Jump to content

Search the Community

Showing results for tags 'புலிகளின் கப்பல்கள்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto state of Tamilleelam) கடற்படையிடமிருந்த கப்பல்களையும் அதில் பணியாற்றிய ஆழ்-கடலோடிகளைப் பற்றியுமே! தமிழீழ நிழலரசிற்கான அனைத்து வழங்கல்களும் கடல்வழியாகவே நடந்தேறின. இவற்றை விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவு செம்மையாக நிறைவேற்றியது. இக்கப்பல் பிரிவை உள்ளடக்கிய படையணி 'சிறப்புப் படையணி' என அழைக்கப்பட்டது. ஆனால் நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்தில் இருந்து நடைபெற்றுவந்த ஒருசில காட்டிக்கொடுப்புகளால் (குமரன் பத்மநாதன் என்ற தமிழின துரோகியால்) இக்கப்பல் பிரிவின் நான்கைந்து கப்பல் தவிர ஏனைய அனைத்தும் பன்னாட்டு கடலில் வைத்து சிங்களக் கடற்படையால் ஒக்கமே(completely) அழிக்கப்பட்டது. புலிகளின் இக்கடற்கலங்கள் பல்வேறு நாட்டுக் கொடிகளுடன் கடலில் வலம்வந்தன. அவற்றில் கூடுதலாக பனாமா, கொண்டுராசு(Honduras), இலிபியா என்பவை குறிப்பிடத்தக்கன. புலிகளின் இக்கப்பல்கள் தம்சேவைக் காலத்தில் 95 வீதமான நேரம் வணிகச் சரக்குகளை மட்டுமே உலகெங்கும் போக்குவரவித்திருந்தன. மீதி 5% நேரம் மட்டுமே தமிழீழத்திற்குத் தேவையான பொருட்களைக் காவி வந்தன. சரி, இனி இந்தக் கப்பல் பிரிவின் செயல்பாட்டுகளைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். இக்கப்பல்கள் நிழலரசின் மிதக்கும் வறைக்கூடங்களாக(Floating warehouse) பணியாற்றுவதற்காக ஈழத்தீவின் கடற்கரைக்கு அப்பால் பன்னாட்டு நீரில் நங்கூரமிட்டிருந்தன. அவற்றிலிருந்து தமிழீழத்திற்கு பொருட்களை இறக்கிக் கொணர கடற்புலிகளின் ஆழ்கடல் பிரிவானது வழங்கல் படகுகளைப் பயன்படுத்தியது. இவ்வாறு பொருட்களைக் கொணரும்போது சிங்களப் படை கண்டுவிட்டால் கடலில் பாரிய கடற்சமர் மூண்டுவிடும். இறக்கப்படும் பாரிய அளவிலான வழங்கட்பொருட்கள் போக்குவரவிற்காக பிரிக்கப்பட்டு தமிழீழத்தில் உள்ள கடற்புலிகளின் தளங்களில் மீண்டும் ஒன்றாக்கப்படும். ஜெனிவா ஒப்பந்த காலத்திலிருந்து இது போன்ற ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான இள பேரரையன்(Lt.Col.) சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். 'லெப். கேணல் சலீம்/கலாத்தன் ' இனி புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட கப்பல்களின் பெயர்க் குறிப்புகளைக் காண்போம். இங்கு நான் எழுக்டும் செய்திகள் சிங்கள புலனாய்வாளர் ரொகான் குணரத்ன வின் சிங்களச் சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை மற்றும் சிங்கள அரசின் humanitration analysis என்னும் அறிக்கை ஆகியவற்றில் இருந்து கிடைத்த செய்திகளையும் இணையத்தளங்களில் விரவிக்கிடந்த செய்திகளையும் தொகுத்து இங்கே வெளியிடுகிறேன். அதற்கு முன்னர், உங்களுக்கு ஒன்றினை அறிவுறுத்திக் கொள்ள விளைகிறேன். கீழே நான் கொஞ்ச கலைச்சொற்களைத் தருகிறேன். நீங்கள் அவற்றை படித்துவிட்டு மேற்செல்லுங்கள். ஏனேனில் அவை வரிக்கு வரி வரும் முக்கிய சொற்களாகும். கலைச்சொற்கள்: தண்டையல் - ship captain மீகாமன் - helmsman சேனைமீகாமன் - literary meaning 'military helmsman' தாங்கி- Tanker சரி, வாருங்கள் இனி கட்டுரைக்குள் தாவுவோம்! புலிகளிடம் இருந்த கப்பல்களின் நிலைமை: பிடிபட்டவை- 6 பிடிக்க முயன்ற போது தன்னழிப்பானவை - 5 [4 கப்பல்கள்(2 MT & 2 MV) + ஒரு பெரிய வள்ளம்(trawler)] அழிக்கப்பட்டவை - 10 (ஒரு பெரிய வேகப்படகு, ஒரு நடுத்தர படையேற்பாட்டுக் கலம்(medium sized logistics vessel), மற்றும் 8 கப்பல்கள்) எஞ்சியவை - 1+ (யாருக்குமே தெரியாது). ஆனால் சிங்கள அரசு புலிகளிடம் 8 கப்பல்கள் எஞ்சியுள்ளதாக போர் முடிந்தபின் அறிவித்திருந்தது. எம்.