Search the Community
Showing results for tags 'மாவீரர் தினம்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத் தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 239 replies
-
- 1
-
-
- மாவீரர் துயிலும் இல்ல வரலாறு
- மாவீரர் வாரம்
- (and 8 more)
-
இன்று மாவீரர் தினம்! November 27, 2018 இன்று மாவீரர் தினம் ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர்நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் விதைப்பது, அவர்களை ஆத்மார்த்தமாக அஞ்சலிப்பது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து உயரிய நடைமுறையை புலிகள் பேணினார்கள். இதுவே, 1989ஆம் ஆண்டு மாவீரர் தினமாக பரிணமித்தது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. மணலாற்று காட்டுக்குள் இருந்த ஜீவன் முகாமின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அங்குதான் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால், மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட அந்த குடும்பங்களின் நலனோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும், அந்த வருடத்தின் மாவீரர் தொகையை புலிகள் வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாங்குதல்களில் மரணமானவர்கள், அப்படியான விபத்துக்களில் மரணமானவர்கள் தொகையை இதில் இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது. 2008ஆம் ஆண்டு மாவீரர்தினமே புலிகளால் அனுட்டிக்கட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் ஒக்ரோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர். 2009 மே 19ம் திகதி வரையான யுத்தத்தின் இறுதிநாள் வரை சுமார் 30,000 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கலாமென கருதப்படுகிறது. 2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி துயிலுமில்லத்தையும் இராணுவம் கைப்பற்றியது. இதன் பின்னர் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் இரணைப்பாலையில் விதைக்கப்பட்டன. 2009 பெப்ரவரி இறுதியில் அந்த பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வர, அதன் பின்னர் இரட்டைவாய்க்கால் சந்திக்கு அண்மையாக இருந்த கடற்புலிகளின் தளத்திற்கு அருகில் உடல்கள் விதைக்கப்பட்டன. இந்த பகுதிக்கும் இராணுவம் வந்ததன் பின்னர், புலிகளின் இறுதி துயிலுமில்லத் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் அமைக்கப்பட்டது. 2009 மே 13ம் திகதி காலை வரை இந்த துயிலுமில்லத்தில் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டன. 2009 யுத்தம் முடிந்த பின்னர், உயிர்நீத்த மறவர்களை அஞ்சலிப்பதை தடுக்க அரசுகள் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டன. சட்டம், பாதுகாப்புத்துறை ஆன மட்டும் முயற்சித்தன. கல்லறைகளும், நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. இருந்தாலும், தமிழர்கள் நெஞ்சில் சுமக்கும் துயிலுமிடங்களில் அந்த தியாகிகளை விதைத்து அஞ்சலித்து வருகிறார்கள். http://www.pagetamil.com/25248/
-
"தோற்றிடேல், மீறி தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! (இது நான் ஏற்கனவே வெளியிட்ட ஒன்றுதான். ஆனால் இன்று சில புதிய தகவல்கள் கிடைத்ததால் பழையதை அழித்துவிட்டு புதிய பதிப்பாக புதிய சில தகவல்களோடு இதை வெளியிடுகிறேன்.) 1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர்:- 25,500 - 26,500 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது.. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.) எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும். 'தினக்கதிர்: 20-6-2001' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்) இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள் --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 970+ போராளிகள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள் 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள் | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38) 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது' 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:- 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.) 'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600' மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம். இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அதிகாரநிறைவு வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே... நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். 2009 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:- சரி இனி நாம் கணக்கெடுப்போம். சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால், செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு - புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை 5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714 22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக, 26,104+358 = 26,462 ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்.. (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.) இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம். இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி: இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும். இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும். இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது, முன்னிருந்து பின்னாக... முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160 (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கினடிப்படையில், சனவரியில் இருந்து மே 5 வரை கணக்கிட்டால் 2,550 - 2,700 வரையிலான போராளிகள் மாவீரர்கள் ஆகியிருக்கின்றனர். மேற்கொண்டு (மே 10-18) சமர் உச்சியில் இருந்ததால் இந்த கணக்கு சரிப்பட்டு வராது. மேலும், எல்லா நாட்களிலும் மார்ச் 8 - ஏப்ரல் 20 வரை நடந்த சமர்கள் போன்ற சமர்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைத்தான். எனவே கடைசி ஐந்து மாதங்களிம் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய துணிபு. நான் கொடுத்த கணக்கோடு சற்று கூடக் குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்கவும். அடுத்து 2008 டிசம்பர் மாதத்திற்கான மாவீரர் தொகையினைக் கணக்கெடுத்தால், நடந்த சமர்களின் அடிப்படையிலும் 2008 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின்(2,239) அடிப்படையிலும் பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 200 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்கும் தோராயமாக மொத்தம் 200 போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர். எனவே மொத்தத்தில் தாழ்ந்த மாவீரர் எண்ணிக்கையாக, 22,390 + 200 + 3,000 = 25,590 25,590 ஐ வரையறுக்கலாம். ஆக, மொத்த மாவீரர் எண்ணிக்கையாக தமிழர் தரப்பினது கணக்கினை தாழ்ந்த கணக்காகவும் சிங்களத்தின் கணக்கினை உச்சக் கணக்காகவும் வைத்தால், 25,500 - 26,500 என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இதனுள் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி - தமிழ் ஈழம் மீட்பது உறுதி " - மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று உசாத்துணை: Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 4 replies
