Search the Community

Showing results for tags 'மனுதருமம்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி2) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் அந்தணர்களும், தமிழ் பார்ப்பனர்களும் ஆரியர்களின் வேதப் பரப்புரைகளால் கவரப்பட்டார்கள்; தமிழ் அந்தணர்-பார்ப்பனர்களில் சிலரைப் பிராமண சாதிக்கு மாற்றிய ஒன்றை மட்டுமே ஆரியமயமாக்கம் செய்ய முடிந்தது. தமிழ் மண்ணில் சத்திரியர் இல்லை! சத்திரியர்கள் என்ற இனம் தமிழ் மண்ணில் எப்போதும் இல்லை; ஜார்ஜ் மன்னர் எவ்வளவு சத்திரியரோ, ஷாஜகான் எவ்வளவு சத்திரியரோ, அலெக்சாண்டர் எவ்வளவு சத்திரியரோ, அவ்வளவே தமிழ் மன்னர்களும் சத்திரியர்கள் ஆவார்கள். தமிழ் மண்ணில் வைசியரும்,சூத்திரரும் இல்லை! வணிகம் எந்த நாட்டிலும் இருக்கும் ஒன்று. உலக நாடுகளின் வணிகர்கள் எவ்வளவு வைசியர்களோ, அவ்வளவே தமிழ் வணிகர்களும் வைசியர்கள். மேல்வருணத்தார் மூவருக்கும் பணிவிடை செய்யும் அடிமைத்தொழில் செய்யும் சூத்திரர்கள் என்ற ஒரு வகுப்பார் தமிழ் மண்ணில் எப்போதும் இருந்ததில்லை. அவரவர் பொருளாதார வசதிகளைப் பொறுத்து பல்வேறு தொழில்களைவும், வேலைகளையும் செய்து ஊதியம் பெற்றோர் சூத்திரர்கள் என்று முத்திரை குத்தப்படவில்லை. அவரவர் வாய்ப்பைப் பொறுத்து, வணிகராகவோ, வேளாளராகவோ, தொழில் செய்வோராகவோ பணியாற்றும் எவரும் வாய்ப்பு வசதி, படிப்பு, முயற்சி ஆகியவற்றால் செய்தொழிலை மாற்றிக்கொள்ள எத்தடையும் தமிழகத்தில் இருந்ததில்லை. நாடாளும் மன்னன் வாரிசின்றி இறந்தால், கடைக்கோடி வாழ்க்கைத்தரத்தில் வாழும் மனிதனும் கூட, பட்டத்துயானை மாலையிட்டால் நாடாளும் மன்னன் ஆக்கப்பட்டான்; அப்படி மன்னன் ஆனவன் கரிகால் சோழன். தமிழ்ப் பார்ப்பனரும், அந்தணரும் ஆரியப்பிராமண வருணத்தில் இணைந்தனர்! தமிழர்களைவிட நாகரிகத்தில் பன்மடங்கு கீழ்நிலையில் இருந்து நாடோடிக்கூட்டமாக வடஆரியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தேறிய காலங்களில், அவர்களின் வெள்ளை நிறத்தால் கவரப்பட்ட தமிழர்கள் அவர்தமக்குச் சிறப்பிடம் கொடுத்ததன் விளைவாக, தமிழ் அந்தணர்களையும், தமிழ்ப் பார்ப்பனர்களையும் கூட்டுச் சேர்த்து, ஆரியர்களால் பிராமணர்கள் என்ற ஒரு வருண வகுப்பைத் தமிழ் மண்ணில் உருவாக்க இயன்றது. சணலால் பூணூல் அணியும் சத்திரியர் தமிழகத்தில் இல்லை! ஆனால், மற்ற மூன்று வருணத்தையும் உருவாக்குவதில் தோல்வியையே கண்டனர். தமிழகத்தை ஆண்ட மன்னர்களை அண்டி, அவர்களுக்குச் சத்திரியப் பட்டம் கொடுத்து, வேள்விகளைச் செய்ய வைத்து, தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முடிந்த ஆரியர்களால், மனுவருணப்படி, தமிழ் மன்னர்களுக்கு சணலால் பூணூல் அணிவித்து, ஆரிய சத்திரியர்களாக்க முடியவில்லை. மேலும், இவர்கள் சூத்திரர் ஆக்கக் கருதிய வேளாளர்களில் பலர் சிற்றரசர்கள் ஆக இருந்ததாலும், வேளாளர் சிற்றரசர்களுடன் தமிழக முடிமன்னர்கள் திருமண உறவு கொண்டிருந்த முறைமையையும் மாற்ற ஆரியர்களால் இயலவில்லை. வேளாளர்கள் பலரும் முடிமன்னர்களின் அவையில் முதலமைச்சர் (பெரியபுராணம் இயற்றிய அநபாய சோழனின் முதலமைச்சர் சேக்கிழார் பெருமான் ஒரு வேளாளர்) உள்ளிட்ட முக்கிய பதவிகளைப் பெறுவதையும் ஆரியர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. வைக்கோல் திரியால் பூணூல் அணியும் வைசியர் தமிழகத்தில் இல்லை! வணிகர்களுக்கு வைக்கோல் திரியால் ஆன பூணூலை அணிவித்து ஆரிய வைசியனாக ஆக்க பிராமணர்களால் இயலவில்லை. ஆயினும், தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் தமிழக சமூகத்துக்குள் வருண அமைப்பைப் புகுத்தும் தங்கள் முயற்சியை ஆரியர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை. வருணக்கட்டுப்பாட்டுக்கான மூளைச்சலவைக் கருவியே பகவத்கீதையின் இடைச்செருகல் ஸ்லோகங்கள்! வடநாட்டில், மக்கள் தாமாகவே முன்வந்து நால்வருணக் கட்டுப்பாட்டின்படி, அவரவருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மனம் உவந்து ஏற்கும் வகையில், இறைமை என்னும் கோட்பாட்டின் மேல் மூளைச்சலவை செய்து கட்டிஎழுப்பும் முயற்சியாக, ஆரியப் பிராமணர்கள், மகாபாரத இதிகாசத்தில் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு கிருஷ்ண பகவானால் அறிவுரை சொல்லப்பட்டதாக எழுந்த பகவத்கீதை என்னும் நூலில், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் எண்ணத்தில் பல இடைச்செருகல்களைச் செய்துவிட்டனர். கீதையின் 18.45ம் ஸ்லோகத்தில் "மனிதன் அவனவனுக்கு விதிக்கப்பட்ட கருமத்தைத் தவறாமல் செய்வதன் மூலம் பக்குவம் அடைய முடியும்; தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தில் ஈடுபட்டு எவ்வாறு பக்குவம் அடைவது என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக" என்று கூறுகின்றார் பகவான் கிருஷ்ணர்[8]. இச்சுலோகம் சூத்திரர்கள் என்னும் மனிதர்களை வருண முறைப்படி, விதிக்கப்பட்ட அடிமை உடலுழைப்பைத் தொடர்ந்து செய்விக்க, இறைவன் பெயரால் மூளைச்சலவை செய்ய எழுதப்பட்டது. அடிமையாக இருந்தே இறைவனை அடையும் பக்குவம் என்று ஒன்றை சூத்திரனின் மூளையில் புகுத்திவிட்டால், எந்த அடக்குமுறைக்கும் அவசியம் நேராது, அவனே அடங்கிப் பணி செய்வான் அல்லாவா? அபாரமான திட்டமிடலுடன் ஆரியர்கள் உருவாக்கிய உளவியல் உத்தியே பகவத்கீதை இடைச்செருகல்கள். "கீதையின் 18.46ம் ஸ்லோகத்தில் "ஒரு மனிதன் அவன் பிறந்துள்ள வருணசாதிக்கு* விதிக்கப்பட்டுள்ள கருமத்தைச் செவ்வனே செய்வதன் மூலம் எல்லா உயிர்களின் மூலமும், எங்கும் நிறைந்தவருமான இறைவனை அடைந்து முழுமை அடைய இயலும்[9]." என்கிறார் கிருஷ்ணர். இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தாருக்கு, இறைவனை அடையும் வழியாக அவனனவன் பிறந்த வருணத்தின் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உளவியல் ரீதியான மனமாற்றத்தையும், ஈடுபாட்டையும் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்; தொடர்ந்து