விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.!
லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும்.
பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1957 இல் உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற ம