வி.சோழன்: 1984 ஆம் ஆண்டு புலிகளின் முதலாவது கப்பல் வாங்கப்பட்டது. அதன் பெயர் எம்.வி.சோழன் என்பதாகும். இதன் பழைய பெயர் சுன்-இஃகிங் என்பதாகும். இது 1985 இல் இருந்து தனது பணியைத் தொடங்கியது. இதில் எந்தக் காலத்திலும் ஆய்தங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. இதற்கு பின்னாளில் என்ன நடந்தது என்பது பற்றிய செய்திகள் இல்லை. இது பற்றி மேலும் வாசிக்க: https://www.facebook.com/OruTamilMalumi/photos/2415087945231692 'எம் வி சோழனில் கேணல் சங்கர் அவர்கள் கடற்புறாவினருடன்' 'தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முதற்கப்பலை வாங்கித் தந்த பிறைசூடி ஐயா / தண்டையல் டேவிட் ' அடுத்து, பிடிபட்ட கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்: 1. எம்.வி.கடல்புறா பிடிபட்ட திகதி: 3 ஒக்டோபர் 1987 பிடிபட்ட பரப்பு: இந்திய மாகடல் பிடித்தோர்: சிங்களக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 12 பேர் புலிகளின் புத்தம் புதிய கப்பலான இது இந்திய-இலங்கை-புலிகள் அமைதி ஒப்பந்த காலத்தின் போது சிங்களப் படைகளின் டோரா P467 என்ற எண்கொண்ட கலத்தால் பிடிக்கப்பட்டது. இதில் செலவாகிய குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட பதினைந்து புலிகள் இந்தியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் இந்திய-இலங்கை படைகள் அவர்களை வைத்து நயவஞ்சத்திற்கு முனைய தமிழீழ மரபிற்கேற்ப குப்பி கடித்து பன்னிருவர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். (பலாலியில் இந்திய நயவஞ்சகத்தால் குப்பி கடித்து உயிரை விட்ட போதும் சயனைட் தன்னைக்கொல்ல முதல் குப்பிகடித்த அதேவாயால் இரண்டு சிங்கள வீரர்களையும் கடித்து அவர்களின் மீதும் நஞ்சை பாய்ச்சி கொன்றவர் புலேந்தி அம்மான். பின் இறந்த அவரின் உடம்பில் பன்னிரு கத்திக்குத்து வீழ்ந்தது. குத்தியவர் இந்தியரா இல்லை சிங்களவரா என்று தெரியவில்லை.) கலவர்: 'கம்பியில் அமர்ந்திருப்பவர் கப்டன் கரன் ஆவார்' 'இடமிருந்து வலமாக: 2ம் லெப். ரெஜினோல்ட், கப்டன் ரகு, கப்டன் கரன்' 2. எம்.வி.சன் பேட்டு(Sun Bird) வேறுபெயர்கள்: இலியானா(Iliyaana), விரான்சிசு(Francis), ஐகுலைட்டு(Ichulite) பிடிபட்ட திகதி: 13 திசம்பர் 1990 பிடிபட்ட பரப்பு: பினாங்கு மாநிலம் பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு இக்கப்பலானது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் வைத்து மலேசிய சுங்கப் பிரிவினரால் தடுப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. அக்கப்பலைச் சோதித்த மலேசிய சிறப்புக் கிளையினர்(Malasian Special Branch) அதில், 2600 x வேட்டிற்கான வெற்றுக் கணைகள்(rounds of blank ammunition) 03 x பெரிய வேகப் படகுகள் 21 x இயோன்சன் & இயமஃகா வெளியிணைப்புப் பொறிகள்(OBM) 324 x பெறுகித்துரவுகள்-தள நிலையங்கள் (transreceivers- base station) 440 x நடைபேசி(walkie-talky) (கைக்கொள் கணம்(hand held set)) 6000 x மின்கலங்கள்(batteries) நீர்மூழ்கிகளுக்கான உதிரிப் பாகங்கள் & மற்றும் பல ஆய்தங்கள் இருந்ததாக தெரிவித்திருந்தனர். இது மலேசியாவில் கைப்பற்றப்பட்டுவிட்டதால், அக்காலத்தில் தொடங்கப்பட்டிருந்த கடற்புலிகளின் நீர்மூழ்கி கட்டுமானம் தொய்வடைந்தது. 3. எம்.வி. செக்கெசிறி(Checesri) வேறுபெயர்: சோழகேரி(Cholakeri) பிடிபட்ட திகதி: 28 நவம்பர் 1992 பிடிபட்ட பரப்பு: தாய் கரையில் இருந்து வெகு தொலைவில் பிடித்தோர்: மலேசிய சுங்கப்பிரிவு 4. எம்.