-
- 5
-
-
-
- வீரச்சாவடைந்தோர்
- மாவீரர் நாள்
- (and 9 more)
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார். "எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன். இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது. எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely
-
மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது... தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்களை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவுகூரலை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவுசெய்து வருகின்றோம். கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள். அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள். அந்தவகையில், நேற்று வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள். கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம். ஆனால், எம்மக்களின், எமது இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத்தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது. எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடந்தோறும் எங்களுக்காக உயிர் நீர்த்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நாட்டின் நீதித்துறை பெரும்பான்மை இனத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. எமது மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார். https://www.thaarakam.com/news/2cc60352-8b65-43a3-a3d3-bd9243f8b2cc
-
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27 தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம். இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள் கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21. https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e
-
மாவீரர் நாள் நினைவேந்தல் மனு மீதான விசாரணை! நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள சுமந்திரன் பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஆகியோர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், மணிவண்ணன் சயந்தன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர். போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கான அறிவித்தல் எதிர் மனுதார்களுக்கு மனுதாரர்களின் சட்டத்தரணியினால் பதிவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரை குறிப்பிடப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என்று எதிர்மனுதார்களான வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர்களின் பணியாற்றுபவர்களுக்கும் தலையீட்டு எழுத்தாணைக் கட்டளை வழங்குமாறு மனுதாரர்கள் கோரவுள்ளனர். மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூருவதற்கு அனுமதியளிக்கவேண்டும் என்றும் கோரவுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/154654?ref=imp-news
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும் பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களும்; உங்கள் வீடுகளில் இருந்து இணைந்து மாவீர தெய்வங்களுக்கான வணக்கத்தினை செய்யும் புகைப் படத்தினை tccukinfo@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் நேரலையில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் என்றென்றும் அவர்கள் வழி நடப்போம் என்ற உறுதியையும் உலகிற்கு எடுத்துரைப்போம். அன்பான உறவுகளே வழமையாக நாங்கள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும் அனைத்து மாவீரர் திருவுருவப் படங்களும் அன்றைய தினம் வைக்கப்படும். அத்துடன் உங்கள் உறவுகளின் படங்கள் இன்னும் வைக்கப்படாமல் இருப்பின் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 21-11-20 முன்னர் மாவீரரின் திருவுருவப் படத்தினை அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். – நன்றி – மாவீரர் பணிமனை – பிரித்தானியா eelam27uk@gmail.com 020 3371 9313 / 0796882208 https://www.thaarakam.com/news/5388e808-e79d-4228-8bf2-d7747eeb986d
-
எத்தடை வரினும் மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம் – சிவாஜிலிங்கம் சூளுரை November 19, 2020 எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் இடம்பெறும். எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றுகூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமை போன்று நடத்துவோம். என்னைக் கைது செய்தால் கைது செய்யட்டும். ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/90642
-
மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது? மாவை தலைமையில் 10 கட்சிகள் ஆராய்வு November 18, 2020 சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய 10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினமான 27 ஆம் திகதி காலையிலிருந்து மாலை வரையில் இவ்வாறு குழுக்களாகச் சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பாளர்களை இதற்காக இதற்காக எதிர்வரும் சனிக்கிழமை சந்தித்தப் பேசுவது எனவும், அதன் பின்னர் இவ்விடயத்துக்கான ஒழுங்ககள் குறித்து இறுதி முடிவை எடுப்பதெனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய கூட்ட முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது; “இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். அதாவது தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதென தீர்மானித்திருந்தோம். மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். அந்தந்த துயிலுமில்ல பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீர்மானித்தோம். கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரமளவில் அறிக்கை மூலம் வெளியிடுவோம். மாவீரர் தின நினைவேந்தல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம்.” https://thinakkural.lk/article/90522