நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன்.
இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன.
உண்மைய