வி. வி லிங் (We ling) பிடிக்கப்பட்ட திகதி: டிசம்பெர் 2009 பிடிபட்ட பரப்பு: மலேசியாவில் பிடிபடட்தாக கூறப்படுகிறது பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை இக்கப்பலை 'துரோகி கே.பி.(K.P.) என்று அழைக்கப்படும் குமரன் பத்மனாதனிடம் இருந்து கைப்பற்றிய சிங்கள அரசாங்கமானது அதனை ஏ522 என்னும் பெயரில் தனது கடற்படையிடம் பயன்படுத்த அனுமதி வழங்கியது. 90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பலில் 5000 மெற்றிக் தொன் எடை யுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும். கொஞ்சக் காலம் அதனை இலங்கை கடற்படையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அது பழுதடையவே அதனை பயன்படுத்துவது கைவிடப்பட்டது. பின்னாளில் அது பயனுறுத்த முடியா அளவிற்கு பழுதடைய மார்ச் 26, 2018 அன்று கடலினுள் தாட்டப்பட்டது (தண்ணீர் நிரப்பி மூழ்கடிக்கப்பட்டது). இக்கலம் பற்றி மேலும் அறிய: https://www.wrecksite.eu/wreck.aspx?282324 இது தொடற்பான மேலும் பல படங்கள் பார்க்க: Navy sinks dilapidated LTTE ship கலப் படம்: 5. எம்.வி. பிறின்சசு கிறிசுரினா (Princess Christina) பிடிபட்ட திகதி: டிசம்பெர் 2009. கொழும்புவிற்கு டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் கொண்டுவரப்பட்டது. பிடிபட்ட பரப்பு: பன்னாட்டுக் கடலில் வைத்து பிடித்தோர்: சிறீலங்காக் கடற்படை இது சிங்கப்பூர் பதிவு கொண்ட கடற்கலமாகும். 6. எம்.வி. தொங்னொவா(Tongnova) பிடிக்கமுயன்ற திகதி: 1 நவம்பர் 1991 பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த கடலோடிகள்: 1(மீகாமன் & கலத்தின் சொந்தக்காரர்) அடுத்து, பிடிக்கப்பட்டபோது தன்னழிப்பானவை பற்றிப் பார்போம் பெரிய வள்ளம்:- பிடிக்கமுயன்ற திகதி: 02.09.1990 பிடிக்கமுயன்ற பரப்பு: பருத்துத்துறைக் கடலிலிருந்து 8 மைல் உயரத்தில் பிடிக்க முற்பட்டோர்: சிங்களக் கடற்படை வீரச்சாவடைந்த கடலோடி: தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி இவ்வள்ளத்தின் வேகம்: 8 மைல் / மணி இதுவொரு பெரிய வள்ளம் ஆகும். தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு தமிழ்நாடு-தமிழீழ கடல் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது ஆகும். சம்பவத்தன்று வழக்கம்போல தமிழ்நாட்டில் இருந்து வழங்கல் பொருட்களை ஏற்றிவந்த வேளை கடற்படையின் டோறா கடற்கலம் அவர்களை கண்டுகொண்டது; அதை அவர்களும் அறிந்தனர். அதனால் வள்ளத்திலிருந்த வீரர்களை அருகில் பாதுகாப்பிற்காக வந்துகொண்டிருந்த கடற்புறாவின் இயந்திரப் படகு ஒன்றிற்கு மாற்றிவிட்டு, வள்ளத்தை எரிப்பதையே திட்டமாக கொண்டிருந்தனர், கடற்புறாவினர். ஆனால் மோகன் மேத்திரியாரோ வீரர்களை ஏற்றிவிட்டு தானேற மறுத்துவிட்டார். அதனால் கடற்புறாவின் அந்த இயந்திரப் படகானது ஏனையவர்களோடு கரை திரும்பியது. பிறகு, அக்கலத்தின் சொந்தக்காரரும் தண்டையலுமான வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஓடாவியார்கள் வழிவந்த கொச்சரையர் மோகன் மேத்திரி என்பவர், கொணர்ந்த பொருட்களோ, தன்னுடலோ எதிரியிடம் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார். வள்ளத்தில் தான் கொண்டுவந்த பெற்றோலினை எடுத்து வள்ளத்திற்கும் தனக்குமாக ஊற்றி, மின்னலென வந்த டோறா நெருங்கியதும் வள்ளத்தோடு தீக்குளித்தார், விடுதலைப்புலிகளின் மரபிற்கேற்ப! அதனால் எழுந்த தீப்பிழம்பினை கரையில் இருந்தே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மோகன் மேத்திரி அவர்கள் செந்தணல் ஆனபோது அவரின் வயது ஒரு 22/23 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 'தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி' 2.