இந்நிலையைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள். . "கீதையின் 18.47ம் ஸ்லோகத்தில் "ஒருவனுக்குத் தகுதியுடன் கூடிய ஆற்றல் இருந்து, பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மிக நேர்த்தியாகச் செய்வதைவிட, தனது வருணத்துக்கு விதிக்கப்பட்ட சுயதருமக் கருமங்களை, நேர்த்தியாகச் செய்ய இயலாவிட்டாலும், செய்வதே சிறந்தது." என்கிறார் பகவான்[10]. இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தார்கள், அவரவருக்கு விதிக்கப்பட்ட தொழில்களை மட்டுமே செய்யவேண்டும்; பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட தொழில்களுக்கு மாறக்கூடாது, குறிப்பாகப், பிராமணர்களின் வேதக் கல்விக்கோ, வேள்வித் தொழிலுக்கோ முயற்சி செய்யக் கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையைச் செவ்வனே உருவாக்க இச்சுலோகம் மூலம் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள். "கீதையின் 18.48ம் ஸ்லோகத்தில் " நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போலவே, எந்த முயற்சியும் ஏதேனும் ஒரு குற்றத்தால் சூழப்பட்டிருக்கின்றது. எனவே குந்தியின் மகனே! குற்றம் நிறைந்ததாக இருந்தாலும்கூட, தனது உடன்(வருணத்துடன்) தோன்றிய கருமங்களை ஒருவன் துறக்கக்கூடாது" என்கிறார் பகவான்[11]". இச்சுலோகத்தின் மூலம், பிராமணனைத் தவிர்த்த ஏனைய மூன்று வருணத்தாரும் குற்றம், பாவம் உள்ளிட்ட எக்காரணத்தைக் கொண்டும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையை ஆரியப்பிராமணர்கள் இறைவனின் பெயரால் உருவாக்கினார்கள். குறிப்பாக, ஒரு சூத்திரன் தனது எஜமானன் கொலையே செய்யச் சொன்னாலும், கொலை பாவம் என்று கருதி, தனது எஜமானன் ஏவிய செயலைச்செய்யாமல் இருந்துவிடக் கூடாது என்ற கீழ்ப்படியும் ஒழுங்கைக் கடவுளின் பெயரால் சுயகருமம் என்று நிலைநிறுத்தவே எழுதினார்கள். அடிமைத்தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தாலே துறவின் பயனான மோட்சம் என்னும் மோசடி உத்தரவாதம்! "கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் "துறவின் பலன்களை புலனடக்கம், ஜட விஷயங்களில் பற்றின்மை, ஜட சுகங்களில் நாட்டமின்மை இவற்றாலேயே அடைந்துவிட முடியும். இதுவே துறவின் உயர் பக்குவ நிலை[12]" என்கிறார் பகவான். இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: பகவானின் அங்க உறுப்பாகத் தன்னை எப்போதும் நினைப்பதே துறவின் உண்மையான பொருளாகும். எனவே, பகவானின் அங்க உறுப்பான ஒருவன் தனது செயல்களின் பலனை(த் தானே நுகர்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை;) பகவானாலேயே அனுபவிக்கப்படவேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு. துறவு நிலை. இத்தகு மனோநிலையால் பரமனுக்காகவே செயல்படுவதால், ஒருவன் திருப்தியுறுகிறான். இவ்வாறு ஜடனிலையிலான எதிலும் அவன் பற்றற்றவன் ஆகிறான். இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான். ஒரு துறவி தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவனோ, துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். இதுவே யோகத்தின் பக்குவநிலை ஆகும்." என்கிறார். ஆரிய நலனுக்கான பிராமண சுயநலத்தின் உந்துதலால் சுவாமி பிரபுபாதா உதிர்த்த 'யோகத்தின் பக்குவநிலை'யைப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கம் உதவும். துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறந்த ஒருவனுக்கு கல்வி கற்று, உயர்நிலை பெறவேண்டும் என்று ஆசை வரவே கூடாது; ஏனெனில், அவன் சுயகருமத்தை விடக்கூடாது என்னும் கட்டாயம் இருகிறது. ஆயினும், அந்தச் சூத்திரனுக்கு மனத்தளவில் ஏற்பட்ட ஆசை அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பிறருக்குத் தெரியாமல், அவன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யக் கூடும். இராமராஜ்ஜியத்தில், சம்பூகன் என்னும் சூத்திரன் மோட்சமடையத் தவம் செய்து, இராமபிரானால் தலைவெட்டப்பட்டு இறந்த உத்தர இராமாயணக் கதை இதற்குத் தலைசிறந்த உதாரணம். இத்தகைய முயற்சிகளை தரும சாத்திர நீதிநூற்கள் இயற்றிச் சொல்லும் சட்டத்தாலோ, அடக்குமுறையாலோ முழுவதும் அடக்கமுடியாது. ஆனால், பக்தி என்னும் உளவியல் ரீதியலான போதையை ஊட்டிவிட்டால், முழுவதுமாகத் தடுத்துவிடலாம் என்று திட்டம் தீட்டிய ஆரியப் பிராமணர்கள் செருகிய விதியே கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது. இது எவ்வாறு வேலைசெய்யும் என்பதைப் பின்வரும் உதாரணம் விளக்கும். 'யோகத்தின் பக்குவநிலை' என்னும் கருமாந்திரத்தின் மோசடியை விளக்கும் கதை! ஒருவன் சூத்திர துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறக்கிறான்; எனவே, அவனது சுயதருமம் துப்புரவுத் தொழில் ஆகிவிடுகிறது. கிருஷ்ண உணர்வுடைய அவன் தன்னைப் பகவானின் அங்கமாக உணர்கிறான்; அவன் பகவானுக்காகவே மலம் அள்ளுவதாகக் கருதுவதால், மலத்தின் துர்நாற்றம் அவனைப் பாதிக்காமல், கீதையில் பகவான் உறுதியளித்தபடி பகவானையே சென்றடைகின்றது; மலம் அள்ளும் கருமாந்திரத்தை அவனால் எளிதில் செய்ய முடிகிறது. (கிருஷ்ண உணர்வற்ற ஏனைய மலம் அள்ளும் சூத்திரர்கள் மலத்தின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள பட்டைச்சாராயம் குடித்துத் தங்கள் உடல்நலனை இழக்கிறார்கள் என்பதை இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டும்.) இப்படி, பகவானுக்காக மலம் அள்ளும் இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான். மலம் அள்ளும்போதே கிருஷ்ண உணர்வில் இருப்பதால், துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். பட்டைச் சாராயத்தின் உதவியில்லாமல் இத்தகைய "யோகத்தின் பக்குவநிலை" அடையும் 'கருமாந்திர'த்துக்குக் கிருஷ்ண உணர்வே துணை. உடல் நலமும் காக்கப்படும். மதம் ஒரு அபின் போன்ற போதைப்பொருள் என்னும் மார்க்சின் தத்துவத்தை விளக்கும் பிரபுபாதா! "மதம் ஒரு 