Search the Community
Showing results for tags 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்'.
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்