எம்.வி. அகத் (Yahath/Ahat) பிடிக்கமுயன்ற திகதி: 19 சனவரி 93 பிடிக்கமுயன்ற பரப்பு: வங்காள விரிகுடா பிடிக்க முற்பட்டோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர் இக்கப்பலானது இந்தியக் கடற்படையால் பிடிக்க முற்பட்ட போது அதிலிருந்த தளவாய்(Col.) கிட்டு உட்பட்ட பத்து புலிகள் கைக்குண்டை வெடிக்க வைத்து தம்மையும் கப்பலையும் அழித்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். கலவர்: 'எம்.வி. அகத் கப்பலின் தண்டையல் வைரமுத்து ஜெயச்சந்திரா ' சம்பவத்தின் போது கப்பலின் தண்டையலை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் இந்திய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்த அவர் தமிழீழம் திரும்பி வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையிலே 2021-2-28 அன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. → மூத்த தளபதி பயணித்த கப்பல் கப்டன் காலமானார்! 'படிமப்புரவு: கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார்' 3),4) & 5) - கீழே தனியாகக் கொடுத்துள்ளேன். இனி, அழிக்கப்பட்ட கடற்கலங்களைப் பற்றிக் காண்போம். 1. எம்.வி. கொரிசோன் (Horizon) வேறுபெயர்: கொமெக்சு இயூ-3 (Comex Joux-3) அழிக்கப்பட்ட திகதி: 13 பெப்ரவரி 1996 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து அழித்தோர்: இந்திய - இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது. வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள் + 1 கடற்புலி கலவர்: இவர்களுடன் கப்பலில் இருந்த கடல் வேவுப்புலி மேஜர் இலங்கேஸ்வரன் உட்பட மேலும் இரண்டு கடற்புலிகள் அற்றைய நாளில் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: இலங்கை இந்தியத்தின் அத்துமீறலும் கடற்புலிகளின் சதுரியமும்…!! - Eela Malar 2. எம்.வி. இஃவெராட்செசுகொம் (Fratzescom) வேறுபெயர்: இசுரில்லசு இலிமாசல் (Stillus Limmasul) அழிக்கப்பட்ட திகதி: 2 நவம்பர் 1997 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வெளியே அழித்தோர்: சிங்கள வான்படை& கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை கணைகள்(ammunition) & ஆய்த தளவாடங்களை மாற்றிக்கொண்டிருக்கும் போது அழிக்கப்பட்டது. 3. எம்.வி. மாரியம்மா(Mariamma) அழிக்கப்பட்ட திகதி: 11 மார்ச் 1999 அழிக்கப்பட்ட பரப்பு: அந்தமான் தீவுகளிற்கு வெளியே அழித்தோர்: இந்தியக் கடற்படை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள் இந்திய கடற்படை சுற்றி வளைத்து சரணடையக் கூறி எழுதருகை வேட்டுகளைத் தீர்த்த போது உதவிக்கு கடற்புலிகள் வரவியலாத நிலையால் மண்டியிடாமல் வளத்திலிருந்த எரிபொருளை வள்ளத்திற்கு ஊற்றி வள்ளத்தையும் தம்மையும் அழித்துக்கொண்டனர். 4.எம்.ரி.கொய்மர்(Koimar) வேறுபெயர்: கொய்(Koie) அழிக்கப்பட்ட திகதி: 10 மார்ச் 2003 அழிக்கப்பட்ட பரப்பு: சிறீலங்காவின் கிழக்கு கரையோரத்திலிருந்து 240 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிங்களக் கடற்படை தண்டையல்: கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் எ ரஞ்சன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர் இது ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல். ஒரு நாட்டின் கடல் எல்லை 12 மைல்கள். கூடுதலாக அது 200 கடல் மைல்கள் வரை தன்னலப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் தொடக்கூடாது. ஆனால் சிங்களக் கடற்படையானது தமிழ் மக்களிற்கான டீசலை ஏற்றி வந்த புலிகளின் எண்ணைத் தாங்கியினை(Oil tanker) இந்த பன்னாட்டு கடலில் வைத்து மூழ்கடித்தது. கப்பல் மூழ்கிய இடத்தை பின்னாளில் ஆய்வு செய்த பன்னாட்டு போர்நிறுத்த கண்காணிகள் அது வெறும் வணிகக் கப்பல் என்றும் அதற்குள் ஆய்தங்கள் ஏதும் இல்லையெனவும் அறிக்கையிட்டன. கலப் படம்: 'கப்பலின் உட்புறம்' கலவர்: 5.