'அபின்' போன்ற போதைப் பொருள்", என்று காரல் மார்க்ஸ் சொன்ன தத்துவத்துக்கு இதுவரை எனக்குப் புரியாமல் இருந்தது; காரல் மார்க்ஸ் தத்துவத்துக்கான சரியான விளக்கத்தை பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை விளக்கம் தருகின்றது. இறுதியாக, சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் மொத்த உண்மை உருவமாக பகவத்கீதை இருக்கிறது என்பது சரிதான்; பக்தி என்னும் இனிப்பு தடவிய நால்வருண நஞ்சை நயமான சொற்களில் வார்த்தெடுத்து, அடிமைகள் தாமாகவே முன்வந்து, ஆரியப்பிராமணர்களின் வருணதர்மத்தைக் காக்கும் வகையில் பின்னப்பட்டுள்ள நூல் பகவத்கீதை. திருக்குறளின் உயர்வும், பகவத்கீதையில் செருகப்பட்ட கீழ்மை ஸ்லோகங்களும்! இறைவன் மனிதனுக்குச் சொன்னதாக, "பிறப்பின் அடிப்படையில் நால்வருணங்களை இறைவனாகிய நானே உருவாக்கினேன் (சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம்)", என்று இறைவன் திருப்பெயரால், பகவத்கீதையில் ஸ்லோகங்களை இடைச்செருகல்கள் செய்து, ஆரியர்கள் முழங்கும் கீழ்த்தரமான சுயதரும சித்தாந்தத்தை நோக்கும்போது, மனிதரான திருவள்ளுவர் தம் சகமனிதர்களுக்குச் சொன்ன உயிர் சமத்துவத் தத்துவம் பேசும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் திருக்குறள் அறம், ஞாலத்தினும் மாணப் பெரியது; முற்றிலும் உயர்ந்தது. "ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!" என்று என்னதான் திருநாவுக்கரசர் போன்ற அருளாளர்கள் இறைவனின் திருப்பெயரால் சமாதான அறிவுரை சொன்னாலும், ஆரியம் மட்டுமே உயர்ந்தது, தமிழ் ஆரியத்தின் அங்கம் என்று கீழ்மைப்படுத்தும், செரித்து விழுங்கத்துடிக்கும் நாகசாமிகள் போன்ற ஆரிய இனவாதிகள் முளைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்; போரிட்டுத் தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள். தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதையில் வரும் முருங்கை மரம் ஏறும் வேதாளத்தைப் போல, தமிழ்ப் பண்பாட்டையும், மெய்யியலையும் விழுங்கத் துடிக்கும் ஆரியர்களின் விடா முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். உலகவழக்கு அழிந்து ஒழிந்த, எழுத்து வடிவமில்லாத ஆரிய மொழிக்குச் சொந்தக்காரர்கள், என்றும் சிதையா சீரிளமை கொண்ட தமிழன்னையைக் கண்டு பொறாமை கொள்வதும்போரிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார் உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்! குறளறம் தொடர்ந்து பேசுவோம்! -------------------------------------------------------------------------------------------------------------------------- ஆய்வுக் குறிப்புகள் - Research References (continuation . . .) 8. स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः। स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु।।18.45।। ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:। ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥ sve sve karmaṇy abhirataḥ saḿsiddhiḿ labhate naraḥ sva-karma-nirataḥ siddhiḿ yathā vindati tac chṛṇu Translation of Bhagavad Gita 18.45: By following his qualities of work, every man can become perfect. Now please hear from Me how this can be done. 9. यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्। स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।। யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்। ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥ yataḥ pravṛttir bhūtānāḿ yena sarvam idaḿ tatam sva-karmaṇā tam abhyarcya siddhiḿ vindati mānavaḥ Translation of Bhagavad Gita 18.46: By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work. Commentary by Sri Adi Shankaracharya of Advaita Sampradaya: 18.46 Manavah, a human being; vindati, achieves; siddhim, success, merely in the form of the ability for steadfastness in Knowledge; abhyarcya, by adoring, worshipping; svakarmana, with his own duties stated above, as allotted to each caste; tam, Him, God; yatah, from whom, from which God; comes pravrttih, origin,-or, from which internal Ruler comes the activities; ;bhutanam, of creatures, of living beings; and yena, by whom, by which God; is tatam, pervaded; sarvam, all; idam, this world. Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: As stated in the Fifteenth Chapter, all living beings are fragmental parts and parcels of the Supreme Lord. Thus the Supreme Lord is the beginning of all living entities. This is confirmed in the Vedanta-sutra—janmady asya yatah [SB 1.1.1]. The Supreme Lord is therefore the beginning of life of every living entity. And as stated in the Seventh Chapter of Bhagavad-gita, the Supreme Lord, by His two energies, His external energy and internal energy, is all-pervading. Therefore one should worship the Supreme Lord with His energies. Generally the Vaishnava devotees worship the Supreme Lord with His internal energy. His external energy is a perverted reflection of the internal energy. The external energy is a background, but the Supreme Lord by the expansion of His plenary portion as Paramatma is situated everywhere. He is the Super soul of all demigods, all human beings, all animals, everywhere. One should therefore know that as part and parcel of the Supreme Lord one has his duty to render service unto the Supreme. Everyone should be engaged in devotional service