Search the Community

Showing results for tags 'தொட்ரா'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

 1. "கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்லூரியில் வாலன்டியராக திவ்யாவிடம் பார்க்கும் இடங்களிலெல்லாம் அட்டன்டென்ஸ் போடுகிறார், ஹீரோ. ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து காதலிக்கிறார்கள். வழக்கம்போல இது வீட்டுக்குத் தெரிந்து சாதிப் பிரச்னை ஆகிறது. அதன்பின் நடக்கும் பஞ்சாயத்துகள், ரிவெஞ்ச் என 'டேக் டைவர்ஷன்' போர்டு மாட்டி, படம் பார்ப்பவர்களைப் பல கிலோ மீட்டர்கள் சுற்றலில் விட்டுப் படம் ஊர்கிறது. காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஏஜென்ஸி வைத்திருக்கும் ஏ.வெங்கடேஷிடம் தஞ்சம் புகும் சங்கருக்கு, அவர் என்ன நோக்கத்திற்காக உதவிசெய்கிறார், சாதித் தலைவர்களான ஹீரோயினின் அப்பாவும், அண்ணனும் என்னென்ன எதிர்வினைகள் செய்கிறார்கள், காதல் ஜோடியின் நிலை என்ன... என்பதே படத்தின் கதை. தமிழ்நாட்டுக்குத் தெரிந்த, சாதிக்கு இறையான இளவரசன் - திவ்யா, சங்கர் - கெளசல்யா... இரு உண்மையையும் ஒரு கதையாக்கி, சாதிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்த இயக்குநர் மதுராஜுக்குப் பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ப்ரித்வி பாண்டியராஜனின் படம் வெளியாகியிருக்கிறது. நடிப்பில் அவ்வப்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்த்தாலும், அப்பாவியான இளைஞனாகக் கவர்கிறார். ஹீரோயின் வீணா சில காட்சிகளில் அழகு, சில காட்சிகளில் அலுப்பு. முக்கியமான காட்சிகளில், ஹீரோயின் தேமேயென இருப்பது, திரைக்கதையின் பலவீனம். ஹீரோயினின் அண்ணனாக பவுன்ராஜ் கேரக்டரில் நடித்துள்ள எம்.எஸ்.குமார் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சாதிக் கெளரவத்தில் காலரைத் தூக்கிவிட்டுத் திரியும் கிராமத்து டான் கேரக்டர், இவருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. குமாரின் மனைவியாக வரும் 'மைனா' சூசனும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் தன் பணியை சரியாகச் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், கதை நகர நகர பல இடங்களில் இவரது நடிப்பு ஓவர் ஆக்டிங்! ஹீரோவுக்கு நண்பர்களாக வரும் இருவரும், அந்த கேரக்டரில் இருந்து விலகியே இருக்கிறார்கள். எளிமையான திரைக்கதையில், இரு உண்மைச் சம்பவங்களைச் சொன்ன இயக்குநர், அதை ஒரு படைப்பாகக் கொடுக்கும் இடத்தில் தாறுமாறாகத் தடுமாறியிருக்கிறார். ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வாய் இழுத்தடித்த முதல் பாதியில், எடிட்டர் கண்ணை மூடிக்கொண்டு கத்தரி போட்டிருக்கலாம். பல காட்சிகளில் ஏற்கெனவே வெளியான படங்களின் காட்சிகளின் ரெஃபரென்ஸ் போரிங்! 'அத்தர், ஜவ்வாது, பன்னீர்னு எல்லாமே கலந்து வந்தாலும், சாக்கடை சாக்கடைதான். என்னெல்லாம் கலந்து மிதந்து வந்தாலும், ஆத்து தண்ணி ஆத்து தண்ணிதான்' போன்ற வசனங்கள் வில்லனுக்குப் பொருத்தம். அதேமாதிரி, சாதிக்கு எதிரான வசனங்களும் வலிமையாக இருந்திருக்கலாம். கேட்ட பின்னணி இசை, பாடல்களாகவே கடந்துபோகிறது, உத்தமராஜாவின் இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திரைக்கதையும் நொண்டி அடிப்பதால், 'படம் எப்போ முடியும்?' என நிலைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. முக்கியமாக, அந்த 'பர்தா' டெக்னிக்கில் எஸ்கேப் ஆவதெல்லாம் பாகவதர் காலத்து ஃபார்முலா பாஸ்! சாதித் தலைவர்கள் மற்றும் காதலை வைத்து டீல் பேசுபவர்கள் ஆகியோரைப் பற்றிய படமாக மட்டும் இருந்திருந்தால், படத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கும். காலேஜ் வரை படித்திருக்கும் சங்கருக்கும், திவ்யாவுக்கும் ஏ.வெங்கடேஷ் கொடுக்கும் வேலை 'முடியல!' ரகம். இரு உண்மைச் சம்பவங்களை இணைத்த ஐடியா சூப்பர். அதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால், படம் கவனம் பெற்றிருக்கும். 'தொட்ரா' என்ற இந்தப் படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும். https://cinema.vikatan.com/movie-review/136374-thodraa-tamil-movie-review.html