எம்.ரி.சொசின்(Shoshin) வேறுபெயர்: செய்சின்(seysin) அழிக்கப்பட்ட திகதி: 10 ஜூன் 2003 அழிக்கப்பட்ட பரப்பு: திருகோணமலைக் கரையோரத்திலிருந்து 266 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிங்களக் கடற்படை தண்டையல்: மேஜர் நிர்மலன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 11+1(நாட்டுப்பற்றாளர்) என மொத்தம் 12 பேர் இதுவும் ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல் செயல். இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற் காவியங்கள் - irruppu கலப் படம்: கலவர்: 'இவ்விளக்கப்படமானது 2006- 2007 வரை கடற்கலங்கள் எங்கெல்லாம் மூழ்கடிக்கப்பட்ட என்பதைக் கட்டுகிறது | படிமப்புரவு:Google' 6. மருது அழிக்கப்பட்ட திகதி: 17 செப்ரெம்பெர் 2006 அழிக்கப்பட்ட பரப்பு: கல்முனைக்கு வெளியே 120 கடல் மைல் தொலைவில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் வெற்றியரசன்/ ஸ்ரிஃவன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 8 பேர் கலவர்: இது இந்தோனேசியாவில் கட்டப்பட்ட ஒரு பெரிய வேகப் படகாகும். இக்கடற் சம்பவம் பற்றிய குறிப்புகள்: கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் கலப் படம்: மருதுவின் இறுதித் தருணங்கள் 7.எம்.ரி.கியோசி(Kioshi) வேறுபெயர்: எம்.ரி.கியோய்(kiyoe) அழிக்கப்பட்ட திகதி: 28 பெப்ரவரி 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனையிலிருந்து 365 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர். தண்டையல்: லெப் கேணல் இளமுருகன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 15 கலவர்: கலப் படம்: கியோசியின் இறுதி தருணங்கள் 8. எம்.ரி. செயோய்(Seyo) வேறுபெயர்: எம்.ரி. இயோசி(Eyoshi) அழிக்கப்பட்ட திகதி: 18 மார்ச் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: அறுகம்குடாவிற்கு தென்கிழக்கில் 825 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: சமையல் எரிவாயு கலன் கொண்டு கப்பலை தீயிட்டு தாமும் அழிந்து கப்பலையும் அழித்தனர் தண்டையல்: லெப் கேணல் இசைக்கோன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 9 கலவர்: இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் கலப் படம்: இது ஒரு புத்தாம் புதிய தாங்கி(Tanker) ஆகும். இயோசியின் இறுதித் தருணங்கள் 9. எம்.வி.செய்சின்(Seishin) வேறுபெயர்: எம்.வி.மன்(Mann) அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் சோபிதன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: - கலப் படம்: செய்சினின் இறுதித் தருணங்கள் 10. எம்.ரி.மன்யோசி(Manyoshi) இது ஒரு எண்ணெய் தாங்கி(Oil Tanker) ஆகும். அழிக்கப்பட்ட திகதி: 10 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் செம்பா எ செண்பகச் செல்வன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: - கலப் படம் & இறுதித் தருணங்கள்: 11.எம்.ரி.கொசியா(Koshia) வேறுபெயர்கள்: எம்.வி.கொய்சின்(Goishin) அ எம்.வி.இயொய்சின்(Joishin) அ எம்.வி.