to the Lord in full Krishna consciousness. That is recommended in this verse. Everyone should think that he is engaged in a particular type of occupation by Hrishikesha, the master of the senses. And by the result of the work in which one is engaged, the Supreme Personality of Godhead, Sri Krishna, should be worshiped. If one thinks always in this way, in full Krishna consciousness, then, by the grace of the Lord, he becomes fully aware of everything. That is the perfection of life. The Lord says in Bhagavad-gita (12.7), tesham aham samuddharta. The Supreme Lord Himself takes charge of delivering such a devotee. That is the highest perfection of life. In whatever occupation one may be engaged, if he serves the Supreme Lord he will achieve the highest perfection. 10. श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्। स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।18.47।। ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்। ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥ śreyān sva-dharmo viguṇaḥ para-dharmāt sv-anuṣṭhitāt svabhāva-niyataḿ karma kurvan nāpnoti kilbiṣam॥ 18.47 ॥ Translation of Bhagavad Gita 18.47: It is better to engage in one’s own occupation, even though one may perform it imperfectly, than to accept another’s occupation and perform it perfectly. Duties prescribed according to one’s nature are never affected by sinful reactions. 11. सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत्। सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः।।18.48।। ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்। ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥ saha-jaḿ karma kaunteya sa-doṣam api na tyajet sarvārambhā hi doṣeṇa dhūmenāgnir ivāvṛtāḥ:॥ 18.48 ॥ Translation of Bhagavad Gita 18.48: Every endeavor is covered by some fault, just as fire is covered by smoke. Therefore one should not give up the work born of his nature, O son of Kunti, even if such work is full of fault. Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: In conditioned life, all work is contaminated by the material modes of nature. Even if one is a brahmana, he has to perform sacrifices in which animal killing is necessary. Similarly, a kshatriya, however pious he may be, has to fight enemies. He cannot avoid it. Similarly, a merchant, however pious he may be, must sometimes hide his profit to stay in business, or he may sometimes have to do business on the black market. These things are necessary; one cannot avoid them. Similarly, even though a man is a shudra serving a bad master, he has to carry out the order of the master, even though it should not be done. Despite these flaws, one should continue to carry out his prescribed duties, for they are born out of his own nature. A very nice example is given herein. Although fire is pure, still there is smoke. Yet smoke does not make the fire impure. Even though there is smoke in the fire, fire is still considered to be the purest of all elements. If one prefers to give up the work of a kshatriya and take up the occupation of a brahmana, he is not assured that in the occupation of a brahmana there are no unpleasant duties. One may then conclude that in the material world no one can be completely free from the contamination of material nature. This example of fire and smoke is very appropriate in this connection. When in wintertime one takes a stone from the fire, sometimes smoke disturbs the eyes and other parts of the body, but still one must make use of the fire despite disturbing conditions. Similarly, one should not give up his natural occupation because there are some disturbing elements. Rather, one should be determined to serve the Supreme Lord by his occupational duty in Krishna consciousness. That is the perfectional point. When a particular type of occupation is performed for the satisfaction of the Supreme Lord, all the defects in that particular occupation are purified. When the results of work are purified, when connected with devotional service, one becomes perfect in seeing the self within, and that is self-realization. 12. असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः। नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति।।18.49।। அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:। நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥ asakta-buddhiḥ sarvatra jitātmā vigata-spṛhaḥ naiṣkarmya-siddhiḿ paramāḿ sannyāsenādhigacchati ॥ 18.49 ॥ Translation of Bhagavad Gita 18.49: One who is self-controlled and unattached and who disregards all material enjoyments can obtain, by practice of renunciation, the highest perfect stage of freedom from reaction. Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: Real renunciation means that one should always think himself part and parcel of the Supreme Lord and therefore think that he has no right to enjoy the results of his work. Since he is part and parcel of the Supreme Lord, the results of his work must be enjoyed by the Supreme Lord. This is actually Krishna consciousness. The person acting in Krishna consciousness is really a sannyasi, one in the renounced order of life. By such a mentality, one is satisfied because he is actually acting for the Supreme. Thus he is not attached to anything material; he becomes accustomed to not taking pleasure in anything beyond the transcendental happiness derived from the service of the Lord. A sannyasi is supposed to be free from the reactions of his past activities, but a person who is in Krishna consciousness automatically attains this perfection without even accepting the so-called order of renunciation. This state of mind is called yogarudha, or the perfectional stage of yoga. As confirmed in the Third Chapter, yas tv atma-ratir eva syat: one who is satisfied in himself has no fear of any kind of reaction from his activity.
  2. திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி1) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "விதிவிலக்குகளைச் சான்றாகக் காட்டி, இதுதான் விதியாக இருந்தது என்று சொல்வது சரியா?" என்றார் நண்பர் கோபமாக. "அப்படிச் சொன்னால் அது தவறுதான்!" என்றேன் நான். தமிழ் மண்ணில்சாதி புகுத்தியது ஆரியரா? "சங்க இலக்கியத்தில், கபிலர் ஒருவர்தான் 'பிராமணர்களே நால்வகைச் சாதியைத் தமிழகத்தில் நாட்டியதாக'க் குற்றம் சாட்டுகின்றார். அதவிட்டா அடுத்த சாட்சி சூரியநாராயண சாஸ்திரி-ன்ற பரிதிமாற்கலைஞர்; இவ்விரு பிராமணர்களும் 'விதிவிலக்காக'க் கொள்ளப்படவேண்டியவர்கள். இவர்கள் குற்றம் சொல்வதை நம்பி, ஒட்டு மொத்த பிராமணர்களையே நால்வருணச் சாதியப் புகுத்துனவுங்கன்னு குற்றம் சொன்னா எப்பிடிப்பா?",என்றார் நண்பர். "தமது சுயநலத்துக்காகத் தாங்கள் தூக்கிப் பிடிக்கும் நால்வருணத் தத்துவத்தை பிராமணர்கள் மறுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பிராமணர்களின் நால்வருணத் தத்துவங்கள் மனிதகுலத்துக்கு விரோதம் என்று அவர்களுக்குள்ளேயே எழும் கலகக் குரல்கள் குறைவாகத்தானே இருக்கமுடியும்? இதுதானே உலக இயற்கை!", என்றேன் நான். "இருந்தாலும், கபிலர்-ன்னு ஒண்ணே ஒண்ணுதானே தமிழர்களால் காட்ட முடியுது! இது ஒனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?", என்றார் நண்பர் கோபமாக. தொல்காப்பியரின் சாட்சியம் "சரிப்பா! தமிழ் இலக்கியம் தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியரைப் பிராமணராக்கி, 'திரனதுமாக்கினியர்'ன்னு நாமகரணம் சூட்டி, அகத்தியர் என்னும் ஆரிய பிராமண முனிவரின் சீடர்-னுட்டு கத விடுறாங்கல்லப்பா! அவர் சொன்னதச் சொல்றேன் கேளு! மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. தொல்காப்பியம்.பொருள்இலக்கணம்.4.3 மூவருண மேலோர், நாலாம் வருண கீழோர்-னு சொல்ற அனைவருக்குமான சமநீதி விதிமுறைகள் தமிழ் மண்ணில் இருந்த காலமும் உண்டு என்பது பொருள்; இப்ப கபிலருக்கும் முந்தைய இன்னொரு சாட்சியும் தந்துட்டேன்! போறுமா!" என்றேன் நான். வார்த்தை விளையாட்டுகள் செய்து மக்களைக் குழப்புவதில் வட ஆரியர்களை யாரும் விஞ்சிவிட முடியாது. ஆரியர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆரியர் கருத்துக்களை ஆரியர்களைவிட அதிகமாக நேசிக்கும் எமது நண்பரைப்போன்ற தமிழர்கள் ஆடும் ஆட்டம் அவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக இருக்கும். "கொஞ்சம் பொறுப்பா! Constitution Amendment போல, மனுதர்மமும் நெறைய மாற்றங்களைச் சந்திச்சு வந்திருக்கு! யுகத்துக்கு யுகம் அது மாறும்! மனுதர்மத்தைப் பற்றிய முழு உண்மையும் தெரியாமல் ஒங்கட்டுரைகள் இருக்கின்றன" என்றார். "அப்படியா! இருந்தாலும், மனிதகுலத்தை பிறப்பின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து, சூத்திரன் என்னும் ஒரு பிரிவு பெரும்பான்மை மக்களை, ஏனைய மூன்று பிரிவினருக்கும் அடிமை என்று கொத்தடிமை போடும் மனுவின் சட்டம் மானுடத்துக்கே எதிரானதல்லவா" என்றேன் நான். மனுதருமம் கலியுகத்துக்குச் சொல்லப்படவில்லை! "ஒன்ன மாதிரி பலரும் இப்பிடித்தான் கேப்பிங்க! ஒரு விஷயம் தெரியுமா? மனுதர்மம் கலியுகத்துக்குச் சொல்லப்படவில்லை; பல மனுக்கள் உண்டு! மானவ தர்மம்(मानवधर्मशास्त्र) செய்த மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சொராஷ்ட்டிர மத வேதநூலான ஜெண்ட் அவஸ்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முனிவர்கள் மனுவை அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்து கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்து கொடுத்ததே மனுஸ்மிருதி. யுகங்களுக்கு ஏற்ப மாறுவது ‘மனுஸ்மிருதி’-ங்கறது ஒனக்குத் தெரியாது, அந்தந்த காலகட்டத்திற்கும், மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு யுகங்களுக்கும் மனுஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது நீ குறிப்பிட்டுச் சொல்லும் மனுஸ்மிருதி கிருதாயுகத்திற்கானது. மனுசன சூத்திரன்-னு சொல்லுற மனு ஸ்மிருதி இந்தகலியுகத்திற்கு பொருந்தாது. இது த்ரேதாயுகக் கால மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இதை கலியுகத்தில் பயன்படுத்தியது முன்னோர்கள் செய்த முதல் தவறு." என்றார் கொதிப்புடன். "ம்! மேல சொல்லு!" என்றேன் நான். பகவத்கீதையைப் பின்பற்றித் திருக்குறள் எழுதப்பட்டதா? "இந்தயுகத்திற்கான ஸ்மிருதி வேதவியாசரின் தந்தையான பராசரரால் உருவாக்கப்பட்ட ‘பராசரஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு சொல்ற திருக்குறளுக்கு முன்னயே 'மனுஷா எல்லாரும் ஒண்ணு'தான்னு சரியாச் சொல்லுறது பகவத்கீதை