நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில்