இருக்கின்றது. இதனால் தான் நாட்டில் மறக்க முடியாத கெடூர சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தற்பொழுது பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/116426
 8. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர். ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புக்கள், அரசியல் தீர்வை வலியுறுத்தி செயற்படும் அமைப்புக்களும் மகஜர்களை சமர்பித்திருந்தனர். மயிலிட்டியில், பலாலியில், முள்ளிவாய்க்கால் கிழக்கில், கேப்பாபிலவில், சம்பூரில் உடன் மீளக் குடியேற்ற வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். காணாமல் போனோருக்கு உடன் பதில் வேண்டும். தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புசார் இன அழிப்பை தடுக்க தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு வேண்டும். இராணுவம் வெளியேற வேண்டும். இன அழிப்பு போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பக்கச்சர்பற்ற விசாரணை வேண்டும். போன்ற கோரிக்கைகள் அம் மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/politics/01/116262