மட்டும்தான்! பகவத்கீதையில அத்தனை சமஸ்கிருத சாத்திரங்களுக்கும் சரியான விளக்கம் இருக்கு. பகவத்கீதையைப் பின்பற்றித்தான் திருக்குறள் எழுதப்பட்டிருக்கு. அதத்தான் தொல்லியல் அறிஞர் நாகசாமி சொல்றார்", என்றார். "அப்படியா! கீதைல பகவான் என்ன சொல்றார்?" என்றேன் நான். கீதை குணத்தின் அடிப்படையில் வருணம் சொல்கிறதா? நண்பர், "நாலு வர்ணம்-ங்கறத மனிதர் குணத்தின் அடிப்படையிலே, அதாவது, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் பிரிச்சதே பகவான்தான். ஒரு மனிதனின் குணத்தின் அடிப்படையில்தான் அவனோட வருணம் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை; பிற்காலத்திலேதான் பிறப்பின் அடிப்படையில வர்ணம் வந்ததே தவிர, பகவான் அப்படியெல்லாம் உருவாக்கலே! அவரவர் குணத்த அடிப்படையாக் கொண்டதாலே, மனுஷாளோட கதிக்கு அவா அவாதான் பொறுப்பே தவிர, பகவான் இல்லன்றதயும் பகவானே கீதைல சொல்றார். "चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः। तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।" சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: தஸ்ய கர்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம்." என்றபடி, என்னையே உற்றுப்பார்த்தார்; அப்போது என்னிடம் இருந்த பதில் மௌனம் மட்டுமே! என்ன பதிலையே காணோம்?" என்றார் நண்பர். "கீதை குறித்து நீ சொன்ன செய்திகளை சிறிது மறுவாசிப்பு செய்துவிட்டு வருகிறேன். "நான் உருவாக்கிய நால்வருணம் அவரவர் குண அடிப்படையிலேயே அமைகிறது; பிறப்பின் அடிப்படையில் இல்லை!"ன்னு பகவான் கிருஷ்ணர் சொல்றதாச் சொல்லுறே! சரி, அடுத்தவாரம் மீண்டும் விவாதிப்போம்" என்றேன் நான். "ஒரு வாரம் ஆனாலும் பகவத்கீதையில் புதிதாக ஒன்றும் வரப்போவதில்லை", என்றார் நண்பர். "உண்மை, ஆனால் நானே வாசித்து அறிந்தால் எனக்குத் தெளிவு கிடைக்குமல்லவா?" என்றேன் நான். ஒருவாரம் கழிந்தது! நான் அழைக்காமலேயே ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் ஆஜரானார் நண்பர். "என்னப்பா! இப்போவாது ஒனக்குத் தெளிஞ்சிருக்கும்னு நெனக்கேன்! கீதைல புதுசா ஒண்ணும் இல்லயே?", என்றார் நமுட்டுச் சிரிப்புடன். "அதான் போன வாரமே சொல்லிட்டயே! இருக்கதுதானே இருக்கும்!", என்றேன் நான். "அப்போ நீ புரிஞ்சத அடுத்த கட்டுரை-ல எழுது! திருக்குறள் மட்டுமல்ல, பகவத்கீதையும் உலகப் பொதுமறைதான்-ன்னு தலைப்புப் போட்டு ஜோரா எழுதுப்பா!" என்றார் மகிழ்ச்சியுடன். "மகாபாரதம் சீரியல்ல வர்ர "Title Song" பகவத்கீதை 2வது அத்தியாயம்.47வது சுலோகம். அது என்ன சொல்லுதுன்னு முதல்ல பார்ப்போமே! "உனக்கு விதிக்கப்பட்ட கடமை(கருமத்தை)யைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு. செயல்(கரும)களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை.உனது செயல்(கருமங்)களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையிலும் விருப்பம் கொள்ளாதே." என்கிறார் பகவான்[1]. இந்த ஸ்லோகத்தை நான் புரிஞ்சிச்கிட்டவரை சொல்றேன். சரியான்னு மட்டும் சொல்லு! சரின்னா மேலே விவாதம் செய்யாமல் போகலாம்", என்றேன் நான். "சரி", என்றார் நண்பர். "பலன் கருதாமல் கடமை(கருமம்)யைச் செய்."-னு பகவான் சொல்றாரு. கடமை(கருமம்)யைச் செய்யாமல் இருப்பதும் பாவம் என்கிறார் பகவான். சரியா", என்றேன் நான். 'சரிதான்!", என்றார் நண்பர். "அடுத்த முக்கியமான செய்தி கீதையின் நான்காம் அத்தியாயத்தின் 13வது ஸ்லோகத்தில் வருது. "மூவித இயற்கைக் குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகளும் என்னாலேயே ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக நீ அறியக் கடவாயாக." என்கிறார் பகவான்.[2] "குணத்தின் அடிப்படையில்தான் நாலு வர்ணங்களும் பகவான் படைச்சாரே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை"-ன்னு நீ சொன்னது இதைத்தான் இல்லையா?" என்றேன் நான். "சரியான பாதைக்கு இப்ப வந்துட்ட. மேல சொல்லு!", என்றார் நண்பர். "ஒன்பதாம் அத்தியாயத்துல பகவான் சொன்ன 32வது சுலோகம் முக்கியமானதா எனக்குப்பட்டது. அதப் பார்க்கலாம். கீதை சொல்லும் 'பாவயோனி' பிறப்பைக் குறிக்கும் சொல்! "ப்ருதாவின் மைந்தனே! என்னிடம் அடைக்கலம் கொள்பவர்கள், அவர்கள் பாவ யோனியில் பிறந்த இழிய பிறவியைச் சேர்ந்தவராயினும் - பெண்டிர், வைசியர்கள்(வணிகர்), சூத்திரர்கள்(தொழிலாளர்) - பரமகதியை அடைய முடியும்.[3] பாவயோனி வழியாகப் பிறந்த இழிபிறவி என்று சொல்வதால், பிறப்பைக் கொண்டே ஒருவரின் தகுதி தீர்மானிக்கப் படுவதாக ஐயம் கொள்வதற்கு இச்சூத்திரம் இடமளிக்கிறது அல்லவா?" என்றேன் நான். இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பரின் முகத்தில் பதட்டம் தொற்றிக்கொண்டது. "உன் பிரச்னையே இதான். Basic Definition தர்ர நாலாம் சாப்டர்-லையே தெளிவா 'குணத்தின் அடிப்படை'-ன்னு வரையறை கொடுத்த பிறகு, ஒம்பதாம் சாப்டர்-ல ஒனக்கு சந்தேகம் ஏன் வரணும்?. இது ஓங் குசும்பக் காட்டுது", என்று படபடத்தார் நண்பர். "சந்தேகத்தத்தான் கேட்டேன்! ஏன் பதறுகிறாய்? இருப்பதுதானே இருக்கும்-னு கூலாச் சொன்ன நீ இப்பக் கொஞ்சம் பொறுமையாக் கேளுப்பா!" என்றேன் நான். "சரி, சரி, மேலே சொல்லு!", என்றார் நண்பர். "ஓகே. வளவள-ன்னு இழுக்காமே கீதையின் இறுதியான பதினெட்டாம் அத்தியாயத்துக்கு வருவோம். "திருக்குறள்-ல துறவு முதலில் வருது. கீதைல கடைசி பதினெட்டாம் அத்தியாயத்துல துறவின் பக்குவம்-அதாவது The Perfection of Renunciation-ன்னு வருது. இத மட்டும் பாத்துட்டு முடிவுக்கு வந்துருவோம்!", என்றேன் நான். "சரி!", என்றார் நண்பர். பிறப்பே தகுதியைத் தீர்மானிக்கிறது என்கிறது கீதை! "பதினெட்டாம் அத்தியாயத்தின் 41ஸ்லோகத்துல பகவான் இப்படிச் சொல்லியிருக்கார்: "எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! பிறப்பினால் ஏற்படும் குணபாவங்களால் நிகழும் அவரவர் செயல்(கருமங்)களின் தன்மைகளுக்கு ஏற்ப, பிராமணர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து அறியப்படுகிறார்கள்."