Search the Community
Showing results for tags 'நிலாந்தன்'.
-
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதா
-
மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன் நிலாந்தன் “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……” இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பவர் டாண் டிவியின் அதிபர் குகநாதன். முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி அவர் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. மேற்கண்டவாறு அவர் பதிவிட்டது மணிவண்ணன் கைது செய்யப்பட்ட அன்று. இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய
-
ஆயரும் அரசியல் வாதிகளும்! நிலாந்தன். April 11, 2021 2013ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின்ஆயராக இருந்த அமரர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக இருந்தார். அவருடைய தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூகத்தில் பிரதிநிதிகளும் ஆர்வமுடையவர்கள் பங்குபற்றினார்கள். இக்கூட்டத்தில்தான் ஒரு தமிழ் தேசியப்பேரவையை உருவாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்ட
-
ஜெனிவாத் தீர்மானமும் பின்னும் - நிலாந்தன் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின் பங்குத்தந்தையாக அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார். மாதா கோயில் வளாகத்தில் ஒரு பெரிய பதுங்குகுழி இருந்தது.அதைத்தான் மருத்துவர்களும் மதகுருமார்களும் கன்னியாஸ்திரிகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவந்தார்கள்.கடைசிக்கட்டப் போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு வலைஞர் மடம் தேவாலயம் ஒரு புகலிடமாகவ
-
ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன். March 27, 2021 கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம்தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஒக்லாண்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் குழாம் முதல்நாள் எட்டாம் திகதிவெளியிட்ட ஓர் ஆவணத் தொகுப்பு தாயகத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முடிவற்ற யுத்தம் என்ற பெயரிலான இந்த ஆவணத் தொகுப்பு தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக
-
ஜெனிவா 2021 – நிலாந்தன்! March 28, 2021 புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின்
-
தாயின் பசி – நிலாந்தன்! March 14, 2021 “ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை
-
ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? - நிலாந்தன் கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது. அக்கட்சியின் பேச்சாளர் மூன்று சந்திப்புகளிலும் மிகவும் “கூலாக” இருந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். விக்னேஸ்வரனின் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பல்வேறு விடயங்களில் ஆளுக்காள் மோதிக்கொண்ட பொழுது கூட்டமைப்பு ஒரு அப்பாவி போல தான் எல்லாவற்றுக்கும் தயார் என்பது போல ஒரு தோற்றத்தை காட்டிக்
-
ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில் அவர் பல விடயங்களைப் பற்றியும் கதைக்கிறார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்….”இலங்கை ஒரு சிறிய நாடு அதன் பொருளாதாரமும் சிறியது ஆனால் அதன் அமைவிடம் காரணமாக அதற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை கருதிக்கூறின் அது ஒரு பெரிய நாடு”என்று. அதுதான் உண்மை. இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம்தான் அதன் பலம். அதேசமயம் அதுதான் அதன் துயரமும். இது சிங்கள மக்
-
ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? நிலாந்தன்! February 20, 2021 கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின்போக்கை மதிப்பிடக் கூடியதாக இருக்கும். அம்மூன்று நிகழ்வுகளாவன. முதலாவது மூன்று தமிழ்த்தேசிய கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு பொது கோரிக்கையைமுன்வைத்தமை. இரண்டாவது யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமையும் அதற்கு எதிராக ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக சின்னத்தை மறுபடியும் கட்டுவது என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தமையும். மூன்றாவது தமிழ் சிவில் சமூகங
-
பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? - நிலாந்தன் பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன? ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அந்தப் பேரணியை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுவதைக் காட்டுகிறதா? அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவராகிய சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஐபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு போ
-
மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும் - நிலாந்தன் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு ராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார். எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள்; செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் - நிலாந்தன் http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145377100_2924361514555281_3747239739275689807_n.jpg http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145755501_1772859666229754_422559254108004209_n.jpg 2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில் இருக்கக்கூடிய எதிர்ப்பு அரசியல் வெளியும் பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. ஏன் என்று கேட்டேன். அரசாங்கத்தை எதிர்க்கலாம் அரசுக்கு எதிராகப் போராடலாம் என்று துணிச்சலை தமிழ்
-
ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்… January 3, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின்
-
சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்! December 20, 2020 ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும
-
ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்? – நிலாந்தன் BharatiDecember 20, 2020 நிலாந்தன் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு
-
வெள்ளக் கதைகள் -நிலாந்தன் December 13, 2020 புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வ
-
கஜனின் உரை: ஓரினமாகத் திரள்வது! நிலாந்தன்… December 6, 2020 நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது.
-
தமிழ்த் தேசியப் பேரவை ? நிலாந்தன்… November 22, 2020 கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்து வரும் தமிழ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கூட்டமைப்பு பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களோடு பேசுவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பதே அந்த செய்தியின் சாராம்சம் ஆகும். இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒருவராலும் செய்தியி
-
காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? – நிலாந்தன் November 21, 2020 நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக்
-
கமலாவோ விமலாவோ கையாள, கட்டமைப்பு வேண்டுமே? நிலாந்தன்… November 15, 2020 கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருக
-
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே குடும்பம்? நிலாந்தன்… November 8, 2020 பசில் ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன் அவர் நாடாளுமன்றத்திற்குள் வந்து விடுவார் என்று தெரிய வருகிறது. அவருடைய பெயர் கட்சியின் தேசியப் பட்டியலில் இல்லாதபடியால் சட்டச் சிக்கல்கள் உண்டு என்று கூறப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் இது விடயத்தில் தடைகளை உடைக்கும் சக்தி மிக்கவர்கள். பசிலை எப்படியாவது உள்ளே கொண்டுவரப் பார்ப்பார்கள்.இதன்மூலம் அவர்கள் எந்த இறுதி இலக்குகளை முன்வைத்து 20
-
கொரோனாவின் விளைவுகள் என்ன? வைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. வைரஸ் தொற்று ஐரோப்பாவை உலுப்பிய பொழுது மொஸ்கோவில் நிலைகொண்டிருந்த ஒரு மேற்கத்திய ராஜதந்திரி பின்வருமாறு தெரிவித்தார் “வைரஸ் எதேச்சாதிகாரிகளுக்கு சுவர்க்கம்” என்று. ஏனெனில் வைரசை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு எதேச்சாதிகாரத் தலைவர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற பொருளில்
-
தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒர் பகிரங்கக் கடிதம் – நிலாந்தன்.. ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உங்களுடைய தேர்தல் வியூகங்கள் எல்லாவற்றையும் கோவிட்-19 குழப்பி விட்டது. இதனால் உங்களுக்குப் புதிய செலவுகள் ஏற்பட்டன. பழைய நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டி வந்தது எனினும் அதை நீங்கள் ஒரு நட்டமாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் அனர்த்த நிலைமைகளைக் கையாண்டு நீங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வ
-
இந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன். இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக