Search the Community
Showing results for tags 'மாவீரர் நாள்'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். " செத்தவர் என்றுமை செப்புவமோ - உமை சென்மத்தில் நினைந்திட தப்புவமோ குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம் கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள் நெஞ்சுகளில் இள பூவீரரே! " -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது படிப்படியாக செய்து விடுகிறேன்.} துயிலுமில்லங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அவற்றைப் பற்றி நானொரு ஆவணம் எழுதியுள்ளேன், வாசித்துப்பாருங்கள்:- கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்கள் 2005 மாவீரர் நாளுக்கு வெளியிட்ட கட்டுரை ஒன்றிலிருந்து, "விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன. பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன. இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை. போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலுமில்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர். புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது. முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது. வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன. எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்) அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது. அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன. மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர். வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர். ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும். மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும் - மொழியாகி எங்கள் மூச்சாகி - முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை." "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 173 replies
-
- 1
-
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
-
(and 24 more)
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- ltte heroes cemetry
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம். (தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1982 - 20 நவம்பர் 2008 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 22,390 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 40000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1)கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2)எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 3)கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 4)முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 5)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 6)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'பாதையும் தரவை ஒலிமுகமும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' கனகபுரம் ஒலிமுகம்: 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் 'இங்கு இரு வித தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதந்தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' ஏனைய 8 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) https://www.tamilwin.com/articles/01/199494http://eelamhouse.com/wp-content/uploads/2010/08/MaaveerarNaalKaiyedu.pdfhttps://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it https://www.tamilwin.com/articles/01/199494 https://www.vikatan.com/government-and-politics/politics/108549-tamil-eelam-martyrs-day-observance-and-the-history-behind-it படிமப்புரவு vimeo seatigers 85% screen shot only எழுத்து & வெளியீடு நன்னிச் சோழன்
- 4 replies
-
- நினைவுக்கற்கள்
- மாவீரர் நாள்
- (and 9 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)
-
From the album: தமிழீழ விடுதலைப்புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
- மாவீரர் துயிலுமில்லம்
- மாவீரர்கள்
- (and 6 more)