[4] இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: தாங்கள் வாழும் உடலின் முக்குணத் தன்மைக்கேற்ப, பகவான் விதித்துள்ள செயல்களைச் செய்து பகவானை வழிபடுவதன் மூலம் அனைவரும் வெற்றி பெறலாம்; இச்செயல்களைப் பகவான் ஆறு ஸ்லோகங்களில் விவரித்துள்ளார். அவரவர் பிறப்பினால் ஏற்படும் சத்துவ, ரஜ, தமோ குணங்களுக்கு ஏற்ப பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் என்னென்ன கடமைகள் அல்லது செயல்கள் செய்யவேண்டும் என்பவை பகவானால் வரையறுக்கப்பட்டுள்ளன" என்பதாகும். இதன் பொருள் நால்வருணத்தாருக்கும் பகவானே என்னென்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதையும், அச்செயல்களைச் செய்வதன் மூலமே பகவானை வழிபட்டு வெற்றியடைய முடியும் என்பதையும் பகவானே வரையறுத்துள்ளார். சரிதானே?" என்றேன் நான். நால்வருணத்தாரின் வேலைகளையும் கீதை வரையறுக்கிறது! படபடப்பான நண்பர் "ஆறு ஸ்லோகங்களையும் படித்துவிட்டு, உன் கருத்தைப் பிறகு சொல்லு.", என்றார். "சரி, அடுத்த மூன்று ஸ்லோகத்துக்குச் செல்வோம். இவற்றில், ஆரியவேத சமுதாயத்தின் நால்வருணத்தாரும் இன்னென்ன வேலைகள்தான் செய்ய வேண்டும் என்று பகவானே வரையறுத்துக் கூறுகின்றார். 18.42ம் ஸ்லோகம் பிராமணன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது. "அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், அறிவு மற்றும் முழுமுதற்கடவுளே அனைத்தையும் கட்டுப்படுத்தும் சர்வவல்லமை கொண்டவர் என்னும் ஆத்திக அறிவு ஆகிய தன்மைகளால் பிராமணர்கள் செயல்படுகின்றனர். ஆக, பிராமணர்களின் வேலை, மேற்கூறிய தகுதிகளுடன் தவம் செய்வது[5]" என்றேன் நான். "சரிதான்! மேலே சொல்லு!" என்றார் நண்பர். " கீதை-பதினெட்டாம் அத்தியாயத்தின் நாற்பத்து மூன்றாம் ஸ்லோகம்.18.43 சத்திரியன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது. தீரம், வலிமை, உறுதி, வழமை, போரில் வீரம், ஈகை, மற்றும் தலைமை ஆகியன சத்திரியனின் கருமம் என்கின்றது[6]", என்றேன் நான். வேளாண்மையும் வைசியனின் தொழிலே! "இன்னம் மீதி இரண்டையும் சொல்லி முடி", என்றார் நண்பர் பொறுமை இழந்து. "சரி! கீதையின் 18.44ம் ஸ்லோகம் வைசியனுக்கும், சூத்திரனுக்கும் விதிக்கப்பட்ட கருமங்களைச் சொல்கின்றது. விவசாயம், கால்நடைகளை வளர்த்தல் மற்றும் வியாபாரம் ஆகியன வைசியனின் கருமங்கள் என்றும், ஏனைய மூன்று மேல்வருணத்தாருக்காக உழைப்பதும், பணிவிடை செய்வதும் சூத்திரர்களின் கருமங்களாகும்[7].", என்றேன் நான். "சரி, அடுத்த ஸ்லோகத்துக்குச் செல்', என்றார் நண்பர். தமிழ் இனத்தில் சூத்திரர் இல்லை! "சற்று பொறு! கீதையின் 18.44ம் ஸ்லோகம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லுகிறது. வேளாண்மை என்னும் விவசாயம் வேளாளர்களின் தொழில் என்று தமிழர்களின் தொல்காப்பியம் மரபியல் சொல்லுகின்றது. ஆனால், விவசாயம் வைசியரின் தொழில் என்று பகவத்கீதை சொல்லுகின்றது. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்னும் நான்கு பிரிவுகளையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமன்பாடு செய்யும் முயற்சியை ஆரியர்கள் தொல்காப்பியர் காலம்தொட்டு செய்துவருகின்றனர். ஆரியப்பிராமணர்களின் புரட்டு வாதம் முற்றிலும் தவறு என்பதற்கு பகவத்கீதையே சாட்சி மட்டுமல்ல, தமிழகத்தில் சூத்திரர் என்று ஒரு வகுப்பாரே இருந்தது இல்லை என்பதையும் பகவத்கீதையின் இச்சுலோகத்திலிருந்து வெளிச்சத்துக்கு வருகின்றது.", என்றேன் நான். நண்பரின் கைப்பேசி ஒலிக்கவே, அவசர வேலையைக் காரணம் காட்டி, நழுவினார் நண்பர். பிறப்பின் அடிப்படையிலேயே கீதையில் நால்வருணம் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை, கீதைக்கு விளக்கம் எழுதிய அத்வைத மதநிறுவனரும் ஸ்மார்த்த குருவுமான ஆதிசங்கரர், துவைத மதநிறுவனர் மத்துவர், விசிஷ்ட்டாத்வைதம் மதநிறுவனர் இராமானுஜர், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா உள்ளிட்டோர் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளனர். உலகப் பொதுமறை திருக்குறள் சொல்லும் உலகப் பொதுஅறம் பகவத்கீதையில் தப்பித் தவறி எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் காண்போம். வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார் உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்! குறளறம் தொடர்ந்து பேசுவோம்! ஆய்வுக் குறிப்புகள் - Research References 1. "कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि।।2.47।। karmaNyevadhikaraste ma phalesu kadäcana mä karma-phala-hetur bhürmä te sango’ stv akarmaNi கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன மா கர்மபல ஹேதுர்பூர்மா தே ஸங்கோ' ஸ்த்வகர்மணி." (Meaning: You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your activities, and never be attached to not doing your duty. 2. "चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः। तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।" சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச: தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம். cātur-varṇyaṁ mayā sṛṣṭaṁ guṇa-karma-vibhāgaśaḥ tasya kartāram api māṁ viddhy akartāram avyayam Meaning of words catur-varnyam—the four divisions of human society; maya—by Me; srstam—created; guna—quality; karma—work; vibhagasah—in terms of division; tasya—of that; kartaram—the father; api—although; mam—Me; viddhi—you may know; akartaram—as the non-doer; avyayam—being unchangeable. English Translation of the Sloga: According to the three modes of material nature and the work ascribed to them, the four divisions of human society were created by Me. And, although I am the creator of this system, you should know that I am yet the non-doer, being unchangeable. 3. मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः। स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्।।9.32।। மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோநய:। ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தே அபி யாந்தி பராம் கதிம்॥ 9.32 ॥ māḿ hi pārtha vyapāśritya ye ’pi syuḥ pāpa-yonayaḥ striyo vaiśyās tathā śūdrās te ’pi yānti parāḿ gatim ॥ 9.32 ॥ English Translation of Bhagavad Gita 9.32: O son of Pritha, those who take shelter in Me, though they be of lower birth—women, vaishyas [merchants] and shudras [workers]—can attain the supreme destination. 4. ["ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परंतप। कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः।।18.41।। ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப। கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥ brāhmaṇa-kṣatriya-viśāḿ śūdrāṇāḿ ca paran-tapa karmāṇi pravibhaktāni svabhāva-prabhavair guṇaiḥ Translation of Bhagavad Gita 18.41 Brahmanas, kshatriyas, vaishyas and shudras are distinguished by the qualities born of their own natures in accordance with the material modes, O chastiser of the enemy. Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: However, the living body filled with the three gunas becomes successful by worshipping the Supreme Lord by prescribed activities according to his nature. This is described in six verses. These activities or duties, designated precisely (pravibhaktani) by the gunas of sattva, rajas and tamas, which manifest by birth (svabhavena), are prescribed for the brahmanas, ksatriyas, vaisyas.] 5. [शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च। ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम्।।18.42।। ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச। ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥ śamo damas tapaḥ śaucaḿ kṣāntir ārjavam eva ca jñānaḿ vijñānam āstikyaḿ brahma-karma svabhāva-jam Translation: Peacefulness, self-control, austerity, purity, tolerance, honesty, knowledge, wisdom and religiousness—these are the natural qualities by which the brahmanas work. Commentary by Sri Sridhara Swami of Rudra Sampradaya: The natural duties of a brahmin or priestly class are given by Lord Krishna. Serenity is control of the mind. Self-control is controlling the impulses of the external senses. Purity is internal and external cleanliness. Forbearance is forgiveness. Straightforwardness means without duplicity. Knowledge is understanding the Vedic scriptures. Realisation is experiencing direct cognition. Faith is the conviction that the Supreme Lord Krishna is the supreme controller of all. All these duties of brahmins are born of their nature in sattva guna the mode of goodness. Now Lord Krishna commences a new theme with this verse explaining that the duties of the different classes of Vedic society such as brahmana or priestly class, ksatriya or royal and warrior class, vaisya or agricultural and mercantile class as well as sudra or menial worker class which is the only one not qualified to take part in any Vedic activity as they serve the other three classes. The duties enjoined for all the classes are clearly delineated and itemised with distinct divisions. The typical duties of all the four classes will be described according to the predominating influence of the three gunas which manifest the corresponding nature determined by the tendencies acquired in past lives and the impressions from the attendant karma or reactions to actions. The brahmins have a predominance of sattva guna, the ksatriya’s a predominance of raja guna with a little sattva guna, the vaisyas with raja guna mixed with tama guna and the sudras with a predominance tama guna and a little raja guna.] 6. शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम्। दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम्।।18.43।। ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்। தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥ śauryaḿ tejo dhṛtir dākṣyaḿ yuddhe cāpy apalāyanam dānam īśvara-bhāvaś ca kṣātraḿ karma svabhāva-jam ॥ 18.43 ॥ Translation:Heroism, power, determination, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities of work for the kshatriyas. 7. कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम्। परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम्।।18.44।। க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்। பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥ kṛṣi-go-rakṣya-vāṇijyaḿ vaiśya-karma svabhāva-jam paricaryātmakaḿ karma śūdrasyāpi svabhāva-jam Translation of Bhagavad Gita 18.44: Farming, cow protection and business are the natural work for the vaishyas, and for the shudras there is labor and service to others.