Search the Community
Showing results for tags 'பசி தீர்க்கும்.'.
-
இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே வேங்கையை விரட்டி இரையை எடுக்கும். கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் அவை சென்ற பாதையெல்லாம் மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும். பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும் மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும் மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று. பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......! யாழ் 24 அகவைக்காக, ஆக்கம் சுவி......!