இயெய்சின்(Jeishin) அழிக்கப்பட்ட திகதி: 11 செப்டெம்பர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து. அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: லெப் கேணல் எழில்வேந்தன் வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 7+ கலப் படம்: செய்சின், மன்யோசி, கொசியா ஆகியவற்றின் இறுதித் தருணங்கள்: மேற்கண்ட மூன்று கப்பல்களிலுமாகச் சேர்த்து ஒரு கள மருத்துவர், ஒரு கடற்கரும்புலி உட்பட 20 கடற்புலிகளும் ஒரு நாட்டுப்பற்றாளருமாக மொத்தம் 21 ஆழ்கடலோடிகள் கப்பலினுள் இருந்த ஆய்தங்கள் மூலம் இறுதிவரை சிங்களத்தை எதிர்த்துக் களமாடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: இத்தாக்குதல் பற்றி மேலும் வாசிக்க: உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று 12. எம்.வி.மற்சுசிமா(Matsushima) நீளம்: 70மீ இடப்பெயர்ச்சி - 3000 தொன் அழிக்கப்பட்ட திகதி: 7 ஒக்டோபர் 2007 அழிக்கப்பட்ட பரப்பு: தெய்வேந்திரமுனைக்கு கிழக்கே பன்னாட்டு 1620கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து. அழிக்க முற்பட்டோர்: சிறீலங்காக் கடற்படை அழிக்கப்பட்டது: விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர். தண்டையல்: லெப் கேணல் எரிமலை எ கபிலன் வீரச்சாவடைந்த கடலோடிகள்: 9 கலவர்: -கடற்புலி கொச்சரையன்(கப்டன்) முரசறைவாணன் & : இதில் தான் விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான இலகு வானூர்திகள் கொண்டுவரப்பட்டிருந்ததாக சிறீலங்காக் கடற்படை முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்குள், ஒரு நிலக் கலத்தூரம் -Land cruiser ஒரு சன்னத்தகை நிலக் கலத்தூரம் - Bulletproof Land cruiser ஏவரிகள் - Torpedos ஏவரி செலுத்திகள் - Torpedo launcher பாய்விறக்க ஏந்தனங்கள் - Diving equipments நீர்முழுகி பிலிறுந்தக் கரணங்கள் - Diver propulsion devices கணைகள் - ammmunitions எறிகணைகள் - shells படகுப் பொறிகள் - boat engine ஆகியன இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதாரம்: Global Responses to Maritime Violence: Cooperation and Collective Action. pg-220 கலப் படம்: மற்சுசுமிசாவின் இறுதி தருணங்கள்: 13.பெயர் அறியில்லை அழிக்கப்பட்ட திகதி: 20 திசம்பர் 2008 அழிக்கப்பட்ட பரப்பு: முல்லைத்தீவிற்கு வடகிழக்கே 70 கடல்மைலில் தமிழீழ கடற்பரப்பில் வைத்து. அழித்தோர்: சிறீலங்காக் கடற்படை தண்டையல்: அறியில்லை வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை இது ஒரு நடுத்தர படையேற்பாட்டுக்(logistics) கடற்கலமாகும். இதில் என்ன கொணரப்பட்டது என்பது பற்றிய செய்திகள் இல்லை. இக்கலத்தின் இறுதித் தருணங்கள்: இனி எஞ்சிய கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்: எம்.வி.ஈசுவரி(Easwari) (போர் முடியும் வரை) → எம்.வி. ஓசீன் லேடி(Ocean Lady) (போர் முடிந்த பின்) . இது பிறகு போரால் பாதிக்கப்பட்ட மக்களை வெளிநாடுகளிற்கு ஏற்றிச் சென்றது. தண்டையல்: கமல் எ கமல்ராஜ் கந்தசாமி 2. யு.வி. புளூ இஃகவாக்கு(Blue Hawak) வேறுபெயர்: யு.வி. இராகுய்(Rakuy) இது 96 இருக்கைகள் கொண்ட ஓர் வலசை(ferry) ஆகும். ஆனால் சரக்குகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. 3. எம்.ரி சோவ மாறு (Showa Maru) 4. எம்.வி. சின்வா(Shinwa) 5. எம்.வி. கோள்டன் பேட்டு (Golden Bird) வேறுபெயர்கள்: பாரிசு(Baris), செயின்ற் அந்தோணி(St.Anthony), சோஃவியா(Sophia), பர்ஃகான்(Barhan), சுவனே(Swene) இதை விட இன்னும் பல கப்பல்கள் புலிகளிடம் இருந்தன. அவை யாவும் எங்குபோனது யாருக்கும் தெரியாது. ஆனால் போர் முடிந்த பின் வெளிநாடுகளில் புலிகளின் 8 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றை சிறீலங்காவிற்குக் கொண்ட வர வேண்டும் என்றும் சிங்கள அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.