• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'பௌத்த மதவாதம்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 8 results

  1. ஆடி அமாவாசை விரதமான இன்று திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது. இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரிகை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது. இப்பகுதியில் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர். http://thinakkural.lk/article/32484
  2. கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றனர். கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்துவரம் விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/61419
  3. பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா? - சார்ள்ஸ் நிர்மலநாதன் கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் எந்த விசாரணையும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் பௌத்த பிக்கு ஒருவர்மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா என சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழர்களுக்கு இந்தத் அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பீர்களா?. தென்கயிலை ஆதீனம் மீது சிங்களக்காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்?அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். https://www.virakesari.lk/article/61149
  4. திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது. திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார். இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60930 இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன் கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார். இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது. இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது. எனினும் மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது. இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை மேற் கொள்ள முடியும் . என்றார் முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60935
  5. நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தாம் வேரூன்ற வேண்டும் என்றே பேரினவாதிகள் கருதுகிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் விடுக்கொடுப்புடன், ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிடின், இந்த பேரினவாத சக்திகளை எதிர்க்க முடியாது என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: இனப்பிரச்சினை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இன, மதத்தை முன்னிறுத்தி செயற்பட்டவர்களாலேயே அப்போது இனப்பிரச்சினைக்கு தூபமிடப்பட்டது. தற்போது மீண்டும் அத்தகைய இனவாத செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60833 ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி,புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 5ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், அன்றைய தினம் புதிய கூட்டணியின் சின்னம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார். அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். http://thinakkural.lk/article/31996
  6. நாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், அதனை மேம்படுத்துவத்றகும் அரசாங்கம் உறுதிக்கொண்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வோஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சர்களுக்கான இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தூதுவர் ரொட்னி பெரேரா இவ்வாறு கூறியிருக்கிறார். அத்தோடு இலங்கைக்கு வழங்கும் ஆதரவு மற்றும் இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடு என்பவற்றுக்காகத் தனது நன்றியையும் அங்கு வெளிப்படுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/60780
  7. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17)முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி .ராஜா,நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள். ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது. அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60612
  8. இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் பலவந்தமாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர். அமைச்சர் மனோகணேசனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார். அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். ஏற்கனவே நேற்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடி இருந்தனர். இதன்அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.hirunews.lk/tamil/220521/தமிழ்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-ஜனாதிபதியுடன்-இன்று-அவசர-சந்திப்பு