• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'தொலையா முகம் - 1'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்......... ஏதாவது எழுதுவோம் என்று உட்கார்ந்தால் மூளை நரம்பு மண்டலம் ஏதோ ஒரு அமுக்கத்திற்குள் சிறைப்பட்டதுபோல் விடுபட முடியாத.. வார்த்தைகளால் புனைய முடியாதவையாக மூழ்கடித்துவிடுகின்றன. எழுத்து வெளிகளில் அப்பட்டமாக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இக்காலம் நகர்கிறது. மனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் ஒரு பேரவா முறுக்கெடுத்து சிலசமயங்களில் தொண்டைக்குழியை திருகுவதுபோல் உயிரையே உலுப்பி விடுகிறது. அடடா கதைகதையாம் பகுதில் வந்து என்னுடைய புலம்பலை எடுத்துவிடுகிறேன் மன்னிக்கவும். தொடர்கிறேன், இனி, இங்கு எழுதப்போது எழுத்துக் குவியலுக்கு பொதுத் தலைப்பாக "தொலையா முகம்" இருக்கும் மற்றப்படி அதற்கு உட்பட்டுவரும் ஆக்கங்கள் அதனதற்குரிய தலைப்புகளுடன் வரும். அந்த வகையில முற்றிலும் இதுவரை நீங்கள் அறிந்த என்னிலிருந்து மாற்றம் கொண்ட எழுத்துக்களுடன் உங்களுடன் கைகோர்த்துக் கொள்கிறேன். பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம்பூச்சியக்கா ‘ஒரு குடம் தண்ணீ வாத்து ஒரு பூப் பூத்து ரெண்டு குடம் தண்ணீ வாத்து ரெண்டு பூப் பூத்து’ பாலர் பாடசாலை பாலகர்களான தீபா, கௌசி, அமுதா, சியா தங்களுடைய மழலை மாறாத வார்த்தைகளில் பாடிக் கொண்டு மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.. “தீபா!” சுபா ரீச்சர் தீபாவை அழைத்தாள். விளையாட்டின் சுவார்ஸ்யத்தில் தீபாவின் காதுகளில் சுபா ரீச்சரின் குரல் விழவில்லை "தீ…பா “ சற்று அழுத்தமாக சுபா அழைத்தாள். குரலின் அழுத்தத்தில் துணுக்குற்ற சிறுவர்கள் சுபாவை புரியாமல் பார்த்தனர். “ தீபா” “என்ன ரீச்சர்?” சிறுமி சுபா ரீச்சரின் அருகே ஓடினாள். “ உன்னுடைய அம்மாவை ஏன் கூட்டி வரேல்லை?” விடை தெரியாத்தால் சிறுமி மலங்க மலங்க விழித்தாள். “உன்னைத்தான் கேட்கிறேன் ஏன் அம்மாவை கூட்டி வரவில்லை?” தீபாவின் முகம் இருண்டு விட்டது. “ஒரு குடம் தண்ணீ வாத்து ஒரு பூ பூத்து ரெண்டு குடம் தண்ணீ வாத்து ரெண்டு பூ பூத்து” சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த கௌசி, அமுதா, சியா புதிதாய் சேழியனைச் சேர்த்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரீச்சரின அழைப்பால் தன்னை விட்டுவிட்டு விளையாடும் நண்பிகளைப் பார்த்தபடியே நின்ற தீபாவை மீண்டும் உசுப்பியது சுபா ரீச்சரின் குரல் “ரீச்சர் வரச் சொன்னவா என்று அம்மாவுக்குச் சொன்னீங்களா?” மகிழ்ச்சியற்ற முகத்தை ஓம் என்று பொருள்பட மேலும் கீழுமாய் ஆட்டினாள் சிறுமி. இப்போது சுபா ரீச்சரி சற்றுச் சினத்துடன் “ ஏன் வரவில்லை?” என்று கேட்டாள். ஏன் எதற்கு என்று