வி. சன் சீ(Sun sea) வேறுபெயர்: இஃகரின் பிஞ் 19 (Harin pinch 19) இது 492 அகதிகளை எற்றிக் கொண்டு தனது கடைசி உருவோட்டமாக(sail) கனடா சென்றது. அங்கு கனேடிய அரசால் இது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பாந்தர்களில்(passengers) பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்றும் இக்கப்பல் புலிகளிற்குச் சொந்தமானதாகவும் சிங்கள அரசால் (சிங்கள புலனாய்வாளர் குணரத்னே) கூறப்பட்டாலும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையென தமிழர் தரப்பால் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. உசாத்துணை: Cannadamirror JVP International (JVP International) புலிகளின் கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.) CANADIAN AUTHORITIES TELL IMMIGRATION AND REFUGEE BOARD THAT LTTE SHIP CONTAINED TRACES OF HIGH EXPLOSIVES LIKE RDX) Tamil Tiger Supply Ships Sunk (Tamil Tiger Supply Ships Sunk) Last Procurement Operation of KP sunk by Navy) Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia) The Sunday Leader (The Sunday Leader) எம்.ரி.கொய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள்… - தேசக்காற்று) https://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478) Who is KP? (Who is KP?) (http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf) எம்.ரி.செயோய் கப்பலில் உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று) Global Responses to Maritime Violence) pg - 222–223 (https://tamilnation.org/ltte/0604dynamics_of_LTTE_maritime_infrastructure.pdf) The Assassination) Ocean Governance: Who Owns the Ocean? | Heinrich Böll Stiftung | Brussels office - European Union) ('Destruction of LTTE ship is a grave ceasefire violation' - Balasingham) Monitors says no evidence sunk ship carried weapons) உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி விழிமூடிய மாவீரர்கள் - தேசக்காற்று) SLN sinks LTTE vessel in international waters) கேபியிடம் மீட்ட விடுதலைப் புலிகளின் கப்பல் கடலில் மூழ்கடித்து அழிப்பு! | Muthalvan News) Commentary #77 Canada spent $600,000 on MV Sun Sea before deciding to scrap ::. Latest Sri Lanka News MV Sun Sea (Canada) எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம். படிமப்புரவு தமிழர் நாம் -அதிகாரப்பூர்வ இணையதளம் Log In or Sign Up (Log In or Sign Up) களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்) தேசக்காற்று (தேசக்காற்று) WordPress.com: Create a Free Website or Blog (ஆனி மாவீரர்கள் – Eelamaravar) ஈழநாதம் 2003 - 3 -20 தட்ஸ்தமிழ் - Oneindia Tamil) Live Radio and News (Live Radio and News) Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News) SRI LANKA NAVY BLOG (SRI LANKA NAVY BLOG) Sri Lanka Guardian (Sri Lanka Guardian) Latest Sri Lanka News and Forum) NewsIn.Asia - South East Asian Headlines & Breaking News) Sri Lanka Mirror The Globe and Mail: Canadian, World, Politics and Business News & Analysis irruppu - Tamil News yarl நிகழ்படம் YouTube தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.