தெளிவான பதிலைச் சொல்லத் தெரியாத சிறுமியின் கவனத்தை “ எட்டுக்குடம் தண்ணீ வாத்து எட்டு பூ பூத்து” என்று பாடி விளையாடும் நண்பர்கள் ஆக்கிரமித்தனர். இப்போது ரீச்சருக்கு கோபம் மிகுதியாகிவிட்டது. “நாளைக்கு அம்மாவைக் கூட்டி வந்தால் மட்டுந்தான் நீர் பட்டாம்பூச்சி இல்லை என்றால் உம்மை நிற்பாட்டிப்போடுவேன்” என்ற ஆசிரியரின் வார்த்தைகளால் திடுக்குற்றாள் சிறுமியின் இருண்ட முகத்தில் சின்னதாய் விசிப்பு, வராத கண்ணீரை கைகளால் கசக்கி கட்டாயமாக வரவைத்தாள். “ ஏன் இப்ப அழுகிறீர்?” சரி... சரி நாளைக்கு அம்மாவைக் கூட்டிவா.” சுபா ரீச்சர் கொஞ்சம் இறங்கி வந்தார். “ ரெண்டு கட்டுப் புல்லுத் தாறேன் என் மகளை விடடி” “போடீ போடீ சம்மந்தி புத்தி கெட்ட சம்மந்தி” "மூன்று கட்டுப்புல்லுத் தாறேன் என் மகளை விடடி" போடீ போடீ சம்மந்தி புத்தி கெட்ட சம்மந்தி” தோழர்களின் விளையாட்டு உச்சத்தை எட்டிக் கொண்டிருந்தது தலையைத் தாழ்த்திக் கொண்டு நின்ற பாலகி தீபாவின் கசங்கிய கண்கள் திருட்டுத்தனமாக விளையாட்டில் மொய்த்தது. “ சரி எல்லாரும் வாங்கோ பழகுவம்” என்று சுபாவின் குரல் கணீரென்று ஒலித்தது. அந்தப் பாலர் பாடசாலையில் படிக்கும் எல்லாச் சிறுவர்களும் ஆசிரியையைச் சூழ்ந்து கொண்டனர். ரீச்சர் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களுக்குத் தகுந்த மாதிரி உடைகள் தைப்பித்துக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் தீபாவின் முறை வந்தது………. மற்றைய மாணவர்களின் பெற்றோர் ஆசிரியரைச் சந்தித்து உறுதிப்படுத்தி விட்டார்கள் தீபாவின் பெற்றோர் தேவையானவற்றை இன்னும் உறுதிப்படுத்தவில்லை "நாளைக்கு அம்மா வந்து உன்னுடைய பட்டாம்பூச்சி உடையைக்காட்டினால்தான் நீ பட்டாம் பூச்சியாக நடிக்கலாம்." ரீச்சர் உறுதியாகச் சொன்னார். பின்னர் ரேப் ரெக்கார்டரில் பாடல் ஒலிக்க வைத்து ஆசிரியை அபிநயங்களைப் பழக்கினார். மூன்று தொப்பிகளை முக்கோண வடிவத்தில் வைத்து, ஒவ்வொரு தொப்பியையும் பூவாக நினைத்து பட்டாம்பூச்சி செட்டைகளை விரித்து பறந்து பறந்து நிற்பதாக தீபாவிற்குப் பழக்கினார். அப்படியே மற்றைய சிறுவர்களுக்கும் அவர்களுக்கு உரிய அபிநயங்களைப் பழக்கிமுடிய பாடசாலை முடியும் நேரமாகிவிட்டது. பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வந்தனர் தீபாவை அழைத்துச் செல்ல அண்ணன்கள் வந்தனர். அவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் விடயத்தை கூறினார் ஆசிரியர். வீட்டுக்கு வந்த்தும் தீபா ஓவென்று பெருங் குரலெடுத்து அழுதாள். காரணம் அம்மா தன்னிடம் பட்டாம் பூச்சிக்கான உடையை பளபளப்பான பட்டுத்துணியில் வாங்கித் தைப்பதற்கு வசதியில்லை என்றும் தான் சுபா ரீச்சரிடம் பட்டாம் பூச்சிக்கு வேறு சிறுமியை தெரிவு செய்யும்படி கூறப்போவதாக்க் கூறியதுதான். தீபா ஒருவருடனும் பேசவில்லை விசும்பி விசும்பி முகம் வீங்கியது. தன்னுடைய தோழர்கள் எல்லோரும் பாலர்தினவிழா மேடையில் அபிநயப்பாடலுக்கு நடிக்க தான் மட்டும் ஒதுக்கப்பட்டுப் போவதாக.., எண்ண அரும்பல்களால் அந்தக் குழந்தைமனம் ஏக்கத்தில் வாடியது. வெளியே போயிருந்த, அவளைச் சீராட்டும் பேரன் வந்தபோது ஓடிப்போய் அவரிடம் தாவி விசும்பி விசும்பி அழுது அந்த முதிய தோளில் உறங்கிப்போனாள். அடுத்தநாள் பாலர் பாடசாலைக்குப் போக மறுத்து அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டங்கள் செய்து சோர்ந்தாள்.. ஒரு நாள் முடக்கப்பட்ட ஆசைகளுடன் கழிந்தது. அடுத்த நாளும் இதே அடம், அழுகை ஆனால் அம்மா வலு கட்டாயமாக அவளைத் தூக்கி இடுப்பில் இருத்தி பாடசாலையில் கொண்டு சென்று விட்டாள் சுபா ரீச்சர் உற்சாகமாகக் கூப்பிட்டார். தீபா அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். பட்டாம் பூச்சிப்பாடலுக்கு அபிநயம் பழக மறுத்தாள். அடுத்த நாள் மாலையில் விழா எல்லோரும் ஆரவாரமாக இருந்தனர். தீபா தனக்கு அருகாமையில் விளையாட வந்த நண்பர்களை கடித்தாள், அடித்தாள். எல்லோரும் அவளிடம் இருந்து எட்டப் போனார்கள். பட்டாம் பூச்சி உடைகள் இல்லாத்தால் நம்பிக்கை தேய்ந்து மனதின் குதூகலத்தைத் தொலைத்திருந்தாள் சிறுமி. குணஇயல்பில் ஒரு வகையான வன்மம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. அடுத்தநாள் மாலையை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் வெளியே போயிருந்த பேரன் ஒரு பொதியுடன் வந்தார். அம்மா தீபாவை விழாவுக்குச் செல்வதற்காக குளிப்பாட்டி ஈரம் துவட்டிவிட்டு பேரன் கொண்டு வந்த பொதிக்குள் இருந்த சிவப்புக் கலர் பட்டுத்துணியில் தங்க நிற சீக்குன் வேலைப்பாடுகள் செய்த பட்டாம் பூச்சியின் உடையை எடுத்தார். தீபாவின் வாய் பிளந்த்து. சிரித்தபடியே அந்தப் பட்டாம் பூச்சியின் ஆடையை அணிவிக்க வந்த அம்மாவிடம் வெட்கப்பட்டு ஓடிப்போய் போர்வையால் தன்னை மூடிக்கொண்டாள். அம்மா விடவில்லை இழுத்து வைத்து பட்டாம் பூச்சிக்கு அலங்காரம் செய்தாள் விழா நடக்கும் மேடைக்கு அருகாமையில் அந்தச் சிவப்பு நிறப் பட்டாம் பூச்சிக்கு நீலநிறச் செட்டையில் சிவப்புப் பொட்டுகளின் அரும்பின் தங்கநிற அரும்புகள் கொண்ட செட்டைகளைக் கட்டினார்கள். தொடர்ந்து பாடல் ஒலிக்க அந்த சிவப்புநிறப் பளபளக்கும் பட்டாம்பூச்சி உண்மையிலேயே பட்டாம்பூச்சியாக மாறிப்போனது. “ பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா – நீ பளபளென்று போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா? http://www.youtube.com/watch?v=BpNLcbReyYM அன்று ஆரம்பித்த கலைப்பயணத்தில் வடிவங்கள் மாறிமாறி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறது அந்தப்பட்டாம் பூச்சி